வெளிநாடுகளில் உடைக்கப்படும் மோடியின் பிம்பம் உள்நாட்டு ஊடகங்களால் மறைக்கப்படும் அவலம்
இந்தியாவின்
வெளியுரைத்துறை அமைச்சாராக வரவேண்டியவரை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இந்திய
மக்கள். அதனால்தான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டியவர் இன்று உலகம் முழுவதும் பயணம் செய்து
நாட்டுக்கு என்று சொல்லி தன் நண்பர்களுக்கு முதலீடு திரட்டி வருகிறார். இப்படி நண்பர்களுக்கு
செய்யும் சேவையை தனக்குள்ள அதிகாரத்தால் ஊடகத்தை தன் கைக்குள் வைத்து, இந்தியாவிற்கு
சேவை செய்வது போல ஒரு பிம்பத்தை காட்டி சாதனை செய்வதாக பரப்பி வருகிறார்.
அதனால்தான் ஒரு
ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்திய ஊடகங்கள் அவரைப்பற்றிய குறைகளை மற்றும் அவர் இதுவரை செய்த செயல்களை திட்டங்களை பற்றி விமர்சனம்
ஏதும் செய்யாமல் வானுயுர பாராட்டிக் கொண்டிருக்கிறது.
இந்திய ஊடங்களும்
மோடி அரசும் சாதனை செய்வதாக சொல்லி வந்தாலும் வெளிநாட்டு ஊடகங்கள் அவர் பிம்பத்தை உடைத்து
வருகின்றன.
இந்திய ஊடகங்கள்
கடந்த சில தினங்களாக மோடி அமெரிக்கா வந்தார் சிலிகான் வேலிக்கு சென்றார் . முதலீட்டாளர்களை
சந்தித்து பேசினார் அதன் பிறகு பேஸ்புக் நிறுவனர் மார்க்கை சந்தித்தார் அவரிடம் தன்
அம்மா பற்றி பேசி நடிகர் சிவாஜி போல உணர்ச்சி வசப்பட்டு அழுதார்(நடித்தார்) அதன் பின்
அவரை கட்டி பிடித்து போட்டோ எடுத்து கொண்டார் என்று செய்திகள் இட்டு வருகின்றன. இது
எப்படி இருக்கிறது என்றால் நம் ஊரில் உள்ள கட்சி தொண்டன் சென்னைக்கு செல்லும் போது
கலைஞரை அல்லது பிரபல நடிகரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவர்களை சந்திதித்து அவர்களுடன்
போட்டோ எடுத்து கொண்டு அதன் பின் ஊரில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு சென்று அங்குள்ளவர்களிடம்
நான் சென்னைக்கு வருவதை அறிந்து தலைவர் என்னை கூப்பிட்டு அனுப்பி என்னிடம் பேசி போட்டோ
எடுத்து கொண்டார். அவர் நான் என்ன சொன்னாலும் செய்வார் அதனால் அவரிடம் நம்ம கிராமத்து
வேண்டிய தேவைகளை சொல்லி வந்திருக்கிறேன் என்று பீத்திக் கொள்வதை போலவே இந்த மோடியும்
செய்துவருகிறார். ஐந்து ஆண்டு கழியும் போது அவரின் வண்டவாளம் எல்லாம் வெளியே தெரிய
போகிறதுதானே
கடந்த முறை அமெரிக்காவிற்கு
வந்த மோடி ஒபாமாவை சந்தித்தார் இந்திய உறவுகளை பற்றி பேசி இந்தியாவில் அமெரிக்க முதலீட்டிற்கு
ஆதரவு தரக் கோரி கோரிக்கை வைத்து அதன் பின் அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய முதலீட்டாளர்களை
சந்தித்து ஆதரவுக் கோரினார். அந்த கோரிக்கைகளை பரிசீலித்து பல கம்பெனிகள் இந்தியாவில்
முதலீடு செய்ய ஆயுத்தமாகினார்கள். ஆனால் அப்படி முதலீடு செய்ய முன் வந்த முதலீட்டாளர்களில்
(Investment guru quits India over Modi's lack of reforms )
பலர் கடந்த சிலமாதங்களுக்கு முன் இந்தியாவில் மோடி செய்து தருவதாக கூறிய பல வாக்குகளை
அவரால் கடந்த ஓர் ஆண்டுகளில் அவரால் செய்து தர முடியவில்லை என்று சொல்லி பின் வாங்கி
சென்றனர். இந்த செய்திகள் இந்திய ஊடங்களால் மறைக்கப்பட்டு இருக்கின்றன.
