ஒன்றிரண்டு சதவீதம்
ஓட்டுகளை வைத்திருக்கும் கட்சிகளும், கூட்டணி சேர நிபந்தனை விதிப்பதால், கடும் கொதிப்படைந்துள்ள,தி.மு.க.,
தலைமை, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து, தீவிரமாக ஆலோசிக்க துவங்கி
உள்ளது.போக்கு காட்டும் கட்சிகளுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, 'தனித்து போட்டி'
என்ற அதிரடி முடிவைவிரைவில் அறிவிக்க, தி.மு.க., தயாராகி வரும் தகவலும் வெளியாகி
உள்ளது.
தமிழக அரசியல்
வட்டாரத்தில், அ.தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை தான், ஏறக்குறைய எல்லா கட்சிகளும்
எடுத்துள்ளன. ஆளுங்கட்சிக்கு ஆதரவு வட்டத்தில், பெரிய கட்சி கள் எதுவும் இல்லை. சமத்துவ
மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே, அ.தி.மு.க.,வை ஆதரிக்கின்றன. இந்தச்
சூழ்நிலையில், 'அ.தி.மு.க., அரசை எதிர்க்கும், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க.,
- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அரவணைத்தால், வலுவான ஒரு கூட்டணியை ஏற்படுத்த முடியும்'
என, தி.மு.க., கணக்கு போட்டது. அதை எளிதாக செய்ய முடியும் என்றும் நினைத்தது.
பேரம் பேசுவதற்கான
உத்தி இன்றைய அரசியல் நிலவரப்படி, அடுத்து ஆட்சிக்கு வரத் துடிக்கும் கட்சி என்பதால்,
கூட்டணி பலம், தி.மு.க.,வுக்கு மிக அவசியம். இதையறிந்த கட்சிகள், தி.மு.க.,வின் அழைப்பை
உதாசீனப்படுத்தின. 'பேரம் பேசுவதற்கான உத்தி இது' என, ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்த,
தி.மு.க., தலைமை, இப்போது அதிர்ந்து உள்ளது.
அதற்கு காரணம்,
அக்கட்சி பெரிதும் எதிர்பார்த்த, தே.மு.தி.க., திடீரென, 'பல்டி' அடித்துள்ளது. திருச்சியில்
நடந்த, தே.மு.தி.க., நிகழ்ச்சியில், கட்சி தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் பேசிய,
கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா, 'அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டுமே, ஊழல் கட்சிகள்'
என்றும், 'இரு திராவிட கட்சிகளையும், ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே லட்சியம்' என்றும்
பேசி, தி.மு.க.,வின் எதிர்பார்ப்பை சிதறடித்து உள்ளார்.
அதுமட்டுமின்றி,
தி.மு.க.,வுடன் இருந்த கட்சிகள் வெளியேறி, ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்
சேர்ந்து, 'மக்கள் நல கூட்டமைப்பு' என்ற பெயரில் இயங்குகின்றன. 'கூட்டணியாக செயல்படுவோம்;
ஊழலற்ற ஆட்சி அமைக்க, தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர மாட்டோம்'
|
யார் அடுத்த முதல்வராக வர விருப்பம்
என்ற கேள்விக்கு...
ஜெயலலிதாவுக்கு 31 சதவிகித ஆதரவும்...
திமுகவின் தலைவருக்கு 23.5 சதவிகித ஆதரவும்...
திமுகவின் பொருளாளருக்கு 28 சதவிகித
ஆதரவையும்...
மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதை திமுகவினர் கொண்டாட வேண்டும்...!
ஏனெனில் திமுக சார்பான முதல்வர் வேட்பாளருக்கு தமிழக மக்களில் 50 சதவிகிதம் பேர்
ஆதரவளித்துள்ளனர்...!!
திமுகவுக்கு அடுத்த படியாக அதிமுக சார்பு
முதல்வர் வேட்பாளருக்கு வெறும் 31 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்...!!
அதாவது திமுக முதல்வருக்கும் அதிமுக
முதல்வருக்கும் 19 சதவிகிதம் வித்தியாசம் இருக்கின்றது..!!
ஆகவே திமுகவை நெருங்க வேண்டுமானால் அதிமுக
தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்து சிறிய கட்சிகளோடும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் மட்டுமே
சாத்தியம்..!!
போயஸ் தோட்ட தூதுவர்கள் கோயம்பேடு, தாயகம்,
தைலாபுரம், கமலாலயம் என்று படையெடுக்க வேண்டியிருக்கும்...! விரைவில் அந்தக் காட்சிகள்
அரங்கேறலாம்...!!!
|
டிஸ்கி :
லயோலா கல்லுரியின் கருத்து கணிப்பு முடிவுகள் மூலம் திமுக கலைஞர் திமுக ஸ்டாலின் திமுக என்று இரண்டாக பிளவுபட்டு இருக்கிறது என்றும் அதில் ஸ்டாலின் திமுகதான் முன்ணணியில் இருக்கிறது என்றும் அறியப்படுகிறது...
கருத்துகணிப்பிலே ஸ்டாலினுடன் தோற்றுப் போன கலைஞர் இனிமே ஜெயலலிதாவை எதிர்த்து ஜெயிக்க முடியாதுதானே
லயோலோ கல்லூரிக்கு இந்த கருத்துக் கணிப்பு அவசியமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.
