பைவ் ஸ்டார்
அவார்ட் பதிவர் அறிமுகம் 2
இந்த முறை பைவ்
ஸ்டார் பதிவராக என்னால் அறிமுகப்படுத்தப்படுவர் ஜோதிஜி. இவரது வலைத்தளம்
தேவியர்இல்லம் இவரது எழுத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும்
பைவ் ஸ்டார் என்பது நத்திங்க். இவருக்கெல்லாம் வானத்தில் இருக்கும் ஸ்டாரை எல்லாம்
பறித்துதான் தரவேண்டும்.அப்படி ஒரு தெளிவான அழகான ஆழமான எழுத்தோட்டம்.
திருப்பூர் என்றால் ஏற்றுமதி
ரெடிமேட் ஆடைகளுக்கு புகழ்பெற்றது என்பது மாதிரி அந்த நகரத்தில் ஏற்றுமதி ரெடிமேட்
ஆடைத் தொழில்களில் ஏற்படும் பிரச்சனைகளையும் அங்குள்ள உழைக்கும் மக்களின் பிரச்சனைகளையும்
உலகறியச் செய்தது இவரது எழுத்துதான்.
திருப்பூரில்
ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக
உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும்
அறிந்து வைத்திருப்பவர். எழுத்து, வாசிப்பு, என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர்.இவரது பதிவுகளில் தமிழ், தமிழ் மக்கள், சமுதாயம் என்ற உணர்வுடன் எழுதி
வருகிறார்.
இவரது பதிவுகள்
ஏதும் அவசரக் கோலத்தில் ஏனோதானோ என்று எழுதி குவித்தவைகள் அல்ல அவைகள் மனதில் புடம்
போட்டு அதன் பின் தங்கமாக ஜோலிப்பவைகள். ஜோதிஜி சமூக அக்கறைக் கொண்ட ஒரு அருமையான படைப்பாளியாய்
உருவாகிவருபவர். அவரின் எழுத்துக்கள் முலம் தமிழ் இணைய உலகில் பெரிதும் பேசப்படும்
இடத்திற்கு வந்துவிட்டார். நாவல் போன்ற துறைகளில் இறங்கினார் என்றால் இப்போது ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் பிரபல இலக்கிய எழுத்தாளர்கள்
இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள் என்பது
நிச்சயம்.
2013ஆம் ஆண்டு
இவர் வெளியிட்டு வெற்றி பெற்ற
"டாலர் நகரம்" என்ற அச்சு வடிவத்தில் புத்தகத்தின் மூலம் திருப்பூரை எழுத்தின் மூலம் மிக அழகாக படம் பிடித்துக்
காட்டிய ஜோதிஜி "ஈழம் -வந்தார்கள் வென்றார்கள்" "வெள்ளை அடிமைகள்" "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" காரைக்குடி உணவகம் ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள், பயத்தோடு வாழபழகி கொள் போன்ற மின்நூல்களின் மூலமாக இணையத்தில்செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு
நன்கு அறிமுகமானவர். இந்த நூல்கள் 70,000 மேல்
பதிவிறக்கம் செய்யபட்டுள்ளது குறிப்பிடத் தக்கது
நான் ப்ரொபஷனல்
கிராபிக்ஸ் டிசைனர் இல்லாத போதிலும் அவரது வேண்டுகோளுக்கிணங்க இவரது 2 மின்னூல்களுக்கு
நான் அட்டைபட பகுதியை வடிவமைத்து கொடுத்து இருக்கிறேன் அதற்கு வாய்ப்புக்கள்
கொடுத்த ஜோதிஜிக்கு எனது நன்றிகள்.
இந்த பைவ் ஸ்டார் அவார்ட் என்பது எனது தளவாசகர்களுக்கு
நல்ல எழுத்தை அறிமுகப்படுத்துவதன் ஒரு சிறு முயற்சிதான் என்பதை தவிர
வேறு ஏதும்மில்லை.
இன்றை ஸ்டார்
பதிவர் ஜோதிஜியைப் பற்றிய உங்கள் கருத்துகளை முடிந்தால் கிழே பதிந்து செல்லுங்கள்.
அது வருங்காலத்தில் இங்கு வந்து படிப்பவர்களுக்கு அவரை பற்றிய முழு விபரங்கள் அறிந்து
கொள்ள ஏதுவாக இருக்கும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதற்கு முன்
அவார்ட் வாங்கிய பதிவர் வெங்கட் நாகராஜ்
ஜோதிஜிக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteஜோதிஜி அவர்களை பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன். மிகவும் தன் னடக்கமுள்ளவர், அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு நிறை குடம். அருமையான அறிமுகம். நன்றி.
