Friday, November 6, 2015



avargal unmaigal
போலீஸ் போலீஸ் தமிழ்நாடு போலீஸ் இப்படி எல்லாமா வழக்கு போடுவீங்க

போலீஸ்! போலீஸ்! தமிழ்நாடு போலீஸ்! ஹெல்மேட் போடாமல் போவோர் மீது வழக்கு போடுவது மாதிரி குடிக்காமல் தெருவில் போவோர் மீது வழக்கு போடுவீங்களா?


தீபாவளிக்கு தமிழக அரசு டாஸ்மாக்கில் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு !

மக்களே தீபாவளி சமயத்தில் மட்டும் குடிக்காமல் தெருவிற்குள் நடமாடாதீர்கள் அப்படி நீங்கள் நடந்து சென்றால் தமிழக போலீஸார் உங்களை கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்பு உண்டு ஜாக்கிரதை.


கடவுள் டாஸ்மாக்கிற்கு வந்து சரக்கு அடித்தால்....( நகைக்க)
அம்மாவின் ஆசியால் தமிழகத்தில் பள்ளிக் கூடம் அருகிலும் கோயிலுக்கும் அருகிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனைகள் படு ஜோராக நடை  பெற்றுவருகின்றன. பள்ளிக் கூடம் அருகில் இருப்பதால் பல பள்ளிமாணவர்களும் அங்கு சென்று சரக்கு வாங்கி அருந்தி மகிழ்கின்றனர். அதுமட்டுமல்ல சிறுவர்கள் மங்கையர்கள் இளைஞர்களும் வாங்கி அருந்தி மகிழ்கின்றனர்.

இதனை அறிந்த கடவுளும் கோயிலுக்கு அருகில் டாஸ்மாக் இருப்பதால் அவருக்கும் ஆசை வந்தது. அதனால் கடவுள் மனித அவதாரம் எடுத்து டாஸ்மாக் கடைக்குள் சென்று , ஒரு புல் பக்கார்டி வாங்கி எதுவும் மிக்ஸ் பண்ணாமல் ராவாக ஒரே மூச்சில் அருந்தினார்.

அப்போது அருகில் இருந்த  நான்  அதை பார்த்து பாரா பயபுள்ள எப்படி அடிக்கிறான் ஒரு வேளை பொண்டாட்டி ஊருக்கு போன சந்தோஷத்தில்தான் இப்படி அடிக்கிறானோ என்று நினைத்துதேன் .

அதன் பின் மேலும் ஒரு பாட்டில் விஸ்கி வாங்கி அதையும் ராவாக அடித்தார். அதை பார்த்தும் மேலும் ஆச்சிரியம் அடைந்து நம்மைவிட பலே கில்லாடியாக இருக்கிறானே இந்த ஆள் என்று நினைத்து கொண்டிருந்த போதே.

மீண்டும் அவர் ஆடாமல் அசையாமல் மிக ஸ்டேடியாக போய் மேலும் ஒரு பாட்டில் வோட்காவையும் அடித்து விட்டு மிகவும் ஸ்டேடியாக வந்து என்னிடம் பிரதர் உங்களிடம் ஒரு சிகரெட் இருக்குமா என்று கேட்டார்.

நான் எனக்கு  சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கம்மெல்லாம் இல்லை என்றதும் சரி நான் வெளியே போகும் போது பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என்னிடம் பீரில் எந்த பீர் நன்றாக இருக்கும் என்று கேட்டார்.

உடனே நான் யோவ் இவ்வளவு அடிச்சும் உனக்கு போதையே வரலையா என்றேன்

உடனே அவர் பிரதர் நாந்தான் கடவுள் போதை  என்றால் என்ன அறியவே குடிக்கிறேன் என்றார்


அடங் கொக்கா மக்கா இப்பதான்யா உனக்கு போதையே ஏறுது போல இருக்கு..அதனால்தான் கடவுள் அது இது என்று உளர ஆரம்பிக்கிறே என்று சொல்லி சிரித்தாவாறு... சரி வாய்யா இங்கு உட்காரு எனக்கு சரியான கம்பெனி கிடைச்சிருக்கு என்று சொல்லி சிரித்தேன்

வெயிட் பண்ணுங்க மக்கா அடுத்த ரவுண்ட் அடிச்சிட்டு அவர் என்னவெல்லாம் உளரப் போகிறார் என்பதை கேட்டு வந்து அடுத்த பதிவை எழுதுறேன்

அதுவரைக்கும் சரக்கு அடிக்காத நீங்க எல்லாம் நல்லா மிளகு ரசம் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டுவாங்க

----------------------------------------------

தமிழக போலீஸ் டாஸ்மாக்கிற்கு பாதுகாவலனாக இருப்பதால்தான் நீதிபதி இப்படி தீர்ப்பு அளித்திருப்பாரோ?

தமிழக நீதிபதிகளின் பாதுகாப்புக்கு, மத்திய அரசின், சி.ஐ.எஸ்.எப்., துணை ராணுவப் படை பாதுகாப்பு அவசியமே' என, நேற்று உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்...

சுப்ரீம் கோர்ட்டே நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போல தமிழக மக்களுக்கும் சி.ஐ.எஸ்.எப்., துணை ராணுவப் படை பாதுகாப்பு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்

அன்புடன்
மதுரைத்தமிழன்
06 Nov 2015

6 comments:

  1. ippadium solliuma aabbadi erukganga

    ReplyDelete
  2. ஹாஹாஹா! கடவுள் அடித்த சரக்கு... கற்பனை ஜோர்!

    ReplyDelete
  3. அய்யா போலீஸ் மொதல்ல இந்த மதுரைத்தமிழன பிடிச்சி பெயில்ல வரமுடியாத செக்சனுல ஜெயில்ல தள்ளுங்க..

    பின்ன என்ன தீபாவளியும் அதுவுமா ஜனங்க வீட்டுலயே சந்தோஷமா இருக்குறமாதிரி பதிவு போடுறாரு.. இப்படி பன்னா எப்படி நம்ம! அரசாங்கம் இலக்கை எட்டுறது.. அதுபோக நம்ம இலட்சியம்தான் என்னா ஆவுறது..

    ReplyDelete
    Replies

    1. இப்ப நான் இருக்கிறது வீட்டு ஜெயிலில்தானப்பா... அதுவும் பூரிக்கட்டையால் தினமும் அடிவாங்கி கொண்டுதான் இருக்கிறேனப்பா

      Delete
  4. ஹஹஹ் தமிழகம்தான் தள்ளாடுகின்றதே கண்டிப்பாகப் பாதுகாப்பு அவசியம்தான்...இந்தப் பதிவே கொஞ்சம் தள்ளாடியதே உள்ளே நுழையும் போதே...அப்போ அடுத்த பதிவு இன்னும் கூடுதலாகத் தள்ளாடுமோ...

    ReplyDelete
  5. என்னத்த சொல்ல போங்க, நாடு போகிற நிலைமையிலே எல்லாமே நடக்கலாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.