Tuesday, September 15, 2015



கலைஞர்  தனிமையில் வீட்டில் இருக்கும் போது பாடும் பாடல்

கலைஞர் வீட்டில் தனிமையில் இருக்கும் போது என்ன செயவார் என்று எனக்கு தெரிஞ்சுக்க ஆசை வந்ததால் அவர் வீட்டில் இருக்கும் செக்யூரிட்டி கண்களில் மண்ணை தூவி விட்டு உள்ளே சென்ற போது கலைஞர் இந்த பாடலை அடிக்கடி பாடுவதை கண்டேன் அந்த இனிய பாடல்கள் எனது வலைதள வாசகர்களுக்காக..



பகுத்தறிவூட்டி வளர்த்த கிளி பதவி கொடுத்து பார்த்த கிளி
பகுத்தறிவூட்டி வளர்த்த கிளி பதவி கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் தேர்தலுக்கு (2016)
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் தேர்தலுக்கு
தயாளம்மா எந்தன் தயாளம்மா தயாளம்மா எந்தன் தயாளம்மா

சட்டமும் நானுரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
சட்டமும் நானுரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
'பதவி மட்டும் வாங்கிக் கொண்டு பாய்ந்து செல்ல பாக்குதடி
'பதவி மட்டும் வாங்கிக் கொண்டு செல்ல பாக்குதடி
தயாளம்மா எந்தன் தயாளம்மா
பகுத்தறிவூட்டி வளர்த்த கிளி பதவி கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் தேர்தலுக்கு
தாயளம்மா எந்தன் தாயளம்மா

நீதியையே அழித்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
நீதியையே அழித்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
என் தலையில் மண்ணை போடுவதற்கு  ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
என் தலையில் மண்ணை போடுவதற்கு  ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
தாயளம்மா என்தன் தாயளம்மா தாயளம்மா எந்தன் தாயளம்மா
பகுத்தறிவூட்டி வளர்த்த கிளி பதவி கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் தேர்தலுக்கு (2016)
தாயளம்மா எந்தன் தாயளம்மா



ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
என்னை கவுத்துவிட இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
என்னை கவுத்துவிட இறங்கிவிட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
சத்தியம் இது சத்தியம் தாயளம்மா எந்தன் தாயளம்மா
பகுத்தறிவூட்டி வளர்த்த கிளி பதவி கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் தேர்தலுக்கு (2016)
தயாளம்மா எந்தன் தயாளம்மா தயாளம்மா எந்தன் தயாளம்மா

ஸ்டாலின் பங்கேற்க்கும் திமுக பொதுக்கூட்டங்களில் கலைஞரின் முகம் மறைக்கப்படுகிறது என்ற செய்தியை படித்த பின்னர் என் நினைவிற்கு வந்ததது  சிவாஜி நடித்த கெளரவம் படப்பாடல். அது பொருத்தமாக இருப்பதாக எனக்கு தோன்றியது. அதனால் அதை இங்கு பதிகிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்.

15 Sep 2015

11 comments:

  1. கலக்கல் பாட்டு அருமை! ரத்தத்தின் ரத்தங்களுக்கு இதை டெடிகேட் பண்ணலாம்! நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி அடுத்த முறை கருத்திடும் போது ஐயா என்ற வார்த்தையை தவிர்க்கவும்

      Delete
  2. பணமூட்டி வளர்த்தகிளி பவர் கொடுத்து வளர்த்த கிளி (சசிகலா )
    பணமூட்டி வளர்த்தகிளி பவர் கொடுத்து வளர்த்த கிளி (சசிகலா )
    நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு (supreme court )
    .......
    எண்ணை கவுத்துவிட பாக்குதடி bangalore ஹோட்டல்ல திட்டமெல்லாம் போடுதடி
    modi ஓடி வந்து காப்பாத்த பாக்குதடி,செல்லமே ,செல்லமே ,
    ரத்தம் கவுத்தாலும் நியாயமே நியாயமேடி ,யாரோ வந்து கவுக்கரது எப்படி நியாயமடி செல்லமே ,செல்லமே ,
    கு சாமி ,சு சாமி ,மடத்து சாமி ,எல்லா ஜட்சு சாமி ,எல்லா பேப்பர் சாமிங்களும் காப்பாத்த நினெச்சாலும்
    கரும வென வந்து கவுக்குதடி செல்லமே ,செல்லமே

    ReplyDelete
    Replies

    1. உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம்

      Delete
  3. குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்க நினைத்துவிட்டேன்.
    1. தயாளம்மா. ('நீங்கள் தாயாளம்மா என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தை பிராக்கெட்டில்)
    2. நானுரைத்தேன் ('நானுறைத்தேன்)
    3. இது எழுத்துப்பிழையில்லை. கருத்துப்பிழை. 'பதவி மட்டும் வாங்கிவந்து' should be 'பதவி மட்டும் வாங்கிக் கொண்டு'.
    4. "போடுவதற்கு ஒரு மகனை' - கருத்துப்பிழை. "போடுவதற்கிரு மகனை'. ஸ்டாலினும் அழகிரியும் தலைவருக்குப் போடாத இடியா?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னபடி திருத்திவிட்டேன் நன்றி நெல்லைதமிழா

      Delete
  4. தெரியாமல் உள்ள வந்த மதுரையாரைத் தேடுகிறது தனிபடை,,,,,,,
    காணாமல் போக பூரிக்கட்டைக்காக,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி தனிப்படை தேடினாலும் என்னை பாதுக்காக்க உங்களை மாதிரி சகோக்கள் பலர் உண்டே அதுனால பயமில்லை

      Delete
  5. Replies
    1. ஆஹா யாரோ இங்கே வந்திருக்காகலே அதிசயமாக இருக்கிறது. உங்கள் வருகையை கண்டு மனம் சந்தோஷம் அடைகிறது

      Delete
  6. அருமையான கற்பனை. பாராட்டுகள் மதுரைத் தமிழன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.