தமிழனுங்க ரொம்ப அறிவாளிங்களா?
four-party People's Welfare Alliance
அவங்களை பொருத்த வரையில்
திமுக & அதிமுக திருட்டுகாராப்
பய புள்ளைங்க
பாமக சாதி வெறி பிடித்த பய
புள்ளைங்க
தேமுதிக கோமாளிப் பய புள்ளைங்க
பாஜக மத வெறியங்க
மதிமுக கூட்டணி வெட்டிபய
புள்ளைங்க
இப்படி ஒவ்வொருத்தவரையும்
குறை சொல்லிவிட்டு கடைசியில திருட்டுகாரப் பய புள்ளைங்களில் ஒருவர் கையில் ஆட்சியை
கொடுத்துவிட்டு அதன் பின் அவர்கள் கோடி கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று ஐந்து
வருடமும் புலம்ப வேண்டியது...
சரி அதற்கு என்ன தீர்வு????? Kumaresan Asak சொல்வது இது சரியாகத்தான் இருக்கிறது......மாற்று வேண்டும் என நினைப்பவர்கள்
இந்த "மக்கள் நல கூட்டணி" இயக்கத்திற்கு வாக்களிக்கலாமே அல்லது திமுக அதிமுக ஆட்சியை
குறை சொல்லாமலாவது இருக்கலாமே
அன்புடன்
மதுரைத்தமிழன்
======================================
புதிய தலைமுறை, இமயம் தொலைக்காட்சிகளில் நடந்த விவாதங்களில்
Kumaresan Asak சொன்ன கருத்துகளின் சாரம்.....
காலண்டரின் பழைய தேதிகளிலேயே
நிற்பவர்கள்தான் முந்தைய தேர்தல்களையும் அவற்றின் முடிவுகளையும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
காலண்டர் தேதியை நீங்கள் கிழித்தாலும் கிழிக்காவிட்டாலும் காலம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
இப்போது மக்கள் நல கூட்டியக்கத்திற்கான காலம் பிறந்திருக்கிறது.
ஆகப்பெருவாரியான மக்களிடையே
மாறி மாறி அதிமுக, அவர்களை விட்டால் திமுக என்றுதான் ஆட்சிக்கு வரவேண்டுமா என்ற எண்ணம்
இருக்கிறது. ஒரு மாற்று சக்தி உருவாகாதா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நேரடியாகக்
கட்சிகள் சாராத மக்களிடையே உள்ள இந்த எதிர்பார்ப்பு டீக்கடை பேச்சு உள்பட பல நிலைகளிலும்
வெளிப்படுகிறது.
இன்று அந்த எதிர்பார்ப்புக்கான
ஒரு செயல்வடிவம் உருவாகியிருக்கிறது. அதுதான் மக்கள் நலக் கூட்டியக்கம். இன்று நேற்றல்ல,
எப்போதுமே மார்க்சிஸ்ட் கட்சி தமிழகத்தில் மேற்கு வங்கம் போல், கேரளம் போல், திரிபுரா
போல் ஒரு நம்பகமான கூட்டணி உருவாக வேண்டும், அது தேர்தல்
நேர ஏற்பாடாக அல்லாமல், அல்லது தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்கிற ஏற்பாடாக அல்லாமல்,
கொள்கைகளின் அடிப்படையில் உருவானதாக, மக்களுக்கான போராட்டக்களத்திலிருந்து உருவானதாக
இருக்க வேண்டும் என்று கூறி வந்திருக்கிறது. கூட்டணி அவசியம், யாரோடு கூட்டணி
என்பது அதைவிட முக்கியம் என்ற அடிப்படையில்தான் அகில இந்திய அளவில் காங்கிரஸ், பாஜக,
மாநில அளவில் திமுக, அதிமுக தவிர்க்கப்பட்ட கூட்டணியை வலியுறுத்தி வந்திருக்கிறது.
முதல் முறையாகத் தமிழகத்தில்
இது சாத்தியமாகியிருக்கிறது. நான்கு கட்சிகளும் உடன்படுகிற பொதுவான கொள்கைகளின் அடிப்படையில்
கூட்டியக்கம் கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கொள்கைகள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டிருக்கின்றன.
உடன்பாடு இல்லாத பிரச்சனைகளில் அந்தந்தக் கட்சிகள் தனித்தனியே இயக்கம் நடத்தவும், உடன்பாடுள்ள
பெரும்பாலான பிரச்சனைகளில் இணைந்து போராட்டம் நடத்தவும் எந்தத் தடையும் இல்லை. இதுதான்
ஜனநாயக நாகரிகம். அடுத்தடுத்து மக்களுக்கான போராட்டங்களை இக்கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.
