Friday, November 4, 2011


அமெரிக்கனுக்கும் அமெரிக்க தமிழனுக்கும் அப்படி என்னய்யா வேறுபாடு?



தமிழன் கருப்பு ,அமெரிக்கன் வெள்ளை
யோவ் இது எங்களுக்கு தெரியாதா...
ஒ அப்படியா அப்ப இன்னொன்று சொல்லுறேன் கேட்டுக்க
தமிழன் புத்திசாலி அமெரிக்கன் முட்டாள்
இதை சொல்லவா ஒரு பதிவு தூஊஊஊ
நான் சொல்ல வரதுக்குள்ள ஏம்மா முந்திரிக்கொட்டை மாதிரி முந்துற நான் என்ன சொல்லவரேன்னா

இப்படித்தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொறுமையா நான் சொல்வதை கவனமாக மேலே படியுங்கள் நிஜமாய் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியும்.


1. கருத்து (Opinion )
தமிழன் : கருத்தை நேரடியாக கூறாமல் சுத்தி வளைத்து வளைத்து பேசிக் கொண்டே இருப்பான். அதுவும் கருத்து வேறுபாடி இருந்தால் கேட்கவே வேண்டாம் (நான் தமிழனை பற்றி தான் சொன்னேன் நம்ம பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றி ஏதும் சொல்லவில்லை)

அமெரிக்கன் : நேரடியாக கருத்தை கூறிவிடுவான்



2. வாழ்க்கை  முறை (Way of Life) 

தமிழன் : குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் என்று சேர்ந்து இருக்க விரும்புவான். அடுத்தவன் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவான் கேட்காமலே...அடுத்தவன் குடும்ப விகாரங்களில் மூக்கை நுழைப்பான்.(என்ன நான் கலைஞர் குடும்பத்தை பற்றி சொல்லுறேனா???)

அமெரிக்கன் : சுயநலவாதி. தான் ,தன் வாழ்க்கை, தன் பணம் என்று எல்லாவற்றிலும் சுயநலம் கொண்டவன்.



3 நேரம்தவறாமை ( Punctuality )

தமிழனுக்கு நேரம் தவறி வருவது செய்வது போன்ற செயல்களை மாற்ற முடியாது. காலம் தவறாமை என்பது அவனால் கடைபிடிக்க முடியாது. தமிழன் வருவது In Time. (தமிழன் தான் லேட்டாக எங்கேயும் போவான் ஆனால் அவன் போகும் ரயில் பஸ் விமானம் மட்டும் கரெக்ட்டா வரணும்முனு எதிர்பார்ப்பான் அது எப்டிங்க முடியும் அதை ஓட்டி வருவதும் தமிழன் தான் என்பதை ஏனோ மறந்து விடுகிறான்)

அமெரிக்கன் : சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் இருப்பான். அமெரிக்கன் வருவது On Time.



4. தொடர்புகள் (Contacts ) :

தமிழன் :  தன் உறவினர்கள் , நண்பர்கள், அவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் அந்த உறவினர்களுக்கு தெரிந்தவர்கள். சொந்த சாதி, மத ,ஊர்காரர்கள், நாட்டினர். போன்ற எல்லோரும். (இந்த மாதிரி நாம் தொடர்பு கொள்வதால்தான் பிஸினஸ் வளர்ச்சியும், வேலை இழந்தால் நமக்கு தெரிந்த தொடர்புகள் மூலம் எளிதில் கிடைத்து விடுகின்றன) என்ன நான் பேஸ்புக்கில் வரும் பெண்களைப் பற்றி பேசுகிறேனா? அப்படி எல்லாம் இல்லைங்க.. இந்த வம்புக்கு நான் வரலைங்க)

அமெரிக்கன் : தன் மனைவி , பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும்


5. வரிசை (Queue when Waiting )

தமிழன் : அப்படின்னா என்ன? (தமிழன் ஒரு இடத்தில் மட்டும் வரிசையாக போவான்  ஒட்டுபோட(ஏமாளியாக) மட்டும், இன்னொன்ரும் சொல்ல மறந்துட்டேன் வரிசையாக பொண்ணு பார்க்க போவான்)

அமெரிக்கன் : தன் முறைக்காக வரிசையில் நின்று காத்து இருத்தல்


6 . வார இறுதி நாள் நடவடிக்கை  : Weekend on the Road


தமிழன் : மாலுக்கு(Mall) குடும்பத்துடன் செல்லுதல்.(மாலுக்கு போகும் போது சும்மா போகமாட்டான் வீட்டில் இருந்து சாப்பாடு கட்டிகிட்டு போவான்) ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருத்தல்

அமெரிக்கன் : அமைதியாக சந்தோஷத்துடன் ரிலாக்ஸாக இருத்தல்



7.  பார்ட்டி (விழா) Party :


தமிழன் :  விழா நாயகனோட சேர்ந்து தனக்கு தெரிந்த தெரியாத நபர்களுடன் ஆட்டம் போடுதல்

அமெரிக்கன் : தனக்கு தெரிந்த நபர்களுடன் மட்டும் சேர்ந்து உட்கார்ந்து மகிழ்வுருதல்


8. ஹோட்டலில் :In the restaurant


தமிழன் : அருகில் யார் இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட சட்டை பண்ணாமல் கத்தி பேசி, சிரித்து ,ஆராவரித்து மகிழ்வுறுதல்.

