புதுக்கோட்டை வலைப்பதிவர்
விழாவும்- எனது எண்ணங்களும்
நம் மக்களிடையே எப்பொழுதும்
ஒரு கெட்ட பழக்கம் உண்டு அதுதான் குறை சொல்லுவது. பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது அப்படியே வேடிக்கை பார்த்துவிட்டு அந்த நிகழ்வு முடிந்த பின் குற்றம் குறைகளை பொதுவில் சொல்லுவதுதான்.
அதனை தவிர்த்தால் பல நல்ல நிகழ்வுகளை நல்லபடியாக செய்து முடிக்கலாம்.
அதனால் என் மனதில் பட்டதை
இங்கு சொல்லுகிறேன். அதில் தவறு என்றால் சுட்டிக்காட்டவும்..
"தமிழ்
வலைப்பதிவர் சந்திப்பு விழா' ஒரு ஊரில் நடக்கும் போது அந்த ஊர்கார பதிவர்களுக்கு
மட்டும்தான் முழு பொறுப்பு மற்றவர்களுக்கு இல்லை என்பது போலத்தான் நடை பெறுகின்றது.
இப்படி நான் சொல்லக் காரணம் ஒரு ஊர் பெயரை சொல்லி அங்கு
நாம் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு விழா நடத்தும் போது அந்த பகுதி வலைப்பதிவர் மட்டுமே
பெண்வீட்டார் போல அதிகமெனக்கெடுகிறார்கள் மற்றவர்கள் எல்லாம் விருந்தினர்
போல மட்டுமே செயல்பட்டுவருகிறார்கள். அப்படி செய்வதால் அனைத்து வலைப்பதிவர்களின் முயற்சிகளும்
இங்கு முழுமையாக பயன்படுத்தப்படாமல் போவதோடு ஒரு பகுதியினருக்கு மட்டும் அதிக சுமை
ஏற்படுகிறது. அதை நாம் வருங்காலங்களிலாவது மாற்ற முயற்சிக்க வேண்டும். அதனால் சுமைகள்
பகிர்ந்து அளிக்கபட்டு சுமைகளே இல்லாதபடிக்கு நடை பெறும். இந்த வலைபதிவர் விழா எங்க ஊர்விழா உங்க ஊர் விழா என்றில்லாமல் நம்ம தமிழ் வலைபதிவர்
விழாவாக மாறவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் விழா நடத்தும்
போது அந்த பகுதி மக்களே அனைத்து பொறுப்பையும் செய்வதைவிட அதை மற்ற பகுதி மக்களுடன்
பகிர்ந்து செய்யும் போதுதான் அதில் அனைவருக்கும் ஆர்வம் வரும் சுமைகள் குறையும். சமீபத்தில்
தமிழக இணையவழி கல்விகழக செயலாலரை சந்திக்க முத்துநிலவன் தனது சொந்த வேலைகளை விட்டுவிட்டு
சில பதிவர்களோடு சென்றார். இது அவருக்கு அனாவசிய அலைச்சலை கொடுத்திருக்கும் அல்லவா?
அதற்கு பதிலாக விழாக் குழுவினர் மற்ற ஊரில் உள்ளவர்களுக்கும் பொறுப்பை பகிர்ந்து கொடுத்து
இருந்தால் அலைச்சல் மிச்சமாக இருந்திருக்குமே. இது போன்ற பல சின்ன சின்ன விஷயங்கள்
பல
சரி நாம் அடுத்த விஷயத்திற்கு
போவோம் கடந்த இரண்டு தினங்களாக என் கண்ணில் படும் பதிவு இதுதான்.
அழைப்பிதழ் வேண்டுவோர்
முகவரி தருக!
என்ற பதிவு. இதைபார்த்ததும் என் மனதில் தோன்றியது இதுதான். இன்றைய கால கட்டம் டிஜிட்டலில்
போகும் போது இப்படி இருபக்க பலவண்ண அட்டையில்
அழைப்பிதழ் அச்சடிப்பது தேவையா என்பதுதான் அதிலும் பதிவர் விழாவிற்கு. இதை சொல்லுவற்கு
காரணம் பதிவர்கள் அனைவரும் இணையத்தில் இருப்பதால் இணையம் மூலம் தெரிவித்தாலே போதுமே.
