Tuesday, November 8, 2011



கூடங்குளம் பற்றி ரஜினி சொன்ன கருத்து ;

கூடங்குளம் பற்றி ஒவ்வொருத்தரும் ஒரு கருத்து கொண்டு இருக்கிறார்கள்.அதற்கு ஆதரவு எந்தளவு இருக்கோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. எல்லார் சொன்னவைகளை படித்thaதும் எனக்கு மிக குழப்பமாக இருக்கிறது. நான் எல்லாம் இங்கு பதிவு போடும் பதிவாளர்கள் போல உள்ள "அறிவு ஜீவி" அல்ல. ரொம்ப சுமரான ஆள்தான். அதனால் யாரிடம் கேட்டால் எனது குழப்பம் தீரும் என்று நினைத்த போது என் நினைவுக்கு வந்தவர் "ரஜினி" மட்டும்தான். நானோ இன்று ஆபிஸுக்கு மட்டம் அதனால் சென்னைக்கு ஒரு போண் போட்டு ரஜினியிடம் கேட்டு விடலாம் அவர்தான் சுருக்கமாக அதே நேரத்தில் கிண்டலாகவும் பதில் தருவார் என்பதால் அவருக்கு ஒரு போன் போட்டேன் இந்த நேரத்தில் ( இரவு 10.30) போட்டால் தொந்தரவு செய்கிறோம் என்று நினைத்து கொள்வாரோ என்று மனதில் தயக்கம். இருந்த போதிலும் போன் போட்டேன் இல்லையென்றால் எனக்கு அதன் பிறகு நேரம் கிடைக்காது. போண் ரிங் சத்தம்போய் கொண்டிருந்தது. இறுதியில் வேலைக்காரன் வந்து போன் எடுத்தான் அவனிடம் ரஜினி இருக்கிறார என்ரு கேட்டேன். அதற்கு அவர் இப்போதுதான் தூங்க போய்க் கொண்டிருக்கிறார் என்றான். உடனே நான் அமெரிக்காவில் இருந்து பேசுகிறேன் அவரிடம் கொடு என்றேன். வேலைக்காரன் போனை ரஜினியிடம் கொடுத்தார். என் குரலை கேட்டதும் என்னப்பா ஆளையே ரொம்ப நாளா காணும் எப்படி இருகிறாய் என்று விசாரித்தார். நானும் பதில் அளித்து விட்டு அவர் குடும்பம் பற்றி பேசிவிட்டு நாட்டு நடப்பை பற்றி பேச ஆரம்பித்தோம். அப்போது நான் அவரிடம் கூடங்குளம் பற்றி கேட்க ஆரம்பித்தேன்.

அவரும் சீரியஸாக பதில் சொல்லி வந்தார். அப்போது நான் கேட்டேன் அதை பாதுகாப்பாக கட்டி இருக்கிறார்களா அதற்கு தேவையான பாதுகாப்பை கொடுத்து இருக்கிறாரகளா விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை தடுக்க என்ன ஏற்பாடுகள் எடுத்திருக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நன்றாகத்தான் கட்டியிருக்கிறார்கள் ஆனால் விபத்து ஏற்பாட்டால் அதை தடுப்பதில் மட்டும் ஒரே ஒரு கோட்டைவிட்டு உள்ளார்கள் என்று சொன்னார்,

நானும் அது என்ன என்று கேட்டேன் அப்போது அவர் சொன்னார் நம்ம  ரஜினிகாந்த் அவர்களுக்கு அங்கு வீடு அமைத்து கொடுத்து இருந்தால் என்ன பிரச்சனை வந்தாலும் அதை அவர் ஒரு கையாலே தடுத்து காப்பாற்றி விடுவார் என்று சொல்லி சிரித்தார்.

என்ன மக்களே கொஞ்சம் குழம்பி போய்விட்டீர்களா? நான் இதுவரை பேசி கொண்டிருந்தது என் கல்லூரி தோழி ரஜினி என்பவரிடம் அவர் எப்போதும் சிரிக்க சிரிக்க பேசுவார். அவரை பிடிப்பதுதான் கடினம் பிடித்தால் நேரம் போவதே தெரியாது.

ஹேய் என்ன அடிக்க கல்லை தூக்கிறீங்களா? நான் பாவம்பா ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதுறேன். பிடித்தால் மீண்டும் வாருங்கள். பிடிக்கவில்லை என்றால் வந்தற்கு நன்றி மீண்டும் வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்.

 
 
இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டும் போடப்பட்டுள்ளது. சிரியஸான அணுமின் நிலைய பதிவுக்கு  இங்கே செல்லுங்கள் நம் சக பதிவாளர் Thekkikattan(தெகாகூடங்குளம் பற்றி மிகமிக அரூமையான பதிவை கொடுத்துள்ளார் .


அப்துல்கலாம் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அல்லது தங்களுக்கு உள்ள சந்தேகங்களை அவருக்கு இமெயில் அனுப்பலாம்

 

டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் முகவரி:


டாக்டர் அப்துல் கலாமின் கட்டுரைகள் மற்றும் கூடங்குளம் தொடர்பான செய்திகளைப் படிக்க
:



அல்லது
கூடங்குளம் அணுமின் தளத்தை ஆதரிக்கும் நமது தமிழ் தினபத்திரிக்கையான தினமலருக்கு சென்று அது சம்பந்தமான செய்திகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

5 comments:

  1. நீங்கள் சொல்வது சரிதான்
    போயஸ் கார்டனில் போட்டிருந்தால் எல்லா தீமைகளையும்அவரே
    சமாளித்து இருப்பார் என்ன செய்வது
    விஞ்ஞானிிகளூக்கு சப்ஜெக்ட் அறிவு இருக்கிற அளவு
    பொது அறிவு இல்லை
    பதிவின் நோக்கம் குறித்தே பதிவைப் பார்க்கவேண்டுமே ஒழிய
    எப்போதும் சீரியஸாக இருக்கவேண்டியதில்லை
    அருமையான நகைச்சுவைப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆமாம்ய்யா ரஜினிகாந்த், விஜய், சிம்பு போன்றோரை அங்கே குடியேற வைக்கலாம்...!!!

    ReplyDelete
  3. எங்கள் அண்ணன், ரத்தத்தில் தீப்பொறி ஏற்றி இருக்கும் தலைவன், transformer ஐ வெடிக்க வைக்கும் அளவுக்கு உடலில் மின்சாரத்தை தேக்கி வைத்திருக்கும் புரட்சி கலைஞன் விஜயகாந்தை பற்றி பேசாமல் எப்பவும் இமய மலையில் இருக்கும் ரஜினிகாந்த் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் என்று எந்த கற்பனையில் எழுதினீர்கள்...

    ReplyDelete
  4. @ஜிவா நமக்கு பித்தவரை மட்டும் உரிமையோடு கேலி பண்ணலாம் அதனால் தான் அண்ணன் ரஜினியை கிண்டல் பண்ணி எழுதுகிறேன். மற்றபடி எனக்கு யார் மேலும் துவேஷம் கிடையாது

    ReplyDelete
  5. @மனோ & ரமணிசார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.