ஸ்டாலினின் பீஹார் விசிட் ( கலைஞர் & ஸ்டாலின் கலந்துரையாடல்)
தம்பி ஸ்டாலின்
உனது பீஹார் பயணம் எப்படிப்பா இருந்தது?
அதையேன் கேட்குறீங்கப்பா...
அங்க எல்லாப் பயலும் ஹிந்தியிலே பேசுறாங்க ஒரு பயலும் தமிழ்ல பேசமாட்டேன்கிறாங்க. அடுத்து
நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழகப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என சட்டம் போட்டுவிடனும்.
சரி சரி முதலில்
ஆட்சிக்கு வருவதற்கு என்ன வழி என்று பார்ப்போம் அதன் பின் என்ன சட்டம் கொண்டு வரலாம்
என்பதை பற்றி யோசிப்போம்.
தம்பி ஸ்டாலின்
பீஹார் விசிட் அப்ப ராகுல் தம்பி உன் கூட கை குலுக்கவில்லை என்று இணையம் தளம் பூராவும்
கலாய்க்கிறாங்களே அது உண்மையாப்பா?
டாடி அது உண்மையல்ல
& அதுக்குகாக நான் கவலைப்படவில்லையப்பா!
நான் கவலைபடுறது எதற்கென்றால் ராகுல் காந்தி டி'ஆர் பாலுவைத்தான் திமுகவின்
வருங்கால தலைவர் என்று நினைக்கிறார் போல இருக்கிறது அதனாலதான் அவர் கூட சிரித்து கொண்டே
கைகுலுக்கினார் எங்கிட்ட் கை குலுக்கும் போது வருங்கால திமுக தலைவர் டி.ஆர் பாலுக்கு
உதவி செய்ய வந்த சின்ன பையன் என நினைத்து அசல்டா கை குலுக்கிவிட்டு டி.ஆர் பாலுவை நோக்கி
சென்றார் அப்பா அதை நினைச்சாதான் எனக்கு அழுகை அழுகையாய் வருதுப்பா...
இனிமே என்னதான்
நடந்தாலும் நான் யாரையும் தமிழகத்தை தாண்டி போய் சந்திப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன்
அப்பா.. அதுமட்டுமல்ல நம்ம அண்ணன் அழகிரி ஹிந்தியும் தெரியாமல் இங்கிலீசும் தெரியாமல்
எப்படிதான் மத்திய அமைச்சாராக பணி செய்தார் என்பதை நினைக்கும் போது எனக்கு வியப்பே
அதிகரிக்கிறதுப்பா. நம்ம அண்ணன் அழகிரி மிக திறமையானவர்தான் அப்பா அவர் மட்டும் எனக்கு அண்ணன்
ஆக இல்லாமல் இருந்தார் நம்ம கட்சியில் அவர் செயலாளராகவும் நான் தலைவராகவும் இருந்து
செயல்பட்டு இருப்போம்..
சரி சரி உன்
அழுகையை முதலில் நிறுத்திவிட்டு பிஹார் சென்று என்ன பாடம் கற்று வந்தாய் அதை சொல்லு?
அப்ப பீகாரில்
நிதிஷ் ஜீ வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதானப்பா.
அது போல நாமும் காங்கிரஸ் தேமுதிகவுடன் பலமான
கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நமது கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க
முடியும். ஆனால் அதில் நமக்கு ஒரு சிக்கலப்பா
அதுல என்ன தம்பி
சிக்கல்?
நாம் கூட்டணி அமைக்கும்
போது என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால்தான்
நம்ம கூட்டணி ஜெயிக்கும் அங்கு எப்படி நிதிஷ் கட்சியை விட லல்லுகட்சி அதிகம் இடம் பிடித்ததோ
அது மாதிரிதான் இங்கு விஜயகாந்த கட்சியை விட நம்ம கட்சி அதிக இடம் பிடிக்கும். ஆனால்
நிதிஷ் மாதிரி இங்கு விஜயகாந்த்தது தான் முதலமைச்சராக ஆக முடியும் அது போல லல்லுவின்
மகன் துணை முதல்வராக ஆணது போல இங்கு நான் துணை முதல்வராகத்தான் ஆக முடியும் போல இருக்குப்பா
இதுதான் உண்மையாக நான் கற்ற பாடம் அப்பா.....
என்னப்பா என்னால
முதல்வராகவே ஆக முடியாதா? துணை முதல்வராகவே என் வாழ்க்கை முடிந்துவிடுமா அப்பா? சாணக்கியரான
நீங்கள்தானப்பா கொஞ்சம் நல்லா யோசிச்சு முடிவு சொல்லுங்கப்பா?
கலைஞர் யோசிக்கிறார்.... யோசிக்கிறார் ....... நீண்ட நேரம் யோசித்துவிட்டு
தம்பி எனக்கு ஒரு ஐடியா தோனுது அதன் படி நீ ஒன்று செய்ய வேண்டும். அப்படி செய்தால்
உனக்கு முதல்வாரக வாய்ப்புக்கள் கிடைக்கும். அது உன்னால செய்ய முடியுமா என்று நீதான்
யோசித்து சொல்ல வேண்டும்?
