இன்றைய இந்தியாவில்
........?????
கள்ள உறவுக்காக போராடிய தமிழக மக்கள் ,
கல்வி அறிவுக்காக போராடி இருந்தால் இப்படிப்பட்ட பண்பாடற்ற
பேச்சுக்கள் வெளிவந்திருக்காது அல்லவா?
இன்றைய இந்தியாவில்
நல்லா படிச்சவன்
மிக நல்ல வேலையில் அமர்ந்து மிக அதிக அளவில் சம்பாதித்து பங்களா கார் பயணம் பார்ட்டி
என சந்தோஷமாக வாழ்கிறான்.
நல்லா படிக்காதவன்
அடிதடியில் இறங்கி லோக்கல் பஞ்சாயத்துகளில் இறங்கி ஊழல் செய்யும் தலைவர்களை சப்போர்ட்
பண்ணி அவர்களுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து
போராட்டம் நடத்தி மொட்டை அடிச்சு அழுது ஒப்பாரி வைச்சு வட்டம் மாவட்டம் கவுன்சிலர்
அமைச்சர் கான்ராக்டர் ஆகி மிக அதிக அளவு பணம் சம்பாதித்து பங்களா கார் பயணம் பார்ட்டி
என சந்தோஷமாக வாழ்கிறான்.
ஆனால் இரண்டுகெட்டான்
தனமாக அரைகுறையாக படித்து பட்டம் பெற்றவன் கிடைச்ச ஏதோ ஒரு வேளையில் உட்கார்ந்து தங்களுக்கு
தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய அரசாங்கம் அதை செய்யாமல் இருக்கும் போது
அதை எதிர்த்து போராடாமல் பேஸ்புக்கில் மட்டும் கொஞ்சம் பொங்கி எழுந்துவிட்டு தங்களின்
அன்றாட குடும்ப போராட்டத்தில் ஈடுபட்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
இன்றைய இந்தியாவில்
ரோட்டில் குப்பையை
போடுபவன் அறிவாளியாம் ஆனால் அதை அள்ளி அப்புறப்படுத்துபவன் மனநோயாளியாம்
அறிவில்லாமல்
அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்து கொண்டிருப்பவனுக்காக ஒரு குருப் பச்சாதப்பட்டு அவர்களுக்காக மதுவிலக்கிற்காக
உண்மையாக சில பேர் போராடிவருகிறார்கள் மீத சில பேர் போராடுவதாக நடித்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி குடிகாரர்களுக்காக
போராடும் அறிவாளிகள் தங்கள் சமுகம் நல்ல கல்வி, நல்ல நீர், நல்ல சுகாதரமான உணவு வகைகள்.
சுத்தமான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்காக போராடாமல் தங்கள் வருங்கால சந்ததிகள் நாசமாக
போனாலும் பரவாயில்லை என்று குடிகாரர்கள் போல ஆனால் குடிக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
குடிகாரர்களால்
குடிகாரனின் குடும்பம் மட்டுமே அழிகிறது ஆனால் ஊமையாக இருக்கும் இந்த அறிவாளிகளால்
வருங்கால சமுகமே அழியப் போகிறது... என்பது மட்டும் நிஜம்..
அன்புடன்
மதுரைத்தமிழன்
இன்றைய சமூகத்தை அப்படியே படம்பிடித்துக்காட்டிவிட்டீர்கள்!
ReplyDeleteயதார்த்தத்தின் அருமையான வெளிப்பாடு.
ReplyDeleteநல்லதொரு கருத்துப் பதிவு தமிழா....இறுதி வரிகளுக்கு முந்தைய பாரா நல்ல கருத்து...
ReplyDeleteமிக அருமையான Uதிவு இப்போதைய சூழ்நிலைக்கு தேவையானது நீங்கள் கூறியது போல் அறிவு ஜீவிகளாக தன்னை பாவித்து கொள்பவர்களுக்கு புத்தி வந்தால் சரிதான்
ReplyDeleteதம +
ReplyDeleteதகிக்குதே