எச்சரிக்கை : மது
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
இந்தியத் தலைவர்கள்
நாட்டிற்கு கேடு விளைவிப்பார்கள்
சினிமாவில் வருகிறது போல
வார்னிங்க் கொடுத்தாச்சு இனிமேல் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்
1.மது மனிதக் குலத்திற்கு
மிகப் பெரிய எதிரி அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் பைபிள்,
உங்கள் எதிரியை நேசியுங்கள் என்று சொல்லுகிறது. அதனால்தான் நான் பைபிள் சொல்லும் வழியில்
நடக்கிறேன்.
2. வாழ்க்கையில் மோசமான நிகழ்வுகள்
நடக்கும் போது அதை மறக்கக் குடிக்கிறார்கள். அது போல நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது அதை
கொண்டாடக் குடிக்கிறார்கள்.நல்லதும் நடக்கவில்லை கெட்டதும் நடக்கவில்லை என்றால் நீங்கள்
குடித்துப் பாருங்கள் இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும்
3 இளம் பெண்கள் சமையலறைக்குச் சென்று அம்மாவிற்கு உதவிய காலம் எல்லாம் இப்போது மலையேறி
போயாச்சு இப்போதெல்லாம் அப்பாவிற்கு உதவியாகக் கூட அமர்ந்து குடிக்கிறார்கள்
4.மது மிக மெதுவாக மனித உயிர்களை
பறிக்கிறது... சீக்கிரம் சாக நினைப்பவர்கள் குடிக்காமல் ரயிலில் விழுந்து சாகுங்கள்
5.எவராலும் தீர்த்து வைக்க
முடியாத பிரச்சனைகளை ஆல்கஹால் தீர்த்து வைத்துவிடும், எப்படியென்றால் பிரச்சனையை மறக்கடித்துவிடும்
அல்லது மரணத்தைக் கொடுத்து மிக நல்ல தீர்வாகக் கொடுத்துவிடும்
6. குடிப்பவர்கள் கெட்டவர்களாலாம்
குடிக்காதவர்கள் நல்லவர்களாம் அப்பக் குடிக்காதவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் நல்ல
காரியங்கள் நடந்து இருக்க வேண்டுமே நம் தலைவர்கள் பலர் நல்ல செயல்களைச் செய்து இருக்க
வேண்டுமே
7. குடிப்பவனால் அவன் குடும்பம்
அழியலாம் ஆனால் குடிக்காத பலர் செய்யும் அட்டூழியங்களால் நாடே அழிகிறதே?
8. குடிகாரன் குடித்துவிட்டு
ரோட்டிலோ பாரிலோ அல்லது வீட்டிலோ விழுந்து கிடப்பான். ஆனால் குடியாதவனோ பஸ்ஸில் பெண்களின்
இடுப்பில் தடவியோ கிள்ளியோ அல்லது மாமா என்று சொல்லி வரும் சிறுமிகளிடம் தவறான செய்கைகளை
செய்வார்கள்
மது குடிகாரர்களை மட்டும்
அல்ல நமது அரசியல் தலைவர்களையும் உளர வைக்கிறது
குடிகாரன் குடிப்பதை நிறுத்திவிடுவேன்
என்பதும் தமிழக அரசியல் தலைவர்கள் மதுவிலக்கை
அமல்படுத்துவேன் என்பதும் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது மாதிரிதான்
மது உடலுக்கு எவ்வளவு என்பதை
குடிகாரர்களுக்குப் புரியவைப்பதைவிட விட நமது தமிழக அரசியல்வாதிகளுக்கு யாராவது புரியவைத்துவிட்டால்
மதுவை நிச்சயம் தமிழகத்திலிருந்து ஒழித்துவிடலாம்
அன்புடன்
'மது'ரைத்தமிழன்
நல்ல பதிவு
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteசரி...சரி...தலைப்பைப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது... எதுக்கு அப்புறம் இந்த இடுகை எழுத ஆரம்பித்தீர்கள் என்று.
ReplyDeleteமுரளி அவர்களின் மதுமொழியை படித்தது மனதில் எழுந்தது இங்கு பதிவாக வந்துவிட்டது
Deleteஅனைத்தும் அருமை நண்பரே மிகவும் போதையோடு ரசித்தேன் தமிழ் மணம் 2
ReplyDeleteமது மட்டுமல்ல 'மது'ரைத்தமிழனும் போதையை ஊட்டுவான்
Deleteதலைப்பும் தந்த செய்தியும் பொருத்தமே!
ReplyDeleteநான் கிறுக்கியதையும் பொருத்தம் பார்த்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி
Deleteஉங்களின் குசும்பான மொழிகள் மதுவாக இனித்தன!
ReplyDeleteமது இனிப்பதில்லை உங்களுக்கு அனுபவம் இல்லை போலிருக்கிறது ஹீஹீ மது கசக்கும் அதுபோலத்தான் நான் சொல்லும் கருத்துக்கள் பலருக்கு கசக்கலாம். ஆனால் அது உங்களுக்கு இனிப்பாக இருந்திருக்கிறது
Deleteபாராட்டிற்கு நன்றி
வணக்கம்,
ReplyDeleteமுடிந்தால் புரிவைத்துப் பாருங்கள் பார்ப்போம்,
அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள்.
தூங்குபவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது அது போல புரியாதவர்களுக்கு புரிய வைத்துவிடலாம் ஆனால் புரியாதவர்கள் போல நடிக்கும் தலைவர்களை புரிய வைப்பது கடினம்
Delete"மது"ரைத்தமிழனின் "மது"மொழிகள் மதுமொழிகள்....
ReplyDeleteஎனது மது மொழிகள் ரசிக்க மட்டுமே
Deleteஆஹா! எனது மதுமொழிகளை தொடரந்து மதுரைத் தமிழனின் மதுமொழிகள் . அட! தொடர் பதிவாகி விட்டதே .
ReplyDeleteஅனைத்தும் மதுரைத் தமிழனின் டிரேட் மார்க் மது மொழிகள் . தொடரவோர் தொடரலாம்
Deleteஇந்த பதிவு உங்களின் பதிவை படித்தனால் தோன்றிய பதிவே....அதனால் என்னை திட்டாதீர்கள்
மதுவின் மது மொழிகள்!
ReplyDelete