Wednesday, September 30, 2015



பெண்கள் முன்னேற தடுப்பது எது? 

பெண்களின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றம் என்று பேசும் போது நாம் மிக முக்கியமாக குறிப்பிடுவது கல்வி.அப்படி சொல்லப்படும் இந்த கால கல்வியை பார்த்தால் அந்த கல்வியால் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை மட்டும்மே தரமுடிகிறது, இந்த பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் வைத்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்வோமேயானால் அது மிக தவறு. பெண்கள் முழுமையான முன்னேற்றத்தை அடைய அவர்களின் குணங்களில் மாற்றம் வேணடும் அதன்பின் அவர்கள் மனமுதிர்ச்சி பெற்றவர்களாகவும் மனபக்குவம் அடைந்தவர்களாகவும் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்பது என் கருத்து


இப்போது இருக்கும் பெண்களின் மனநிலை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறது. ஆனால் அதில் சின்ன மாற்றம் மட்டுமே நம்மால் இப்போது காண முடிகிறது அந்த சின்ன மாற்றத்தை நாம் பெண்களின் கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து போன்றவை மாறி முன்னேறியிருப்பதை சுட்டிக்காட்டலாம் .

இதைத்தான் விவேகானந்தர் அன்றே இப்படி பேசி சென்று இருக்கிறார்

இந்த நாட்டில் அல்லது எந்த நாட்டிலாவது மூன்று பெண்களை ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒற்றுமையோடு இருக்கச் செய்ய முடியாது. அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய சங்கங்களை உருவாக்குகிறார்கள். பெண்களின் உரிமை முதலானவற்றை பற்றி மகத்தான அறிக்கைகளை எல்லாம் வெளியிடுவார்கள். சற்று நேரத்தில் சண்டை இடுவார்கள். பிறகு யாராவது சில ஆண்கள் வந்து அவர்களை ஆட்சி செய்வார்கள். உலகம் முழுவதிலும் அவர்களை ஆள்வதற்கு இப்போதும் சில ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.

பெண்களை நடத்திச் செல்ல ஒரு பெண் முன் வந்தால், உடனடியாக எல்லோரும் அவளை குறை கூறுவார்கள். அவளை துண்டு துண்டாகக் கிழித்து விடுவார்கள். கீழே உட்கார வைத்து விடுவார்கள். ஒரு ஆண் வந்து கொஞ்சம் கடினமாக அவர்களை நடத்தியதும், அவ்வப்போது திட்டியதும் எல்லாம் சரியாகி விடுகிறது. அவர்கள் அத்தகைய மயக்கப்படுத்தப்படுகின்ற நிலைக்கு பழகி விட்டார்கள்.
- சுவாமி விவேகானந்தர்

அதானல்தான் சொல்லுகிறேன்  பெண்கள் முழுமையான முன்னேற்றத்தை அடைய அவர்களின் குணங்களில் மாற்றம் வேணடும் அதன்பின் அவர்கள் மனமுதிர்ச்சி பெற்றவர்களாகவும் மன பக்குவம் அடைந்தவர்களாகவும் மற்றும் அவர்களுக்கான புரிதலும் ஒற்றுமையும் இன்னும் நெருக்கமானால், இன்னும் எவ்வளவோ முன்னேறி  சாதிக்க முடியும் என்பது என் கருத்து.


இங்கு நான் பெண்களுக்கு குணத்தில் மாற்றம் வேண்டும் மனப்பக்குவத்தில் மாற்றம் வேண்டு மனமுதிர்ச்சி வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் பலர் பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களைப் போல செயல்படுவது அதிகாராம் செலுத்துவது சிகரெட் மதுவகைகளை குடிப்பது இரவில் ஊர் சுற்றுவது இன்னும் பல ஆண்கள் செய்வதையே செய்வது மட்டும்தான் முன்னேற்றம் என்று கருதுகிறார்கள்.. ஆணைப் போல செயல்படுவதுதான் முன்னேற்றம் என்றால் அது உண்மையான முன்னேற்றமாக இருக்க முடியாது அதுமட்டுமல்ல இன்னும் யாரும் அறியாத உண்மை ஒன்று உண்டு அதுதான் ஆண்கள் முன்னேற்றம். உண்மையாக பார்த்தோமானல் ஆண்களும் இன்னும் முன்னேறவில்லைதான் அவர்கள் முன்னேறி இருந்தால் மிகவும் மனப்பக்குவம் அடைந்து மற்றவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவார்கள் அப்படி இல்லாத நிலையில் அவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்வோமேயானால் அது கேலிக் குறியதாகவே இருக்கும்.