அப்பா நான் முதல்வராக
என்ன வேண்டுமானாலும் செய்வேன் அப்பா அதை சீக்கிரம் சொல்லுங்கப்பா
நான் சொல்லுறதை
நல்லா கேட்டுக்கோ... நான் என்ன பண்ணுறேன் முதலில் நம்ம பெரிய தம்பி அழகிரியை மீண்டும்
கட்சிக்குள் சேர்த்து கொள்கிறேன்..
அப்பா என்னப்பா
சொல்லுறீங்க பிரச்சனையை தீர்க்க வழிகேட்டா நீங்க பிரச்சனையை பெரிதாக்க வழி சொல்லுறீங்க..
தம்பி ஸ்டாலின்
பொறுமையாய் நான் சொல்லுறதை கேளுப்பா...
அழகரியை நான்
மீண்டும் கட்சியில் சேர்த்துகிறேனா அப்ப நீ என்ன பண்ணுற அதற்கு எதிராக குரல் கொடுக்கிற....
நான் அதை சட்டை பண்ணாத மாதிரி நடிப்பேன். அதை பார்த்து நீ என்ன பண்ணுற கட்சியை விட்டு
விலகி தனி கட்சி ஆரம்பிக்கப் போறாதா சொல்லி கட்சி ஆரம்பிகிறது போல பாவலா காட்டிட்டு
பேசாம ஜெயலலிதாகிட்ட போய் சேர்ந்துடற...
அங்க சேர்ந்த
பிறகு பன்னீர் செல்வத்தைவிட மிக அதிகமாக பணிவிடை செய்து உலகின் மிக சிறந்த அடிமை மாதிரி
நடிக்குற சரியா. இந்த நடிப்பு பயிற்சியை நமக்கு
நாமே இயக்கத்தை நடத்திய டைரக்டர் சபரீசன் உனக்கு வழங்குவார். அதை பின்பற்றி சிறப்பாக
நடித்து அம்மாவின் மனதில் இடம் பிடித்துவிடு அதன் பிறகு அம்மாவின் வழக்கு மீண்டும்
விசாரணைக்கு வந்து ஜெயில் போகும் நிலை ஏற்பட்டால் நீதான் அடுத்த தமிழக முதல்வர். எப்படி
எனது சாணக்கியதனம்..
அப்பா உங்க ஐடியா
சூப்பரப்பா நான் முதலமைச்சாரக வர அடிமையாக நடிக்க என்ன நிஜ அடிமையாகவே இருக்க தயாராப்பா
ஆனால் அதில் ஒரு சிறிய கஷ்டமப்பா?
அப்படி என்ன
கஷ்டம் தம்பி?
அது வந்து எனக்கு
வயசு அதிகம் ஆயிடுச்சுல்ல அதனால என்னால் அம்மாவின் கால்களில் பன்னீர் செல்வம் போல அடிக்கடி
காலில் விழுந்து எழுந்திருக்க முடியுமா என்பது மட்டும் சந்தேகமாக இருக்கிறது.
தம்பி கலைஞரின்
பையனாக நீ இருந்தாலும் கஷ்டப்படாமல் தலைவராவதோ முதலமைச்சர் ஆவதோ எளிதல்லப்பா? என்னை
எடுத்துக்கோ ஜெயலலிதாவை எடுத்துக்கோ இந்த பதவியை அடைய என்னவெல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறோம்
அதை நினைச்சு பாருப்பா....
அதன் பின் எல்லாம்
சரியாகிவிடும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இது நகைச்சுவைக்காக
எழுதப்பட்ட ஒரு கற்பனை உரையாடல்.. இது கற்பனையாக இருந்தாலும் ஒருவிஷயம் மட்டும் உண்மையானால்
திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உண்டு அதனாங்க விஜயகாந்தை முதல்வர வேட்பாளராக
அறிவித்து பிஹார் போல கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். இது நகைச்சுவையாக இருக்கலாம் பலருக்கு ஆனால் நகைக்காமல் சிந்தித்து
பார்த்தால் அதில் சாத்தியம் அதிகம் இருக்கதான் செய்கிறது
அரசியலா? மீ எஸ்கேப்..!
ReplyDeleteநானும்தான்
Deleteநீங்க சொன்னா சரியா இருக்கும்....
ReplyDeleteசெம ஐடியா குடுக்கறீங்களே! :)
ReplyDeleteஇதை யோசித்தீங்களே.. அப்போ சதீஷுக்கு என்ன வழி என்று யோசித்தீர்களா? ப்ரேமலதா அவர்களுக்கு என்ன பதவி? சிக்கலை அதிகமாக்க, முக அழகிரிக்கும் விஜயகாந்த் பதவி கொடுத்தால் என்ன ஆகும்? இட்லி மாதிரிப் புட்டுப்புட்டு சொல்லச்சொன்னால் இடியாப்பம் பிழிகிறீர்களே.. நியாயமா?
ReplyDelete