பைவ் ஸ்டார் பதிவர் அறிமுகம் ( 5 Star )
நண்பர்களே நான் நீண்ட காலமாக
செய்ய வேண்டும் என்ற நினைத்ததுதான் இந்த 5
ஸ்டார் பதிவர் அறிமுகம் என்பது. இதன் மூலம் நான் அறிந்த நல்ல பதிவுகளை தொடர்ந்து தரும் வலைத்தளங்களை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இது நண்பர்களின் தளங்களை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி அல்ல..... இப்படி நான் தெரிவு
செய்யும் தளங்களை எனது தளத்தின் வலது பக்க மூலையில் அந்த தளத்திற்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். 2 வாரத்திற்கு ஒரு முறை புதிய பதிவர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள்
அது வரை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டவரின் தளத்திற்கான லிங்குகள் அங்கு இருக்கும்
எனது அறிவிற்கு எட்டிய அளவில்
நான் மிக சிறந்த தளங்கள் என கருதப்படுவைகள் மட்டுமே இங்கு அறிமுகப்படுத்துகிறேன். இதில்
சில தளங்கள் நான் தொடர்ந்து செல்வது, சில தளங்கள்
நான் நெட்டில் கண்டுபிடித்தகாகவே இருக்கும். ஒரு வேளை இந்த தளங்களை நீங்கள்
அறிந்து இருக்கலாம். ஆனால் எனது தளத்திற்கு தொடர்ந்து வரும் சைலண்ட் ரீடர்கள் சில நேரங்களில்
அறியாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் அவர்களுக்கு ஒரு நல்ல தளத்தை நல்ல எழுத்தை
அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சிதான்.( இனிம யாரும் என்னை நல்ல பதிவுகள் போடுங்கள் என்று அட்வைஸ் பண்ண
முடியாது.. உஸ்ஸ் அப்பாடா எப்படி எல்லாம் இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி
இருக்கிறது )
அந்த முயற்சியில் நான் முதன்
முதலில் அறிமுகப்படுத்தும் தளம்திரு. வெங்கட்ராமன் (எ) வெங்கட் அவர்களின் சந்திப்பதும் சிந்திப்பதும் என்ற வலைத்தளத்தைதான்
திரு.வெங்கட் அவர்கள். சிறு
வயது முதல் கல்லூரி படிப்பு வரை நெய்வேலியில் இருந்தார். இவரது படிக்கும் காலத்திலேயே
அரசு பணி கிடைத்து, பல வருடமாக தில்லியில்
வசிக்கிறார்.( என்னைப் பொறுத்த வரையில் மிக அதிர்ஷ்டக்காரர்... காரணம் பூரிக்கட்டை பூஜை இவருக்கு கிடையாது ஹும்ம்ம்ம் பொறாமையாகத்தான் இருக்கிறது எனக்கு)
இவர் வலைப்பூ ஆரம்பித்து அதில் தான் சந்தித்த, சிந்தித்த விசயங்களையும், தில்லி நகரம்
பற்றியும், பயண அனுபவ கட்டுரைகளையும், தன்னை பாதித்த விசயங்களையும் அருமையான அழகிய புகைப்படங்களுடன் மிக எளிமையான்
தமிழில் பதிவேற்றி வருகிறார். ( இவரது மனைவி கோவை2தில்லி என்ற தளத்திலும் சிறு வயது மகள் வெளிச்சகீற்றுகள் என்ற தளத்திலும் எழுதி தங்கள் கைவண்ணத்தை காட்டி வருகிறார்கள் )
நான் அறிந்த வரையில் இதயம்
பேசுகிறது என்ற வார இதழில் எழுத்தாளர் மணியன் அவர்கள் எழுதிய பயணக் கட்டுரைகளுக்கு
அடுத்தப்படியாக மிக சிறப்பாக பயணக் கட்டுரைகளை எழுதி வருபவர் இவர்தான்
திரு வெங்கட் அவர்களை முதல் பைவ் ஸ்டார் பதிவராக அறிமுகப்படுத்துவதில்
நான் பெருமை கொள்கிறேன் ,
”தலை நகரிலிருந்து…”என்ற தொடரில் இந்தியத் தலைநகராம் தில்லிக்கான சில சிறப்பம்சங்கள், சில விஷயங்கள் என
அவர் கண்ட தில்லியைப் பற்றி இது வரை 17 பகுதிகள் எழுதியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம் சென்று
வந்ததை 27 பகுதிகளாக “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற பயணப்பதிவையும்
”பெஜவாடா – விஜயவாடா பயணம்” என்ற பயணப்பதிவையும்
”பவானிபுரம் தீவு” என்ற பயணப்பதிவையும் எழுதிய இவர் இந்த வாரத்தில் இருந்து பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரைபகுதி 1
எழுத ஆரம்பித்து இருக்கிறார்.
