Friday, August 7, 2015



ஜெயலலிதா  அவர்களுக்கு மோடி சொன்ன இரண்டு  அவசர ஆலோசனைகள்


தமிழகத்தை வாழ வைக்கும் அன்னையே! இன்று தமிழகம் முழுவதும் மதுவிலக்குக்கு எதிரான கோஷங்கள் மிக அதிக அளவில் எழுகின்றன். டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும் அந்த கடைகளை உடைத்தும் போராடுகிறார்கள். இந்த பிரச்சனைகளை எளிதில் தீர்க்க 'மதுரைத்தமிழன்' சொன்ன அறிவுறையை நான் உகளுக்கு  சொல்லுகிறேன் அது பிடித்து இருந்தால் நடைமுறைப்படுத்தவும்.

தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை ஒரே இரவில் மூட உத்தரவு இட்டு அதற்கு பதிலாக தமிழகம் எங்கும் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் டீகடைகளில் மதுவைகளை விற்க ஏற்பாடு செய்யுங்கள். இப்போது டாஸ்மாக்கில் வேலை செய்பவர்களை சேல்ஸ்மேன்களாக நியமித்து அவர்களுக்கு என்று ஒரு டார்கெட் நிர்ணயித்துவிடுங்கள். அவர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக விற்பனை கமிஷன் மட்டும் கொடுங்கள் அதன் பின் பாருங்கள் வருமானம் அலைகடல் போல உங்களை தேடிவரும்( பெட்டிக்கடைகளை வைகோ ஆட்கள் சூரையாட மாட்டார்கள் காரணம் அங்கு அவர் பிள்ளையின் கம்பெனி சிகரெட்டுகளும் அங்கு விற்பனை செய்யப்படுவதால்)

மற்றொரு ஆலோசனை... தமிழகத்தில் மட்டும் மதுவை விற்காமல் மற்ற மாநிலங்களிலும் அம்மா மலிவு விலை மதுக்கடையை ஆரம்பித்து வையுங்கள் மற்ற மாநில மக்களும் உங்கள் பெருமையை பேசுவார்கள் அதன் மூலம் நீங்களும் என்னை போல பிரதமராக வாய்ப்புக்கள் மிக அதிகமாக இருக்கும்...

இது போல மேலும் பல அதிக ஆலோசனைகள்  மதுரைத்தமிழனிடம் இருக்கின்றன.  என்ன ஆலோசனை வேண்டுமானாலும் நீங்கள் மதுரைத்தமிழனிடம் கேட்கலாம்.


அவசரம் வேண்டாம் நல்லா நிதானமாக யோசிச்சு சொல்லுங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. மதுவிலக்கு போராட்டம் நடத்திய வைகோ'க்கே பூமாராங் காட்டினவிங்க அம்மா, ஸோ உங்க ஐடியா தேவைப்படாது அங்கே......எப்பூடீ...

    ReplyDelete
  2. அய்யா வணக்கம்,
    மதுக்கடைகள் மூடப்டுவது தீர்வு என்று சொல்வது,,,,,,,
    பூரிக்கட்டையை எல்லாம் உடைத்து விட்டால்
    அடியில் இருந்து தப்பிக்கலாம் என்பது போல்,,,,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
  3. அடப்பாவி.. இந்த யோசனை ஆட்சியாளர்களுக்கு வந்தால், இனி பெட்டிக் கடைக்கும் நாந்தான் போய் வாங்கிவரணுமா (வீட்டுப் பொருட்களை). பசங்கள அனுப்ப முடியாதா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.