உலக ராணுவ பலத்தில் இந்தியாவின் நிலமை என்ன?
நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோதம் காட்டி வருகிறது  பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு  போர் தொடுத்தது. அதன் பின் இந்தியாவுடன் எந்த நேர்முக போரிலும் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கிறது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது.
அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி வலுத்தனம் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடி அழிக்கிறது. மேலும்  எல்லை பகுதிகளிலும் ரோடுகளை போட்டு ராணுவ முகாம்களையும் வலுப்படுத்தி வருகிறது. இதுநாள் வரை இந்தியாவின் வட  பகுதியில் மட்டுமே வாலாட்டி வந்த சீனா இப்போது தென் பகுதியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலும்  சீனா இப்போது  அமைதியாக அங்கு ஆழமாக காலூன்றி வருகிறது. இதை நாம் அமைதியாக பார்த்து கொண்டு இருப்பது நல்லது அல்ல.
இந்தியாவிற்கு உடனடியாக எந்தவித ஆபத்து இல்லை என்றாலும் நாம் சும்மா அப்படியே இருந்து விடக்கூடாது.பாகிஸ்தான் மற்றும்  சீனாவின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ளும் வகையில் நமது ராணுவம் பலப்படுத்தப்படவேண்டும். அதே நேரத்தில் அரசு துறைகளில்  நடக்கும் ஊழல்கள் போன்று ராணுவத்துறையிலும் ஊழல் போன்றவை நடக்காமல் பார்த்து கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
உலகின் ராணுவ பலத்தில் நம் இந்தியா எந்த ரேங்கில் இருக்கிறது என்றும். நம் நாட்டுக்கும் நமது  அண்டைய நாடுகளுக்கும் உள்ள பலத்தையும் கிழே காண்போம்.
உலகின் ராணுவ பலம் வாய்ந்த முதல் 10 நாடுகள் விபரம் :
ரேங்க்    நாடுகள்
   1             அமெரிக்கா
   2             ரஷ்யா
   3             சீனா
   4             இந்தியா
   5            யுனைடெட் கிங்டம் (UK)
  6         துருக்கி
  7        செளத் கொரியா
  8         பிரான்ஸ்
 9         ஜப்பான்
 10      இஸ்ரேல்
ராணுவப்பலம் : நம் நாட்டுக்கும் சைனாவுக்கும் உள்ள  வித்தியாசங்கள் கிழே தரப்பட்டுள்ளன.
|      நாடுகள் |       இந்தியா |      சைனா | 
|         ரேங்க் |           4 |         3 | 
| Total   Population | 1,189,172,906 | 1,336,718,015 | 
| Military   Manpower Available | 615,201,057 | 749,610,775 | 
| Fit   for Military Service | 489,571,520 | 618,588,627 | 
| Reaching   Military Age Yearly | 22,896,956 | 19,538,534 | 
| Active   Military Personnel | 1,325,000 | 2,285,000 | 
| Active   Military Reserves | 1,747,000 | 800,000 | 
| Total   Aircraft | 2,462 | 4,092 | 
| Total   Land-Based Weapons | 75,191 | 22,795 | 
| Total   Naval Units | 175 | 562 | 
| Towed   Artillery | 10,000 | 2,950 | 
| Merchant   Marine Strength | 324 | 2,010 | 
| Major   Ports and Terminals | 7 | 8 | 
| Aircraft   Carriers | 1 | 0 | 
| Destroyers | 8 | 26 | 
| Frigates | 12 | 58 | 
| Submarines | 15 | 55 | 
| Patrol   Coastal Craft | 31 | 937 | 
| Mine   Warfare Craft | 8 | 391 | 
| Amphibious   Operations Craft | 20 | 544 | 
| Defense   Budget / Expenditure | $36,030,000,000 | $100,000,000,000 | 
| Foreign   Reserves | $284,100,000,000 | $2,662,000,000,000 | 
| Purchasing   Power | $4,060,000,000,000 | $10,090,000,000,000 | 
| Oil   Production | 878,700 bbl | 3,991,000   bbl | 