ஏன் இந்த அனாவசிய செலவு. நீங்கள் விழாவிற்கான பணத்தை குருவி உணவை சேகரிப்பது போல சிறுக
சிறுகத்தானே சேர்த்து வருகிறீர்கள். கொஞ்சம்
யோசித்துதான் பாருங்களேன்.
அடுத்தாக நாம் விழாபற்றி பல பதிவுகள் இட்டு வருகிறோம் அது
ஒரு குறுகிய வட்டத்தில்மட்டும்தான் சுழன்று வருகிறது இந்த வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களை
அது இன்னும் ரீச் ஆகவில்லை என்பது உங்களுக்கு புரியவில்லையா? அல்லது புரிந்தும் பிரஸ்டிஜ்
காரணமாக அவர்களை கூப்பிடுவது இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்து இருந்தால்
தவறு. அதை மாற்றி மற்ற மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் பொறுப்புக்கள் கொடுத்து அவர்கள்
மாவட்டத்தில் இருக்கும் நமக்கு தெரியாத பதிவர்களை அழைக்க சொல்லலாம். மேலும் தலைமை பொறுப்பேற்று
நடத்தும் முத்துநிலவன் சார்பில் ஒரு இமெயில் அழைபிதழ் ரெடி பண்ணி நம்ம வட்டத்தில் இல்லாத
பதிவர்களை தேடி பிடித்து அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி அவர்களுக்கும் தெரிவித்து,
விழாவில் கலந்து கொள்ள செய்யலாம். அப்படி செய்வதுதான் விழாவை வெற்றியடைய செய்யும்
.இன்னும் எதிர்காலத்தில் மேலும் வளரும்.
அது இல்லாமல் நமது பதிவுகளை
பாராட்டுபவர்களையும் கருத்து சொல்லுபவர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி போட்டிகள்
நடத்தி நமக்கு நாமே விருதுகள் கொடுத்து கொள்ள விழா தேவையா என்ன?
இதை கேட்க காரணம் இந்த விழாவில் தொடர்புடைய சிலரை தவிர (முத்துநிலவன்,
மது, மைதிலி, கீதா, திண்டுக்கல் தனபாலன் மேலும் சில பேர் பெயர்கள் மறந்துவிட்டன) மற்றயாரும் பதிவுலகத்திற்கே சம்பந்தமில்லாதவர்கள் போலத்தான் தோன்றுகிறது..
அதனால் பல பழைய பழம் பதிவர்களுக்கு இந்த கூட்டம்
யாரல் நடத்தப்படுகிறது என்றே தெரியாததால் வருவதற்கே தயங்கலாம். அப்படி வரும் தயக்கங்களை
போக்க விழாக் குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
பழம் பெரும் பதிவர்கள் என்று
சொல்லுவது. (கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், யுவகிருஷ்னான். ராகவன் ஈரோடு கதிர் சதிஷ் சங்கவி இது போன்ற பலர் எல்லாப் பெயரையும் எழுத இடம்
இல்லை மன்னிக்கவும் ) இவர்கள் அனைவரும் இன்னும்
இணையதளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக பலரை வலைத்தளத்திற்கு அழைத்து வரும் நாம் மேலே சொன்னவர் போன்றவர்களையும்
எழுத ஆரம்பித்து அதன் பின் தொடர்ந்து எழுதாத பழைய பதிவர்களையும் அழைத்து எழுத சொல்லாமே..
அருமையாக பல சமையல் குறிப்புகளை
எழுதி வலைத்தளங்களில் தமிழில் அழகாக எழுதி பதிவிடும் பெண் பதிவர்களையும் அழைக்கலாமே
அவர்களை நம் வலையுலகம் ஒதுக்கி வைப்பது ஏனோ? அவர்களுக்கும் ஏற்ற போட்டிகளையும் நடத்தி
அவர்களையும் ஊக்குவிக்கலாமே
இன்னும் எழுதலாம் ஆனால் பதிவின்
நீளம் கருதி இத்துடன் முடித்து கொள்கிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : நம்பினால் நம்புங்கள்.
ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் சொல்வதை விட முன்பே சொல்வது தவறாகாது என்று நினைக்கிறேன்
என்று நான் நினைத்து எழுத தொடங்கிய போது அதை அப்படியே சொல்லி நமது பதிவர் G.M பால சுப்பிரமணியன்
அவர்களும் ஒரு பதிவு எழுதி வெளியிட்டு இருக்கிறார். புதுகை வலைப்பதிவர் விழா-என் சில எண்ணங்கள்
முடிந்தவுடன் குறைச் சொல்வதைவிட இப்பேவே சொல்லிகிறேன் என நல்ல குறைச் சொன்ன தமிழா, நன்றி.
