காண்டம் 'அந்த' விஷயத்திற்கு
மட்டுமல்ல ( வெட்கப்படாமல் வந்து படியுங்க ) 12 +
என்ன மதுரைத்தமிழா
எப்ப பார்த்தாலும் அரசியல் வியாதிங்களை பற்றி எழுதுறீங்க இல்லைன்னா பூரிக்கட்டையால் அடி வாங்கினதை பற்றி எழுதுறீங்க..
இல்லைன்னா சரக்கு அடிப்பதால் கிடைக்கும் பலன் பற்றி எழுதீறீங்க
ஆனால் மக்களுக்கு பயன் தரக் கூடிய பதிவை நீங்க எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதே
என்று ஒரு நண்பர் கேட்டதால் இந்த பதிவு.
நல்ல பயனுள்ள பதிவு என்றால்
மக்களுக்கு நாலு நல்ல கருத்தை மனதில் விதைப்பதா என்று யோசிக்கும் போது திருவள்ளுவரில் இருந்து பலரும் பல நல்ல விஷயங்களை விதைத்து சென்றாலும்
அதை ஒரு பய புள்ளைங்க கூட படித்து அதன்படி நடக்க மாட்டேங்கிறார்கள். அதை தாங்கள் எழுதும்
கட்டுரைக்கு மேற்கோள் காட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் .அதனால் இந்த மக்களுக்கு நல்ல கருத்து சொல்லி ஒரு பிரயோசனம் இல்லை
என்பதால் நடை முறைக்கு உதவும் மற்றும் மிகவும் பயன்படக் கூடிய விஷயங்களை இங்கு பதியலாமே
என்று தோன்றிய போதுதான் காண்டத்தின் பல உபயோகங்கள் பற்றி சொல்லாம் என்று
தோன்றியது..
இந்த பதிவு வெளி வந்த பின் காண்டம் விற்பனை தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளாதால்
பெட்டிகடையில் இருந்து பிக் பஜார் கடை வரை காண்டம் வாங்கி ஸ்டாக் வைத்து கொள்வது நல்லது
காண்டத்தின் பல்வேறு
பயனுள்ள உபயோகங்கள்
1. இந்த காலத்து மக்கள் சினிமாவை
பார்த்து பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்களாம். அதனால் காதலர்கள்( கள்ளக்காதலர்களும்தான்)
தாங்கள் பஸ்ஸில் பயணிக்கும் போது தீடிரென்று மழை வந்துவிட்டால் உடனே பஸ்ஸில் இருந்து
இறங்கி டூயட் பாட ஆரம்பித்துவிடுவார்கள் அப்படி டூயட் பாடும் போது தாங்கள் பத்தாயிரம்
இருபதாயிரம் கொடுத்து வாங்கிய செல்போனோடு டூயட் பாடினால் அந்த செல்போனுக்கு இறுதி சடங்கு
நடத்த வேண்டியதுதான். அதனால் மழையில் இறங்கு முன் உங்கள் செல்போனை
non-lubricated ones காண்டத்தின் உள் போட்டு ஒரு முடிச்சு போட்டுவிட்டால் அது வாட்டர்
ஃப்ருப் கொண்ட கவராகிவிடும் அது போல மெரினா பீச்சில் தண்ணிக்குள் இறங்கி விளையாடும்
போது இது போல உங்கள் செல் போன்களை பாதுகாத்து கொள்ளலாம். அது போல உங்கள் வாட்சுகளையும்
பர்ஸ்களையும் இது போல பாதுகாக்கலாம்
2. நிறைய பெண்களுக்கு புதிதாக
வாங்கிய பாட்டில்களின் மூடியை திறக்க முடியாமல் அவதிப்படுவார்கள்.சில பெண்கள் பாட்டிலை
திறக்கும் போது தங்கள் கணவரையோ அல்லது மாமியார் அல்லது தங்களின் மேனேஜர்களை மனக் கண்முன்
கொண்டு வந்து அதன் பின் எளிதில் திறந்து விடுவார்கள் அப்படியும்
திறக்க முடியாதவர்கள் காண்டத்தை பாட்டிலின் மூடி மீது திணித்து திறக்க முயன்றால் மிக
எளிதில் திறந்து விட முடியும்.
3. வெளியூருக்கு பயணம் செய்யும் பெண்கள் பல சமயங்களில் ரப்பர் பேண்ட்களை
மறந்துவிடுவார்கள் அது மட்டுமல்லாமல் பல ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு பல சமயங்களில்
பல்வேறு தருணங்களில் ரப்பர் பேண்ட் தேவைப்படும் அப்போது அது கிடைக்காவிட்டால் உடனே
ஒரு non-lubricated காண்டத்தை எடுத்து அதை சிறு சிறு வளையமாக கட் செய்து
கொண்டால் அதை ரப்பர் பேண்ட் போல உபயோகித்து கொள்ளலாம்.
