வல்லரசாகப் போகும் கிரேட் இந்தியாவில் நடப்பதென்ன?
1.வல்லரசாகப் போகும் இந்தியாவில் வயிற்றுக்கு போடும் அரிசி விலை அதிகமில்லை ரூ.40 தான் ஆனால் செல்லுக்கு போடும் சிம்கார்டு இலவசம்தான்.
2. உடல் நலத்தையும் மனிதனையும் காக்கும் ஆம்புலன்ஸ், போலிஸ் வரும் வேகத்தை விட மனித உடல் நலத்தை கெடுக்கும் பிட்ஸா அதி விரைவில் வந்து விடும்.
3. படிக்க ஆசைப்படும் ஏழை வாங்கும் கடனுக்கு வட்டிவிகதம் ரொம்ப அதிகமில்லை 12% ஆனால் ஊர் சுற்றி வரப் ஆசைப்படும் பணக்காரன் வாங்கும் காருக்கு வட்டிவிகிதமோ ரொம்ப குறைச்சல் அல்ல 5 % தான். பாருங்கைய்யா வல்லரசாகப் போகும் எங்க பாரத நாட்டை.
4. ஐயா பாருங்கய்யா இதிகாச காலத்தில் மட்டுமல்ல இப்போது கூடத்தான் நாங்க செருப்புக்கும் மரியாதை தருவோம் அதனாலதான் காலுக்கு போடும்செருப்பை ஏசி ஷோருமிலேயும் ஆனால் உணவையும் , உணவுக்கு பயன்படும் காய்கறி பழங்களையையும் தெருவில்தான் போட்டு விற்போம்.
5. மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய தலைவர்கள் கஷ்டப்படாமல் அமர்ந்து விவாதிக்க வேண்டிய அசம்பளி கட்டிடங்கள் கோடிக்கணக்கான செலவில் ஓரே ஆண்டில் கட்டி முடிக்கப்படுவதும் ஆனால் கஷ்டப்படும் மக்கள் கஷ்டப்படாமல் இருக்க உதவும் ஃபப்ளிக் போக்குவரத்து துறை, பாலங்களுக்கான குறைந்த செலவில் தீட்டப்பட்ட திட்டங்களை முடிக்க பல ஆண்டுகள் எடுத்தாலும் முடிக்காமல் இருப்பது இந்த வல்லரசாகப் போகும் பாரத திருநாட்டில் மட்டுமே.
6. குடிக்கும் லெமன் ஜூஸ் ஆர்டிஃப்சியலிலும் (artificial flavors) ஆனால் பாத்திரம் கழுவும் லிக்வ்ட் ரியல்(Real) லெமனிலும் தாயாரிக்கப் படுகிறது. என்ன கொடுமை..
7. எல்லா இந்திய மக்களுக்கும் புகழ் பெற்றவர்களாக ஆக ஆசை ஆனால் புகழ் பெற வேண்டிய நல்ல வழிகளில் நடப்பதற்கு மட்டும் பிடிக்கவில்லை.
8. பணக்கார மில்லியனர்கள் ஏழைகளுக்கு சமுக தொண்டாற்றும் நிறுவனங்களுக்கு டொனேஷன் தருவதற்கு பதிலாக கிரிக்கெட் குழுக்களை அதிக விலைக்கு வாங்குவார்கள்.
9. ஊழைலை ஒழிக்க பேசி போராட வேண்டிய படித்த இளைய சமுதாயம் கிரிக்கெட் வெற்றி தோல்விகளைப் பற்றி பேசி சண்டை இட்டு கொள்கின்றனர்.
10. அதிகம் படிக்காத 45% மாணவர்கள் கோட்ட சிஸ்டத்தின் மூலம் நல்ல கல்லூரிகளில் நுழைவதும் நல்ல முறையில் படித்து மெரிட்டில் படித்து பாஸாகிய 90% மாணவர்கள் நுழைய முடியாத நல்ல சிஸ்டம் உலகின் வல்லரசாக போகும் இந்திய திருநாட்டில் மட்டுமே காணமுடியும்..
படித்து முடித்ததும் சிறிது சிந்தித்து பார்த்து, நேரம் கிடைத்தால் பதில் கருத்து கூறவும்.
மீண்டும் உங்களை அடுத்த பதிவில் வந்து சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுகிறேன்.இந்த பதிவை வந்து படிப்பவர்களும், வந்து படித்து கருத்து சொல்லப் போகும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.
GREAT INDIA...... THINK ABOUT IT!
1,2,3,4,6- என்னது காந்தியை சுட்டு கொன்னுட்டாங்களா??
ReplyDelete5,7,8,9 No comments.
10- இந்த மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பாடத் திட்டத்தில், 99.99% மதிப்பெண்கள் ஒரு மாணவன் எடுக்கலாம், ஆனால் அதை வைத்து அவன் 99.99% என்று சொல்லி விட முடியாது. படித்த வசதி வாய்ப்புள்ள வீட்டில் பிறந்த குழந்தைகள் நல்ல பள்ளிகளில் படிக்கும், பெற்றோர்களின் வழி காட்டுதல்கள் இருக்கும், கட்டமைப்பு வசதிகள் அதற்க்குக் கிடைக்கும், இதை விடுத்து ஏழை வீட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பள்ளியில் ஒழுங்கான ஆசிரியர் இல்லாமல் இருந்தால் புத்திசாலியான குழந்தையும் குறைந்த மதிபென்னே பெரும். முதலில் இந்த ஏற்றத் தாழ்வுகளை சரி சமமாக்கி விட்டு, உங்களுடைய இட ஒதுக்கீட்டையும் நீக்கி விடுங்கள். தப்பில்லை.
http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_05.html
ReplyDeleteஇட ஒதிக்கீடு பிரச்னைதான் இடிக்குது மத்தபடி எல்லாம் சூப்பர்...........
ReplyDeleteஅருமையான கருத்துக்கள்... நண்பருக்கு நன்றிகள்..
ReplyDelete7வது ஒப்புக்கொள்ள மாட்டேன். புகழ் பெறுவதற்கும் நல்ல வழியில் நடப்பதற்கும் என்ன தொடர்பு. 10வது படிக்க வாய்ப்பில்லாத கிராமப்புற வளர்ச்சியை கணக்கில் கொள்ள வேண்டும். சில விசயங்கள் உலகத்திற்கே பொதுவானவைதனே.
ReplyDelete7வது ஒப்புக்கொள்ள மாட்டேன். புகழ் பெறுவதற்கும் நல்ல வழியில் நடப்பதற்கும் என்ன தொடர்பு. 10வது படிக்க வாய்ப்பில்லாத கிராமப்புற வளர்ச்சியை கணக்கில் கொள்ள வேண்டும். சில விசயங்கள் உலகத்திற்கே பொதுவானவைதனே.
ReplyDelete