அதனால்தான் இந்த
தடவை மோடி சிலிக்கான் வேலியை குறிவைத்து சென்று இருக்கிறார் காரணம் அங்கு தான் அமெரிக்கா
வந்து செட்டிலான இந்திய வம்சா வழி முதலீட்டாளர்கள் மிக அதிகம். அப்படி சந்தித்த பல
முதலீட்டாளர்களிடம் பல வாக்குறுதிகளை மீண்டும் அள்ளிவீசி இந்தியாவை டிஜிடல் மயமாக்கப்
போகிறேன். அதற்கு உங்கள் மூதலீடு தேவை அதன் மூலம் முதலீட்டாளர்கள் மட்டுமல்ல மோடியின்
நண்பர்களும் பயன் அடையலாம் என்று திட்டத்தை விளக்கி கூறி வரும் வழியில் பேஸ்புக் மார்க்
மற்றும் கூகுலின் பிச்சை போன்றவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி, அமெரிக்காவில் இருந்தே
இந்தியாவை முழுவதும் டிஜிடல் மயமாக்கும் திட்டதை அறிவித்து இருக்கிறார். எல்லா நாட்டு
அதிபர்களும் எந்த திட்டங்களை அறிவித்தாலும் தங்கள் நாட்டில் உள்ள பாரளுமன்றத்தில்தான்
கூட்டம் கூடும் போது அறிவிப்பார்கள் ஆனால் இவறை பொறுத்த வரை பாராளுமன்றம் என்பது வெளிநாடுதானே..
சரி இப்ப விஷயத்திற்கு
வருவோம்... இப்படி அமெரிக்காவில் மோடிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாக சொல்லும் இந்திய ஊடகங்கள் இவருக்கு இந்த தடவை எழுந்த மிகப்
பெரிய எதிர்ப்பை மட்டும் மறைத்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இப்படி இந்திய
ஊடகங்கள் தவறான செய்திகளை மக்களிடையே பரப்பி வந்த போதிலும் மேலைநாட்டு ஊடகங்கள் அப்படி இல்லாமல் அவரது பிம்பங்களை இப்பொழுது அப்படியே சுக்கு
நூறாக உடைத்து வருகின்றன.
அப்படி என்ன
மோடிக்கு எதிர்ப்பாக போராட்டம் என்கீறீர்களா?
மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு
எதிராகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், மோடி அரசு செயல்படுகிறது . அப்படிப்பட
அவர் அரசை கண்டித்தே இந்த போராட்டங்கள் நடைபெற்றது. இதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள்(
மூவாயிரத்திற்கும் அதிகம் என்பது இங்கு பொருத்தவரை மிகப் பெரிய கூட்டம் அதுவும் இது
பிரியாணி பொட்டலுங்களுக்கும் குவார்ட்டருக்கும் ஆசைபட்டு கூடிய கூட்டமுமல்ல) இந்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்துக்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களை
வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், பி.பி.சி நியூயார்க் டைம்ஸ் போன்ற
பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளும் செய்திகளாக பதிவு செய்து மோடி அரசை கிழிகிழியென
கிழிக்கின்றன. இந்த போராட்டங்கள் அமெரிக்க அரசின் அனுமதி பெற்றே நடத்தப்பட்டன.
