எப்போதெல்லாம்
இந்தியாவில் படித்தவர்கள் மேலைநாடுகளுக்கு வந்து கடினமாக உழைத்து ஒரு நல்ல நிலையை அடையும்
போது இந்திய ஊடகங்கள் அவர்களை மிகவும் பெருமை பாராட்டும் போது அதனால் மிக மனப்புழுக்கம்
கொண்டவர்கள் அவர்களைத் தேசத் துரோகிகள் போல இட்டுக்கட்டிப் பேசிவருகிறார்கள்.
அப்படிப் பேசும்
பொழுது ஏதோ இந்தியாவில் படித்து
இந்தியாவிலேயே வேலை செய்பவர்கள் எல்லோரும் தியாகிகள் போன்றும் தேச நலனுக்காகப் பாடுபடுபவர்கள்
போன்றும் அப்படிச் செய்யாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடிச் சென்று அதில் சாதனை செய்துகாட்டுபவர்களை
தேசப் பற்று இல்லாதவர்கள் & துரோகிகள் போலச் சித்தரிக்கின்றனர்..இப்படிப் பேசுபவர்கள்
பலர் சொந்த காரணங்களாலோ அல்லது மேலை நாட்டு வாய்ப்புக்கள் கிடைக்காதவர்களோதான் மனப்புழுக்கம்
கொண்டு இப்படித் தூற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை இல்லாத இந்தியர்கள் மேலை நாட்டுக்கு
சென்று உழைப்பவர்களை என்றுமே மதித்துத்தான் வருகிறார்கள். அப்படிப்பட்ட நேர்மையாளர்களுக்கு
நன்றிகள்
முதலில் இந்தியாவில்
படித்துவிட்டு இந்தியாவில் வேலை செய்பவர்களால் இந்திய அரசாங்கத்திற்குக் கிடைக்கும் பலனையும்
இந்தியாவில் படித்துவிட்டு மேலை நாட்டில் வசிப்பவர்களால் என்னென்ன நன்மைகள் இந்தியாவிற்கு
கிடைக்கின்றன என்பதைச் சொல்லுகிறேன் அதன் பின் சொல்லுங்கள் யாரால் அதிக நன்மைகள் என்று.....
இந்தியாவில்
நன்றாகப் படித்துவிட்டு நல்ல வேலையில் இருப்பவர்களில் பெரும் பாலானவர்கள் செய்வது தங்கள்
ஈட்டிய வருமானத்தை விட மிகக் குறைவாகக் காட்டி வருமானத்திற்கு ஏற்ற வரிகட்டாமல் வரி ஏய்ப்பு
செய்துவருகிறார்கள்....இப்படிச் செய்வதால் பாதிப்பு யாருக்குக் கொஞ்சம் புத்தியுள்ளவன்
நன்றாக யோசித்து பதில் சொல்லட்டும்
மற்றும் இந்தியாவில்
படித்துவிட்டு அங்கேயே தொழில் தொடங்கி இந்திய வளங்களையும் மனித உழைப்புகளையும் குறைந்த
விலையில் பெற்று அதை மேலைநாடுகளில் சற்று அதிக விலைக்கு விற்று பெரும் லாபம் சம்பாதித்து
அந்த லாபத்தில் ஒரு சிறு பகுதியைமட்டும் இந்தியாவில் தன் தொழி அபிவிருத்திக்காகச் செலவிட்டு
மீதிப் பணங்களை வெளிநாட்டிலே பதுக்கி வைக்கும் இவர்களா தேசபக்தர்கள்? இதையும் கொஞ்சம்
யோசிங்க மக்களே
மற்றும் எந்தவொரு
தலைவனும் உண்மையாகவே நாட்டுப் பற்றுடன் நமது தேசத்திற்காக உழைக்கிறார் என்று உங்களின்
மனசாட்சியைக் கேட்டு பதில் அளியுங்கள் உங்களால் ஒரே ஒருவரைச் சுட்டிக்காட்ட இயலுமா என்ன?
இப்படி உங்களின்
தேசபக்தி இருக்க இந்தியாவில் படித்துவிட்டு மேலைநாடுகளில் உழைக்கும் நம்மவர்களைத் தேச
துரோகிகளாகச் சுட்டிக் காட்டும் உங்களுக்கு மனப்புழுக்கம் மிகவும் அதிகமே...