ReplyDeleteசிறந்த படைப்பாளி
ReplyDeleteஎல்லா ஆற்றலும் கொண்டவர்
http://www.ypvnpubs.com/
ஜோதிஜி அவர்களின் வந்தார்கள் வென்றார்கள்! கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு!? புத்தகங்களை படித்திருக்கேன்! அழகான கருத்துகள் உடைய புத்தகங்கள்!! நன்றி!!!
ReplyDeleteஅன்புடன் கரூர்பூபகீதன்?!!
வாழ்த்துக்கள், இவரின் சில பதிவுகளைப் படித்துள்ளேன். தாங்கள் அட்டைப் படமும் வடிவமைத்துள்ளீர்களா,,,,,,,
ReplyDeleteசிறந்த படைப்பாளியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
நான் யோசித்துக் கொண்டிருந்த அத்தனை நூல்களையும் அடக்கிய வடிவமைப்பு மிக நன்றாக வந்துள்ளது. பயன்படுத்திக் கொள்கிறேன். என் மேல் அதீத அன்பு கொண்டவர் நீங்க. அதற்கும் சேர்த்து நன்றி.
ReplyDeleteஜோதிஜி பற்றி எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்ததை சந்தோசமாக கருதுகிறேன் .உங்களின் ஃபைவ் ஸ்டார் அவார்டு பகுதிக்கு தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி .இந்த நன்றி என்னுடையது மட்டுமில்லை அவரின் எழுத்துக்களை விரும்பி படிப்பவர்களுடையதும் அவரைப் படித்தாலும் தனது கருத்தை பதிய முடியாத அதற்கு வாய்ப்பு இல்லாத பல பேரின் எண்ணத்தின் நன்றியறிதல்தான் அவரை உங்களால் தேர்வு செய்ய தூண்டி இருக்கிறது என்பது மிகப் பெரிய உண்மை .ஆனால் இவற்றுக்கெல்லாம் பின்னனியாக அவருக்கு தோள் கொடுத்து உதவியும் அவர் எழுதட்டும் என அவருக்கு வாய்ப்புக் கொடுத்த என் சகோதரி திருமதி ஜோதிக்கும் அவரது அன்பு மகள்கள் இருவருக்கும் நன்றி அவரை மிஸ் பண்ணிய அந்தக் குடும்பத்தின் தியாகம்தான் பல இடங்களில் அவரை நம் முன் நிறுத்தி இருக்கிறது.அவர்களுக்குத்தான் இந்த அவார்டு .ஏனென்றால் ஜோதிஜி ஒரு வைரம்தான் அது ஒளிரக் காரணம் அந்தக் குடும்பம்.
ReplyDeleteஅவர் செய்யும் இன்னொரு முக்கியமான ஓசை படாத வேலை ஆரம்பப் பதிவர்களின் எழுத்தை வாசிப்பதுவும் அதற்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சனம் எழுதுவதன் மூலம் ஊக்கப்படுத்துவதும் மிகப்பெரிய மனமுள்ள வேலை .அவரால் ஊக்கப்படுத்தி ஓடிக் கொண்டு இருக்கும் பல குதிரைகளில் நானும் ஒருவன் .எழுதுவதைத் தாண்டி அவர் செய்யும் மிகப் பெரிய அற்புத சேவை இது .அதை பகிர்ந்து கொள்ளவும் தயங்காத மனிதர் .
எழுத்தில் அவ்வளவு வேகம் இருந்தாலும் , ஜோதிஜி இயல்பில் ஒரு மனிதாபிமானி .
அவரின் உயரம் முழுமையாக இன்னும் வெளிபடுத்த வாய்ப்பு மலரவேண்டும் .அந்த திட்டம் அவரின் மனதில் இருக்கிறது அவருக்கு எல்லாம வல்ல இறையருள் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ..
சரியான தேர்வு.
ReplyDeleteநாங்களும் ஜோதிஜி அவர்களின் எழுத்துகளை மட்டுமின்றி அவரையும் மிக மிக உயர்வானவராகக் கருதுபவர்கள். அருமையான நுண்ணிய படைப்பாளி.....தன்னைப் புகழ் வட்டத்திற்குள் தள்ளிக் கொள்ள நினைத்திடாத எளிமையான மனிதர்! மிகவுமே! நேரில் சந்திக்க வேண்டும் அவரை என்ற அவா உண்டு. நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்தும் அவருக்குப் பொருந்தும்! அதையே நாங்களும் வழி மொழிகின்றோம்.....
ReplyDeleteஜோதிஜி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்! ...
Great choice. I adore his writing and his style. Wish him many more success.
ReplyDeleteமிகச்சிறந்த படைப்பாளி நண்பர் ஜோதிஜி! அவரை பெருமை படுத்தியதற்கு மதுரைத் தமிழனுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம 2
ஜோதிஜி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
ReplyDeleteபதிவருக்கு என் வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅடுத்தவரை மனம் வந்து பாராட்டவும் ஒரு மனசு வேண்டுங்க கிண்டலாக சொல்லவில்லை உண்மையாக சொல்கிறேன். சிறப்பான விருது வழங்கும் பகிர்வு தொடருங்க.