இந்த போராட்டங்களை
நடத்தியது Alliance for Justice and Accountability (AJA) குருப்பாகும். போராட்டங்களை
நடத்தியதும் அல்லாமல் பேஸ்புக் நிறுவனர் மார்க்கிற்கு இரத்தகரை படிந்த கைகளை உடைய மோடியின்
கைகளை குலுக்கியதால் அவருக்கு சானிடைஸ் க்ளினர் பாட்டில்களை அனுப்பி கைகளை சுத்தம்
செய்து கொள்ளுங்கள் என்றும் போராட்டம் அனுப்பினர். இந்த க்ளினர்கள் மார்க்கின் பல வருட
உபயோகங்களுக்கு பயன்படும் அளவிற்கு அனுப்பபட்டு இருக்கிறது
முதன் முறையாக
அமெரிக்கா பயணம் வந்தபோது பெரும் வரவேற்பு தந்த அமெரிக்கா வாழ் இந்தியர்களில்
இந்த முறை குறிப்பிட்ட சதவிதம் பேர் எதிர்த்து நின்றனர். இது வருங்காலங்களில் இங்கு
அதிகரிக்கிறதோ இல்லையோ இந்தியாவில் நிச்சயம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் இந்த
தடவை அரங்கத்தில் 30 சதவிகித இடங்கள் ஆள் இல்லாமல்
காலியாக இருந்தன என் இங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன,
மோடியின் செயலால்
மேல்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வரலாமே தவிர அடிப்படை தட்டுமக்களின் வாழ்வு
உயராமல் மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு போகப்படும் என்பது உறுதி. அந்த மேல்தட்டு மக்களின்
வளர்ச்சியை போக்ஸ் செய்து இந்தியா முன்னேறிவிட்டது
என்று விளம்பரம் செய்யப்பட்டு அவரது இமேஜ்யை உயர்த்த முயற்சிக்கப்படும். ஆனால் மிடில்
க்ளாஸ் மற்றும் ஏழை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் வர்க்க
வேறுபாடுகள் தோன்றி இப்பொது குஜராத்தில் ஏற்படும் போராட்டம் போல நாடு முழுவதும் ஏற்படும்.
அதுதான் நடக்கப் போகிறது. அப்போது அவரி போற்றிய ஊடகங்கள் பச்சோந்தி போல சூழ்நிலைக்கு
ஏற்ப மாறி குரல் கொடுக்கும்.
அன்புடன்
மதுரைதமிழன்
இந்திய ஊடகங்களில் எங்காவது
இது மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என்பதை கொஞ்சம் யோசித்தாலே உங்களுக்கு மோடியின்
கள்ளாட்டம் புரியும்
நல்ல பகிர்வு..
ReplyDeleteஉங்களின் கருத்துகளுக்கு மிகவும் நன்றி
Deleteபுதிய பார்வை. எதிர்ப்பு எங்கும் யாருக்கும் இருக்கும்தான். ஆனால் இதில் இருக்கும் சில விவரங்கள் யோசிக்கப்பட வேண்டியவை.
ReplyDeleteதம +1
ஸ்ரீராம் உங்களின் கருத்துகளுக்கு மிகவும் நன்றி
Delete@ Drogba ஸ்ரீராமின் இந்த பதில்களை பாருங்கள் எவ்வளவு அழகாக சொல்லி சென்று இருக்கிறார். அவர் வெளிநாட்டில் வசிப்பவர் அல்ல
மோடியின் பிம்பம் நீர்க்குமிழி போல உடைந்து விட்டது உண்மையென்றால் பிறகெப்படி வெளிநாட்டு முதலீடுகளில் கடந்த ஆறுமாதங்களில் சீனாவையே இந்தியா பின்தள்ளி முதலிடத்தில் இருக்கிறது.. மோடி என்ற யானை இந்தகுறைப்பாட் டுப் புலமபல்களையெல்லாம் லட்சியம் செய்யாமல் முன்னோக்கி நடந்து கொண்டே இருக்கிறது ரொம்ப ஸ்டெடியாக.
ReplyDeleteஅம்மாடியோவ்.. எம்புட்டு முதலீடு! முன்னோக்கி செல்வது "மதம் பிடித்த" யானையா இருக்க போது. "Unknown" என்று வராமல் தம் பெயரை சொல்லி வந்து இருந்தீர்கள் என்றால் இன்னும் விவரமாக சொல்லி இருப்பேன்.
Deleteஅதெல்லாம் கேக்கப்படாது.....கேள்வி கேட்ட எங்க குட்டு உடைஞ்சிடும்.....