இந்தியாவில்
படித்துவிட்டு மேலை நாடுகளுக்கு வந்தவர்களால் இந்தியாவிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன
என்பதை இப்போது பார்ப்போம்...
நமது நாடு ஏற்றுமதி
செய்து அதனால் கிட்டிய அன்னிய செலாவணியை விட இப்படிப் படித்து வெளிநாடு சென்றவர்கள் இந்தியாவிற்கு
அனுப்பி வைத்த பணம் மூலம் கிட்டிய அன்னிய செலாவணி மிக அதிகம்.
இந்தியா அணுக்குண்டு
சோதனை நடத்திய போது அமெரிக்காவுடன் சேர்ந்து உலகின் பல நாடுகள் இந்தியா மீது பொருளாதார
தடைவிதித்த போது இந்தியா யாருக்கும் அடிபணியாமல் தலை நிமிர்ந்து நிற்கச் செய்தது மேலைநாட்டிற்கு
வந்தவர்கள் அனுப்பி வைத்த பணம் மூலம் கிடைத்த அந்நிய செலாவணிதான் என்பதை யாரும் மறந்து
இருக்க மாட்டார்கள்
இந்தியாவில்
வேலை வாய்ப்பு திண்டாட்டம் இன்று வரை தீர்ந்தபாடில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படி
வெளிநாடு வருபவர்களால்தான் இந்தியாவில் வசிக்கும் இன்னொருவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல்
வெளிநாட்டிற்கு வந்த இந்தியர்கள் தங்களின் திறமையால் இங்குப் பல தொழில்களைத் தொடங்கி அதிலும்
முக்கியமாக கணணி துறையில் பல தொழில்களைத் தொடங்கி அதில் இந்தியர்களுக்கு பெரும் வாய்ப்பை
அளித்தனர். அதுமட்டுமல்லாமல் அப்படி தங்கள் சம்பாதித்த லாபத்தை வைத்து இந்தியாவிலும்
வியாபாரத்தை எக்ஸ்ட்டெண்ட் பண்ணி அங்கும் பல்லாயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்துள்ளனர்.
இதனைப் பார்த்த வெளிநாட்டு நிறுவனங்களும் போட்டிப் போட்டு இந்தியாவில் IT கம்பெனிகளை ஆரம்பித்து
அவர்கள் லாபம் சம்பாதித்ததுமட்டுமல்லாமல் இந்தியாவிலும் பெரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி
தருவதில் மிக முக்கிய பங்கு வகித்தனர். கடந்த 10, 20 ஆண்டுகளில் நமது அரசாங்கமும் தலைவர்களும்
ஏற்படுத்திய வேலைவாய்ப்புகளை விட இவர்களால் இந்தியாவில் ஏற்பட்ட வேலை வாய்ப்புக்கள்
மிக அதிகமே..
இந்தியாவில் படித்துவிட்டு
இங்கு வந்து தங்களின் கடின உழைப்பை அவர்கள் காட்டியதால்தான் இந்தியப் பிரதமர்கள் வெளிநாட்டு
இன்வெஸ்ட்மெண்டுக்களுக்காக வேண்டுகோள் விடுவிக்கும் போது வெளிநாட்டு முதலாளிகள் இந்தியாவில்
கொஞ்சமாவது முதலீடு பண்ண முயல்கிறார்கள்
அதனால்தான் சொல்லுகிறேன்
இந்தியாவில் படித்துவிட்டு இந்தியாவில் வேலை செய்து இந்தியாவிற்குக் கெடுதல்கள் செய்துவிட்டு
தங்களைத் தேசபக்தர்களாகக் காட்டிக் கொண்டு மனப் புழுக்கத்தால் வெளிநாடு சென்று உழைப்பவர்களை
தேசத் துரோகிகளாக சித்தரிக்கப்படும் இவர்கள் உங்களை விட மேன்மையானவர்களே
அதனால்தான் தலைப்பில்
சொல்லியுள்ளேன் போங்கடா புண்ணாக்குகளா. நீங்களும் உங்கள் தேசபக்தியும்..... என்று...
இவர்களிடம் இருந்து
பிழைக்குமா இந்தியா?
