எனது பதிவுகளை
பலரும் படித்து வருகின்றனர்.அப்படி படித்து வருபவர்களை பற்றி ஒரு நிறுவனம் மூலம் புள்ளி
விபரங்களை சேர்த்து அதன் ரிசல்டை பார்த்த பின் சில வியப்பான செய்திகளும் சில அதிர்ச்சி
அளிக்க கூடிய தகவல்களும் கிடைத்தன. அந்த தகவலை இந்த பதிவின் மூலம் பகிர்கின்றேன்..
அதை படித்த பின் நீங்கள் உங்கள் கருத்துகளை வெளியிடுவதோ அல்லது இடாமல் இருப்பதோ உங்கள்
இஷ்டம்
முதலில் எனது
பதிவுகளை படித்து விட்டு கருத்துகள், லைக்ஸ் அல்லது ஷேர் பண்ணாமல் சென்றவர்களுக்கு
நேர்ந்த சம்பவங்களை இப்போது நாம் பார்ப்போம்.( சம்பந்தபட்டவர்களின் உண்மையான பெயர்
இங்கு ப்ரைவசி காரணமாக மாற்றப்பட்டுள்ளது)
பதிவை படித்துவிட்டு
கருத்து போடாமல் சென்ற பாலு என்பவரின் விலையுர்ந்த செல்போன் தொலைந்து போனது..
அது போல கருத்து
போடாமல் சென்ற கனகா என்ற பெண்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை பெண் அழகாக இல்லை என்று
சொல்லி சென்றுவிட்டார்.
அது போல எனது
பதிவை பேஸ்புக்கில் பார்த்து அதற்கு லைக் போடாமல் சென்ற கோபால் என்பவர் பைக்கில் இருந்து
கிழே விழுந்து தனது காலை உடைத்து கொண்டார்.
எனது பதிவை படித்துவிட்டு
கருத்து, லைக் அல்லது ஷேர் பண்ணாத செல்வி என்ற பெண்ணின் வீட்டிற்கு அவரது மாமியார்
வந்து செட்டில் ஆகிவிட்டார்
இது போல பல விரும்ப
தகாத சம்பவங்கள் அநேக அளவில் நடை பெற்று இருக்கிறது என்பது புள்ளிவிபரக கணக்க்கில் வந்துள்ளது இப்படி வந்த அனைத்தையும்
சொல்லுவது என்றால் மாதக் கணக்கில் ஆகும் என்பதால் உதாரணதிற்கு சில பேர்களை மட்டும்
சொல்லி செல்லுகிறேன்
அது போல எனது
பதிவை படித்துவிட்டு கருத்துக்கள் சொன்ன முரளி
என்பவருக்கு ஜனாதிபதியிடம் இருந்து நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
கருத்துகள் மற்றும்
லைக்ஸ் போட்ட விசு என்பவருக்கு ஒரிஜனல் ஐடி கொண்ட 50 பெண்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து
இருக்கிறார்கள்
அது போல கார்திக்
சரவணன் என்பவர் கருத்துக்கள் இட்டதால் வாய் திறந்து சிரிக்க தெரியாத அவர் இப்பவெல்லாம்
வாய் திறந்து சிரிக்க ஆரம்பித்து இருக்கிறார்,
தொடர்ந்து கருத்துக்கள்
இட்டு வரும் தன்பாலன் அவர்களுக்கு பதிவர்கள் சார்பில் வள்ளுவர் கோட்டம் போல வலையுலக் சித்தர் கோட்டம்
அமைக்க முடிவு செய்து இருக்கிறார்களாம்...
மேலும் தொடர்ந்து
ஆதரவு தரும் துளசி அவர்களுக்கு ரஜினியின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்கிறதாம்.
அது போல எனது
பதிவுகளை படித்து தட்டிக் கொடுத்தோ அல்லது கொட்டிக் கொண்டோ இருக்கும் வருண் என்பவருக்கு
ஹோண்டா நிறுவனம் புதிதாக தாயாரித்துள்ள விமானம் பரிசாக கிடைத்து இருக்கிறதாம்.