Deleteசெய்தியை கவனமாக படியுங்கள் மோடியின் வேண்டு கோளுக்கிணங்க ஏற்கனவே முதலீடு செய்த முன் வந்தவர்கள் பின் வாங்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காரணம் மோடி முதலீட்டாளர்களுக்கு அளித்த அளித்த வாக்கு உறுதியை அவரால் செயல்படுத்த முடியவில்லை என்றுதான். அந்த செய்தியை படித்துவிட்டு கருத்து இடுங்கள் மோடி கடந்த ஒரு வருடம் உலகமுழுவதும் சுற்றி சேர்த்த முதலீட்டை விட ஜெயலலிதா இருந்த இடத்தில் இருந்தே சில நாட்களில் அதிக முதலீட்டை திரட்டி இருக்கிறார் என்ற செய்தியையும் கவனத்தில் கொள்ளவும்
Deleteவெளிநாட்டு வாழ் இந்தியர்களை பார்க்க பாவமா இருக்கு!!! அவங்க அவங்க எந்த நாட்டில செட்டில் ஆனாங்களோ அந்த நாட்டுக்கு சப்போட் பண்ணுறது அப்பட்டமா தெரியுது. ஒரே ஒரு உண்மைய சொல்லுங்க. நீங்களும் உங்க குடும்பமும் இந்தியாக்கு வந்து செட்டில் ஆகப் போறீங்களா? நிச்சயமாக இல்லை.
ReplyDeleteஉங்களுக்கு மன்மோகன் சிங் மாதிரி அமெரிக்க அடிமை தேவை. நீங்க எது சொன்னாலும் அந்தக் கட்சி மட்டும்தான் சூப்பரா தலையாட்டும். மோடி அப்படி இல்லை!! உடனே குய்யோ முறையோன்னு கத்துறீங்க.
எனக்கு என்னமோ மோடிகிட்ட கள்ளாட்டம் இருக்கிற போல தெரியல! வெளிநாட்டில் செட்டில் ஆனவங்ககிட்ட மட்டும்தான் கள்ளாட்டம் இருக்கிறபோல இருக்கு
சூப்பரா சொன்னீங்க. ஐயோ என் கண்ணே பட்டும் போல இருக்கே. ஆனா ஒரு சந்தேகம். உங்களுக்கு என்னமோ வெளிநாட்டு செட்டில் ஆனவங்க கிட்ட தான் கள்ளாட்டம் இருக்குனு சொல்றிங்க.
Deleteஅந்த வெளிநாடு செட்டில் ஆனா கள்ளர்களிடம் தான் நம்ம பிரதமர் செர்டிபிகேட் கேக்குறாரே, அதுதான் புரியல.
எந்த நாட்டில் நாங்க இருகுரமோ அந்த நாட்டுக்கு நாங்கள் சப்போர்ட் பண்ணுவோம். ஆமாங்க.. "They put the Bread on our Table".
உங்களுக்கு பிரதமர் மோடி "சூப்பர் மேன் ", போல இருக்கு .தவறே இல்லை. அது உங்கள் அபிப்ராயம் - உரிமை.
ஆனால் அதற்காக வெளிநாட்டு வாழ் மக்களை கள்ளன் என்பது...?
அது சரி.. எங்களை பாத்து ஏன் பாவ படுரிங்க.. ? நாங்க என்ன அவ்வளவு பரிதாபமாகவ வாழறோம்?
மோடி என்ன செய்தாலும் உங்களுக்கு குத்தும் இல்லைனா குடையும். அத பாக்கும் போது பாவம் மட்டுமில்ல பரிதாபமா கூட இருக்கு!!
Deleteஉங்களை கள்ளன் என்று சொல்லவில்லை. நீங்கள் மோடியை கள்ளாட்டம் ஆடிகிறார் என்றது போல் உங்களையும் கள்ளாட்டம் ஆடுகிறீர்கள் என்று சொன்னேன்!! அதாவது அமெரிக்க நலனுக்காக இந்தியாவைத் திருத்துவது போல் எழுதிகிறீர்களே இது கள்ளாட்டம் மற்றும் எட்டப்பன் வேலை இல்லையா?
தங்கள் பரிதாபத்திற்கு மிக்க நன்றி. உங்களுக்கு தான் எங்கள் மேல் எவ்வளவு அக்கறை. நாங்கள் ஆடுவது கள்ளாட்டம், நாங்கள் எட்டப்பர்கள் என்று எங்களை உணர வைத்ததற்கு நன்றி.