திருமிகு ஜோதிஜி அவர்கள் அடக்கமான . நல்ல பண்பாளர்! தாங்கள் அவரை அறிமுகப் படித்திய பதிவு நன்று!
ReplyDeleteஅருமையான தேர்வு
ReplyDeleteமுற்றிலும் தகுதியானவர்
வாழ்த்துவோம்
விருதுகளுக்கு தகுதியானவர் ஜோதிஜி என்பதில் ஐயமில்லை. தமிழ்வலைப்பதிவுலகில் முத்திரை பதித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்தப் பதிவானாலும் சமூகப் பார்வை கொண்டதாகவே அமைந்திருக்கும். வாழ்த்துக்கள் ஜோதிஜி சார்
ReplyDeleteசரியான தேர்வுக்கு நன்றி, மதுரைத் தமிழன் !
ஜோதிஜி அண்ணா.... உரிமையோடு பழகக்கூடியவர்... என்னிடம் எப்போதும் அன்பு காட்டுபவர்.... மிகச் சிறந்த படைப்பாளி... அருமையான எழுத்துக்கு சொந்தக்காரர்... இன்னும் ஒரு கூடுதல் சந்தோஷம் என்னன்னா இருப்பது திருப்பூராக இருந்தாலும் எங்கள் ஊருக்கு சற்றே அருகில் இருக்கும் ஊர்க்காரர்.... அவருக்கு இந்த விருது கொடுத்தமைக்கு நன்றி... ஜோதிஜி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஊக்குவித்தல் எனபது ஒரு கலை... அவரை பாராட்டியமைக்கு வாழ்த்துக்கள் அய்யா... தொடர்கிறேன்
ReplyDeleteஜோதிஜிக்கு மனதார வாழ்த்துக்கள்...
ReplyDeleteசகா! இந்த அவார்ட் நெஜமாவே தகுதி உள்ளவங்களுக்கு தான் போகுது. முதல் இரண்டு விருதுமே சூப்பர்! போகிற போக்கில் சுண்டல் போல் விநியோகம் செய்யப்படும் அவார்ட்களில் இருந்து மாறுபட்டு தரத்தோடு விருது வழங்கி வருவதக்கு முதலில் என் பாராட்டுகள்!
ReplyDeleteஜோதிஜி அண்ணா!! நேர்ந்த எழுத்துக்காரர்! சிறந்த மனிதாபிமானி! சமூக அக்கறை கொண்ட சீரிய பதிவுகளுக்குச்சொந்தகாரர்! அன்பு சகோதரர்! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவரது எழுத்துக்களை போலவே, அவரது புகைப்படங்களும் மின்னும். அவரை நம்மூர் பதிவர் விழாவில் சந்திக்கபோகிறேன். முதல் முறையாக!!! மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது:)
அண்ணனுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteதிருப்பூர் என்றாலே எனது நினைவுக்கு வருபவர் நமது ஜோதிஜி அவர்கள்தான். அவருக்கு ஒரு அவார்டு என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள், ஜி.
ReplyDeleteஃபைவ் ஸ்டார் விருது பெற்றுள்ள பதிவருக்கும் தங்களுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
ReplyDeleteநண்பர் ஜோதிஜியை சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டையில் நேரில் சந்தித்தேன். அவரது நூல் பதிவுகைள் பற்றி முழுமையாக தங்களின் பதிவு மூலமாக அறிந்தேன். சரியான தேர்வுக்கு வாழ்த்துகள். அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி. தங்கள் பணி தொடரட்டும்.
ReplyDeleteஎழுத்து என்பதை மிகவும் தீவிரமாகக் கொண்டவர் திரு ஜோதிஜி. நான் எழுதிய இவரது டாலர் நகரம் விமரிசனம் எனக்கு பரிசினைப் பெற்றுத் தந்தது - அது இவரது எழுத்திற்குக் கிடைத்த பரிசு என்றே இன்றளவும் நினைக்கிறேன். என் எழுத்துக்களைப் படித்து ரொம்பவும் உற்சாகப் படுத்துவார். திருப்பூரும், ஜோதிஜியும், தமிழும் இலக்கணமும் போல, பூவும் மணமும் போல, இரத்தினத்தையும், ஒளியையும் போல பிரிக்க முடியாதவர்கள். ஈழம், தொழிற்சாலையின் குறிப்புகள் இரண்டும் என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்கள்.
ReplyDeleteஎத்தனை விருதுகள் கொடுத்தாலும் தகும் ஒருவரைத் தெரிவு செய்ததற்கு உங்களுக்கு முதலில் பாராட்டுக்கள். ஜோதிஜிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!