| Oil   Consumption | 2,980,000   bbl | 8,200,000   bbl | 
| Proven   Oil Reserves | 5,800,000,000   bbl | 20,350,000,000   bbl | 
| Total   Labor Force | 478,300,000 | 780,000,000 | 
| Roadway   Coverage | 3,320,410 km | 3,860,800 km | 
| Railway   Coverage | 63,974 km | 86,000 km | 
| Waterway   Coverage | 14,500 km | 110,000 km | 
| Coastline   Coverage | 7,000 km | 14,500 km | 
| Major   Serviceable Airports | 352 | 502 | 
| Square   Land Area | 3,287,263 km | 9,596,961 km | 
ராணுவப்பலம் : நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள  வித்தியாசங்கள் கிழே தரப்பட்டுள்ளன.
|         நாடுகள் |           இந்தியா    |       பாகிஸ்தான் | 
|                  RANK |              4     |            15     | 
| Total   Population | 1,189,172,906 | 187,342,721 | 
| Military   Manpower Available | 615,201,057 | 93,351,401 | 
| Fit   for Military Service | 489,571,520 | 75,326,989 | 
| Reaching   Military Age Yearly | 22,896,956 | 4,342,629 | 
| Active   Military Personnel | 1,325,000 | 617,000 | 
| Active   Military Reserves | 1,747,000 | 515,500 | 
| Total   Aircraft | 2,462 | 1,414 | 
| Total   Land-Based Weapons | 75,191 | 16,461 | 
| Total   Naval Units | 175 | 11 | 
| Towed   Artillery | 10,000 | 1,806 | 
| Merchant   Marine Strength | 324 | 10 | 
| Major   Ports and Terminals | 7 | 2 | 
| Aircraft   Carriers | 1 | 0 | 
| Destroyers | 8 | 1 | 
| Frigates | 12 | 11 | 
| Submarines | 15 | 5 | 
| Patrol   Coastal Craft | 31 | 15 | 
| Mine   Warfare Craft | 8 | 4 | 
| Amphibious   Operations Craft | 20 | 1 | 
| Defense   Budget / Expenditure | $36,030,000,000 | $6,410,000,000 | 
| Foreign   Reserves | $284,100,000,000 | $16,100,000,000 | 
| Purchasing   Power | $4,060,000,000,000 | $464,900,000,000 | 
| Oil   Production | 878,700 bbl | 59,140 bbl | 
| Oil   Consumption | 2,980,000   bbl | 373,000 bbl | 
| Proven   Oil Reserves | 5,800,000,000   bbl | 436,200,000   bbl | 
| Total   Labor Force | 478,300,000 | 55,770,000 | 
| Roadway   Coverage | 3,320,410 km | 260,760 km | 
| Railway   Coverage | 63,974 km | 7,791 km | 
| Waterway   Coverage | 14,500 km | 25,220 km | 
| Coastline   Coverage | 7,000 km | 1,046 km | 
| Major   Serviceable Airports | 352 | 148 | 
| Square   Land Area | 3,287,263 km | 796,095 km | 
இந்திய ராணுவ பலத்தில் நம் தமிழக மக்களை சேர்த்து இருக்க மாட்டார்கள் என கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் ரஜினியின் எந்திரப் படையிலும் சேர்ந்து இருப்பாதால் நம் இந்தியராணுவத்தில் சேரமுடியவில்லை. அதானால் தான் நாம் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ முடியாமல் போய்விட்டோம்.
நான் மேலே கொடுத்த புள்ளி விபரம் வலைத்தளங்கள் மூலம் திரட்டபட்டது. அதில் தவறுகள் ஏதும் இருந்தால்  http://avargal-unmaigal.blogspot.com  பொறுப்பு அல்ல.
The Coming China-India Conflict: Is War Inevitable? நேரம் இருந்தால் இதையும் படியுங்கள்
நன்றி.......





 
 
 
 Posts
Posts
 
 
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.