Saturday, November 5, 2011


உடன்பிறப்பு பெயரில் தினமலர் எழுதிய போலிகடிதம்




தோல்வியில் துவண்டு கிடக்கும் திமுக கட்சியில் குழப்பம் விளைவிக்க நாரதர் வேலையில் ஈடுபட்டிருக்கிறது தினமலர். திமுக  உறுப்பினர் எழுதுவது போல தானே ஒரு கடிதம் எழுதி அதை செய்தியாக போட்டு இந்த நாரதர் வேலையில் இறங்கியிருக்கிறது. எனக்கு ஒரு கேள்வி அதை தினமலர் ஆசிரியர் முடிந்தால் விளக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கிறேன். தினமலர் திமுக கட்சியின் உறுப்பினரா அல்லது இந்த செய்தியை எழுதிய நிருபர் திமுக உறுப்பினாரா என்று? இதற்கு பதில் ஆமாம் என்றால் இந்த செய்தி உண்மையானது என்று கருதுகிறேன். இல்லை என்றால் இவர்கள் எழுதிய கடிதம் எப்படி திமுக உறுப்பினர் எழுதிய கடிதமாக கருதமுடியும்? இது ஒரு வகையான போர்ஜரிதானே? இல்லையா


எனக்கு ஓன்றும் புரியவில்லை ஒரு காலத்தில் மிக தரமான பத்திரிகையாக இருந்த தினமலர் ஏன் இப்பொழுது தரம் குறைந்து போய்கொண்டிருக்கிறது? ஏன் நடுநிலமை தவறுகிறது ?

தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொண்டிருக்கிறது தினமலர் என்பதில் ஏதும் அதிசயமில்லை. இதிகாசத்தில் வந்த நாரதரின் கலகம் நன்மையில் முடியும் ஆனால் தினமலரின் கலகம் எதில் முடியும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

இதை நான் எழுதுவதால் நான் கலைஞரை ஆதரிக்கின்றேன் என்று அர்த்தமில்லை. ஒரு பத்தரிக்கை கண்முன்னால் தரம் தாழ்ந்து போகின்றதே என்ற ஆதங்கத்தில்தான் எழுதுகிறேன்

3 comments:

  1. தினமலர் என்னிக்கு தரமாக இருந்தது..???? உங்கள் பார்வை மாறியிருக்கிறது என்று தான் அர்த்தமாகிறது !!!

    ReplyDelete
  2. உங்கள் கருத்து சரியானதே
    பெயரைப்போட்டே எழுதி இருக்கலாம்
    மா நில அளவில் கட்சி விவரம் இருப்பதால்
    சமீபத்தில் விலகியவர் கூட இருக்கலாமோ
    பெயரிடாமல் வெளியிடச் சொல்லி இருக்கலாமோ

    ReplyDelete
  3. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவா செயல் பட்டு கொண்டிருக்கிறது தினமலர் என்ற தர'மான பத்திரிக்கை, எங்கே போயி முடியுமோ தெரியவில்லை...!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.