சிவாஜிக்கு பொதுமக்கள்
பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா?
நடிகர் சிவாஜி
கணேசணுக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக தமிழக
அரசு அரசு அறிவித்ததை செய்திதாளின் மூலம் அறிந்தேன்.
அறிந்ததும் எரிச்சல்தான் வந்தது. காரணம் நடிகன் மக்களின் பொழுபோக்கிற்காக நடித்து அதிக அளவு சம்பாதித்ததை தவிர இந்த சமுகத்திற்காக
நல்லது ஏதும் அவன் செய்துவிடவில்லை.
ஓவர் ஆக்டிங்க் பண்ணிய
சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது கொஞ்சம் ஒவராகத்தான் இருக்கிறது
அந்த காலத்தில்
நடிப்பு துறையில் சிவாஜி வெற்றி பெற்று இருக்கலாம் அதற்காக மணிமண்டபம் அரசாங்க செலவில்
மக்களின் வரிப் பண்த்தை கொண்டு கட்டுவது என்பது மிக பெரிய தவறு. நாட்டு மக்களுக்கு
செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்க அரசாங்கம் இதற்காக பணத்தை வீணடிப்பது மிகவும் கண்டிக்க
தக்கது. மணிமண்டபம் கட்டி பராமறிப்பதற்கான பணத்தில் பல பெண்கள் படிக்கும் கல்லூரிகளில்
டாய்லெட்டாவது கட்டி தந்தால் இளம் பெண்களின் கஷ்டம் தீரவாவது வாய்ப்புண்டு.
உண்மையில் சிவாஜி
நடிப்பில் சிறந்தவர் அவருக்கு மணிமண்டபம் அவசியம்
என்று திரையுலகம் நம்பினால் ஒவ்வொரு படத்திற்கும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள்
தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து கட்ட ஏற்பாடு செய்யவேண்டும் அதைவிட்டு விட்டு மக்கள்
வரிப் பணத்தை வீணாக்குவது வெட்டித்தனம்
நடிப்பு துறையில்
சாதித்த சிவாஜிக்கு மணிமண்டபம் என்றால் மற்ற துறையில் சாதித்த நபர்களுக்கும் மணிமண்டபம
கட்டுவதும் அவசியம்தானே அப்படி இல்லையென்றால் ஒரு துறைக்குமட்டும் ஆதரவு காட்டுவது
என்பது மற்ற துறையில் சாதித்தவர்களுக்கு இழைக்கும் துரோகம்தானே
நடிகர் சங்கத்திற்கு
கட்டிடம் கட்டுபவர்கள் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி அதை சங்க பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாமே...வார்த்தைக்கு
வார்த்தை சிவாஜியின் நடிப்பை பார்த்துதான் நாங்கள் நடிப்பை கற்றுக் கொண்டோம் என்று
பேசும் கூத்தாடிகளே சிவாஜி இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் உங்களால் அதற்கு ஏதும்
செய்யமுடியவில்லை என்றால் உங்கள் முக வேஷத்தையாவது இந்த விஷயத்தில் கலைத்து கொள்ளுங்கள்
இல்லையென்றால் அதாகவே கலைந்து உங்கள் சாயம் வெளுத்துவிடும்
தமிழக அரசே சிவாஜியோ
அவரது குடும்பத்தினரோ தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு துளிகூட தமிழக மக்களுக்கு செலவிடவில்லை
அப்படிபட்டவர்களுக்காக பொதுமக்கள் பணத்தில் இருந்து மணிமண்டபம் அவசியமா? அதற்கு பதிலாக
முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுக் கழிப்பறை கட்டி பெண்களின் துயரை
துடைக்கலாமே.... அல்லது பல கிராமங்களில் ரோடுகள் சரியில்லையே அதை சரி செய்யலாமே அல்லது
சுகாதர மையங்களை கட்டி கிராம மக்களுக்கு உதவலாம் இன்னும் இப்படி பல பயனுள்ள திட்டங்களுக்கு
உதவலாமே?
----------------------------------------
சினிமா மோகத்தை இன்றைய இளையதளமுறையினரிடம் குறைக்க இப்பொழுது உள்ள நடிகர்கள் சிவாஜிகனேஷன் நடிப்பை பார்த்து அதன்படி நடித்தாலே போதும் ஒரு பய தியோட்டர்பக்கம் எட்டி பார்க்க மாட்டான் என்பதுதான் நிதர்சன உண்மை
அன்புடன்
மதுரைத்தமிழன்
வணக்கம் நண்பரே அருமையான விடயத்தை முன் வைத்தீர்கள் நடிக(ன்)ர் என்பவர் தனது குடும்பத்துக்காக உழைத்தார் குடும்பத்தை முன்றேற்றி வைத்தார் பொவுது போக்கிற்காக நாம் பணத்தை செலவு செய்தோம் அவ்வளவுதான் பிறகு அவர்களுக்கும் நமக்கும் உறவு இல்லை இதுதான் உண்மை ஆனால் கூமுட்டாப்பயல்கள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ஏன் ? சிவாஜி குடும்பத்தாரிடம் இல்லாத பணமா ? தாங்கள் கேட்டது போல நடிகர் சங்கத்திடம் இல்லாத பணமா ? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை அல்லது இறக்கும்வரை ஏமாற்றும் கூட்டம் இருந்நது கொண்டே.... இருக்கும், இறக்கும்
ReplyDeleteஇதே கருத்தை எல்லா நடிகனுக்கும் சொல்பவன் நான். அதிலும் சிவாஜியை நல்ல நடிகனாக மட்டும் ஒத்துக்கொள்ளலாம் பதிவுக்கு வாழ்த்துகள் நண்பா..