டிஸ்கி : தாங்கள்
பிறந்த நாட்டிற்கும் அல்லது தங்களை வாழ வைக்கும் நாட்டிற்கும் நல்லது நினைத்து நல்லதையே
செய்வதுதான் தேசபக்தி
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: கூகுள் நிறுவன
தலைமை பொறுப்பை ஒரு தமிழன் ஏற்றதும் அளவிற்கு அதிகமாக இந்திய ஊடங்கள் பாராட்டிப் பேசி
வருகின்றன.அப்படிப் பாராட்டிப் பேசத் தேவையில்லைதான். ஆனால் அதே நேரத்தில் சமுக தளங்களில்
பலர் அவர் என்ன செய்துவிட்டார் இந்தியாவிற்கு என்று சொல்லி அவரை ஏதோ தேசத் துரோகி மாதிரி
சித்தரித்து வருகின்றனர். அதைப் படித்ததால் எழுந்ததே இந்த பதிவு. நல்ல இந்தியர்களைப் புண்படுத்த
எழுதப்பட்டது அல்ல தேசத்துரோகிகளாக இருந்து தேசப்பற்றுள்ளவராக வேஷம் போட்டு நடிப்பவர்களை
விமர்சித்து எழுதப்பட்டதுதான் இந்த பதிவு
சூப்பர்! மதுரைத் தமிழா....!!! அனைத்துக் கருத்துகளும் டிஸ்கி உட்பட...! இதே எண்ண அலைகள்தான்...எனக்கும்..
ReplyDeleteஎன் மகன் வெளி நாடு சென்று தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், நன்றாகக் கற்றுக் கொண்டு வேலை பார்த்து அங்கிருந்து கொண்டே தன்னை மேலும் மேலும் மேன்மை படுத்திக் கொண்டு அதனால் வரும் வருமானத்தை இங்கு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க கிராமங்களில் கால்நடை கிளினிக்ஸ் நிறுவ வேண்டும் - குறிப்பாக க்ளினிக்கல் சயன்ஸ் இங்கு மேற்கொள்ளப்படாத அறுவை சிகிச்சைகள்- என்ற நல்ல எண்ணத்துடன் தான்...சுயநல எண்ணத்துடன் அல்ல....அங்கு லைசன்ஸ் க்ளியர் செய்து விட்டு விசா கிடைக்காததால் இங்கு வந்துவிட்டு மீண்டும் செல்ல முயற்சிகள்...ஆனால் பெரும்பான்மையோர்..சொல்லுவது நீங்கள் இந்தப் பதிவில் சொல்லி இருப்பது போலத்தான்..ஏதோ வெளிநாட்டு வாழ்க்கை மோகத்திலும், பணம் ஈட்டவும் என்று, எல்லோரும் அப்படியே தேசியப்பற்று இருப்பது போல் உணர்ச்சிவசப்பட்டு ஏகப்பட்ட அட்வைஸ்கள் அவனுக்கு அள்ளித் தெளிக்கப்படுகின்றன....
சரி, அப்படியே அவர்களது கருத்தை எடுத்துக் கொண்டாலும் எனது கேள்வி..வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டுவிட்டு இங்கு வந்து "சிங்கப்பூரை பாருடா,,அமெரிக்காவ பாருடா என்ன சுத்தம்...ட்ராஃபிக்கை எப்படி ஃபாலோ பன்றாங்க...சே..நம்ம ஊரு.." என்று சொல்பவர் இங்கு வந்த அடுத்த நிமிடமே குப்பையை தெருவில் கொட்டுவதும், சாலை விதிகளை மதிக்காமல் வண்டி ஓட்டுவதையும் பார்க்கத்தான் செய்கின்றேன்....நீங்கள் சொல்லி இருப்பது போல் வரி ஏய்ப்பது, லைசன்ஸ் வாங்க லன்சம் கொடுப்பது என்று....அட போங்கப்பா...நல்லது நடப்பதைப் பாராட்டத் தெரியாதவங்க..
என் எண்ண அலைகளை அப்படியே வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி தமிழா...
மேலே சொன்னது நான் கீதா..பெயரிட மறந்துவிட்டேன் தமிழா....
Deleteநல்ல பதிவுதான் தமிழா. சில நாட்களுக்கு முன்பு கூட சில வாசகர்கள் என்னையும் " அமெரிக்காவில் அமர்ந்து கொண்டு அமிஞ்சிகரைமேல் ஏன் அக்கறை என்று கேட்டார் . நல்லவிதமாக நாகாரிகமாக தான் கேட்டார், இருந்தாலும் மனதில் ஒருவித சோகம்.