ReplyDeleteஎன் கருத்தை மட்டும் இங்கு பகிர்கிறேன் யாரையும் குறை சொல்ல அல்ல.
ReplyDeleteயாரையும் நாம் இங்கு தனித்தனியாக அழைக்க வேண்டுமா நம் விழா இல்ல விழா என்றெல்லாம் சொல்வது பெயருக்காக அல்லவே. (வலையில்) தாங்கள் சொல்வது போல வலை துவங்காதவர்களை வேண்டுமானால் அழைக்கலாம்.
அழைப்பிதழ் செலவு வீணான செலவு தான். அதை தவிர்க்கலாம்.
எல்லாம் சரி உங்க பெயர் பதிவர் பட்டியலில் காணோமே!
ReplyDeleteஎப்ப வர்ரீங்க?
எப்படி வர்ரீங்க?
எந்த பதிவர் பெயரில் வர்ரீங்கன்னு சொன்னா
உங்களுக்கு பூரிக்கட்டைப்படையோடு (மன்னிச்சுக்கோங்)
பூனைப்படையோடு பாதுகாப்பு தருவோம்ல.
குறிப்பாக மாப்பிள்ளை வீட்டார் மனோ பாவம்
ReplyDeleteபிற மாவட்டத்தினருக்கு வேண்டியதில்லை என்பதே
என் கருத்தும்
அவசியமான பகிர்வு.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDelete// பெண் பதிவர்களையும் அழைக்கலாமே //
ReplyDeleteஅனைவருக்கும் அழைத்தாகி விட்டது...
This comment has been removed by the author.
ReplyDelete// அது இல்லாமல் நமது பதிவுகளை பாராட்டுபவர்களையும் கருத்து சொல்லுபவர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி போட்டிகள் நடத்தி நமக்கு நாமே விருதுகள் கொடுத்து கொள்ள விழா தேவையா என்ன? //
ReplyDeleteஎனது தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தகவல் தெரிவித்து விட்டேன்... கையேட்டில் பதிய கூட அவர்கள் முயற்சி செய்யவில்லை...
பொறுமை இருந்தால் காண்க : http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html
சில ஆலோசனைகள் ஏற்புடையவை! சிலர் ஈகோ காரணமாக இதை புறக்கணிப்பதும் பின்னர் விழா முடிந்ததும் பதிவு எழுதி சண்டை போடுவதும் முந்தைய சந்திப்புக்களில் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. அழைப்பிதழ் பதிவர்களுக்கு தேவைப்படாவிட்டாலும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் தேவை அதனால் குறைந்த அளவில் அச்சடிக்கலாம். பொறுப்புக்களை மற்ற மாவட்டத்திற்கும் பகிர்ந்து அளிக்கலாம் தவறில்லை! அது போல விழா நாள் முடிவு செய்வதையும் மற்ற ,மாவட்டத்தினரை கலந்து செய்யலாம். சிறப்பான ஆலோசனைகள்! நன்றி!
ReplyDeleteபுதுக்கோட்டையில் கவிஞர் ஐயாவின் தலைமையில் ஒரு பெரிய குழுவே
ReplyDeleteஇதற்காக இயங்கி வருகின்றது நண்பரே
இச்சந்திப்பு பற்றி பல பதிவர்களும் எழுதி வருவதான்
பலர் புதிது புதிதாக வலைப் பூ தொடங்கிஎழுதத் தொடங்கி இருக்கிறார்கள்
மேலும் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் செய்திகளும் வெளியாகி
அனைவரின் கவனத்தினையும் கவர்ந்து உள்ளன.
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின்
இணையப் பக்கத்திலும் இப்பதிவர் சந்திப்பு குறித்த விவரங்கள்
வெளியாகி உள்ளன.
சிறந்த முறையில் பதிவர் சந்திப்புஅரங்கேறும் நண்பரே
நன்றி
தம +1
நல்ல விடயங்களை முன் வைதுள்ளீர்கள். நல்ல கொள்கை. நன்றி !
ReplyDeleteநல்ல யோசனைகள்.....
ReplyDelete