4. நமக்கு கழுத்து வலி அல்லது
கால் முட்டிகளில் வலி வரும் போது ஒத்தடம் கொடுப்பது வழக்கம். அப்படி ஒத்தடம் கொடுக்க
ஐஸ் கட்டிகள் கிடைக்கவில்லையென்றால் ஒரு non-lubricated ones காண்டத்தை எடுத்து அதில் மூன்றில் ஒரு பகுதி ஆல்கஹாலையும் மீதப்பகுதியை
தண்ணிர் கொண்டு நிரப்பி உங்கள் ப்ரீஜரில் வைத்து அது ஐஸ்கட்டியாக ஆன பின் உபயோகப்படுத்தலாம்
5. உங்கள் கையிலோ காலிலோ
காயங்கள் ஏற்பட்டு அதற்கு நீங்கள் பேண்டேஜ் போட்டு இருக்கலாம். அப்ப்டி போட்டு இருக்கும்
போது நீங்கள் குளிக்கவோ அல்லது பாத்திரம் கழுவும் போது துணி துவைக்கும் போது லலது நீர்
நிலைக்கு அருகில் போகும் போதுஅதில் தண்ணிர்
பட வாய்ப்புக்கள் உண்டு அதை தவிர்க்க காண்டத்தை காயத்தை சுற்றியுள்ள
பேண்டேஜ் மேல் சுற்றி வைத்தால் வாட்டர் ஃபுருப்பாக இருக்கும்
6. கையுறையாக பயன்படுத்தலாம் non-lubricated ones
/lubricated
7. நீண்ட தூர
பஸ் பயணம் செய்யும் சர்க்கரை வியாதிக்காரகள் இதை ( non-lubricated) பயன்படுத்தி பயணத்தின்
போதே யூரின் பாஸ் செய்துவிட்டு தூக்கி ஏறிந்துவிடலாம் கழிப்பறை இல்லாதா இடங்களில் பெண்களும்
இந்த முறையை பயன்படுத்தி கொள்ளலாம்.
8. மழை நேரங்களில் உங்களது
விலையுர்ந்த ஷுக்களை செப்ல்களை
non-lubricated கவர் செய்துவிட்டு நடக்கலாம்
9, ஷு பாலீஸ் செய்யவும் பயன்படுத்தலாம்
lubricated
10 சீடிகளை க்ளின் செய்யவும்
பயன்படுத்தலாம் lubricated
11 . பெண்கள் தலையில் தண்ணிபடாமல்
குளிக்க Bathing cap ஆக உபயோகிக்கலாம் non-lubricated
12. போதைப் பொருட்களை கடத்தவும்
பயன்படுத்தலாம்
Forget Proactive! You
may not believe it, but the lubricant on condoms have been said to help clear
up acne. Cambodian sex
டிஸ்கி: இந்தியாவில் விபசாரியிடம்
போக வெட்கப்படுவதை விட காண்டம் வாங்க பலர் வெட்கப்படுகிறார்கள் அதனால் அவர்களுக்காக
மேலும் ஒரு ஐடியா
அன்புடன்
மதுரைத்தமிழன்
பதிவை படிச்சிங்கதானே! உபயோகமாக
இருந்துச்சா இல்லையான்னு கொஞ்சம் வெட்கப்படாம சொல்லிட்டு போங்க...மேலும் உங்களுக்கு
வேறு எப்படி எல்லாம் உபயோகிக்கலாம் என்று தெரிந்தாலும்
சொல்லி செல்லாம்.
நிறைய உபயோகம் சொல்லியிருக்கீங்க! ஒரு பொருளை மாற்று உபயோகப்படுத்துவதில் தமிழன் புத்திசாலி என்று தெரிகின்றது!
ReplyDeleteஇது ஆங்கில தளத்தில் படித்தன் தமிழாக்கம்தான் இது. இதை என் வழியில் தந்திருப்பது மற்றும் சில ஐடியாக்கள் மட்டும் என்னுடையது. இதற்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை நண்பரே
Deleteஅட இத்தனை பயன்களா?
ReplyDeleteசூப்பர்...
அருமையான பகிர்வு.
எல்லாப் பொருட்களிலும் பல்வேறு பயன்கள் இருக்கின்றன... பலவித பயன்களை நாம் அறியாமல் இருக்கிறோம் அவ்வளவுதான்
Deleteநிரோத் பலூன்களை விட சீப்; மேலும் உறுதியானது. கல்லூரி விழாக்களில் நிரோத். தான்.எங்கும் எப்போதும் நிரோத் தான்.
ReplyDeleteஇரணடாவது வருடம் படிக்கும் போது..நானும் என் நண்பும் ஒரு100 நிரோத் கேட்டதிற்கு கடைக்கர்ர் மயக்கம் போடும் நிலைமைக்கு போய்விட்டார்
என் நண்பர்களில் ஒருவருக்குதான் முதலில் திருமணம் நடந்தது. அந்த நண்பருக்கு கல்யாண பரிசாக நாங்கள் நிரோத்தைதான் வாங்கி ஒரு சிறிய பாக்ஸி போட்டு அதை இன்னொறு பெரிய பாக்ஸில் போட்டு அதை இன்னொரு பாக்ஸில் போட்டு... அழகிய கிப்ட் பேப்பரில் சுற்றி அதை அவனுக்கு பரிசாக அளித்து முதல் இரவின் போதுதான் அதை திறக்க வேண்டும் என்று உத்தரவும் போட்டோம் அதை நினைத்தாலும் இப்போது சிரிப்புதான் வருகிறது
Deleteஹி...ஹி.... இதிலே ஏழாவது பாயிண்ட் படிச்சதுமே, நீங்க கொஞ்சம் நம்ம மசாலா தடவி இருக்கீங்கன்னு தெரிஞ்சு கிட்டேன். அதுலே " பொண்ணுங்களும் " ன்கிறது நீங்க சேத்தது தானே ? ஹி... ஹி ...
ReplyDeleteArumai
ReplyDeleteஆங்கிலத்தில் படித்ததுண்டு. உங்கள் பாணியில் அதைச் சொல்லி இருப்பது நன்று.
ReplyDelete