Delete@ Drogba ஆமாங்க அதனாலதான் மோடி வந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் முதலீடு கொடு என்று கூட்டம் கூட்டி கெஞ்சுகிறரோ என்னவோ.. உங்களுக்கு வெளிநாட்டு இந்தியர்களை பார்க்க பாவமாக இருப்பதற்கு காரணம் வெளிநாட்டு இந்தியர்கள் கஷ்டப்பட்டு உழைத்த செல்வத்தை மோடி ஏமாற்றி பொய் வாக்கு உறுதி கொடுத்து ஏமாற்றுகிறார் என்கிற போது பாவமாகத்தான் உங்களுக்கு இருக்கிறது.
Deleteநீங்க எப்படி மோடி இந்தியவையே ஏமாற்றி வந்தாலும் உங்களுக்கு அவர் பிடித்த தலைவர் என்பதால்அவருக்கு சப்போர்ட் பண்ணுறீங்க அப்படி இருக்கும் போது எங்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கும் நாட்டை நாங்கள் சப்போர்ட் பண்ணுவதில் என்ன தப்புங்க
சத்தியமாக சொல்லுறேனுங்க எனக்கு இந்தியாவிற்கு வந்து செட்டில் ஆகும் எண்ணம் துளிக் கூட இல்லைங்க.
மன்மோகன் சிங் , மோடி மட்டுமல்ல இனி இந்தியாவிற்கு வரும் எந்த பிரதமரும் அமெரிக்காவிற்கு தலை ஆட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்களால் பிரதமராக வர முடியாது என்பது மிக உண்மை.
நாங்கள் ஆடுவது கள்ளாட்டம் அல்ல மோடி ஆடுவதுதான் கள்ளாட்டம் அதை நம்மவில்லை என்றால் அவரின் ஆட்சி முடியும் வரை பொறுமையாக இருந்து பாருங்கள் உங்களுக்கு புரியும் அப்படி அவர் மக்களை ஏமாற்றாமல் நல்ல ஆட்சியை கொடுத்தால் அந்த சமயத்தில் கண்டிப்பாக அவரை பற்றி நல்லவிதமாக எழுதுகிறேன் மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன் அதுவரை நடப்பதை வேடிக்கை பாருங்கள் நண்பரே
மோடி நல்லது செய்தால் குற்றம் ஏன் சொல்லப்போகிறோம் ஆனால் அவர் நல்லது செய்வது போல நடிக்கும் போதுதான் அதை சுட்டிக் காட்டுகிறோம் அவ்வளவுதாங்க..அப்புறம் மோடியை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வசிக்கும் நடுநிலை மக்களும்தான் குறை சொல்ல ஆரம்பிக்கிறார்கள் அப்ப அவர்களை என்னவென்று அழைக்கப் போகிறீர்கள்.. நண்பரே பொறுத்து இருந்து பாருங்கள்.
Deleteஇந்த கட்டுரையில் நான் சொல்ல வந்தது மோடிக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு வந்திருக்கிறது இந்தியாவில் முதலீடு செய்ய வந்தவர்கள் பின் வாங்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றுதான். அதை நான் கட்டுகதைகளாக திரிக்கவில்லை இங்கு வந்த செய்திதாள்களிலும் டிவிக்களிலும் வந்த செய்தியை வைத்தும்தான் பதிவை எழுதி இருக்கிறேன். இப்படி வரும் செய்திகளை மோடி கள்ளாட்டம் ஆடி இந்திய ஊடகங்களில் வாராத படி செய்கிறார் என்றுதான் சொல்லி இருக்கிறேன்
மன்னிக்கவும். உங்கள் மேல் எனக்கு துளியும் அக்கறை இல்லை! இருக்கு என்று பொய் சொல்லவும் விரும்பவில்லை! அவ்வாறு சொல்லப் போவதுமில்லை.
ReplyDeleteஎன் கருத்தை உணர்ந்து கொண்டமைக்கு நன்றி.
மேலும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்(Just a REQUEST. Accept it or not up to u). ஏன் நீங்கள் இந்தியாவை விமர்சிப்பதை நிறுத்தக்கூடாது?