இது போல பல நல்ல
செயல்கள் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் சொல்லுகிறேன் இனிமேல் உங்கள் வாழ்க்கையில்
நல்லது நடக்க வேண்டும்மென்றால் எனது பதிவை படித்து விட்டு கருத்தோ லைக்கோ அல்லது ஷேரோ
பண்ணுங்கள்
டிஸ்கி : இந்த
பதிவை படித்துவிட்டு நக்கல் பண்ணினால் உங்களை நாய் கடிக்கும் எதிர்வாதம் பண்ணிணால்
வாதம் வரும். தகராறு பண்ணினால் தண்ணி லாரி உங்களை அடித்து போட்டுவிடும்., நான் கரு
நாக்கு கொண்டவன் அதனால் சொல்லுறதை சொல்லிட்டேன் அதுக்கு அப்புறம் உங்கள் பாடு..
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி 2; இளங்கோவனை
தவிர்த்து மற்ற தலைவர்கள் அமைதியாக இருப்பதால் என்ன பதிவு போடுவது என்று யோசித்து மண்டை
காஞ்சு போனதால் நான் பேஸ்புக்கில் படித்த துணுக்கை அடிப்படையாக வைத்து இதை எழுதி இருக்கிறேன்.
சீக்கிரம் மற்ற தலைவர்கள் வாயை திறப்பார்கள் அப்புறம் எனக்கும் எழுத நிறைய ஐடியா கிடைக்கும்,
அது வரை இந்த மாதிரியான கடி பதிவுகளுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டியதுதான்
Hi....Hi...Hi....
ReplyDeleteஇந்த பதிவை படித்து கருத்து சொன்ன கில்லர்ஜி அவர்களின் மீசையை பார்த்த கின்னஸ் நிறுவனத்தினர் பதிவர்களிலேயே மிகப் பெரிய அழகிய மீசையை வைத்திருப்பவர் என பாராட்டி அதை கின்னஸ் சாதனையாக அறிவித்துள்ளனர்
Deleteவித்தியாசமான பதிவு.. படித்து விட்டு முகநூல் போனேன்.. அப்படி ரிக்வேஸ்ட் எதுவும் வரவில்லை. வெற்றி எதோ விசு போல் உள்ளது. நமக்கு ஐம்பது ரிக்ச்வஸ்ட் எல்லாம் வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் Unfriend பண்ணாமல் இருந்தால் போதும்.
ReplyDeleteஇந்த பதிவை படித்து கருத்து சொன்ன விசுவின் ஆசைப்படி நண்பர்களாக இருக்க ரிக்வெஸ்ட் கொடுத்து சேர்ந்த நண்பிகள் அன்பிரெண்ட் செய்ய்மாட்டோம் என்று உறுதி கூறி இருக்கிறார்கள்( ரிக்வெஸ்ட் கொடுத்த நண்பிகள் எல்லாம் மிக வயதானவர்கள் இந்த விஷயம் விசுவிற்கு தெரியாது )
Deleteவிசுவிற்கும் ஐம்பது ஆகிவிட்டது அல்லவா ? அதனால் பிரச்சனை இல்லை ..
Deleteவயசு ஐம்பது ஆனாலும் முப்பது வயதானவர் மாதிரி இளமையாக்த்தானே நீங்க இருக்கிறீர்கள்... உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லைதான் ஆனால் உங்க வீட்டுகாரம்மாவிற்கு பிரச்சனைதானே இந்த மாதிரி ஒல்டு நண்பிகளுக்கு நீங்கள் நண்பராக இருப்பதற்கு
Deleteஹஹஹஹஹ...ஹப்பா நாங்க சாபத்துலருந்து தப்பிச்சோம்....போனஸ் - இயக்குவதற்கு ரஜனி படமா...ஹஹஹ் ஐயா சாமி வேற ஏதாவது கொடுங்க....தலைல துண்டு ..மறைமுக தண்டனையா தமிழா ஹஹஹஹ்.....விசுவுக்கு மட்டும் நல்லதா கொடுத்துருக்கீங்க...
ReplyDeleteகீதா: ஹஹஹஹ் தமிழா துளசிக்கு மட்டும் கொடுத்துருக்கீங்க...நானும் தான் இருக்கேன்.....துளசிய மட்டும் கண்டுகிட்டதுக்கு வன்மையாகக் கண்டிக்கிறேன்...(இல்ல அது உங்க ரெண்டு பேருக்கும்தான் அப்படினு டபாய்ச்சீங்கனா....தலைவர்கள் எல்லார்கிட்டயும் கொஞ்ச நாள் பேசக்கூடாதுனு சொல்லிப்புடுவேன் ..ஆமா....)