ReplyDeleteகல்லூரிகள் கருத்து கணிப்பு நடத்துவதில் தவறில்லை ஆனால் அது நடுநிலைமையோடு இருக்க வேண்டும். இப்படி மாணவர்களை வைத்து கருத்து கணிப்பு நடத்தும் போது அவர்களுக்கும் அரசியல் பற்றி உண்மையான அனுபவ அறிவு ஏற்படும்
Deleteஇவுக பாட்டுக்கு சர்வே பண்ணிட்டு போயிடுவா, ஏற்கனவே இப்படி ஒரு சர்வே பண்ணி அப்பாவி ஊழியர்கள்(தினகரன்) மூன்று பேர் உயிரை காவு வாங்கியதுபோல, இதெல்லாம் என்ன நாடகமோ:(( நீங்க நச்சுனு முடிச்சுருகீங்க சகா:)
ReplyDeleteவலையுலகில் அரசியல் பதிவுகளை படித்து தைரியமாக கருத்து சொல்லும் ஒரே ஆள் நீங்கள்தான்.. பாராட்டுக்கள்
Deleteநோக்கம் ஒன்றே... கொக்குக்கு ஒன்றே மதி. (முதலில், இராமதாஸ் வீட்டுத்திருமணத்தில் பங்கேற்றது. அப்புறம் தேமுதிகாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் எடுத்தது. மோடியை விஜயகாந்த் தலைமையில் சந்திக்கச் சென்று சந்தி சிரித்தது. வைகோவுடன் உறவைப் பேணியது. திருமாவை அனுப்பி மற்ற கட்சிகளைக் கைப்பற்றிவரச் சொன்னது. ...... மண்டல மானாடுகளை நடத்திக் கூட்டத்தைக் காண்பித்தது...இப்போது கருத்துத் திணிப்பு) கருணானிதியும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். அவர் பலூன்ல நீங்களும் ஊசி குத்தி விளையாடுகிறீர்களே... கட்சி நடத்தித் தன் பொழைப்புக்கு வழி செய்துகொள்வதை அவ்வளவு சுலபமாக நினைத்துவிட்டீர்களே.
ReplyDeleteகட்சியை குடும்ப சொத்தாக மாற்றும் போது அந்த கட்சியின் மிக பழையதொண்டன் என்ற முறையில் நான் குத்தி காண்ப்பிபதும் சரிதானே
Deleteதங்கள் பகிர்வு சிந்திக்கத் தூண்டுகிறது.
ReplyDeleteநீங்கள் சிந்திததை உங்கள் தளத்தில் பதிவாக இடுங்கள்
Deleteசென்ற வருடமும் இந்தக் கல்லூரி சர்வே எடுத்தது..அதை வேறு பெருமையாகப் போட்டுக் கொண்டார்கள். மிக மிக நல்ல கல்லூரி என்று பெயர் எடுத்த கல்லூரி இப்படித் தரம் தாழ்ந்து போவது மனதிற்கு வேதனையாக இருக்கிறது. கல்வியில் ஏற்கனவே அரசியல் தலையீடு. இப்படிக் கல்லூரிகளுக்குள்ளும் அரசியல் நுழைவது என்பது.....கேரளத்தைப் போல் தமிழ்நாடும் ஆகிறதோ என்ற வருத்தம் வருகின்றது. உங்கல் ம்டுஇவும், டிஸ்கியும் சரிதான்...
ReplyDeleteகீதா
ஊடகங்களை (தெருக்கூத்து காலம் தொட்டு முகனுல், வாட்ஸப் வரை) தன் வளர்ச்சிக்கு வளைக்கும் வல்லமை கொண்ட கட்சி திமுக அதுவும் கதை வசன கர்த்தாவாகிய கருணாநிதி, எதை நாயகன் சொல்ல வேண்டும், எதை சில்லறை காதா பாத்திரம் சொல்ல வேண்டும் எதை பெண் போச வேண்டும் அதை மக்கள் குரல் ப[ஒள பின்னணியில் சொல்ல வேண்டும் என்ற எல்லா நுணுக்கமும் அடைந்து தெளிந்தவர். மக்களை ஏமாற்ற தெரிந்த அரசியல் நரி..மேடையில் அண்ணாவிடம் வாங்கிய மோதிரத்தை அண்ணாவின் பரிசு போல போட சொன்ன வேஷதாரி..இல்லையெனில் இவ்வளவுக்கு பிறகும் (சாராய கடை திறந்தவர்) இன்னும் தான் தான் எதிர்கட்சி என்பது போல படம் காட்ட முடியுமா.? இந்த ஸ்டாலின் அந்த கருணாநிதியை விட பல் மடங்கு அபாயமானவர் - உஷார்..(மதுர அண்ணன் அழகிரிக்கே அந்த ஆப்புன்னா - தமிழ அப்பாவிகள் எம்மாத்திரம்)
ReplyDeleteசிவாஜி மிக சிறந்த நடிகர்தான் ஆனால் அவரின் நடிப்பு இந்த காலத்திற்கு ஒத்துவாராதோ அது போலதான் கலைஞரின் அரசியலும் சாணக்கியமும் இந்த காலத்தில் செல்லாக் காசாகிவிட்டது
Deleteஅது சரி.. லயோலா கல்லூரி நல்ல கல்லூரியா? எந்தக் காலத்தில்?
ReplyDeleteஎன்னைப் போல அப்பாவிங்க அதை நல்ல காலேஜ் என்று நினைத்து இருந்தோம் ஆனால் படிச்சவங்க நீங்க சொன்ன நிச்சயம் சரியாகத்தான் இருக்கும் நன்றி அப்பாதுரை
Delete