நண்பரே உங்களின் மனம் திறந்த கருத்திற்கு நன்றி. நீங்கள் எதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு வாழ்வு அளிக்கும் அமெரிக்கா நாடு எனக்கு உலகில் நடக்கும் எந்த விஷயத்தையும் விமர்சனம் பண்ண விமர்சிக்க சுதந்திரம் அளிக்கிறது. அதனால் "நான் அமெரிக்காவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு" நான் எதை விரும்புகிறேனோ அதை கண்டிப்பாக விமர்சனம் செய்வேன். அதை கட்டுபடுத்த யாராலும் முடியாது அமெரிக்காவின் சட்டத்தை தவிர.
Deleteஎன் பதிவுகளை படிப்பவர்கள் எல்லாம் என் மேல் அக்கறை கொண்டவர்கள் அல்லது கண்டிப்பாக அக்கறை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. ஒரு வேளை உங்களுக்கு மனதிற்கு பிடித்த தலைவரை நான் விமர்சிக்கும் போது பிடிக்கவில்லையென்றால் பதிவை படிக்காமல் இருப்பதே உங்களுக்கும் நல்லது. நான் சொல்வது சரிதானே?
ஹாஹா!! நான் விசுawesomeற்கு எழுதிய பதில் கீழே பிரசுரிக்கப்பட்டுவிட்டது. Mobile phoneல் reply எழுதியதால் நடந்திருக்கும் என நம்புகிறேன்!!
ReplyDeleteஎதுவாயினும் நான் விடுத்தது வேண்டுகோளே. கட்டளையல்ல!! மற்றவருக்கு கட்டளையிட நான் யார்?
எனது வேண்டுகோளின் நோக்கம் ஒன்றே ஒன்று!!
//எந்த நாட்டில் நாங்க இருகுரமோ அந்த நாட்டுக்கு நாங்கள் சப்போர்ட் பண்ணுவோம். ஆமாங்க.. "They put the Bread on our Table".//
இந்தியாவில் பிறந்து அமெரிக்கா போய் செட்டில் ஆகியவர்கள் இந்தியாவின் தலைவரை அமெரிக்க நலனிற்காக ஏளனப்படுத்துவதை ஒரு இந்தியனாக. என்னால் பார்த்து சகிக்க முடியவில்லை. இந்தியனாய்ப் பிறந்து அமெரிக்க நலனுக்காக பாடுபடுதல் உங்கள் உரிமை!! அதற்காக ரஷ்யாவை விமர்சியுங்கள் மற்ற நாடுகளை விமர்சியுங்கள்! உங்களை போற்றாவிடுனும் தூற்றமாட்டோம்!! Ex-Indian ஆக இருந்து இந்தியனை கேவலமாய் விமர்சிப்பது கேவலமாய் உள்ளது
நண்பரே!
Delete"எக்ஸ் இந்தினாக இருந்து இந்தியாவை விமரிச்சிக்காதே ...வேண்டும் என்றால் "நமக்கு சம்மந்தமே இல்லாத ரஷ்யாவை விமரிசித்து கொள்" என்று நீங்கள் சொல்வது தவறு. இது ஒரு சராசரி இந்தியனின் மனபக்குவத்தை காட்டுகின்றது. அது தவறு என்பது என் தாழ்மையான கருத்து.
"உங்களை போற்றாவிடிலும் தூற்றமாடோம் "! நல்ல எண்ணம். நன்றி. இங்கே உங்களுக்கு ஒரு செய்தியை வைக்க நிர்பந்த படுத்த படுகிறேன். சென்ற வருடம் ஒரு நாள். இங்கே அமெரிக்காவில் ஒரு பெரும் புயல் வர 8000 பேர் வாழும் பகுதியில் 6 மணி நேர மின்சார தடை. அதற்கு தினமலரில் வந்த தலைப்பு என்ன தெரியுமா?
பெருமை பாராட்டி கொள்ளும் பெரிய அண்ணன் அமெரிக்காவில் மின்தடை.
மற்றவர்களுக்கு மின்தடை என்று நக்கல் செய்ய எந்த தமிழனுக்காவது உரிமை இருகின்றதா?
மற்றும், இங்கே இருந்து நாங்கள் இந்தியாவை விமரிசிப்பது சகிக்க முடியவில்லை என்றால், அங்கே இருந்து வரும் தலைவர்கள் எங்களிடம் தங்கள் ஆட்சியை பற்றி சான்றிதழ் கேட்பதையும் தங்களால் சகிக்க முடியாது என்று நினைக்கின்றேன்.