பெண்கள் முன்னேற்றம் என்று நாம் மற்றநாடுகளோடு நம் நாட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் அதிகமுன்னேற்றம் அடைந்தும் இருக்கிறோம் என்றாலும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்கு தோண்றுகிறது.காரணம் பெண்கள் அதிக முன்னேற்றம் அடைந்த நாடு என்று சொல்லும் அமெரிக்காவில் இன்று வரை ஒரு பெண்ணால் கூட நாட்டை ஆளமுடியவில்லை. ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகளாக இந்திரா காந்தி ஆட்சி செய்தார் இரும்பு மனுஷி என்று அழைக்கப்பட்டு அவர் எதையும் துணிச்சலாக செய்யக்கூடியவர் என்று பல நாட்டு தலைவர்களும் பயப்படும்படி செய்தார் அதன்  பின் சோனியா காந்தி நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டு வந்தார் அது போல மேற்கு வங்காளத்தில் மம்தாவும் தமிழகத்தில் இன்னும் அதிகாரத்தில் ஜெயலலிதாவும் இருந்து கொண்டிருக்கிறார்.இப்படி இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து மிக உயர்ந்த பதவியில் இருந்து வந்த போதிலும் அவர்கள் மனபக்குவமும் முதிர்ச்சியும் இல்லாததால் இன்னும் பெண்களின் முன்னேற்றதிற்காக எதுவும் அவர்களால் செய்யமுடிவதில்லை.அவர்கள் ஆண்களை போல அதிகாரத்தை மட்டுமே செலுத்த நினைக்கிறார்களே தவிர பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யவில்லை.

இலவச டிவி மிக்ஸி லேப்டாப் என்று கொடுப்பதற்கு பதிலாக பெண்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் நாப்கின்களை வழங்கலாம். பெண்களுக்கான பொது கழிப்பறைகளை பள்ளி கல்லூரி மற்றும் பொது இடங்களில் கட்டி அதை இலவசமாக உபயோகிக்க அனுமதிக்கலாம். இந்த இரண்டையும் பெண் முதல்வராகிய ஜெயலிதா செய்து தரட்டும் அதன் பின் நாம் மற்ற முன்னேற்றங்களை பற்றி பேசலாம். இதற்கு பெண் இயக்கங்கள் குரல் கொடுத்து பெண் ஆட்சியாளர்களை சந்தித்து ஒற்றுமையாக போராடட்டும் . அதன் பின் வாய்கிழிய மற்ற முன்னேற்றங்களை பற்றி பேசலாம்.தமிழகத்தின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தன் கைகளில் வைத்திருக்கும் ஒரு பெண் முதல்வரால் பெண்களின் உண்மையான முன்னேற்றதிற்கு ஒரு சிறிய செயலை செய்யமுடியவில்லை என்றால் எந்த ஒரு காலத்திலும் பெண்கள் முன்னேறவே முடியாது. ஒரு பெண்ணிண் கஷ்டத்தை ஒரு பெண்ணால் உணரமுடியவில்லை என்றால் காலம் காலமாக பெண்களை அடக்கி ஆளும் ஆண்களா உங்களுக்கு அதிகாரத்தை அள்ளி தரப் போகிறார்கள் நன்றாக யோசியுங்கள் பெண்களே

அடுத்தாக பெண்கள் உதட்டளவில் மட்டும் முன்னேற்றம் பற்றி பேசாமல் அதை செயல்படுத்தும் காரியத்தை தங்கள் வீடுகளில் இருந்தே முதலில் துவங்கட்டும். அதற்காக பெண்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.உங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு உங்கள் மார்பில் இருந்து பாலை ஊட்டும் காலத்தில் இருந்தே பெண்களை மதிக்க மற்றும் சரிசமமாக நடத்த சொல்லி வளருங்கள். பெண்களே உங்கள் சகோதரர்களுக்கு பெண்களை மதிக்க மற்றும் நேசிக்க கற்று தாருங்கள் உங்கள் பேரன்களுக்கு பெண்களை மதிக்க மற்றும் நேசிக்க கற்று தாருங்கள். ஆனால் இப்படி செய்வதற்கு பதிலாக நீ ஆம்பிளையடா நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லிமட்டும் தராதீர்கள். இப்படி செய்தால் வருங்காலத்தில் பெண்கள் உரிமைகளுக்காக முன்னேற்றத்திற்காக யாரும் போராட வேண்டிய அவசியமே இருக்காது.

