நாட்டு நடப்புகளை
கிண்டலாக கேலியாக சொல்லும் வலைத்தளம்
கட்சி வேறுபாடுன்றி
நடுநிலையோடு நாட்டு நடப்புகளை கிண்டலாக கேலியாக சொல்லும் வலைத்தளம் .இது ஒன்றுதான்
என்பதில் நான் மட்டுமல்ல நமது பதிவுலகமே அறியும். இப்படி நடுநிலையோடு இருக்க காரணம்
யாரிடமும் எதையும் எதிர்பார்த்து இதை நடத்துவது இல்லை என்பதால்தான். எனது தளத்தை தொடர்ந்து
வாசித்து வருபவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் நான் எல்லா தலைவர்களையும் கலாய்த்து
செய்திகளை தருகிறேன் என்பது.
இதுவரை நான்
மோடியை கலைஞரை, ஜெயலலிதாவை, விஜயகாந்தை வைகோவை ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்களை பாஜக தலைவர்களை
இப்படி பலபேரை அன்றைய நாட்டு நடப்புகளை அல்லது அவர்களது பேச்சுக்களை வைத்து கலாய்த்து
போட்டோடூன் போட்டு இருக்கிறேன் ஆனால் இதுவரை அந்தெந்த கட்சிகளில் உள்ளவர்கள் படித்து
ரசித்து அல்லது கோபபட்டு சென்று இருக்கிறார்களே தவிர வேறு எந்த வகையிலும் கெட்ட வார்த்தைகளை
அள்ளி வீசி சென்றதில்லை. ஆனால் பாமக கட்சியினர் அப்படி இல்லை
அவர்களுக்கு அவர்கள் பெரிய ஐயா மற்றும் டாக்டருக்கு படித்த சின்ன ஐயா இருவரும்
தகாத வார்த்தைகளை மட்டும் கற்றுத் தந்து இருக்கின்றனர் போல இருக்கிறது அதனாலதான் வாயில்
சொல்லுக் கூசும் வார்தைகளை என் மீது அள்ளி தெளித்து கொண்டிருக்கிறார்கள். இப்படி செய்வதைதான்
இவர்கள் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லுகிறார்கள். எனக்கும் அவர்கள்
அளவிற்கு கிழ் இறங்கி பேசத் தெரியும்தான் ஆனால் நான் அன்புமணி ராமதாஸிடம் கற்றவன்
அல்லவன் என்பதால் அப்படி செய்யாமல் செல்லுகிறேன் இப்படி பாமக காரர்கள் என் மீது மட்டுமல்ல
சமுக வலைத்தளங்களில் அவர்கள் கட்சிக்கு எதிராக கருத்து சொல்லுபவர்கள் அனைவர் மீது சேற்றை
வாறிக் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொஞ்சம் கூட சகிப்புதன்மை இல்லாதவர்கள்
கட்சி ஒன்றை தொடங்கி ஆட்சிக்கு வர ஆசைபடுக்கிறார்கள்
என்றால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
சரி அவர்கள்
வேலையை அவர்கள் செய்யட்டும். நான் என் நக்கல்களை இங்கு தொடர்கிறேன்....உங்களுக்கு பிடித்தால்
நீங்களும் எனது கிண்டல் கேலி மற்றும் நக்கல்களை ரசியுங்கள்...முடிந்தால் உங்கள் நக்கல்
மற்றும் நையாண்டிகளை கருத்துகளாக சொல்லி செல்லுங்கள்.....
ஒன்று சொல்ல
மறந்துவிட்டேன் எனது தளம் 5 ஆம் ஆண்டை கடந்து செல்கின்றது. இதுவரை ஆதரவு தந்த பதிவுலக
நண்பர்களுக்கும் சைலண்ட் ரீடர்களுக்கும் எனது மனம்மார்ந்த நன்றிகள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்கள் தளத்தில் ஒவ்வொரு பதிவையும் படித்து விடுகின்றேன். இந்த சமயத்தில் ஐந்தாம் ஆண்டு வாழ்த்துகளையும் எழுதி வைக்கின்றேன். ஆனால் இன்னமும் நீங்க நினைத்தால் தெளிவாக ஆழமான அழகான கட்டுரைகளை கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன். எப்போதும் போல இது பொழுது போக்கு தளம் என்பதை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சொல்லப் போகின்றீர்கள் என்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
ReplyDeleteதொடர் வருகைக்கு நன்றி ஜோதிஜி. நான் ஆழமான அழகான கட்டுரை கொண்டு வர வேண்டுமென்றால் உங்கள் தளத்தில் உள்ளவைகளைத்தான் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்
Deleteநண்பரே எனக்கு உங்களை போல ஆழ்ந்த அறிவு எல்லாம் இல்லை நான் உண்மையை சொன்னா நீங்க நம்பணும்.... நானெல்லாம் தினத்தந்தி படிச்சுகொண்டு டீக்கடையில் அரசியல் பேசும் சாதாரண ஆள்தான்
Deleteஐந்தாண்டு நிறைவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி சார்
Deleteஐந்து ஆண்டுகளாக வெற்றிநடை போடும் மதுரை தமிழனுக்குவாழ்த்துகள் . தொடரட்டும் அதிரடி பதிவுகள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி முரளி......
Deleteதொடருங்கள் தல...
ReplyDeleteதொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி தனபாலன்
Deleteஐந்து ஆண்டுகள்..... பாராட்டுகள் நண்பரே....