மேலும், புகை படத்தில் தன முகத்தை காட்ட நம் தலைவர் செய்த வேலை நடந்த அடுத்த நாள், பள்ளி கூடம் சென்ற என் மூத்த ராசாத்தி வந்து சொன்னது ?
அப்பா, நம் நாட்டு தலைவர்கள் இங்கே வரும் போது, போது இடத்தில்எப்படி நடக்க வேண்டும் என்று யாரும் சொல்லி தரமாட்டார்களா? என்றாள்.
என்ன ஆயிற்று என்று கேட்டேன்.. ஒ.. நீங்கள் கேள்வி படவில்லையா ? நம் நாட்டின் தலைவர், புகை படத்தில் நிற்க அருகில் இருந்தவரை இழுத்து தள்ளியதை.
என்ன செய்வது.. இதையும் நாங்கள் சகித்து கொள்கிறோம்.
பின் குறிப்பு : மதுரை தமிழா. நண்பர் இந்த கருத்தை என்னிடம் தான் சொல்லி இருகின்றார் போல் இருகின்றது. நான் பேசுவது சகிக்க முடியவில்லை. இது உங்களுக்கு அல்ல. நீங்கள் போட்டு தாக்குங்கள்.
நண்பரே நல்ல ஒரு எடுத்துக்காட்டு,
ReplyDelete//அதற்கு தினமலரில் வந்த தலைப்பு என்ன தெரியுமா?
பெருமை பாராட்டி கொள்ளும் பெரிய அண்ணன் அமெரிக்காவில் மின்தடை. //
ஆனால் இதை எழுதியது ஒரு அமெரிக்கனா? இல்லை ஒரு இந்தியனே!!
இந்தியன் அமெரிக்காவை விமர்சிப்பதும், அமெரிக்கன் இந்தியாவை விமர்சிப்பதும் காலங்காலமாய் நடப்பதுவே. ஆனால், உங்களுக்குத் தெரிந்த எந்த அமெரிக்கனாவது வேறு நாட்டுக்குப்போய் அமெரிக்காவைப்பற்றி இழிவாகக் கதைக்கிறானா? ஆனால், இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் செட்டிலான இந்தியர்களுக்கு இந்தியாவைக் குறைகூறுவதில் தலைவர்களை இழிவுபடுத்துவதிலும் என்னவொரு ஆனந்தம்!!!
மேலும்,
அதே புகைப்படத்தில்தான் சத்யம் நாடெல்லா(இந்திய வம்சாவளி) கையைத் துடைத்து மோடியை அவமானப்படுத்துவதைப் தாங்கள் பார்க்கவில்லையோ?
பின்குறிப்பு: அந்தக்கருத்துக்கள் உங்களுக்கு கூறியவையாயினும் மதுரைத்தமிழனுக்கும் பொருந்தும்..
பதிலுக்கு நன்றி.
Deleteநீங்கள் தமக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்து கொண்டு பதில் சொல்கின்றீர்கள்.
மின் தடை பற்றி..
அடுத்த நாட்டில் மின்தடை இருப்பதை பற்றி கிண்டல் செய்ய எந்த ஒரு தமிழனுக்கும் ( இந்தியன் அல்ல .. தமிழன் ) யோக்கியதை இருக்கின்றதா ? அதற்கு பதில் சொல்லுங்கள்.
மற்றும், இந்தியாவை விட்டுவிடுங்கள், வேண்டுமானால் ரஷ்யாவை பற்றி பேசி கொள்ளுங்கள் என்றீர்களே.. அது ஏன்... ?
நான் எங்கே பிறந்தேன், எங்கே வாழ்கிறேன், எங்கே வாழுவேன் என்பது என் முடிவு.
இந்தியனாக பிறந்து இருந்தாலும் வெளிநாட்டில் வாழ்வதால், இந்தியாவை பற்றி ( தவறாக ?) எழுதுவது, சகிக்கவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அது உங்கள் கருத்து. மதிக்கின்றேன். நான் எழுதும் எழுத்துக்களை தங்களையும் தவிர்த்து நிறைய பேர் படிகின்றார்கள், அவர்கள் சகித்து கொண்டும் உள்ளார்கள்.
