Tuesday, September 1, 2015




திமுக என்ன சில்லறை கட்சியா ?

'தி.மு.க., ஆட்சியில், காசு வாங்கியதை நிரூபிக்க முடியுமா,'' என, அக்கட்சியின் சட்டசபை தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதை அடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


மதுரைத்தமிழன் : கோடியில் வாங்கும் கேடிகளை பார்த்து அதிமுக அமைச்சர் வெங்கடாசலம் பேசுகையில், ''தி.மு.க., ஆட்சியில், மாசு கட்டு பாட்டுத் துறை, காசு கட்டுப்பாட்டுத் துறையாக செயல்பட்டது என்று சொன்னது மிகவும் கண்டிக்கதக்கது


கிழே கண்ட செய்தியை படித்ததும் மனதில் எழுந்த பதில்தான் இந்த போட்டோடூன் பதிவு



சென்னை: ''தி.மு.க., ஆட்சியில், காசு வாங்கியதை நிரூபிக்க முடியுமா,'' என, அக்கட்சியின் சட்டசபை தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதை அடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரும், கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெங்கடாசலம் பேசுகையில், ''தி.மு.க., ஆட்சியில், மாசு கட்டு பாட்டுத் துறை, காசு கட்டுப்பாட்டுத் துறையாக செயல்பட்டது. இதனால், ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க முடியவில்லை,'' என, குறிப்பிட்டார்.



இதற்கு, எதிர்ப்புத் தெரிவித்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'அமைச்சரின் பேச்சை, சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என, சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர் இதை ஏற்கவில்லை. மாறாக, ஸ்டாலினை பேச அனுமதித்தார்.அவர் பேசியதாவது:'தி.மு.க., ஆட்சியில், காசு கட்டுப்பாட்டு வாரியமாக செயல்பட்டது' என, அமைச்சர் கூறியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்துடன் கூறினால், சபை குறிப்பில், அந்த குற்றச்சாட்டு இருக்கட்டும். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், சபை குறிப்பிலிருந்து, அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



சபாநாயகர் தனபால், ''அவர் பேசியதும் சபை குறிப்பில் இருக்கிறது. நீங்கள் பேசியதும் இருக்கிறது. எனவே, அமைச்சர் பேசியதை நீக்க முடியாது,'' என்றார்.

வெளிநடப்பு:

அமைச்சர் வெங்கடாசலம், ''நொய்யல் ஆறு சீர்கெடுவதை, தி.மு.க., ஆட்சியில் தடுக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்புத் தன்மையுடைய கழிவுநீர், நொய்யலில் கலந்தது. அதை, இப்போது தடுத்துள்ளோம்,'' என்றார்.அமைச்சரின் பேச்சை ஏற்காத, தி.மு.க.,வினர் தொடர்ந்து கோஷமிட்ட தால், சபையில் சிறிது நேரம் அமளி நிலவியது. இதன்பின், தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. சில்லரைக் கட்சி இல்லைதான்!

    ReplyDelete
  2. யாருக்குப் பாதபூஜை என்பது தெரியவில்லையே.... டாஸ்மாக்குக்கு இருக்காது என்று நம்புவோம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.