அந்தப் போராட்டக்களத்திலிருந்துதான் இந்தக் கூட்டணி உருவாகியிருக்கிறது. ஆரோக்கியமான
மாற்றமல்லவா இது?
மக்கள் மாறி மாறி திமுக,
அதிமுக-வுக்குத்தானே வாக்களித்து வந்திருக்கிறார்கள் இதற்கு ஆதரவளிப்பார்களா என்று
கேட்கப்படுகிறது. நேற்று வரையில் வேறு மாற்று என்பதே இல்லை. இந்தக் கட்சிகளே கூட அன்றைய சூழல்கள் காரணமாக திமுக அல்லது அதிமுக-வுடன்
தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள வேண்டிய நிலைமைதான் இருந்துவந்தது. அப்போது
இதை விட்டால் அது, அதை விட்டால் இது என்று மக்கள் முடிவு செய்தார்கள். இப்போது அந்த
இரண்டும் இல்லாத, நம்பகமான தலைமைகளின் இந்தக் கூட்டியக்கம் ஒரு மாற்றாக வந்திருக்கிறபோது,
இதற்குத்தான் ஆதரவளிப்பார்கள்.
தேர்தல் நெருங்க
நெருங்க இது சிதறிப்போகும் என்று சிலர் சாபமிடுகிறார்கள். உண்மை என்னவென்றால், தனிமைப்பட்டுவிட
முடியாது என்ற உணர்வோடு வேறு சில கட்சிகள் இந்தக் கூட்டியக்கத்தில் வந்து சேரும், தேர்தல்
நெருங்க நெருங்க இது மேலும் மேலும் வலுப்பெறும் என்பதுதான்.
திமுக-வோடு சேராததால் அதிமுகதான்
பலனடையும் அல்லது அதிமுகவோடு சேராததால் திமுக-தான் பலனடையும் என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும், திமுக ஆட்சிக்கு
வராமல் தடுக்கப்பட வேண்டும். இதை ஏற்றுக்கொள்கிறவர்கள் - இந்த இரு கட்சிகளின்
ஆதரவாளர்கள் உட்பட - மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள்.
கூட்டியக்கம் புறப்பட்டுவிட்டதாலேயே,
கொள்கை அறிவிப்பை வெளியிட்டுவிட்டதாலேயே மக்கள் தாங்களாக வந்து ஆதரவளித்துவிடுவார்கள்
என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கொள்கை அறிவிப்பின் ஒவ்வொரு அம்சத்தையும்
மக்களிடையே விரிவாக எடுத்துச்செல்வது, மேலும் மேலும் கூர்மையான பொதுப் பிரச்சனைகளுக்காக
இணைந்து போராடுவது என்ற நடைமுறைகளில்தான் அது சாத்தியம். கூட்டியக்கம் திட்டமிட்ட முறையில்
இவ்விரண்டையும் செயல்படுத்தும்.
-புதிய தலைமுறை, இமயம் தொலைக்காட்சிகளில்
நடந்த விவாதங்களில் நான் சொன்ன கருத்துகளின் சாரம்
Courtesy: Kumaresan
Asak
Thanks
மாற்றம் அவசியம்தான்! ஆனால் இந்த கூட்டணியினரே இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டு அமைத்து ஆட்சியில் இருந்தவர்கள்தான் என்பது இடிக்கிறது!
ReplyDeleteஆமாம் கால சூழ்நிலை காரணமாக இருந்தவர்கள்தான். ஆனால் அதற்காக இன்னும் திமுக அதிமுக வையே ஆதரிக்கதான் வேண்டுமா? இவர்களுக்கும் ஒரு சான் தருவதன் மூலம் பெரிய 2 கட்சிகளுக்கும் பாடம் புகட்டலாமே
Deleteஅனைவருக்கும் வணக்கம்.
Deleteநண்பர் திரு. “ தளிர் சுரேஷ் “ அவர்கள் சொல்வது போல இந்த கூட்டணியினர் இரண்டு திராவிட கட்சியினருடன் கூட்டு அமைத்து ( கூட்டு என்பதை விட தொகுதி உடன்பாடு எனக்கொள்வதே சரியாக இருக்கும்) கடந்தகாலத்தில் போட்டியிட்டது உண்மைதான்..
