இன்றைய இந்தியா
பகுதி 2
இன்றைய இந்தியாவின்
முக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் மதமா? சாதியா ,மொழியா, கலாச்சாரமா தலைவர்களா என்று சற்று கூர்ந்து பார்த்தால் இதெல்லாம்
காரணமல்ல பக்குவம் இல்லாத மக்கள்தான் காரணம்
என்று நன்கு புரியும்
பாலியில் கொடுமைக்காக
போராடிய தலைவனை பாராட்ட சென்ற மகளிர் அணித்தலைவியின் இடுப்பில் கிள்ளினான் அந்த தலைவன்
.இந்த சுந்திர இந்தியாவில் இப்படி தலைவன் செய்தால் அது பாலியலாக அல்ல பாராட்டாகத்தான்
எடுத்து கொள்ள வேண்டும்
இந்தியாவின்
எதிர்காலம் மற்றும் வளர்ச்சி இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்று விவேகானந்தர் கூறி
சென்றார் ஆனால் இன்றைய இந்தியாவின் இளைஞர்கள் கையில் ஸ்மார்ட் போன் தான் இருக்கிறது
அதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி அல்ல பேஸ்புக்கின் வளர்ச்சிதான் அதிகரிக்கிறது
மத்திய அரசு
என்பது இந்தியாவை கூறு போட இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு.......
இன்றைய இந்தியாவில்
குடியால் பல குடும்பம் அழிகிறது என்று மதுவிலக்குக்கு எதிராக போராட்டம் நடத்தி டாஸ்மாக்கை
மூடச் சொல்லி போராடுபவர்கள் ஆண்களின் காம பசிக்காக
பல பெண்களின் வாழ்க்கை சிரழிக்கபடுவதற்கு எதிராக போராடி மும்பையில் இருக்கும் சிவப்பு
விளக்கு பகுதியை முட போராட முன் வாரலாமே.. மக்களே
யோசிங்களேன் மதுவால் குடும்பம்தான் அழிகிறது ஆனால் விபசாரத்தால் சமுகமே
அழிகிறதுதானே...
டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது இருக்கிறது... இந்திய பொருளாதாரம் கடந்த
1 1 1/2 ஆண்டாக வளர்ச்சியடைந்துள்ளது... விலைவாசி குறைந்துள்ளது என்று மாயா ஜாலம் காட்டி
முகநூலிலும் பத்திரிக்கைகளிலும் மீடியாக்களிலும் வாய்ஜாலம் பண்ணி ஜம்பம் காட்டி வந்த பாஜகவினர் கூச்சலை இப்போது எங்கே காணவில்லை....உலக சந்தையில்
கச்சா எண்ணெய்விலை குறைந்துள்ள இந்த வேலையில் இந்த அளவு வீழ்ச்சி என்றால் கச்சா எண்ணெய்
100 டாலருக்கும் மேல் இருந்திருந்தால் என்ன
நடந்திருக்கும்?
அன்புடன்
மதுரைத்தமிழன்
(டி.ஜே.துரை)
இந்தியா,சமுகம்,அரசியல்.பிரச்சனை,சிந்தனை,கேள்விகள்
சிறப்பான சிந்தனைகள்!
ReplyDeleteஅன்பிற்குரிய நண்பர் மதுரைத் தமிழன் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteதங்களின் பல்சுவைப்பதிவுகளைப் பார்த்து வியந்து மகிழ்ந்து வரும் பல்லாயிரம் தமிழ்வலைப்பதிவர்க்கு நமது “தமிழ்வலைப்பதிவர் திருவிழா-2015“ நிகழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் நமது விழாவின் விட்ஜெட்டைத் தங்களின் தளத்தில் இணைத்து -விழா முடியும் வரை- நிலையாக நிறுத்தி வைக்கும் வகையில் உதவிட வேண்டுகிறேன். செய்வீர்கள் என நம்புகிறேன்.
விழாவிற்கான தங்களின் -வலைத்தமிழ் வளர்க்கும் அனுபவம் மிக்க - ஆலோசனைகளை வழங்கிடவும்
விழாவிற்குத் தாங்கள் வர வாய்ப்பிருந்தால் பேருவகையோடு வரவேற்கிறேன். வர இயலாத பட்சத்தில், விழாப்பற்றி ஒரு தனிப்பதிவு போடும்படி வேண்டுவதோடு, “தமிழ்வலைப்பதிவர் கையேடு“ தயாரிக்கும்போது தங்களின் விவரங்களையும் அதில் இணைத்துத் தர வேண்டுகிறேன்.
இதுபற்றிய விவரத்திற்கு எனது http://valarumkavithai.blogspot.com/2015/08/2015_12.html பதிவு மற்றும். திரு திண்டுக்கல் தனபாலன் பதிவு http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html ஆகியவற்றில் சென்று பார்க்கவும் வேண்டுகிறேன். இதற்காக எனது முன்கூட்டிய நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் பாணியில் பி.கு (1) - ஒருவன் தேர்வெழுதிவிட்டு வந்த மகனை அடியோ அடியென்று அடித்தானாம். அவன் “ஏம்ப்பா ரிசல்ட் வர்ரதுக்கு முந்தியே அடிக்கிறே?“ என்று அலறினானாம். அப்பன் சொன்னானாம் “எப்படியும் நீ ஃபெயிலாகத்தான் போற... ரிசல்ட் வர்ர அன்னிக்கு நா ஊர்ல இருக்கனோ இல்லையோ தெரியாது...அதுக்காகததான் இப்பவே உன்னை நாலு போடு போட்டு வக்கிறேன்“ன்னானாம்!
பி.கு-(2)- எனது முன்கூட்டிய நன்றி தெரிவிப்புக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.