நல்ல மனுஷனையா நீர்... உமக்கு என்ன கிடைத்ததோ அதை வைத்து கொண்டு சந்தோசமாக இருக்கணும் .. அல்லது.. உமக்கு கிடைத்தது பிடிக்காமல் இருந்தால் கொடுத்தவரிடமே திருபி கொடுத்து வேறு ஏதாவது வாங்கி கொள்ளவேண்டும், இரண்டையும் விட்டு விட்டு..
Delete"விசுவுக்கு மட்டும் நல்லதா கொடுத்து இருக்கீங்க " என்ற ஒரு கருத்து... :)
இந்த பதிவை படித்து கருத்து சொல்லிவிட்டு அழுத துளசி அவர்களுக்கு அனுஷ்காக படத்தை இயக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அதை கேட்டதும் அழுகை நின்று சிரிக்க ஆரம்பித்து இருக்கிறார்
Deleteஅது போல கருத்து சொன்ன கீதா அவர்களின் சாம்பார் பதிவு நவீனகால இலக்கியத்தில் பேசப்படும் என்று தமிழ் அறிஞர்கள் கருத்து கூறி அவரை மகிழ்வித்தனர்.
ஹிஹிஹி..ம்ம் அனுஷ்காவா...ம்ம்ம்ம் ஏதோ.. பரவால்ல .ஸ்பாடா....நன்றி தமிழா!
Deleteகீதா: ஹஹஹ் அது சரி இது கொஞ்சம் ஓவரா இல்ல? தமிழா .கலாய்ப்பிங்கனு பாத்தா...இந்தியத் தானைத்தலைவர்கள் கொஞ்ச நாளேனும் வாயை மூடிப் பேச ததாஸ்து...
Good . Innovative . ( Comment not out of the fear for bad luck !)
ReplyDeleteஇந்த பதிவை படித்து கருத்து சொன்ன அபயா அருணா அவர்களுக்கு ஜப்பானிய தூதுவராக இருக்க அழைப்பு
Deleteதங்களது offerஐ மாற்றி எனக்கு ஒரு ஜப்பானிய மருமகளைத் தரணும். என் மகனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன் .இப்போது அதில் பிஸி
Deleteஹா... ஹா...
ReplyDeleteகலக்கிட்டீங்க போங்க...
இந்த பதிவை படித்து கலக்கிட்டீங்க என்று கருத்து சொன்ன பரிவை குமார் அவர்களுக்கு ஜெயலலிதா அவர்கள் ஒரு ஒயின் ஷாப்பை ஆரம்பிக்க அனுமதி கொடுத்து இருக்கிறார்
Deleteசாபமா, வரமா?
ReplyDeleteஇந்த பதிவை படித்து சாபமா வரமா என்று ஆராய்ச்சியில் இறங்கிய ஜம்புலிங்கம் அவர்களுக்கு உலக தமிழ் ஆராய்ச்சி தலைவராக நியமிக்க அம்மா அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்
Deleteஇதெல்லாம் நீங்க காமெடியா சொன்னாலும் பல ஆயிரம் பேர் வந்து போகும் உங்கள் தளத்துக்கு வந்து கமெண்ட் இடுவதன் மூலம் சில புதியவர்கள் நமது தளத்திற்கு அறிமுகம் ஆவது உண்மைதான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைத்தள அனுபத்தை நன்கு புரிந்த சூத்திரதாரர் நீங்கள்....பாராட்டுக்கள்
Deleteஆஹா இப்படி வேறயா நானும் சில பதிவை படிப்பேன் ஆனால் கருத்துப்போடத்தான் போன் இல்லை ஒருவேளை உங்க சூனியம் போல[[[
ReplyDeleteஅட நான் நகைச்சுவைக்காக எழுதியது சீரியஸாக எடுத்து கொள்ளாதீர்கள் நண்பரே... நாம் படிக்கும் பதிவுகள் அனைத்திற்கும் நம்மால் கருத்துக்கள் இட முடிவதில்லை. என்பது உண்மையே அதை நானும் அறிவேன்
Delete”எனது பதிவுகளை படிப்பவர்களா நீங்கள் அப்ப உங்களுக்கு ஒரு எச்சரிக்கை