என்ன எனது ஐடியா உங்களுக்கு
பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளை சொல்லி அந்த தள உரிமையாளர்களை பாராட்டி, வாழ்த்தி
நாலு நல்ல வார்த்தை சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தி செல்லுங்களேன்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
மிக மிக அருமையான, எங்கள் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய நண்பர் திரு வெங்கட் ஜி யை இங்கு முதலில் அறிமுகப்படுத்தியமைக்கு நாங்கள் மகிழ்வும், பெருமையும் அடைகின்றோம் மதுரைத் தமிழா...நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் மிகப் பொருத்தமானவை. மிக்க நன்றி..
ReplyDeleteகீதா: வெகுநாட்களாக நாங்கள் இருவரும் சந்திக்க வேண்டும் என்று நினைத்தாலும், எனக்குதான் அந்த வாய்ப்பு கிட்டியது. அருமையான, சுவாரஸ்யமான பதிவர் நண்பர். நான் எனது பயணத் தொடரில் அவர் சொன்ன தலைநகர் ஸ்வாரஸ்யங்கள் பற்றிய அவரது சுட்டியைத் தர நினைத்து செய்யமுடியாமல் போக அதை அடுத்த நிறைவுப் பகுதியில் தரலாம் என்று நினைத்து எடுத்து வைக்க, அதை நீங்களே இங்கு பகிர்து விட்டீர்கள். மிக்க நன்றி! மதுரைத் தமிழன் சகோதரரே! எனது இன்றைய இரண்டாவது பதிவில் அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டதை எழுதியுள்ளேன். பதிவு நீளம்தான்...ஹஹஹ இனிமேல் எழுதுபவற்றை நீளம் குறைத்துச் சிறிய பதிவாக வெளியிடுகின்றேன்/றோம்.
நண்பர்/சகோதரர் வெங்கட்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!
உங்கள் ஐடியா சூப்பர்! மிக நல்ல முயற்சி. பலரைத் தெரிந்து கொள்ளவும், ஊக்கப்படுத்தவும் உதவும் உங்கள் இந்த முயற்சி. வலைப்பதிவர்கள் நமது அன்பும், நட்பும் பெருகும் நல்லதொரு முயற்சி. அவர்களைப் பாராட்டியது போலவும், அவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியது போலவும் ஆன நல்ல முயற்சி. உங்களுக்கும் எங்கள் மனம் உவந்த பாராட்டுகள். வாழ்த்துகள்! தொடருங்கள்...தொடர்கின்றோம்...
ReplyDeleteஇனிய நண்பர் வெங்கட் ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteவெங்கட் நான் ரசிக்கும், பொறாமைப்படும், சுவாரஸ்யமான, சுறுசுறுப்பான பதிவர். அவர் குடும்ப உறுப்பினர் தளங்களுக்கும் சென்றிருக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் ஐடியா நல்ல ஐடியா. இதே போன்ற எண்ணம் எங்களுக்கும் சில நாட்களாக உண்டு.
வாழ்த்துகள்.
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் தனக்கு மற்றவர்கள் கொடுத்த விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தார். இந்த விருதுகளைப் பெற்ற மற்றவர்கள் இன்னும் பிற வலைப் பதிவர்களுக்கு பகிர்ந்தளிக்க வலையுலம் ஒரே கலகலப்பாக இருந்தது.
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் விருது வழங்கலை தொடங்கி வைத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கு நன்றி. உங்கள் கையால் FIVE STAR BLOGGER முதல் விருதினைப் பெற்ற, சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல வேலை செய்தீர்கள் .... வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteபூரிக்கட்டை நல்லா வேலைசெய்கிறது.
நல்லா இருக்கு இந்த ஐடியா,
மிக நல்ல பதிவர், அவரின் பதிவுகள் அனைத்தையும் படித்துள்ளேன். பயணக்கட்டுரைகள் அருமையாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
திரு வெங்கட் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
ReplyDeleteஅலுவலகத்தில் இருக்கும் ஏகப்பட்ட ஆணிகளுக்கிடையே, ரொம்ப நல்ல பதிவுகள் போடுவார். அதுவும் அடிக்கடி. பாராட்டப்பட வேண்டியவர். அவருக்குள்ள பிரயாணம் செய்யும் வாய்ப்புகளுக்காக (அவரே ஏற்படுத்திக்கொள்ளும்படியான நண்பர்களைப் பெற்றதற்காக)ப் பொறாமைப்பட வேண்டியவர். ரொம்ப பாசிடிவி திங்கிங். பெரும்பாலும் கான்ட்-ரவர்ஷியல் பதிவுகள் போடமாட்டார். இப்போதுதான் 901 பதிவுகள் முடித்துள்ளார்.
ReplyDeleteஇன்னும் நிறைய பேரை அவர் பிளாக் அடைவதற்காக உங்கள் அறிமுகம் உதவும்.