இறுதியாக சொல்ல விரும்புவது இதுதான் .பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் தரவேண்டாம். அவர்கள் ஆண்களை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களும் அல்லர் உயர்ந்தவர்களும் அல்லர்.  அவர்கள் உங்களுக்கு இணையானவர்கள்தான் அதை அறிந்து வாழ்ந்தாலே  போதுமானது.

பெண்கள் முன்னேற்றம் என்று நினைக்கும் போது என் அறிவுக்கு எட்டியது இதுமட்டுமே .அதனால் நான் சொல்லியதில் தவறுகள் ஏதும் இருக்கும் பட்சத்தில் என்னை மன்னிக்கவும் அதற்காக பூரிக்கட்டைகளை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்காதீர்கள் அப்படி நீங்கள் அனுப்பி வைத்தால் நீங்கள் செம்மரக்கட்டைகளை இப்படிதான் பூரிக்கட்டை வடிவில் நீங்கள் கடத்துவதாக ஆந்திர அரசுக்கு நான் தகவல் சொல்ல வேண்டிய நிலமை ஏற்படும்.

அன்புடன்
மதுரைத்தமிழன்


மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது.
(வகை 3) பெண்கள் முன்னேற்றம்
இதற்கு முன் வெளியான படைப்பல்ல, மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்

18 comments:

  1. நியாயம் தான். செம சகோ ! வாழ்த்துக்கள் வெற்றி பெற ! இனி வரும் என்கிறீங்க பூரிக்கட்டை ம்..ம் இப்படியென்றால் பின்னூட்டமே போடவும் அல்லவா பயப்பிடப் போகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பின்னுட்டம் போட பயங்கொள்ள வேண்டாம்

      Delete
  2. செம்மரத்தில் பூரிக்கட்டை யா.. நடக்கட்டும் நடக்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. நடக்கட்டும் நடக்கட்டும் என்று சொல்லுவது பூரிக்கட்டையால் என் மனைவி அடிப்பது தொடர்ந்து நடக்கட்டும் என்று நீங்கள் சொல்லுவது போல இருக்கிறது. நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்

      Delete
  3. நடுநிலையான அலசல் பெண்கள் முன்னேற்றம் என்று பேச்சோடு நில்லாமல் அவரவர் செயல்களில் ஒவ்வொரு பெண்ணும் தன் இல்லத்திலிருந்தே துவங்க வேண்டும் என்பதை மிகச்சரியாகச் சொன்னீர்கள் . நானும் இதுவரை கட்டுரை எழுதியதில்லை. ஆனாலும் எல்லோரும் எழுதுவதைப்பார்த்து எழுத நினைத்து எழுதி வெளியிடாமல் வைத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. http://veesuthendral.blogspot.in/2015/10/blog-post_1.html
      நானும் பதிவிட்டுள்ளேன். தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி திறமை உண்டு. உங்களின் திறமையாக நான் கருதுவது நாட்டுப் புற பாணியில் நீங்கள் எழுதும் கவிதைகள்தான் அதை அடிச்சுக்க யாராலும் முடியாது. நீங்கள் நாட்டுப் புற பாடல் பாணியில் பெண்கள் முன்னேற்றம்பற்றி நீங்கள் கவிதை பாணியில் எழுதி வெளியிட்டு இருந்தால் நீங்கள் முதல் பரிசை எளிதில் பெற்று இருக்கலாம் என்பதுதான் என் கருத்து

