Sunday, November 22, 2015



இப்படியும் சில மனைவிகள் (படித்ததில்_ரசித்தது)


வாட்சப்பில் வந்ததை படித்து ரசித்த ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்ததை நான் படித்து ரசித்து வலைத்தளத்தில்
#படித்ததில்_ரசித்தது என்ற இந்த பதிவை பதிகிறேன் நீங்கள் படித்து ரசிப்பதற்காக.

இந்த படித்ததில் ரசித்தது என்பதை எழுதிய ஒரிஜனல் ஆள் என் வீட்டில் நடந்ததை ஒளிந்து இருந்து பார்த்து ரசித்து எழுதி இருப்பானோ என நினைக்கிறேன்....


ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் fat-ஆ இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க?" என்றாள்.
கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி: "என்னை sick-ன்னு சொல்றீங்களா?"
கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"
மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி: "இவ்வளவு நாளா உங்களை புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"
மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"
கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"
மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை blame பண்றீங்க!"
கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"
மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"
வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.
திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!


அன்புடன்
மதுரைத்தமிழன்
22 Nov 2015

14 comments:

  1. ஆஹா! கேட்க ஆளில்லைனு தானே இப்படில்லாம் கிண்டல் சுண்டல் செய்கின்றீர்கள்?நாங்களும் மாத்தி சொல்வேம்ல!

    ReplyDelete
  2. ம்ம்ம் ஏதோ புதுசா சொல்லுவீங்கன்னு பாத்தா நம்ம வீட்டு ராமாயணம்.., இல்லயில்ல மஹாபாரதமாத்தான் இருக்கு. அந்த ஒரிஜினல் ஆள் யாருன்னு கண்டு புடிங்களேன். காப்பிரைட் சட்டப்படி கேஸ் போட்டு உண்டு இல்லைன்னு பன்னிடலாம்..
    இப்படிக்கு
    மதுரைத் 'தமிழனை'ப்போலவே மனைவிக்கும், மனசாட்சிக்கும் பயப்படும் இன்னொரு தமிழன்..,

    ReplyDelete
  3. "வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்.. அர்த்தமெல்லாம் வேறுதான்..அகராதியும் வேறுதான் " பாடல் நினைவுக்கு வருகிறது. தம சரியாகி விட்டது போலத் தோன்றுகிறது. 'சட்'டென வோட்டுப் போட முடிந்தது.

    ReplyDelete
  4. என்னத்த சொல்ல....?எனக்கெல்லாம் பழகிப்போச்சு....

    ReplyDelete
  5. ஒன்னுமட்டும் தெளிவா தெரியுது. உலகம் முழுக்க ஒரு வாட்ஸ் அப் செய்தி ஒரேநாளில் சென்றடைகிறது. நானும் இதை நேற்று படித்தேன்.

    ReplyDelete
  6. தலைப்பு"இப்படித்தான் மனைவிகள்" னு வச்சுக்கலாமோ?

    ReplyDelete
  7. சமீபத்தில் இதே போல ஒரு காணொளி பார்த்தேன். அது தான் நினைவுக்கு வந்தது! :)

    வீட்டுக்கு வீடு வாசப்படி!

    ReplyDelete
  8. ஹஹஹஹ் இதை நான் எங்கேயோ வாசித்த நினைவு....வாட்சப், ஃபேஸ்புக் இல்ல...ம்ம் அது இருக்கட்டும்...

    ReplyDelete
  9. ஹஹஹஹ் இதை நான் எங்கேயோ வாசித்த நினைவு....வாட்சப், ஃபேஸ்புக் இல்ல...ம்ம் அது இருக்கட்டும்...

    கீதா

    ReplyDelete
  10. ஒரே நம்ம நண்பர்கள் கூட்டமா இருக்கேனு நினைச்சா...ம்ம்ம் ஹப்பா பரவால்ல நம்ம நண்பிகள் மைதிலியும், நிஷாவும் ஆஜராகியிருக்காங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஜாராகி என்னா பிரயோசனம்? அவர்கள் உண்மைகளை தான் சொன்னேன்னுட்டு அடுத்த பதிவை பார்த்தே போயிட்டிருக்கார்!

      இந்த பதிவில் உண்மையே இல்லைன்னும் ஒப்புக்க முடியாமல் மனசாட்சினு ஒன்னு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு பார்க்குதேப்பா!

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.