ReplyDeleteஎன்னடா இது... வெளிநாட்டில் வாழ்வதால் தாய்நாட்டை பற்றி கவலைபடகூடாதா? வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு தாய் நாட்டிற்கு ஏங்குவது.. தாய் நாட்டில் அமர்ந்து கொண்டு வெளி நாட்டிற்கு ஏங்குவதை விட மேலானது...
வணக்கம் மதுரைக்காரரே,,,,,,,
ReplyDeleteநீண்ட நாட்களாக சொல்ல நினைத்தது,,,,,,,,
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே, ஆனால் தில்லையகத்தார் சொல்வது போல் இங்கு வந்தும் அங்குள்ள சட்டதிட்டங்களைப் ,,,,,,,,,
தாங்கள் சொல்வது வரி, லஞ்சம் இவைகளின் தொடக்கம் எங்கே?
சரி சரி ரொம்ப கோபப்படாதீங்க,,,, சகோ, வேறு ஏதோ என்று பூரிக்கட்டையைத் தூக்கப் போறாங்க,,,,,,,
நல்ல நாளும் அதுமா,
நன்றி.
தங்களின் கருத்தினை பெரும்பாலானோர்ஏற்பர். ஏனென்றால் அதில் யதார்த்தம் உள்ளது.
ReplyDeleteமிகவும் சிறப்பான கருத்துக்கள்! உள்ளூரில் இருந்து ஏமாற்றி வேசம் போடுபவர்களை தோலுரித்துவிட்டீர்கள்! நாட்டுக்கு நன்மை கிடைக்க செய்வதே தேசப்பற்று என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை!
ReplyDeleteGood one..well said
ReplyDeleteகொஞ்சம் புத்தித்தெளிவு வந்தவுடன் நானும் brain rush பற்றி பேசுவதில்லை சகா! நீங்க சொல்லியிருப்பது எல்லாமே சரிதான் சகா. இந்தியாவிலே இருந்துகொண்டு பெரிச்சாளி போல நாட்டை பள்ளம் தோண்டுபவர்கள், திரைகடல் ஓடி திரவியம் தேடித்தரும் உழைப்பாளிகளை குறைசொல்வது கேவலமானது.
ReplyDeletevery good article.
ReplyDeletei used to read all your articles when ever it comes.
one small suggestion please allow us to copy the articles so that i can forward the same to my friends
http://www.vinavu.com/2014/02/14/satya-nadella-as-microsoft-ceo-not-make-indians-proud/
ReplyDeleteஇதே பிரச்சன்னை Microsoft CEO வாக ஒரு இந்தியர் தெரிவு செய்யப்பட்டபோதும் எழுந்தது! மேலுள்ள linkல் raj என்ற பெயரில் comment எழுதியது நான்தான்!!
நல்ல கட்டுரை நண்பரே. பாராட்டுகள்.
ReplyDeleteசரியான எண்ண அலைகள். நம் நாட்டில் ஒருவன் வெற்றி பெரும்போது பாராட்டுவது, மற்ற இந்தியர்களும் உத்வேகம் பெறவேண்டும் என்பதற்காகவே. சானியா மிர்சா விம்பிள்டனில் வெற்றி பெற்றால் நாம் மகிழ்வதில்லையா? நேற்று, இந்திய அணி படுகேவலமாக விளையாடித் தோற்றதால் நாம் வருத்தம் பெருவதில்லையா. நாசாவில் நிறைய இந்தியர்கள் (அவர்கள் அமெரிக்கக் குடிமகனாக இருந்தபோதும்) பணிபுரிகிறார்கள் என்பதைக் கேட்டு நாமும் மகிழ்ந்து உத்வேகம் பெறவேண்டும் என்பதுதான். எதையுமே நெகடிவ் ஆகச் சிந்தனை செய்தால் அவர்களை விட்டு நாம் ஒதுங்கிவிடவேண்டும். (வயத்தெரிச்சல் கோஷ்டி.. இல்லாட்டா மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் அற்ப கோஷ்டி).... இவர்களுக்குத்தான் 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை'
ReplyDelete