அமெரிக்கன் : மெதுவாக சிரித்து பேசி மகிழ்தல்


9. சுற்றுலா Travel :


தமிழன் : இயற்கை காட்சிகளுக்கு முன்பு நின்று போட்டோ எடுத்தல், இயற்கை காட்சிகளை கேமரா மூலம் பார்த்து விடாமல் படம் எடுத்தல் ( தப்பி தவறி அவன் வீட்டிற்கு போனால் அவன் எடுத்த படங்கள் அனைத்தையும் நமக்கு காண்பிக்காமல் காப்பிதண்ணீ தரமாட்டான்.)

அமெரிக்கன். இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்து அனுபவித்தல்


10.  பிரச்சனைகளை கையாளுதல் :(Handling of Problems)


தமிழன் ; பிரச்சனைகளை நேர் கொள்ளாமல் அதிலிருந்து விலகி வேறு வழியில் செல்லுதல்( நான் ஒன்னும் பரிதி இளம்வழுதியை ப்ற்றி ஒன்னும் கூறவில்லை)

அமெரிக்கன் : முயற்சிகள் செய்து பிரச்சனைகளை சமாளித்தல்

11.  போக்குவரத்து (Transportation )


தமிழன் : முன்பு வசதியில்லை அதனால் சைக்கிள் ஒட்டினான் ஆனால் இப்போது வசதிகள் வந்துவிட்டதால் எப்போதும் கார்தான்.

அமெரிக்கன் : முன்பு கார் ஒட்டினான். ஆனால் உடல் நலம், சுற்றுபுற சுழ்நிலை பாதுகாக்க இப்போது சைக்கிள் ஒட்டுகிறான் ( இப்போது வசதியில்லாதாலும் சைக்கில் ஒட்டுகிறான்)


12. வயதான கால வாழ்க்கை : (Elderly in day-to-day life)


தமிழன் : வயதான காலத்தில் தனிமையில் இருப்பதில்லை பேரக் குழந்தைகளுக்கு பேபி சிட்டிங் செய்வதில் காலம் போய்விடும்.

அமெரிக்கன்: தான் வளர்க்கும் செல்ல பிராணிகள் தான் துணை

13. காலமும் மனநிலையும் (Moods and Weather )


தமிழன்: மழையோ வெயிலோ பனியோ எல்லா நாளும் இவனுக்கு ஓன்றுதான்.

அமெரிக்கன் : மழை அல்லது பனி இவனுக்கு சுமை, வலி ( Rain is Pain ) பாருக்கு போக முடியாம மனைவி முஞ்சிய பாத்துகிட்டு இருக்கனும். கொடுமைடா கொடுமை.....

14.  மேனேஜர் (Boss)


தமிழன் :  பாஸ் என்பவர் அவர்களது குழுவின்  கடவுள்

அமெரிக்கன் : பாஸ் அவர்களின் குழுவில் ஒரு உறுப்பினர் மட்டும் தான்.



எனக்கு வந்த ஆங்கில இமெய்யிலை எனது வழியில் மாற்றி அதற்கு ஏற்றவாறு கூகுளில் போட்டோவை எடுத்து அந்த போட்டோக்களையும் எனது வழியில் ரீமிக்ஸ் பண்ணி வழங்கியுள்ளேன்.

11 comments:

  1. தமிழன்னா தமிழன்தான். எங்கேயும், எப்போதும் தன்னிலை மாறாத மறத்தமிழன் வாழ்க.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாயிருக்கு. எதார்த்தம்.

    ReplyDelete
  3. அமெரிக்கன் படித்து சிரித்துவிட்டு மறந்துவிடுவான்.

    தமிழன் மதுரை ஏர்போர்ட்டிலேயே காத்திருப்பான்

    ReplyDelete
  4. பாராட்டுவதற்குத்தான்

    ReplyDelete
  5. நகைச்சுவை என்பதால் பெரிய கருத்து இல்லை, ஆனால் இந்த நேரம் தவறாமை என்பது கொஞ்சம் அதிகப் படியாக வர்ணிக்க படுகிறதோ என்ற எண்ணம் உள்ளது, பள்ளியில் இருந்து அழைத்து வர அனைத்து பெற்றோர்களும் நேரத்திற்கு சென்று விடுகிறார்களே என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை

    ReplyDelete
  6. கலக்கிடிங்க ...

    ReplyDelete
  7. ஒப்பீடு மிகச் சரியாகவே இருக்கிறது
    அருமையான பதிவைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சிரிக்கவைத்தாலும் சிந்திக்கவேண்டிய பதிவு....

    ReplyDelete
  9. ரொம்ப யதார்த்தமா இருக்கு...!!!

    ReplyDelete
  10. நல்லாவே சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  11. இதில நீங்க சொல்லி இருக்கிற எல்லாமே ரொம்ப கரெக்டா அப்ளை ஆகுங்க..

    எப்படி இப்படி?..முடியல..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.