ReplyDeleteபாராட்டிற்கு மிகவும் நன்றி வெங்கட்
Deleteஅய்ந்து ஆண்டுகள் மற்றவர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த தங்களது பணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
ReplyDeleteமுதல் போட்டூனும் கடைசி போட்டூனும் சூப்பர்.
God Bless You.
ஆமாம் உங்கள்தளத்தில் பின்னூட்டமிட்டால் 'mail delivery failure (Delivery to the following recipient failed permanently:
mduraitamilguy@gmail.com
Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain gmail.com by gmail-smtp-in.l.google.com. [2001:4860:400b:c01::1b].
The error that the other server returned was:
550-5.1.1 The email account that you tried to reach does not exist. Please try)' என்று எனது மெயிலுக்கு ஒரு தகவல் வருகிறதே ஏன்?
Deleteமுதலில் maduraitamilguy@gmail அக்கவுண்டை உபயோகித்து வந்தேன் அது இப்போது அக்டிவாக இல்லை அதனால்தான் அப்படி வருகிறது.... அப்படி ERROR மெஜேஜ் வந்தாலும் உங்கள் கருத்துக்கள் என்னை வந்து அடையச் செய்கின்றன அதனால் அதை இக்னோர் பண்ணிவிடுங்கள். உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
வணக்கம்,
ReplyDeleteசமீபகாலமாக தங்கள் பதிவுகளைத் தொடர்கிறேன், அனைத்தையும் படித்திருப்பேன்,
பூரிக்கட்டை அடியிலும் 5 ஆண்டைக் கடந்ததற்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் அது,,,,,,,,,,,, அய்யோ பதிவு,
வாழ்த்துக்கள்.
உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
Deleteஐந்தாம் ஆண்டு பாராட்டுகள் நண்பரே
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
Deleteஎன்னாது அஞ்சு வருஷமா....? அட பாவி தமிழா.. ஒரு வருஷம் முடிக்கையிலே... மண்டை காயுது... எப்படி ஐயா அஞ்சி வருஷம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபோற்றுவோர் போற்றட்டும்.. தூற்றுவோர் தூங்கட்டும். நீங்க எழுதினே இருங்க..
பல ஆண்டுகளாக மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டு அடி வாங்கி கொண்டு இருக்கும் எனக்கு சூடு சுரனை இருக்கும் என நினைத்து அரசியல் கட்சி ஆட்கள் தூற்றுகிறார்கள் பாவம் அவர்கள். அவர்களை நினைத்தால்தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது
Deleteவாழ்த்துக்கள் ஐயா மேன்மேலும் தங்களின் தளம் உயர விளைகிறேன்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
Deleteவாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்கள் கலாய்த்தல் பதிவுகள்! வெட்டிப்பேச்சு அவர்கள் சொல்லுவது போல எனக்கும் மெயில் வருகின்றது. அது ஏன் என்று புரியவில்லை!
ReplyDeleteஉங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
Deleteமதுரைத் தமிழனின் நக்கல், நையாண்டியுடன் மேலும் பல ஐந்தாண்டுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteத ம 6
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
Deleteஅருமையான பதிவு. சமூகத்தின் பிரதிபலிப்பு! அரசியல்வாதிகளின் கொள்கைகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் படித்து கருத்து தெரிவித்தமைக்க்கும் மிகவும் நன்றி
Deleteபாராட்டுக்கள்.
ReplyDeleteயார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்கள் கருத்தை சொல்வதில் மனம் தளறாதீகள்
உங்கள் வருகைக்கும் படித்து கருத்து தெரிவித்தமைக்கும் நீங்கள் தரும் சப்போர்ட்டுக்கும் மிகவும் நன்றி
DeleteBest wishes.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
DeleteCongrats..5 years is a lot of time and I wish you all the best and more success in the coming years. Keep rocking..
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
Deleteவாவ்!!! ஐந்தாவது வருடம்:) வாழ்த்துக்கள் சகா!! but, கடந்த ரெண்டு வருசமா பார்க்கிறேன் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு பதிவின் போது வெளியிட்ட நன்றி பதிவில் உங்கள் அழகிய புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அது ஒன்னு தான் மிஸ்ஸிங்:(( ஏன் பாஸ் thank you என சொல்லிகொண்டிருக்கும் அந்த போட்டோ எங்கே!!!!
ReplyDeleteஉங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இந்த பதிவில் அதிக படம் இடப்பட்டதால் அதை தவிர்த்து இருக்கிறேன் அதுமட்டுமல்லால் அந்த படத்தை பார்த்து நீங்கள் அதிகம் கண்பட்டுவிடப் போகிறீர்கள் என்று நினைத்தும் போடவில்லை
Deleteஐந்தாண்டிற்க்கொருமுறை ஆட்சி மாறுவது போல் உங்க வலையில் உங்க மனைவியை எழுத வைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.. (நகைச்சுவைக்காக சொன்னேன் கோபம் வேண்டாம்)
ReplyDeleteவாழ்த்துகள் ஐந்தாவது ஆண்டு கடந்து வந்த கலக்கல் பதிவுகளுக்கு.
வாழ்த்துக்கள். ஆமாம்..உங்களுக்கு விஷயதானம் தரும் அரசியல்வாதிகளுக்கு நன்றி தெரிவித்தமாதிரித் தெரியவில்லையே.. 'என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்....' மறந்துவிடாதீர்கள்.
ReplyDelete