      Delete
  4. போட்டிக்கு ரெண்டு நாள் நீட்டிப்பு தந்திருகிறார்கள். எல்லா formalities உம் கரெட்டா போட்டுடீங்க. நம்ம விழாவையும், போட்டியையும் மதித்து இந்த லிங்க கை ப்ளீஸ் bloggersmeet@gmail.com க்கு மெயில் பண்ணுங்க, அப்படியே வகை 3 என்றும் இங்கே குறிப்பிட்டு விடுங்கள். நானும் உங்களைபோல பரிசு எதிர்பார்த்து எழுதவில்லை.நம் தமிழ் வலைப்பதிவர் வலிமையை நிலைநாட்ட இதை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ சொல்லி மறுக்க முடியுமா. உங்கள் விருப்பபடி இணைத்துவிட்டேன். சந்தோசம்தானே

      Delete
    2. இது வெளியிட அல்ல...

      ஹை இணைத்து விட்டீர்களா...சூப்பர்! இப்படிப் போட்டுவிட்டு (னீங்கள் முதலில் போட்ட கட்டுரையில் டிஸ்கியில் சொன்னதை வைத்து) பின்னரும் இணைக்கலாம் என்பது தெரியாததால் சொல்லாமல் விட்டேன். நீங்கள் மைதிலியின் கட்டுரைப் பதிவிலும் நீங்கள் வெளியிடுவீர்கள் ஆனால் போட்டிக்கல்ல என்று சொல்லியிருந்ததால்...நானும் கமென்ட் போட்டுவிட்டேன்.....

      ஐயோ வெளி நடுவர்கள் பயந்து விடப் போகின்றார்கள் கடைசி பாராவைப் பார்த்து....அவர்களுக்குப் பூரிக்கட்டை எல்லாம் தெரியாதே தமிழா...ஹஹஹஹ்

      கீதா

      Delete
  5. ஆஹா நல்லா தான் சொல்லியிருக்கீங்க,,,,,,,,
    வாழ்த்துக்கள்,,,,,,, உங்கள் பாணியில் செய்திகள்,,,,,, அருமை, தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் என்னமோ கிறுக்கி இருக்கிறே என்று நினைத்து இருந்தேன் நீங்கள் பாராட்டிய போதுதான் மனம் திருப்தியடைந்தது. எனது நாளை உங்கள் வார்த்தைகளால் இனிமையாக்கியத்ற்கு மிககும் நன்றி

      Delete
  6. முதலில் கை கொடுங்கள் மதுரைத் தமிழா...எனது எண்ணங்களைப் ப்ரதிபலிக்கும் கருத்துகள். அப்படியே..!! நன்றி நன்றி! ஏட்டுக் கல்வி மட்டும் போதாது ஆண் என்றாலும் பெண் என்றாலும். பெண்ணின் எண்ணங்கள் மாற வேண்டும். வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் எனப்தெல்லாம் உங்கள் கருத்தை அப்படியே ஆதரிக்கின்றேன். அருமையான பதிவு....எனவே உங்களுக்குப் பரிசாக என்ன தரலாம் என்று யோசித்து யோசித்து மீண்டும் மீண்டும் ...ச்சே..சரி உங்களுக்கு ஒரு பொக்கே அனுப்பலாம்னு.....ஹிஹிஹி அந்த பொக்கே என்ன பொக்கேனு எல்லாம் கேக்கக் கூடாது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சரக்கு பாட்டில்களால் ஒரு பொக்கே செய்து அனுப்ப போறீங்களோ இல்லையோ ஆனால் டாலர் நோட்டிலாவது ஒரு பெரிய மாலை செய்து அணுப்ப போறீங்க

      Delete
  7. உலகின் பாதி மக்கள் தொகை பெண்கள்!
    இவர்கள்தான் மீதமுள்ளவர்களை வளர்ப்பவர்கள்!!

    ReplyDelete
    Replies
    1. இரண்டே வரிகளில் நான் சொன்னதை மிக அருமையாக சொல்லியஹு மிக அருமை

      Delete
  8. பெண்களின் முன்னேற்றம் பற்றி ஆண்கள் எழுதுவது மிக மகிழ்வாக இருக்கின்றது...அருமையான கட்டுரை.பெண் ஆட்சியில் பெண்களுக்கு நன்மை நடக்கலன்னா பின் யார் ஆட்சியில் நடக்கும் என்ற கேள்வி மிகச்சரியே,...வெற்றி பெற வாழ்த்துகள்...சகோ..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.