லஞ்சத்தை ஒழிக்க சூப்பர் ஸ்டார் ஆரம்பித்த புதிய "இளைஞர் இயக்கத்தில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு
நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பேசினார்.
மக்களே நீங்கள் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் என்று நினைத்து இங்கே வந்து இருந்தால் அப்படியே திரும்பி பார்க்காமல் ஓடிப்போங்கள். ரஜினிகாந்துக்கு நடிக்கத்தான் தெரியும். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் சூப்பர் ஸ்டார் கொஞ்சம் கூட நடிக்க தெரியாதவர். ஆனால் இவர் இந்திய இளைஞர்களின் சூப்பர் ஸ்டார் . அவர்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அவர்தான் ஒரு புதிய இளைஞர் இயக்கததை ஆரம்பித்துள்ளார். அவர் கூறியதை கிழே படியுங்கள்
நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர். லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.
ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும். ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள்.
நான் ஆரம்பித்த இந்த இளைஞர் இயக்கதில் தலைவன் என்று யாரும் கிடையாது. அது ஒரு இளைஞர் இயக்கம்.அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் "என்னால் எதைக் கொடுக்க முடியும்" அல்லது "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்ற எண்ணத்தை இளைஞர் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து அதை செயல் படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும்.
எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம்தான் லஞ்சம் வாங்க தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தை தூய்மையானதாக மாற்றுவோமாயானால், நாடு மாறும்.
'
நான்
என்றென்றைக்கும்
கொடுத்துக்
கொண்டே
இருப்பேன்
என்ற
மனநிலை
நம்
இளைஞர்களுக்கு
வருமென்றால்
, அந்த
மனநிலை
, எனக்கு வேண்டும், எனக்குதான் வேண்டும் ' என்ற
எண்ணத்தை
சுட்டெரிக்கும்
. இளைஞர்களே
நீங்கள்
எல்லோரும்
இப்பணிக்கு
தயாரா
? வாருங்கள்
நண்பர்களே
! www.whatcanigive.info என்ற
இணைய
தளத்தில்
உங்களை
பதிவு
செய்து
இந்த
இயக்கத்தை
வழுப்படுத்துங்கள்
. நீங்கள்
என்னுடன்
தொடர்பு
கொள்ள
www.abdulkalam.com என்ற
இணைய
தளத்தின்
மூலம்
தொடர்பு
கொள்ளலாம்
. இவ்வாறு அப்துல் கலாம் பேசியுள்ளார்
..
இந்த பகிர்வு உங்களை பாதித்து இருந்தால் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...
அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...
இயக்கம் வலுப்பட வாழ்த்துக்கள். பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல விஷயம்... பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி
ReplyDeleteஎனக்கு என்ன பயம் என்றால் இந்த இயக்கத்திலும் லஞ்சம்,ஊழல் வந்துவிடுமோ என்றுதான்
ReplyDeleteஎன் தொப்புள்கொடி தமிழனை காக்க ஒரு வார்த்தை இவர் பேசியதுண்டா ? சர் விடுங்க நமது மீனவனுக்காகா ஒரு வார்த்தை ? பொய் வேலையப் பாருங்கப்பா !
ReplyDelete