Friday, August 7, 2015



அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?

மக்களே நல்லா கவனிச்சுகோங்க..... நான் எந்த அரசியல் தலைவர்களையும் அவமதித்து எழுதுவது இல்லை. நான் அரசியல்வாதிகளின் குணங்களை விவரித்து படத்துடன் சொல்லுகிறேன். அதனை படிக்கும் கட்சிகாரர்கள் நான் அவர்கள் தலைவர்களை அவமதித்து எழுதுவதாக குறை சொல்லுகிறார்கள்....



திருப்பியும் சொல்லுறேன் நான் எந்த தலைவர்களையும் அவமதிக்கவில்லை.அவர்களின் குணத்தையும் பழக்க வழக்கங்களையும் மட்டும் சொல்லிச் செல்லுகிறேன் அது தப்பு என்றால் என்னை குறை சொல்லாமல் உங்கள் தலைவர்களின் குணத்தையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற சொல்லுங்கள்.


சரி வந்ததது வந்தீட்டீங்க...... உங்களுக்காக நான் இரு படங்களை இங்கு பகிர்கிறேன். படித்து ரசித்து செல்லுங்கள்

avargal unmaigal

tamilnadu



அப்ப நான் வரட்டா?

அன்புடன்
மதுரைத்தமிழன்
07 Aug 2015

12 comments:

  1. உங்கள் காட்டூன்கள் இரண்டும் அருமை. இரண்டாவது காட்டூன் தமிழக மக்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. மனதில்படுவதை அப்படியே சொல்லுகிறேன். அதை படித்து 'தைரியமாக' பாராட்டும் உங்களை போன்றவர்களுக்கு எனது நன்றிகள்

      Delete
  2. ஹா ஹா ...
    இப்போ இங்கேயும்
    https://www.facebook.com/malartharu
    அப்புறம் ...
    தம +

    ReplyDelete
    Replies
    1. மாப்பிள்ளை அங்கே பகிர்ந்தற்கு மிகவும் நன்றி ஆனா அந்த இடம் நாலு நல்லவர்கள் வந்து போகும் இடம் அங்க போய் நம்ம பதிவை இடலாமா கொஞ்சம் யோசிங்க.....

      Delete
  3. என்னது?! தப்பா சொல்லலையா...ஹஹஹஹ்ஹ் படங்கள்ல ஏதோ உள் அர்த்தம் இருப்பது போல இருக்கே...ஹஹஹ் ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. ச்ச்சேய் நான் உள் அர்த்ததுடன் ஏதும் சொல்லவில்லை எல்லாம் வெளிப்படையாகவேதான் சொல்லுகிறேன். நீங்கள்தான் உள் அர்த்ததுடன் பார்க்கிறீர்கள். ஹீஹீஹீ

      Delete
  4. அந்த இரு படத்தில் இருக்கும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது அவர்களை அவமானப்படுத்தவில்லை என்பது அபத்தம்.

    உதாரணமாக, மதுரைத்தமிழனுக்கு மூளை இல்லை எனவும், நீங்கள் மற்றவரை நாய் போல் நடத்துவதாகவும் கூறினால் எப்படியிருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. படத்தில் இருக்கும் கருத்துகளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி


      எனக்கு மூளை இருக்கிறது என்று நான் யாரிடமும் சொன்னதில்லை காரணம் அது எனக்கு கொஞ்சம் கூட இல்லை. அடுத்தாக நான் மற்றவர்களை நாயை நடத்துவது போல என்றால் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாக இருக்க வேண்டும் காரணம் நான் நாயை வளர்க்கிறேன். அதுவும் நானும் தூங்கவது ஒரே பெட்டில்தான். நாய்க்கு இணையாக அரசியல்வாதிகளை ஒப்பிடாதீர்கள் அப்படி ஒப்பிடுவது நாயை மட்டம் தட்டுவது போலதான்

      Delete
    2. நான் உங்களுக்கு மூளை இருக்கா இல்லையா என ஆராய வரவில்லை, மற்றும் நீங்கள் நாயை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதும் ஒரு பொருட்டல்ல. ஒருவரை நாய் என்பதும் மூளை இல்லை என்பதும் அவமானப்படுத்தவில்லை என்று நீங்கள் சொல்வதை பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. சில அரசியல் நாய்களை(கேடுகட்டவர்களை) கேடுகெட்ட நாய் என்று அவமானப்படத்த என்ன தயக்கம் ?

      Delete
  5. நல்ல கார்ட்டூன்கள்..... தொடரட்டும்.!

    ReplyDelete
  6. சூப்பர் கார்டூன்ஸ்!

    ReplyDelete
  7. சொல்ல வந்ததைப் பளிச் என்று உங்கள் படங்கள் சொல்கின்றன. நல்ல உழைப்பு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.