அழகிரி ஆட்டம்
ஸ்டாலின் திண்டாட்டம்
அழகரியின் செல்வாக்கு
இன்னும் திமுகவில் இருக்கிறது போல அதுனாலதான்
ஸ்டாலின் ஆதரவு பெற்ற மதுரை தி.மு.க.,
நிர்வாகிகள் ஆவேசம் அடைந்துள்ளனர் போல இருக்கிறது.
அழகிரியை செத்த
பாம்பு என நினைத்து கொண்டிருந்த தி.மு.க., நிர்வாகிகள் அந்த பாம்பு இன்னும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறது.
அது தேர்தல் சமயத்தில் விஸுவரூபம் எடுக்கும் என நினைத்து பயத்தில் இன்று ஆவேசமாக பேசி
இருக்கிறார்கள். அவர்களின் பேச்சு இன்றைய நாளில் வந்துள்ளது. அது கிழே..
கருப்பு நிறத்தில்
இருக்கும் வரிகள் செய்தி நாளில் வந்தது. சிகப்பு நிறத்தில் இருப்பது நான் எழுதி
இருப்பது..
மதுரை: 'ஆளுங்கட்சி
துாண்டுதலால், தி.மு.க.,வை குழி தோண்டி புதைக்கிறார், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி'
என, மதுரை தி.மு.க., நிர்வாகிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.
///செத்து போனவைகளையும் கெட்டுப் போனவைகளையும் மட்டுமே குழி தோண்டி புதைப்பார்கள்
அதனால் மதுரை தி.மு.க., நிர்வாகிகள் அழகிரி மீது ஆவேசப்பட என்ன இருக்கிறது அழகரி நல்ல
வேலையைத்தானே செய்கிறார் //
மதுரையில், தி.மு.க.,
தீர்மான குழுத் தலைவர் பொன் முத்துராமலிங்கம், நகர செயலர்கள் வேலுச்சாமி (வடக்கு),
தளபதி (தெற்கு) ஆகியோர், நேற்று கூறியதாவது: தமிழகத்தில், 'அடுத்த முதல்வர்' தொடர்பாக
எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பை காரணம் காட்டி, பல்வேறு அவதுாறுகளை அழகிரி கூறியுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்.
ஆட்சியில் இல்லாத போது, வழக்குகளில் இருந்து தப்பிக்க, ஆளுங்கட்சியின் கையாளாக மாறியுள்ளார்.
பொய்யான கருத்துகளை தெரிவித்து, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
(ஆட்சியில் இருக்கும்
போது, அதிகாரத்தை அழகிரி கையில் எடுத்துக் கொண்டார் அது சரி ஆனால் ஆட்சியில் இல்லாத
போது கட்சியில் அவரின் அதிகாரத்தை எடுத்தது விட்டு அவர் கட்சியில் குழப்பம் விளைவிக்கிறார்
என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்)
சட்டசபை தேர்தலில்,
தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக, அவரது ஆதரவாளர்களை நிறுத்தி, கட்சிக்கு துரோகம்
செய்தவர்;(அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரையும் அவர் ஆதரவாளர்களையும் நீக்கிவிட்ட
பிறகு தேர்தலில் அவரது ஆதரவாளர்களை நிக்க சொன்னதில் என்ன தப்பு)
கட்சியை குழி தோண்டி புதைக்கிறார். குடும்பமா, கட்சியா
(விஜயகாந்தா அழகிரியா என பார்த்து பெற்ற பிள்ளையை தன் பிள்ளை இல்லை என்றும்
தனது அண்ணன் இல்லை என்று பிரித்தது நீங்கள்தானே) என்று பார்த்து, கட்சி தான் எங்களுக்கு
பெரிது என, முடிவு செய்து தான், அழகிரியிடம் இருந்து பிரிந்தோம். ஆனால், கட்சிக்குள்
குழப்பம் ஏற்படுத்தும் வகையில், ஆளுங்கட்சியின் துாண்டுதலில் தான், இப்படி அவதுாறாக
பேசுகிறார்.( உங்ககட்சியில் நடக்கும் கூத்திற்கு ஆளுங்கட்சியை குறை கூறுவதில் என்ன
நியாயம்) தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசி, ஆளுங்கட்சியின் தயவை எதிர்பார்த்து,
தி.மு.க.,விற்கு துரோகம் செய்கிறார்; அவரது இந்த இரட்டை வேடத்தை,(கலைஞர்தான் திமுகவின்
அடுத்த முதல்வர் வேட்பாளர் ஆனால் அவருக்கு ஸ்டாலினைவிட செல்வாக்கு குறைவு என்று வேஷம்
போட்டது யாரு என்று பொதுமக்கள் மட்டுமல்ல திமுகவின் உண்மையான தொண்டர்களும் புரிந்து
கொண்டார்கள்) தொண்டர்கள், மக்கள் புரிந்துள்ளனர்.கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத
அழகிரி, கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் உள்ள ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு, எந்த உரிமையும்
இல்லை; இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள்
கூறினர்.(திமுக கட்சியை விமர்சிக்க அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம்
ஏதுமில்லை. மேலும் அண்ணணுக்கு தம்பியை பற்றி எந்த நேரத்திலும் பேச முழு உரிமை உண்டு
என்பதை இந்த அரைவேக்காடு பச்சோந்தி மதுரை நிர்வாகிகள் முதலில் உணரவேண்டும்)
முன்னாள் அமைச்சர்
தமிழரசி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, நகர் துணை
செயலர் எஸ்ஸார் கோபி, அவைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகி கள் உடன் இருந்தனர்.
இதேபோல், தேர்தல்
பணிக்குழு தலைவர் சேடப்பட்டி முத்தையா, மாவட்ட செயலர்கள் (வடக்கு) மூர்த்தி, (தெற்கு)
மணிமாறன் அளித்த பேட்டி: அழகிரியின் பேச்சு கண்டிக்கத்தக்கது; அவரது பேச்சுக்கும்,
தி.மு.க.,வினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அழகிரியின் வெற்று பேச்சை பொருட்படுத்த
மாட்டோம். தி.மு.க., வெற்றியை அழகிரியால் தடுக்க முடியாது.( அடிப்படை உறுப்பினராக
இல்லாத அழகிரியின் பேச்சை பொருட்படுத்த மாட்டோம் என்றால் இத்தனை பேர் சேர்ந்து பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பது
ஏன்? எங்கே அவர் மீண்டும் அதிகாரித்திற்கு வந்துவிடுவார் என்ற பயமா என்ன )
செப்., 25,
26ல் நமக்கு நாமே திட்டம் மூலம், ஸ்டாலின் மதுரையில் சுற்றுப்பயணம் செய்கிறார்; மதுரை
மாவட்டத்தில், மக்களின் குறைகளை கேட்டறிந்து கலந்துரையாடுகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
(
பேசவேண்டிய சட்டசபையில், வெளிநடவடிக்கை செய்துவிட்டு இப்படி மக்களிடம் குறைகளை கேட்டு
தன் சொந்த காசை செலவழித்து மக்களின் குறையை தீர்க்கப் போகிறாரா என்ன?)
அன்புடன்
மதுரைத்தமிழன்
சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அதிலும் கடைசி வரிகள் அட்சர லட்சம்.
ReplyDeleteஅவர்கள் பேசியதற்கு தாங்கள் கேட்டிருக்கும் கருத்துக்கள் சூப்பர்...
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா,
ReplyDeleteஅருமை நச் பதில்கள்
ReplyDelete"செய்தி தாளில் " பிழை திருத்தவும்
ReplyDelete