தமிழ் மணம் 1
கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.
ReplyDeleteசினிமாவில் மூழ்கிக் கிடக்கும் மக்களை மேலும் மூழ்கடித்து சிந்தனை மட்டுப்படுத்தும் திசைதிருப்பு செய்கிறது அரசு.
வழித் தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு அடிப்பதில் நம் அரசியல் வியாதிகளை விஞ்ச எவருமில்லை.
ReplyDeleteசிவாஜி குடும்பம் கடைசி வாரிசும் ராஜபோகமாகத் தான் வாழுகிறார்கள். அவர்கள் வைக்கலாம் . சாந்தி நிலையத்தையே மண்டபமாக்கலாம். சமீபத்தில் சாந்தி திரையரங்கு விற்று கோடிகள் கண்டதாக செய்தி வந்தது.
அரசு விரும்பினால் நீங்கள் சொல்வதுபோல் தமிழகக் கிராமப் பள்ளிக் கூடங்களுக்கு மலசல கூட வசதி செய்து அதற்கு கலைக்குரிசில் சிவாஜி ஞாபகார்த்தமாக தமிழக அரசால் மக்களுக்கு செய்யும் சேவை எனப் விளக்கமாகப் பலகை வைக்கட்டும். நிச்சயம் மக்கள் மகிழ்வார்கள்.
அல்லது தமிழகக் கிராமம் எங்கும் ஒரு முக்கியமான வீதியைச் செப்பனிட்டு அதற்கு சிவாஜி பெயரை வைக்கட்டும். தண்ணீர் பஞ்சமுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோக வசதி செய்து அவற்றுக்கு சிவாஜி பெயரிடட்டும்.
மக்கள் மகிழ்வார்கள். இக்கலைஞனை நினைப்பார்கள். மணி மண்டபம் - ஏன் போதை ஏறியவர்கள் படுத்து உருளவா?
அருமையான விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉருபடியா என்ன செஞ்சுருகாணுக இது வர...
ReplyDeleteஅவரு சம்பாரிச்ச எல்லாக் காசையும் மக்களுக்குக் கொடுத்து இருந்ந்தால் மணிமண்டபம் கட்டலாமா? அப்போவும் எதுக்கு? தனக்கு மணிமண்டபம் கட்டனும்னு எண்ணத்தில்தான் எல்லாத்தையும் கொடுத்தார்னு ஒரு பதிவு எழுதிவீங்க.
ReplyDeleteஅதுக்கும் ஜால்ரா அடிக்க ஒரு கூட்டம் வரும்!
IMHO, He deserves that honor. It is quite possible sivaji fans could collect that money and do the same. If they do, what will you say? Sivaji fans are "senseless", right? You will write another article according the situation. Well..
An indescent comment with no sense at all.
ReplyDeleteமணிமண்டபம் அப்படினா என்ன... அப்புறம் மணி மண்டபத்துக்கும் நினைவு மண்டபத்துக்கும் என்ன வேறுபாடு....
ReplyDeleteசிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது சிலைவைப்பது எல்லாம் ஒரு அரசு செய்ய கூடாத செயல்கள்.அது எந்த நடிகர்கள் நடிகைகளாகயிருந்தாலும் சரி.
ReplyDeleteஇது திரு யோகன் பாரிஸ் சொன்னமாதிரி மக்களுக்கு சொந்தமான தேங்காயை எடுத்து வந்து பிள்ளையார் கடவுளுக்கு உடைக்கும் தமிழக அரசின் செயல் தான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நடிகர் நடிகைக்கு மணிமண்டபம் கட்டுவது, சிலைவைப்பது என்று தமிழக அரசு அரசு அறிவிப்புகள் வெளியிடும் போது அதை ஏதோ மிக பெரிய நல்ல செயல் என்று நினைத்து கொண்டாடம இருக்க தமிழக மக்கள் சிந்திக்கணும்.
பயனுள்ள விஷயத்தை தந்த மதுரை தமிழனுக்கு பாராட்டுக்கள்.
சரியான கருத்து. மற்றவர்கள் சொல்லத் தயங்குகிற கருத்து. யாருக்கும் (அது யாராக இருந்தாலும் சரி) மணிமண்டபம் எதற்கு? அதற்குப் பதிலாக, அவர் வாரிசுகள் 50 லட்சம் கொடுத்தால், ஒரு அரசுப் பள்ளிக்கு அவர் பெயர் வைக்கலாம். அந்தத் தொகையை அந்தப் பள்ளி முன்னேற்றத்துக்குச் செலவு செய்யலாம். இறந்தவருக்கும் தன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு) நன்மை செய்ததாக இருக்கும். எதற்கு ஏகப்பட்ட சிலைகள், அதற்குச் சிறைக் கூடங்கள் (கம்பிவலைக் கூடாரங்கள்), காக்கை அவமதிப்புக்கள்?
ReplyDelete