ReplyDeleteஎனது பதிவுகளை பலரும் படித்து வருகின்றனர்.அப்படி படித்து வருபவர்களை பற்றி ஒரு நிறுவனம் மூலம் புள்ளி விபரங்களை சேர்த்து அதன் ரிசல்டை பார்த்த பின் சில வியப்பான செய்திகளும் சில அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்களும் கிடைத்தன. அந்த தகவலை இந்த பதிவின் மூலம் பகிர்கின்றேன்.. அதை படித்த பின் நீங்கள் உங்கள் கருத்துகளை வெளியிடுவதோ அல்லது இடாமல் இருப்பதோ உங்கள் இஷ்டம்”............ச்ச்சும்மா copy/paste பண்ண முடியுதான்னு பார்த்தேன்......வருது........ நன்றி ஜெயதேவ்
காப்பி பேஸ்ட் பண்ணுவது எளிதுதான்.... அதை நானும் அறிவேன். காப்பி பண்ணுபவர்கள் கொஞ்சமாவது முயற்சி செய்யட்டுமே என்றுதான் நான் அப்படி செய்து வைத்து இருக்கிறேன் அவ்வளவுதான். இந்த காப்பி பேஸ்ட் பண்ணுவதை இன்னும் கடினமாக ஆக்க வேண்டும் என்றால் நாம் எழுதுவதை போட்டோ வடிவில் போட்டால் அதை யாரும் வேண்டிய வரிகளை மட்டும் காப்பி பண்ண முடியாது வேண்டுமானால் முழு போட்டோவை காப்பி பண்ணலாம்
Deleteஇது தான் உண்மையிலேயே கிரியேட்டிவிட்டி (படைப்பாக்கம்), சூப்பர்
ReplyDeleteஅரசியல் பதிவாக போட்டு கொண்டிருப்பதால் பேஸ்புக்கில் படித்த துணுக்கை அடிப்படையாக வைத்து எனது தளத்திற்கு ஏற்ப எனது வழியில்தந்து இருக்கிறேன் ஒரு மாறுதலுக்காக அவ்வளவுதான்
Deleteஅய்யோ அப்பப்பா!!!! யாருச்சும் அரசியல்வாதிகள் வாய்திறந்து ஏதாவது பேசித் தொலைங்கப்பா!! தாங்கமிடில:(((( தமிழன் சகா எச்சரிக்கையாக இருக்காங்க.அந்த சர்வே கம்பெனி ரொம்ப careless. பின்ன என்னை, கில்லர்ஜி அண்ணா பற்றி எல்லாம் எதுவும் சொல்லக்காணோமே!!!!
ReplyDeleteஹாலோ டீச்சரம்மா என்னை ஏன் விட்டுடீங்க என்று கேட்காமல் இப்படி பக்கத்து இலைக்கு பாயசம் போடுங்க என்று கேட்பது மாதிரி அல்லவா இருக்குது.... சரி சரி எப்போதுமே உங்களையே கலாய்க்கிறோமே பாவம் டீச்சரம்மா இந்த பதிவிலாவது கொஞ்சம் விட்டு விடுவோம் என்று நினைத்துதான் விட்டுவிட்டேன்.. இனிம வம்பு இழுக்க மறக்கமாட்டேன்ல்ல
Deleteகடைசியாக வந்த தங்களின் ஆறு பதிவுகளையும் படித்து விட்டு அதற்க்கு பின்னோட்டம் இடாமல் போன பரதேசி என்று அழைக்க படும் அல்ப்ரெட் அவர்கல்லுகு தோள்பட்டை வலி வந்து அவர் பட்ட பாடை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே...
ReplyDeleteஅவருக்கு உண்மையிலே அடிப்பட்டு இருப்பதால்தான் அவரை கலாய்க்கவில்லை காரணம் படித்தால் அவரது மனம் சங்கடப்படுமே என்று எண்ணி விட்டுவிட்டேன் எனது நோக்கம் கலாய்ப்பதுதானே ஒழிய காயப்படுத்துவது அல்ல யாரையும் எந்த நேரத்திலும்....
Deleteஎன்னாது ? இது சும்மா கலாய்த்தலா? நான் என்னமோ உண்மைன்னு நினச்சு...
