Monday, June 27, 2011

விபரீத தொழில்நுட்பம்- நிர்வாணமாக படம் பிடிக்கும் மொபைல் கேமரா( ஜாக்கிரதை)

வளர்ந்து வரும்  தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுமை என்ற பெயரில் என்னென்ன விபரீதங்கள் செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்து  கொள்வது இன்றைய வாழ்வில் மிகவும் அவசியம். இப்போது வந்துள்ள புதுமையை அறிய நான் முற்படுகையில் என்னை பாதித்த இந்த புதுமையான  விபரீத கண்டுபிடிப்புதான் நிர்வாணமாக படம் பிடிக்கும் மொபைல் கேமரா.


இந்த ஐபோன் கேமராவுக்காக  புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NUDEIT என்னும் ஐபோன் அப்ளிகேசன் சாப்ட்வேர் ஆடைகளுடன் கூடிய நபரை ஸ்கேன் என்னும் தொழில்நுட்ப வசதியுடன் ஆடையற்ற நிர்வாண உடலாய் பதிவு செய்கிறது. நண்பர்களை நிர்வாணமாக பார்க்கும் NudeIt > கேமரா ஸ்கேன் அப்ளிகேசன் இது.

  டூ  பீஸ் என்ற ஆடை குறைப்பு உடைகளுடன் உலவும் மேலை நாட்டினருக்கு இது  ஒரு  சாதரணமான நகைச்சுவைக்கு உரிய விஷயமாக இருக்கலாம் .ஆனால் சிரழிந்து கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் மத்தியில் கிடைத்தால் நம் நாட்டு கலாசாரமும் பெண்களின் நிலையும் ஒரு கேலிக்குரியதுமட்டுமில்லாமல்  ஒரு கேள்விக்குரியதாகவும் மாறிவிடும்.

இந்த அப்ளிகேசனை  உபயோகிப்பதை உடனடியாக  நமது அரசாங்கம்  தடை செய்யவேண்டும் அதற்காக நமது பதிவாளர்களும் ஊடகங்களும் பெண்கள் அமைப்புகளும் இதற்கான எதிர்ப்பை உடனடியாக காண்பிக்க வேண்டும். அல்லது நமது பெண்கள் அரபு நாடுகளில் உள்ள பெண்கள் அணிவது போல உடைகளை அணிந்துதான் வீட்டை விட்டு வெளிவரவேண்டி இருக்கும்


எத்தனையோ தவறுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நமது தமிழகத்திலும் சில கயவர்கள் இத்தகைய மொபைல் போன் அப்ளிகேசனை டவுன் லோடு செய்து தன் கையில் வைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆகையால் தமிழக பெண்கள் உஷாராக இருக்க வேண்டுகிறேன். இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். இதைப்பற்றிய வீடியோ க்ளீப்புகளை கிழே காணலாம்





இது எதிர்புக்குரியது மட்டும் அல்ல கண்டிக்கதக்கது .இதைப்பற்றி நீங்கள் நினைப்பதை  தாரளமாக கூறலாம்.


எனது அடுத்த பதிவாக வருவது "இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( புதுமண தம்பதிகளூக்கு மட்டும்)' படிக்க தவறாதீர்கள்
27 Jun 2011

7 comments:

  1. its fake.....nalaa check pannittu pathivi podunga

    ReplyDelete
  2. நண்பர் டெனிம் அவர்களுக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் நன்றாக ஆராய்ந்துதான் இந்த பதிவை போட்டுள்ளேன். இந்த Apps ஆப்பிள் ஸ்டோரில் மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது, ஆப்பிள் ஸ்டோரில் இந்த Apps கிடைக்கிறதா என்ற சோதித்த பின் தான் இந்த பதிவை போட ஆரம்பித்தேன். இந்த Apps-ஐ ஐபோனில் தரவிரக்கம் செய்த பின் அதை வீடியோவில் பார்தபடி உபயோகிக்க முடியும். இதை இயக்கும் போது அது உங்கள் முகத்தை மட்டும் பதிவு செய்து உங்கள் உடம்புக்கு ஏற்றபடி அந்த சாப்வேர் ஒரு நிர்வாண உருவத்தை உருவாக்கி கொடுக்கும். இந்த Apps உங்கள் உடம்பின் உருவ அளவை மட்டும் பதிவு செய்யும் இது எக்ஸ்ரே மிஷின் அல்ல உருவத்தை அப்படியே நிர்வாணமாக்கி காண்பிக்க. இது ஒரு க்ராபிக் க்ரியேசன் அவ்வளவுதான். ஆனால் இதை வைத்து மிஸ் யூஸ் தமிழகத்தில் பண்ண முடியும் என்பதை தான் இந்த பதிவின் முலம் சொல்ல முயன்று உள்ளேன் அவ்வளவுதான். இதை அமெரிக்காவில் ஒரு funக்காக உபயோகிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் இதை அப்படி உபயோகிக்கமாட்டார்கள். அதனால்தான் அந்த அப்ளிகேசனுக்கான டைரக்ட் லிங்கை கொடுக்காமல் தவிர்த்து இருக்கிறேன்.

    நண்பரே இந்த விளக்கம் போதுமானது என நினைக்கிறேன்

    ReplyDelete
  3. இளம் மாணவிகளை கையாலூம் எங்களைப் போன்றொருக்கு இந்த பதிவு அவசியம்தான். அலர்ட் செய்வதற்கு பயன்படும். கவனக்குறைவான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும். Thank you.

    ReplyDelete
  4. சாகம்பரி மேடம் ,நான் சொல்லவந்த கருத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  5. என்னை அலற வைத்த பதிவு....இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி. ஆனால் இந்த கீழ்காணும் பதிவிற்கு ஏற்ப இது வெறும் விளையாட்டிற்காக செய்யப்பட்ட வேலை மட்டுமே என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை.

    http://mashable.com/2009/11/04/nude-it-iphone/

    ReplyDelete
  7. இது ரொம்ப கேவளம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.