சிகிச்சைக்கு பின்பு நினைவுத் திறமையை இழந்தாலும் நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போது தான் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார்.
இவர் சொல்வதை பார்த்தால் தமிழகம் ஏதோ கொள்ளைக்காரர்களிடம் இருந்தது போலவும் அதை ஜெயலலிதா அவர்கள் காப்பாற்ற வந்துள்ளது போலவும் தெரிகிறது. இவரது கூற்றுப்படி முந்தைய அரசு கொள்ளை கூட்டமாக இருந்ததை அப்படியே ஒத்து கொண்டாலும் , அந்த கொள்ளை கூட்டத்தலைவரின் கூப்பிட்ட குரலுக்கு ஒடியாடிய இந்த தன்மான சிங்கம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வி எழுகிறது.( இதே நடிகர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழகத்தை ஆண்டவானால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறியதாக எனக்கு ஞாபகம்.)
அவரது பேச்சை கேட்டு நடக்கவும் ,ஏன் உயிரையும் விட தயாராக இருக்கும் தமிழக ரசிகர்களிடம் தேர்தல் நேரத்தில் தமிழகம் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது அதை மீட்க வேண்டுமானால் ஜெயலலிதா அவர்களுக்கு ஒட்டு போடுமாறு வாய்ஸ் கொடுத்து இருக்கலாம் அல்லவா? அப்போது அதை செய்யாமல் இந்த தன்மான சிங்கம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது ?
இதையெல்லாம்
நடந்த சிகிச்சையால் மறந்து விட்டாரா அல்லது அரசியல் வாதிகள் போல இவரும் தமிழக மக்களை முட்டாள்களாகத்தான் கருதி கொண்டாரா? அல்லது நமக்கு இன்னும் நன்றாக நடிக்க வருகிறது என்று நடித்து நிறுபவித்து காட்டுகிறாரா?
//
ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார்//
தனக்காக உயிரையும் கொடுக்கும் ரசிகன், உண்ணாமலும் உறங்காமலும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவனுக்கு தன் சிகிச்சை நல்ல படியாக முடிந்துவிட்டது என்று செய்தி தெரிவிக்காமல் ஜெயலலிதாவிடம் தான் முதலில் பேச வேண்டும் என முடிவு செய்து, தொடர்பு கொண்டதாக தெரிவித்தார். இவர் அல்லவா நன்றியுள்ள நடிகன்.
அதனால்தான் இவரைப்போல இந்த உலகத்தில் காலத்திற்கு ஏற்றவாறு நடிக்கும் சூப்பர் ஸ்டார் யாருமே இவருக்கு இணையாக யாரும் வரமுடியாது என்று எல்லோரும் கருதுகிறார்களா?
நடிப்புக்காக இவர் நன்றாக இருக்க வேண்டும் என்று இவரை வாழ்த்துவோம்.
Adhu vera vaai, edhu naara Vaai
ReplyDeleteசூடான பதிவு ...
ReplyDeleteThere is a story about jews.when God wanted to punish the sinners with death, the crowd applauded.immediately God replied that he is awarding death to them also as they were silent spectators to the crime...Like that this stupid Rajini was also with Kalaignar everyday in all functions and tries to cheat Jaya with the same antics....poor Tamils run after these Bastards....Let God take care of him for his super acting..if at all such one exists....
ReplyDeleteசிங் சக் எப்பவும் கையில் எந்த அரசு வந்தாலும். பாவம்தான் இவர்கள் பிழைப்பு..
ReplyDeleteகலைஞர் டிவியில் தலைப்பு செய்தியே ரஜினி பேசியதுதான்
ReplyDeleteஅது சரி, ரெண்டு பெரும் எந்த மொழியில பெசிகிட்டாங்கன்னு தெரியுமா? அவரு, பிரகாஷ் ராஜ், முரளி, சவுந்தர்யா இவங்ககிட்டஎல்லாம் எந்த மொழியில் பேசினாரோ அதே மொழியில்தான்!! ரெண்டு பெரும் ஒரு ஊர்க்காரன்கப்பா... பேசட்டும் விடுங்க. மஞ்சள் துண்டுக்காரர், ரஜினி போகவில்லைஎன்றாலும், வற்ப்புறுத்தி வர வச்சிடுவார், ஏன்னா, ரஜினி ரசிகர்களின் ஆதரவு தேவை. ரஜினியும் வேண்டா வெறுப்பாக போக வேண்டித்தான் இருந்தது, ஆனாலும், விழாக்களில் கலந்து கொள்ள தாங்கள் வர்ப்புருத்தப் படுவதாக அஜித் பேசியபோது எழுந்து நின்று கைதட்டினாரே!! He always showed his displeasure.
ReplyDeleteநல்லதொரு பதிவு சகோ. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் !
ReplyDeleteரஜினிகாந்த ஒரு சந்தர்ப்பவாதி, கலைஞரும் இன்னொரு சந்தர்ப்பவாதி .. அப்படித்தான் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ?
rajini is a hero only in movies. he is a ordinary man just like us. during the past five years, whether he wishes or not, if the CM pressures him, he needs to be with him. At some times, it is evident that he is not happy with the govt how that treated him. so, on the day of the poll itself, he voted for admk and it was a news on papers the next day. even former CM asked him about this in a function and he went out of that in middle itself. Once he tried in 1996 by giving the voice, but afterwards he understood there is no diff between the both the parties. We should not expect him to bring changes. what he did and doing was just his surviving. So, there is no point in criticizing him
ReplyDelete- gurupaarvaigal.blogspot.com
ivan (rajini) irunthal enna seththal enna.... not used in eela tamil makkal.....
ReplyDeleteஉண்மையை சொன்ன உங்களை பாராட்டுகிறேன். ரஜினி மகா நடிகர்.
ReplyDeleteஎல்லோரையும் போல ரஜினியை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டாடாமல் உண்மையை எழுதியதற்கு நன்றி. ரஜினி ஒரு பிழைக்க தெரிந்த ஆள். அவ்வளவுதான்.
ReplyDeleteJegan, I agree ur comment.
DeleteINIMELAVATHU PURINTHU KOLLUNGAL
ReplyDeleteidu romba sirupillai thanama post.... innum valaranum thambi
ReplyDeleteThanks from a Goundamani fan
நடிப்பு வேறு நிஜம் வேறு . நெஞ்சிலோ தோளிலோ சுமக்கலாம்
ReplyDeleteநடிப்பு பிடித்தால் , ஓவராக தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தவறு
யாரையும். என்னைப் பொறுத்த வரையில் தைரியமாக இந்த பதிவு இட்ட
நீங்கள் தான் நிஜ வாழ்வில் ஹீரோ.
Swarani....very good.
Delete