Deleteகள்ளங்கபடம் இல்லா உள்ளமையா இது, எதை சொன்னாலும் நம்பிடுவேன்.
இப்படி்எல்லாம் பதிவு போட்டு மிரட்டினா என்ன ஆவது. எனக்கு எதுக்கு வம்பு.
ReplyDeleteGreat escape.. Hope nothing happens to me now.. :)
Deleteகருத்து சொல்லீட்டீங்க இனிம கவலையே படாதீங்க.. அதிர்ஷட்ம் உங்க வீட்டு கூரையை பிய்த்துக் கொண்டு வரப்போகிறது.....
muttal thanmana pathivu. Please dont waste the public times.Time is precious
ReplyDeleteஐயா பெரியவரே நான் எப்போதுமே அறிவுப் பூர்வமான பதிவுகளை போட்டதே கிடையாது... நீங்க தவறனா இடத்திற்கு வந்திட்டீங்க போல இருக்கு உங்களுக்கு முதலில் ஒரு அட்வைஸ் நீங்க நேரம் வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று நினைத்தால் இணைய பக்கமே வராதீங்க. அதற்கு பதில நூலகத்து சென்று நல்ல புத்தக்ங்களை எடுத்து படித்து உங்கள் பொன்னான நேரத்தை மிக உபயோகமாக செலவழியுங்கள். அங்கு போய் என்ன புத்தகம் எடுத்து படிப்பது என தெரியவில்லை என்றால் திருக்குறள் புத்தகத்தை எடுத்து அதை நன் கு புரியும் வரை படியுங்கள் அதுவே உங்களுக்கு போதுமானது
Deleteஐயோ ....கருத்து சொல்லிட்டே போறேன் எதுக்கு வம்பு ....
ReplyDeleteஎன்ன கருத்து ....
Deleteஜக்கம்மா சொல்லுறா உங்க வீட்டுல ஒரு நல்ல காரியம் நடக்கப்போகுதுன்னு?
ஹா.ஹா.ஹா....
ReplyDeleteநல்லாவே இருக்கு இந்த பதிவு! வாழ்த்துகள்.
அரசியல் பதிவே போட்டுகிட்டு இருந்தா எப்படி என்று நினைத்து ஒரு மாறுதலுக்காக போட்டதுதான் இந்த பதிவு
Deleteசரி..சரி..படிக்க இரண்டு நாளாகிவிட்டது. கருத்தும் எழுதியாச்சு. ஆனாலும் அந்தக் காலத்தில் (30 வருடங்கள் இருக்கும்), "திருப்பதி வெங்கடாசலபதி மகிமை" என்று ஒரு நோட்டீஸ் போட்டுவிட்டு, இதை 15 காப்பிகள் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பினால், இது..இது கிடைக்கும்... இல்லாவிட்டால், இன்ன இன்னது நடக்கும்.. என்று எழுதியிருப்பார்கள். அதில் இருக்கிற மாதிரியே நீங்களும் எழுதியிருப்பதால், உங்களுக்குக் குறைந்தது 50-60 வயசாவது ஆகியிருக்கும். இதைக் கண்டுபிடிச்சதுதான் மிச்சம்.
ReplyDeleteயோவ் நெல்லைத்தமிழா நான் இன்னும் பத்தாம் வகுப்பே பாஸாகவில்லை அதுக்குள்ள எனக்கு ஜம்பது வயசா? உங்க காலத்துல வேண்டுமானல் வெங்கடாசபதி மகிமை என்று சொல்லி 15 காப்பிகள் எடுத்து அனுப்ப சொல்லி இருக்கலாம் ஆனால் எங்க காலத்தில் அதையயே பேஸ்புக்கில் போஸ்டாக போட்டு இதை 15 பேருக்கு கண்டிப்பாக அனுப்பவும் என்று சொல்லி வருகிறார்கள். காலம் மாறினாலும் தமிழரின் சிந்தனைகளை மாற்றம் இல்லை
Deleteகவலைகளை மறந்து சிரிப்பது எப்படி என்று தலைப்பு வைத்திருக்கலாம் நன்றி ஐயா! தங்கள் தளம் எனக்கு புதியது! இனி வருகிறேன் நன்றி!!
ReplyDeleteஅன்புடன் கருர்பூபகீதன்!!!