இடதுசாரி கட்சியினர் தனது “ பொது எதிரியை சரியாக இனங்கண்டு - அதாவது எந்த நிலையிலும் பி.ஜே.பி. & காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்துபோட்டியிட்டதோ / ஆட்சியில் பங்கு பெற்றதோ இல்லை . மத்தியில் இந்த திராவிட கட்சிகளில் எது கூட்டணியில் உண்டோ , அதன் பின் , பிரிதொன்று வேரு வழியின்றிதான் , இடதுசாரி கட்சிகளுடன் உடன்பாடு காணும் நிலைக்கு தள்ளப்பட்டது. .
தற்போதைய சூழலில் நல்லதே நடக்கும். நாமும் நம்பித்தான் பார்ப்போமே.
கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416
நாள் 03 11 2015
தமிழா! U2 தமிழா ? உம்மையுமா மாற்றினார்கள்.
ReplyDeleteஅப்புறம் அவர்களே கேட்பார்கள் 'ஏ'மாற சொன்னது நானா என்று.. இங்குள்ள பல விஷயங்களை தாங்கள் சொல்வது கண்டு பல வேளை நான், சிரித்து, ரசித்து, சிந்தித்து இருக்கிறேன். ஆனால் இவர்களை நம்பி நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டு நீங்களும், உங்க பேச்சை கேட்டு நாங்களும் இவர்களை ஆதரித்துவிட்டு கடைசியில் நம் முகத்தில் வீசப்படும் கறைகளை நாம் தான் மாற்றி மாற்றி துடைத்துக்கொள்ள வேண்டும். எனவே நமக்கு வேண்டாம். இந்த நாற்றம் பிடித்தித்த. ---------------..
சந்தனமே ஆனாலும் சாக்கடையில் விழுந்தால்
ReplyDeleteநாறித்தான் போகும்.
ம்ம்ம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது ஒவ்வொரு தேர்தலின் போதும் நடக்கின்றது...ஏதோ மாற்றம் வந்தால் சரி
ReplyDeleteநான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டிருக்கிறேன். நான் ஓட்டு போட்ட இரண்டு கட்சிகளும் டெபாசிட் வாங்கவில்லை. அப்படிப்பட்ட கட்சிகளை அடையாளங்கண்டு என்னால் முடிந்து ஒரு ஓட்டை அளித்து ஜனநாயக கடமை ஆற்றுவதில் அப்படியொரு ஆனந்தம். இந்த முறை மக்கள் நினைத்தால் ஒரு மாற்று அணிக்கு வாய்ப்பளிக்கலாம்.
ReplyDeleteஇதுவரை நான் ஓட்டு போட்ட கட்சிகள்: முதல் தேர்தலில் - இந்திய ஜனநாயக கட்சி (மோதிரம் சின்னத்தில்), இரண்டாவது தேர்தலில் - காங்கிரஸ் (கை சின்னத்தில்).
ஓட்டளித்துவிட்டு எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என வீட்டிலும் நண்பர்களுடனும் விவாதம் (அடிதடி ரகளை) செய்வதே தனி சுகம்.
வணக்கம் சகோ,
ReplyDeleteஎனக்கும் இது தோன்றியது. இந்த மக்கள் நலக் கூட்டியக்கத்திற்கு வாக்களிப்பது குறைந்த பட்சம் குடும்ப அரசியலை ஒழிக்கும்.
இன்னும் 10 வருடத்திற்கு தேர்தலில் இரு கழகங்களும் தொடர்ந்ந்து தோற்றால், இரண்டும் காணாமல் போகும்.
ஆயினும் இரண்டும் கார்பரேட் போல் கட்சியை நன்கு வளர்த்து வைத்து இருக்கிறார்கள்.சமாளிப்பதும் கடினம்.தேர்தல் வேலைகளில் ஈடு கொடுக்க முடியுமா? ஆளும் கட்சிக்கு ,ஆதரவாக அனைத்தும் இயங்கும் .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி!!!
உங்கள் நல்ல எண்ணம் புரிகிறது....ஆனால் வரலாறு அவர்களின் கதைகளை எழுதிவைத்திருக்கிறது சரியில்லை என...இன்னும் யோசிப்போம்...விடியும்...முடியும்
ReplyDeleteபொதுவான கொள்கைகளின் அடிப்படையில் கூட்டியக்கம் ...கேட்க நன்றாய் இருக்கிறது ஆனால், பொதுவான கொள்கை என்று வரும்போது இப்போது இருக்கும் அரசியலைத் தூற்றுவதாகத்தான் இருக்கும் நாம் எப்போதும் வாய்ச்சொல்லில் வீரர்கள்.
ReplyDelete