Sunday, June 19, 2011

வார்த்தைகளால் அல்ல தன் செயல்களால் பாசம் காட்டும் தந்தைகள்
Click picture to see Large size.

தந்தையே ஆண்டுக்கு ஒரு முறை
நீ என்னை தட்டிக் கொடுத்தால்
அந்த ஆண்டு முழுவதும்
எனக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடுகிறது.
ஆனால்
நீ என்னை ஆண்டு முழுவதும்
தட்டிக் கொடுத்தால்
எனக்கு அனைத்து உலகத்தையும்
ஆளும் சக்தி வந்துவிடும்.


கவிதை எழுதும் ஆசையில் நான் தந்தையர் தினத்திற்காக கிறுக்கியது




அப்பாவை பற்றி குழந்தைகள் சொன்னது....

எப்படி எப்படி எல்லாமோ
தன் பாசம் உணர்த்துவாள் அம்மா
ஆனால்
ஒரேயொரு கை அழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா
(இதை சொன்னது கனிமொழியாக இருக்குமோ)
 என் முன்னால் சொன்னதில்லை
ஆனால்
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்
என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக் கொண்டதை
(ஸ்டாலினாக இருக்குமோ)
அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை
உடனே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பா முகம் வாடும் போது
(ரஜினிகாந்தின் குழந்தைகளாக இருக்குமோ)
 கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால்
தான் கடவுள் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ?
(அம்பானியின் குழந்தைகளாக இருக்குமோ)
சிறுவயதில் என் கைப்பிடித்து
நடை பயில சொல்லிக் கொடுத்த அப்பா
என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்து இருப்பார்?
(                                                                                                                                 )
லேசாக கால் தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று
நான் தடுமாறிய போதும்
பதறாமல் இருக்கிறார் மீளா துயீலில்...
(                                                                                             )


அம்மா செல்லமா
அப்பா செல்லம்மா என
கேட்ட போதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன்
அம்மா செல்லமான அப்பா செல்லம் என
ஆனால் இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்?
(                                                                                                                                     )
 நானும் காட்டியதில்லை அவரும்
காட்டியதில்லை எங்கள் பாசத்தை..
இருந்தும் காட்டி கொடுத்த 
கண்ணிரை துடைக்க இன்றும் அப்பாவும் இல்லை.
(                                                                                                          )
அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...
(                                                                                       )
நான் என்றோ நெட்டில் படித்து சேமித்து வைத்தது. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை இருந்தாலும் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.அதில் நான் சில மாற்றங்கள் செய்து என்வழியில் தந்துள்ளேன்.


 உங்கள் தந்தைகளைப் பற்றி நீங்கள் நினைப்பதை பின்னுட்டமாக நேரம் கிடைத்தால் சொல்லுங்கள் நன்றி










அப்பாவை பற்றி குழந்தைகள் சொன்னது....இந்த பதிவு. விரைவில் அடுத்த பதிவு, அப்பாவை பற்றி குழந்தைகள் நினைப்பது படிக்க தவறாதிகள்.

2 comments:

  1. அம்மா கிட்ட இருந்து பாசம் நிறைகுடமாய் கிடைக்கும்.... வயிறார உணவு கிடைக்கும் அன்பான அணைப்பு கிடைக்கும்... ஆனால் கண்டிப்பும் அறிவுரையும் நல்ல தந்தையால் கொடுக்கமுடியும்...

    பத்து திங்கள் சுமந்த தாய்.... ஆனால் அதன்பின் பிள்ளை ஸ்திரமாக காலை ஊன்றி தனக்கென வாழ்க்கை அமைத்துக்கொள்ளும் வரை சுமப்பது தந்தையே.....

    நான் தந்தையின் அன்பை அறிந்தவள் அல்ல. ஆனால் என் தாய் மிக்க கண்டிப்பானவர்.... என் தாய் தந்தையுமாக தானும் ஒழுக்கமாய் வாழ்ந்து எங்களுக்கும் நல்ல கல்வியும் ஒழுக்கமும் நல்ல வாழ்க்கை துணையையும் அருமையான வேலையும் அமைத்து தந்தவர்... எங்கள் பிள்ளைகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்....

    தந்தையின் கம்பீரம் பிள்ளைகளிடத்திலும் காணலாம்....

    தந்தையர் தின நல் வாழ்த்துகள் சகோதரரே....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.