Thursday, September 17, 2015



மேலை நாட்டுமக்களை வியக்க வைக்க இந்தியர்கள் சொல்வது இதைத்தான்

வெளிநாட்டவரிடம் நம்மவர்கள் பெருமையாக சொல்லுவது:

1. எங்களின் பள்ளிபடிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை எங்கள் பெற்றோர்கள்தான் பணத்தை செலவிடுவார்கள் ( இதை கேட்ட வெளிநாட்டினர் வாவ்..... அல்லது ரியலி என்று சொல்லி வியப்பார்கள் ).


2. (ஆண்கள்) எங்களது கல்யாணத்திற்கு பெண் வீட்டுகாரர்கள்தான் அனைத்து செலவையும் செய்வார்கள் அது மட்டுமல்ல வசதிக்கு தகுந்த படி 24 கேரட் தங்க நகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான சாமான் மற்றும் டூவிலர் அல்லது கார் தருவார்கள்

3. (பெண்கள்) எனது படிப்பு செலவை மட்டுமல்ல எனது கல்யாண செலவையும் ஹனிமுனுக்கான செலவு மற்றும் பிள்ளை பேறுக்கான மொத்த செலவையும் எனது பெற்றோர்கள்தான் செய்வார்கள்


4, எங்கள் வீடுகளில் பாத்திரங்கள் கழுவ, வீடு க்ளின் பண்ண, துணி துவைக்க ,சமைக்க என்று வேலையாட்கள் உண்டு

5.  நாங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் கார்களை ஒட்ட டிரைவர்கள் உண்டு.

6. மாதத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது அரசாங்க விடுமுறை இந்தியாவில் இருக்கும்.

7. எங்கள் வீடுகளில் நடக்கும் கல்யாணங்களுக்கு குறைந்தது ஆயிரம் பேராவது வருவார்கள்.

8, எங்கள் வீடுகளில் தினமும் பிரெஷாக சமைப்போம் பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கமே கிடையாது.

9.குடித்து விட்டு காரை ஒட்டி போலிஸ்காரர்களிடம் பிடிபட்டால் பணத்தை கொடுத்து விட்டு தப்பிவிடலாம்.

10. இந்தியாவில் நாங்களெல்லாம் ராஜா ராணிகளாட்டம் வாழ்ந்து வந்தோம் என்று கதையளப்பார்கள்.


இதை எல்லாம் கேட்கும் அமெரிக்கர்கள் வாவ்.. ரியலி என்று ஆச்சிரியப்படுவார்கள். ஆனால் ஒரு சில புத்திசாலி அமெரிக்கர்கள் பதிலுக்கு அப்படி நல்ல  வசதியான வாழ்க்கை அங்கு இருக்கும் போது இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்கும் போது அசடு வழிந்து கிழே சொல்லியது போல பல காரணங்களை சொல்லி சமாளிப்பார்கள்.



1. இந்தியாவில் சேஃப்டி கிடையாது...

2. நல்ல எஜூகேசன் சிஸ்டம் இல்லை.

3. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது..

4. சுத்தம் சுகாதாரம் முக்கிய காரணம்.

5. மருத்துவ வசதி

6. லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்

7. பவர்கட் அதிகம்.

8. அராஜாகம் மிக அதிகம்.

9.நேர்மை மிக குறைவு

10.சட்டம் ஒழுங்கு சரியில்லை


இது போன்று காரணங்களை கூறி இந்திய நாட்டின் தரத்தை மிக குறைத்துவிடுவார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்








7 comments:

  1. அனுபவம் (சொந்த) பேசுது போல.

    ReplyDelete
  2. இந்த இரண்டிற்கும் இடைப்பட்டு எதுவும் பேச மாட்டாங்க போல....இங்குள்ள நல்லதையும், அங்குள்ள நல்லதையும்....இரண்டாவதாகச் சொல்லுவது ஆச்சரியமல்ல....ஆனால் முதல் ஆச்சரியமாக இருக்கிறது..

    ReplyDelete
  3. முதல் பத்தில் ஆறாவது விடுமுறை குறித்த கருத்தில் சனி,ஞாயிறு விடுமுறைகளைச் சேர்த்தால் மாதம் பத்து நாட்கள் விடுமுறை வரும் என்று சொல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

    ReplyDelete
  4. அம்பேரிக்காவிலும் அன்றன்று சமைப்பவர்கள் உண்டு. :)

    ReplyDelete
  5. உங்க சொந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
    அதோடு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன ஓட வேண்டும் என்பதிற்கு எதிர்ப்பு தெரிவித்த வீரர்களை கொண்ட இந்தியாவின் மானிலம் என்ற மேலதிக பெருமையை தமிழகம் பெறுகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.