Thursday, September 3, 2015



2016 ல் திமுக கட்சியில் இருந்து வெளிவரப் போகும் அறிவிப்பு? இப்படியும் இருக்கலாம்....

கலைஞர் சொன்ன கருத்துக்கள் அவரின் சொந்த கருத்துக்கள். அது திமுக கட்சியின் கருத்துக்கள் அல்ல என கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்தார் மேலும் ஸ்டாலின் சொன்னது கலைஞரின் கருத்துக்கள் திமுக கட்சியினரை குழப்புவதாக இருப்பதால் கலைஞர் இது மாதிரி கருத்துகள் சொல்வதை இனிமேல் நிறுத்தி கொள்ளவேண்டும். இல்லையென்றால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கலைஞர் நீக்கபடுவார் என கடுமையாக எச்சரிக்கிறேன். எனக்கு குடும்பத்தைவிட கட்சிதான் மிக முக்கியம்


இதை தொடர்ந்து கலைஞர் கட்சிக்கு களங்கம் விளைவுக்கும் வகையில் பேசிவருவதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து அவர் நீக்கி வைக்கப்படுவதற்காக பொருளார் அன்பழகன் அனுப்பிய கடிதம் இங்கே உங்கள் பார்வைக்காக வெளியிடப்படுகிறது..

டிஸ்கி: கட்சி தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்துவிட்டு கலைஞர் உயிரோடு இருந்தால் இப்படி நடக்க வாய்ப்புக்கள் மிக அதிகம். இது ஒரு கற்பனை பதிவே..... சில சமயங்களில் கற்பனை உண்மையாக மாறவும் வாய்ப்புக்கள் உள்ளன


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், கருணானிதி இல்லையென்றால், தி.மு.க இல்லை. அவர்கள் கொள்(கை)ளைகளும் இல்லை. ஸ்டாலினின் முகவரி, திமுக இல்லை. கருணானிதிதான். அதனால் நீங்கள் சொல்லியது நடக்காது. டம்மியை 'பொதுச்செயலாளர்' கையெழுத்துக்கு உபயோகப்படுத்தியதில் உங்கள் குறும்பு தெரிந்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.