Sunday, August 30, 2015



கருத்து கணிப்பும் இணையத்தில் கேலிக்குரியாகும் திமுக கட்சியும் 

போலியான தகவல்களை பரப்பி மோடி போல நாமும் பதவியை பிடித்துவிடலாம் என ஸ்டாலின் கனவுகள் கண்டு வருகிறார். மோடி தன் வித்தையெல்லாம் தமிழர்களிடம் காட்டியும் தமிழகத்தில் மண்ணை கவ்வியது பற்றி ஸ்டாலினுக்கு புரியவில்லை. அதனால்தான் சமீபத்தில் நடத்திய கருத்துகணிப்பு நாடகம். அந்த நாடகத்தில் தன் தந்தையைவிட தமக்கு மிக செல்வாக்கு இருக்கிறது என்று காண்பிக்க முயன்று ல் இப்போது அவர் கேலிக்குரியவராகி இருக்கிறார்.அது மட்டுமல்ல திமுகவையும் கேலிக்குரியதாக ஆக்கிவிட்டார்.



இளங்கோவன் இவருக்கு மிகவும் நன்றி செலுத்த வேண்டும் காரணம் ஸ்டாலின் நடத்திய நாடகத்தால் இவரின் பிரச்சனைகள் அமுங்கி போய்விட்டன.



கலைஞர் வந்தால் வரவேற்பேன்! ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கலைஞருடன் கூட்டணி ஸ்டாலின் அறிவிப்பு

லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு முடிவுகளுக்கு அப்புறம் திமுக, கலைஞர் திமுக,ஸ்டாலின் திமுக என்று இரண்டாக பிளவுபட்டு இருக்கிறது, அதில் ஸ்டாலின் திமுக முன்ணணியில் இருப்பதால் ஸ்டாலின் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கலைஞருடன் கூட்டணி என்று ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இதனால் கலைஞர் திமுக அதிருப்தி அடைந்து அவசர அவசரமாக கூட்டம் கூட்டி பேசி இருக்கிறது பேச்சின் முடிவில கலைஞர் திமுக, கனிமொழிதிமுகவுடனும் அழகிரி திமுகவுடனும் பெசிவிட்டு அதன் பின் முடிவுகளை அறிவிப்பதாக தகவல்கள் வெளி வந்து இருக்கின்றன

லயோலா கல்லுரியின் கருத்து கணிப்பு முடிவுகள் மூலம்  திமுக கலைஞர் திமுக ஸ்டாலின் திமுக என்று இரண்டாக பிளவுபட்டு இருக்கிறது என்றும் அதில் ஸ்டாலின் திமுகதான் முன்ணணியில் இருக்கிறது என்றும் அறியப்படுகிறது...

கருத்துகணிப்பிலே ஸ்டாலினுடன் தோற்றுப் போன கலைஞர் இனிமே ஜெயலலிதாவை எதிர்த்து ஜெயிக்க முடியாதுதானே

ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் கலைஞர் ஆதரவாளர்கள் கூடவே இருந்து குழி பறிப்பார்கள் ஏனென்றால் ஸ்டாலின் ஜெயித்து வந்தால் கலைஞர் ஆதரவாளர்கள் ஒரங்கட்டப்படுவார்கள் என்பதால்தான். #மீ பாவம் ஸ்டாலின்

ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு கட்சியின் தலைமை பதவியை வெல்லட்டும் அதன்பின் முதல்வர் பதவிக்கு போட்டியிடலாம் .பத்தாவதே பாஸாக பல முறை முயற்சியாம் ஆனால் ப்ள்ஸ்டுவில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுவிடுவேன் என்று சவால் விடுவது மாதிரிதான் இருக்கிறது

நடந்து சென்று வீல் சேரில் செல்லும் தலைவரை வெற்றிப் பெற்று சாதனை செய்த தளபதிக்கு நாம் வாழ்த்து செல்வோம்

தனித்து போட்டியிட தி மு க தயார்.... - செய்தி
தனித்துவிடப்பட்டால் தனித்துதானே போட்டியிட வேண்டும்

தனித்து போட்டியிட தி மு க தயார்.... - செய்தி
என்னது...... காங்கிரஸும் திமுகவை விட்டு கலண்டுக்கிட்டு போயிடுச்சா?

அன்புடன்
மதுரைத்தமிழன்
30 Aug 2015

12 comments:

  1. நீங்கள் நடுனிலைமையாக இருப்பதால், இப்படி எல்லோரையும் கலாய்க்க முடிகிறது. இந்தப் பதிவின்மூலம், கருத்துக்கணிப்பையே கேலிக்குறியதாகச் செய்துவிட்டீர்கள். கருணானிதியின் முயற்சி (கருத்துத்திணிப்பு) வீணா?

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்து கணிப்பை கண்டு ஏமாற ராமதாஸ் மற்றும் விஜயகாந்த் ஒன்றும் ஏமாளிகள் அல்ல அவர்களும் கலைஞரிடம் கடந்த காலங்களில் பாடம் கற்றவர்கள்தான். இந்த திட்டத்தால் ஏமாந்தது மட்டுமல்ல கேலிகுரியதாகியது திமுக மட்டும்தான்

      Delete
  2. இந்த கூத்தெல்லாம் பார்க்க தான் ஏமாளிகள் நாங்கள் இருக்கோமே,,

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்து தப்பு இந்த கூத்தை எல்லாம் பார்க்கும் ஏமாளிகள் நாங்கள் அனுபவிப்பவர்கள் நீங்கள் என்று இருந்திருக்க வேண்டுமோ?

      Delete
  3. கேலிக்கூத்து.ரசித்துப்படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து கருத்துகள் சொன்னதற்கு நன்றி நண்பரே

      Delete
  4. பழங்கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்! பலிக்கிறதா பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. கனவுகள் பலிப்பது இல்லை நல்ல முயற்சிகளுக்குதான் பலன் உண்டு

      Delete
  5. நல்ல கருத்து கணிப்பு!! நல்ல கலாய்ப்பு நன்றி நண்பரே!!

    அன்புடன் கரூர்பூபகீதன்!!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நம்ம அறிவிற்கு பட்டதை சொல்லி செல்லுகிறேன் படித்து ரசித்து கருத்துக்கள் இட்டதற்கு மிகவும் நன்றி

      Delete
  6. கலைஞரின் ஓய்வு என்றைக்கோ நிகழ்ந்திருக்க வேண்டியது. திமுகலயாவது ஸ்டாலின்னு ஏதோ பூச்சி காட்டுறாங்க. அம்மா கட்சில மட்டும் என்ன வாழுது? கட்சியை வளர்க்கத் தெரியாத திராவிடக் கழகங்களின் ஆட்சி ஆக்கிரமிப்பு மெல்ல இனிச் காகும் என்று எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies

    1. திராவிடம் அடிபட்டு சாகதுடிக்கும் பாம்பு போலத்தான் இருக்கிறது. கழகங்களுக்கு மாற்று வேண்டும் ஆனால் வருகிற மாற்றம் எல்லாம் கழகங்களைவிட மோசமாகத்தான் இருக்கிறது இது தமிழக்திற்கு கிடைத்த சாபம் போல இருக்கிறது...ஹும்ம்ம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.