Thursday, November 3, 2011


அமெரிக்கன் எக்கானாமி : சிரிக்க வைக்கும் உண்மைகள் (வேதனையானவை)

பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்கும் அமெரிக்கா அதில் இருந்து மீண்டு வர மக்களுக்கு கவர்மெண்ட் 600 டாலரை ஒவ்வொருத்தருக்கும் Tax Rebate ஆக அனுப்புகிறது.

அதை அமெரிக்கன் வால்மார்ட்டில் செலவழித்தால் அந்த பணம் சைனீஸ்காரணுக்கு போய் சேருகிறது.

அதை அவன் பெட்ரோல்க்காக செலவழித்தால் அது அரபு காரனுக்கு போய் சேருகிறது.

அதை சாப்ட்வேர் வாங்க செலவழித்தால் இந்தியனுக்கு போய் சேருகிறது.

அதை காய்கறி பழங்கள் வாங்க செலவழித்தால் மெக்ஸிக்கோ, ஹாண்டாரஸ் போன்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு போய் சேருகிறது

அதை கார் வாங்க செலவழித்தால் ஜெர்மங்காரனுக்கும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு போய் சேருகிறது.

அதை அப்ளையன்ஸ் வாங்க செலவழித்தால் கொரியா நாடட்டுக்கு போய் சேருகிறது.

அதை வைத்து பயனற்ற ஓன்றுக்கும் உதவாத பொருட்கள் வாங்கினால் தாய்வான் நாட்டுக்கும் போய் சேருகிறது

இதில் எதற்க்காகவும் செலவழித்தால் அது அமெரிக்க பொருளாதாரம் வளர உதவவில்லை.


இந்த டாலர் அமெரிக்கா நாட்டை விட்டு வெளியே ஏறாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த நாட்டில் உள்ள விபசாரிகளிடமும் மற்றும் இங்கு தயாராகும் பீர் ,ரம்  ஹாட்டாக்கில் மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்று என்னுடன் வேலை பார்க்கும் வெள்ளைக்கார நண்பர் வேதனையுடன் தான் படித்த ஜோக்கை என்னுடன் பகிர்ந்தார்.

இதுதான் இங்குள்ள உண்மை நிலை

03 Nov 2011

17 comments:

  1. மிகவும் வேதனைக்குரிய நிலைதான்.

    ReplyDelete
  2. மிக எளிமையா புரிய வச்சுட்டீங்க.

    ReplyDelete
  3. வெள்ளைக்காரங்களுக்கு தமிழ் தெரியாது. பெரிய அண்ணன் நாட்டாமை என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் உண்மை நிலை இதுதான்.

    ReplyDelete
  4. நகைச்சுவையா உண்மைய எழுதிருக்கீங்க .. விவிசி..:).

    ReplyDelete
  5. சரி சரி எங்க நாட்டு அரிசி மட்டும் வாங்கிடுங்க.. உள்நாட்டுக்கு , அதான் அமெரிக்காவுக்கு பணத்த செலவழிக்காதீங்க..

    ReplyDelete
  6. //அதை சாப்ட்வேர் வாங்க செலவழித்தால் இந்தியனுக்கு போய் சேருகிறது.//

    காமடி பண்ணாதீங்க...

    ReplyDelete
  7. அட மிகவும் ஆச்சர்யமான தகவலா இருக்கே...!!! அமெரிக்கா விரைவில் சட்டி எடுக்குமோ...?

    ReplyDelete
  8. மிகப் பெரிய விஷயத்தை மிக எளிமையாக
    விளக்கிய விதம் மிக மிக அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  10. //காமடி பண்ணாதீங்க...//
    சூர்ய ஜீவா நான் காமெடி பண்ணல... கம்பியூட்டரக்காக என்ன செலவழித்தாலும் அது மறைமுகமாக இந்தியனுக்குதான் 50% மேல் போய் சேருகிறது

    ReplyDelete
  11. ///பெரிய அண்ணன் நாட்டாமை என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் உண்மை நிலை இதுதான்//
    @சாகாம்பரி
    நம் ஊரில் ஓன்னும் இல்லாதவன் வெள்ளை வேட்டிகட்டி கிட்டு வெத்து வேட்டு பண்ணும் அலம்பல்காரன் நிலைதான் அமெரிக்காவின் நில்லை

    ReplyDelete
  12. @சாந்தி டாக்டர் அதிகம் அரிசி சாப்பிடக் கூடாதுனு சொல்லியிருக்கிறார். ஆனால் ட்ரிங்க்ஸ் தினமும் அளவோட ஒரு கிளாஸ் எடுக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்னும் எனக்கு வாழ்வு அளிக்கும் அமெரிக்கா பொருளாதாரத்திற்கு என்னால் முடிந்த உதவி செய்யாலம் என்று கருதி தான் நான் ரம் மட்டும் வாங்குகிறேன்

    ReplyDelete
  13. @மனோ அமெரிக்கா எப்பவோ சட்டி தூக்க ஆரம்பித்தாத்து

    ReplyDelete
  14. ரமணி சார், ஜோதிஜி சார், கந்தசாமி சார் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  15. நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை நிலை !

    ReplyDelete
  16. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  17. ம்ம்..நீங்க சொல்லுறதுலயும் உண்மை இருக்குதுங்க..

    இப்போ ஹவுசிங் மார்கெட், எகானமி போற நிலையில தொடர்ந்து வேலையில இருப்பமா இல்லையான்னு ஒரே கவலையா இருக்கு, என்ன பண்ண..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.