எனக்கு பிடித்த நாலுவரி கதை அது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் (250 - வது பதிவு)
நான் நெட்டில் உலாவிய போது என் கண்ணில் பட்ட மனதை நெகிழவைத்த சிறுகதை இது. அது உங்களுக்காக
ஒரு சின்ன பொண்ணும் அந்த பெண்ணின் தந்தையும் மிக குறுகலான பாலத்தை கடக்க ஆரம்பித்தார்கள்.பாலத்தை கடக்கும் போது சிறிதளவு பயந்த தந்தை அந்த குழந்தையிடம் சொன்னார் என் கையை கெட்டியாக பிடித்து கொள் இல்லையென்றால் நீ தவறி கிழே விழுந்து விடப் போகிறாய் என்று சொன்னார்.
அதற்கு அந்த குழந்தை சொன்னது இல்லையப்பா நீ என் கையை பிடித்து கொள் என்று.
உடனே தந்தை கேட்டார் யார் கை யார் பிடித்தால் என்ன ?அதில் என்ன வேறுபாடு
அதற்கு அந்த பெண் குழந்தை சொன்னது அப்பா நான் உன் கையை பிடித்து வரும் போது எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான் உன் கையை விடுவித்து உன்னை போக விட்டு விடுவேன். அதே நேரத்தில் நீ என் கையை பிடித்து செல்லும் போது எனக்கு ஏதும் ஏற்பட்டால் நீ எப்போதும் என் கையைவிட்டு விட்டு போகமாட்டாய் என்று எனக்கு உறுதியாக தெரியும் அதனால நீயே என் கையை கெட்டியாக பிடித்து கொள் என்று கூறினாள் அந்த சின்ன பெண்
ஏதோ பொழுது போக்குகாக பதிவுகள் போட ஆரம்பித்தேன் இதோ அதோன்னு 250 வது பதிவு போட்டாச்சு. ஒவ்வொரு வாரமும் கடையை மூடிவிட வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் மறுபடியும் ஏதாவது பதிவு போட்டு கடையை திறந்து விடுகிறேன்.நான் எப்போது கடையை மூடுவேன் என்பது எனக்கே தெரியாததால் இதுவரை வந்து படித்து ரசித்து பின்னூட்டங்கள் இட்டும் ஃபலோவராக சேர்ந்து எனக்கு இதுவரை ஆதரவு காட்டிய அனைவருக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்
எப்போதும் நான் நினைப்பதும் சொல்வதும் வாழ்க வளமுடன் & மதங்களால் அல்ல மனங்களால் நாம் எப்போதும் ஒன்றாக இணைவோம் என்பதுதான். நன்றி
வாழ்த்துகள் பிடிங்க முதல்ல. ( ட்ரீட் எப்ப ?.)
ReplyDeleteநமக்காகவா எழுதுறோம்?.. ஏதோ நம்மளால முடிஞ்சளவு அடுத்தவங்கள நிம்மதி இல்லாம பாத்துகிறோம் . அவ்வளவுதான். ( திட்டாதீங்க )..
ReplyDeleteதொடர்ந்து கத சொல்லுங்க..
ரசிப்போம்.. 500 க்கும் வருவோம்ல..
சாந்தி மேடம் எனது வலைதளத்திற்கு முதலாவது ஃப்லோவராக வந்தது சேர்ந்தது மட்டுமல்லாமல் எனது 250 வது பதிவிற்கும் முதலாவதாக வந்து வாழ்த்து சொன்னதற்கும் ஆதரித்தற்கும் மிக நன்றி ட்ரிட்தானே உங்க ஊரில் உள்ள உயர்தரமான ஹோட்டலுக்கு சென்று வேண்டியதை சாப்பிட்டு என் பெயரை சொல்லிவிட்டு போங்கள். யாரும் பணம் கேட்கமாட்டார்கள்
ReplyDelete250க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅந்த சிறுகதை சூப்பர்.
நம்ம தளத்தில்:
நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?
தொடர்ந்து கத சொல்லுங்க..
ReplyDeleteமகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... கடையை மூடாமல் இருந்தால் இன்னும் மகிழ்வுடன் இருப்போம்
ReplyDeleteCongrats:-)))
ReplyDeleteகுறுங்கதை அருமை.
ReplyDelete250-க்கு வாழ்த்துக்கள்.
கடையை மூடாமல் இருக்க வேண்டுகிறோம்.
இல்லையேல் சார் கடைய எப்ப தொறப்பீங்கன்னு போன் வரும்!ஹாஹா
250-க்கு வாழ்த்துக்கள் நல்ல கருத்துள்ள சிறு கதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@தமிழ்வாசி
ReplyDelete@போளுர் தயாநிதி
@ரா.செழியன் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி.
@சூர்யஜீவா சார் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் அன்பான வேண்டு கோளுக்கும் மிக நன்றி.
ReplyDelete@சூர்யஜீவா சார் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் அன்பான வேண்டு கோளுக்கும் மிக நன்றி.
ReplyDelete@ஆனந்தி உங்களின் வாழ்த்துக்கு நன்றி குறிஞ்சிமலர் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும் என்பார்கள் அது போலதான் உங்களின் வருகையும். உங்களின் கமெண்ட்ஸ் இல்லாமல் இந்த பதிவுலகமே நீர் இல்லாமல் வாடிய பயிர் போல இருக்கிறது. மீண்டும் உங்களின் வருகையை எதிர்பார்க்கும் ஒரு பதிவாளன்
ReplyDelete@கோகுல் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி. இப்போதைக்கு கடையை மூடும் எண்ணம் இல்லை ஆனாலும் சில சமயங்களில் ஒரு வித மனசோர்வு வரும் போது அப்படி நினைக்க தோன்றுகிறது.
ReplyDelete@லஷ்மி அம்மா உங்களின் வாழ்த்துக்கு நன்றி. இது என் சொந்த கதை அல்ல நெட்டில் நான் படித்த ஆங்கிலதையை நான் தமிழில் வழங்கி இருக்கிறேன். அந்த கதை என் குழந்தை என்னிடம் கூருவது போல இருந்தது. அது எனக்கும் பிடித்து இருந்தது.
ReplyDelete250 க்கு வாழ்த்துக்கள், மென்மேலும் தொடருங்கள்.
ReplyDeletehow great you are! reaching 250th issue congrates from punnagai blog
ReplyDelete