நல்ல முயற்சி வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteநல்ல முயற்சி இன்றைய அறிமுப்பதிவர் பாராட்டுக்குரியவரே. வாழ்த்துகள்இருவருக்கும்.
ReplyDeleteமிகவும் சிறப்பான முயற்சி! தொடருங்கள்! பைவ் ஸ்டார் விருது வாங்கிய வெங்கட் அவர்களுக்கு பாராட்டுக்கள்! இவரது பதிவுகளை மிகவும் ரசித்து படிக்கும் வாசகன் நான்! பாராட்டுக்கள்!
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி நண்பரே. உங்களிடம் இருந்து இந்த பாராட்டு பெற்றதற்குப் பிறகு இன்னும் தரமான பதிவுகள் எழுத வேண்டுமே என்ற மலைப்பு வந்து விட்டது. முடிந்த அளவிற்கு பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன்.
ReplyDeleteஇங்கே எனது தளத்தினைக் குறிப்பிட்ட உங்களுக்கும் கருத்துரைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
வரும் வாரங்களில் உங்களால் பாராட்டப்படப் போகும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
மிகவும் அருமையான திட்டம்! இனிய பாராட்டுகள்!
ReplyDeleteநண்பர் வெங்கட் நாகராஜ் சிறந்த தேர்வு. எங்கள் மனம் நிறைந்த வாழ்த்து(க்)கள்.
வெங்கட்டுக்கு வாழ்த்துகள்! அடுத்து,அவர்கள் உண்மைகள் வலைப்ப திவில் இப்பணியைத் தொடங்கியுள்ள
ReplyDeleteநண்பருக்கும் வாழ்த்துகள்!
அருமையான ஐடியா.. இந்த காரியத்தை செய்ததின் மூலம் நீங்கள் சூப்பர் ஸ்டார் பதிவராகிவிட்டீர்கள் .
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவெங்கட் அவர்கள் குடும்பத்துடன் சென்னையில்
பதிவர் சந்திப்பில்கலந்து கொண்டு
சிறப்பித்த நினைவுகள் இன்னமும் பசுமையாய்
மனதில் பதிந்துள்ளது
அனேகமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
பதிவர்களாக இருப்பது வெங்கட் சாரின் குடும்பம் மட்டும்தான்
என நினைக்கிறேன்
மிகச் சரியான பதிவரை மிகச் சரியான சமயத்தில்
மிகச் சரியாக கௌரவித்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுடன்...
வெங்கட் ஜிக்கு எமது வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல முயற்சி
ReplyDeleteமுதல் ஃபைவ் ஸ்டார் பதிவராக சிறப்பித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள திரு. வெங்கட்ஜி அவர்களுக்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள். நான் இந்தப்பதிவினை ஏனோ முன்னாலேயே பார்க்க இயலாமல் விட்டுப்போய் உள்ளது. அதனால் என் மிகத்தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteOUR VENKAT JI IS WELL DESERVED FOR THIS ! :)
தற்போதுதான் உங்களின் இத்தொடரை பார்த்தேன். நல்ல முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். முதல் தேர்வு சிறப்பு. தேர்வு செய்த உங்களுக்கும், தேர்வான வெங்கட் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறான பகிர்வுகள் நண்பர்கள் ஒவ்வொருவரை அடையாளப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
ReplyDeleteஉங்களிடமிருந்து முதன்முதலாக ஃபைவ்ஸ்டார் விருது பெற அத்தனை தகுதிகளும் கொண்டவர் திரு வெங்கட். பயணக் கட்டுரை மன்னன் இவர். மிகவும் சுவாரஸ்யமாக அத்தனை தகவல்களையும் கொடுப்பவர். இவரது கட்டுரைகளை பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொண்டு எல்லா ஊர்களுக்கும் செல்லலாம். அத்தனை துல்லியமாக செய்திகளைக் கொடுப்பவர். இவரது பதிவுகளுக்கு கூடுதல் கவர்ச்சி இவரது புகைப்படங்கள். புகைப்படங்கள் எல்லாமே கவிதைகள்! தான் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களையும் எழுதி நம்மை ஒரு virtual உலகத்திற்கு இவரது பயணக் கட்டுரைகள் அழைத்துச் செல்லும்.
ReplyDeleteமுதல் தேர்வு முத்தான தேர்வு! திரு வெங்கட் அவர்களுக்கும், அவரை விருது வழங்கி கௌரவித்த உங்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்!
வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றி. உங்கள் போன்றவர்களின் தொடர்ந்த ஆதரவும் வாழ்த்துகளும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் தூண்டுகோல். என் முதல் மின் புத்தகம் ”ஏரிகள் நகரம்-நைனிதால்” சமீபத்தில் வெளிவந்தது. அடுத்த மின்புத்தகமும் விரைவில் வர இருக்கிறது. இதுவும் பயணக் கட்டுரைகள் தான். தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.
ReplyDelete