இந்த பிரச்சனைக்கு ஒரே நிவர்த்தி தான் உள்ளது. எப்படியும் நான் (மதுரை தமிழனும் தான்) எங்கள் கருத்துக்களை எழுதுவதை நிறுத்த போவதில்லை. உங்களால் சகிக்க முடியாவிட்டால் தாம் எங்கள் எழுத்துக்களை படிப்பதை விட்டுவிடுங்கள்.
இவ்வளவு கருத்து பரிமாற்றம் செய்தாலும், தங்கள் நாகரிகம் எள் அளவும் குறையவில்லையே. அதற்கு என் பாராட்டுகள் மட்டும் நன்றி.
சத்யம் அவர்கள் ஏன் கைத்துடைதார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் மனதில் இருக்கும் அதே காரணத்திற்க்காக அவர் கை துடைத்து இருந்தால் அவருக்கு ஒரு சபாஷ் .
Delete@drogba நாங்கள் இந்தியாவை குறை சொல்லுகிறோம் என்ற உடைந்த ரிக்கார்ட்டையே திரும்ப திரும்ப சொல்லுங்கள் அப்படி சொல்லுவதை தவிர உங்களுக்கு வேறு ஏதும் தெரியவில்லை. இப்படி சொல்லி சொல்லியே மோடி செய்வது சரி என்று உங்கள் கண்களிலேயே நீங்களே மண்ணை அள்ளிக் போட்டு கொள்ளுங்கள் . அது உங்கள் இஷ்டம் இந்தியாவில் நடப்பதை சுட்டிக் காட்டினால் அல்லது மோடி செய்யும் பித்தலாட்டங்களை சொல்வதனால் எங்களை என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள் . அது போல இந்தியாவில் இருந்து கொண்டு இது மாதிரி மோடியின் பித்தலாட்டத்தை தோல் உரிப்பவர்களையும் தேச துரோகிகள் என்று சொல்லுங்கள் ஆனால் உங்களை போல உள்ள ஆட்களினால்தான் இந்தியா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. பூனைக் கண்ணை முடிக் கொண்டு உலகம் இருண்டு கிடைக்கிறது என்பது போல மோடியின் மீதுள்ள கண்முடித்தனமான ஆர்வத்தால் இந்தியா முன்னேருகிறது என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்
ReplyDeleteஅடுத்து வரும் பதிவுகள் மோடியை பற்றியும் இந்தியாவை பற்றியும்தான் முடிந்தால் அங்கும் வந்து இதுபோல கருத்துக்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள் நீங்கள் எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லி வாரிக் கொட்டிக் கொள்ளுங்கள் ஆனால் நான் எழுதுவதை நிறுத்த போவதில்லை..அமெரிக்காவில் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் தடை செய்யப்படும் வரை தொடரும்,,
ReplyDeleteஎந்த அமெரிக்கனாவது வேறுநாட்டுக் குடியுரிமை பெற்றபின் அமெரிக்க தலைவனைப்பற்றி தப்பாக எழுதுவானா? ஆனால் வேறு நாடுகளைப்பற்றி கேவலமாக எழுதுவான். இந்தக்கருத்து என் மனதில் தோன்றியதால் உங்களுக்கு அவ்வாறு கோரிக்கை விடுத்தேன். அவ்வளவே!!!
நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். நான் என் கருத்தைப் பதிகிறேன்!
மேலும்,
நண்பர்களே, உங்கள் சில கருத்துக்கு மட்டுமே நான் எதிரி. உங்களுக்கு அல்ல. தனிப்பட்ட முறையில் உங்களை தாக்கிப்பேசும் எண்ணம் சிறிதுமில்லை
நண்பரே நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைக்கின்றீர்கள் நாங்கள் எங்கள் சிந்தனையில் தோன்றியதை இங்கு பதிகிறோம் அவ்வளவுதான்....வீடுகளிலே நாம் பல பிரச்சனைகளை பற்றி பேசும் போது நாம் கருத்துகளில் மாறுபடுகிறோம் அதனால் நாம் உறவுகளுக்கு எதிரி என்றா நினைத்து கொள்வோம். இல்லையே அது போலதான் இங்கும்
Delete