Thursday, July 10, 2014




சேலைச் சோலையில்....

எனது வீட்டுக்கருகில் வசிக்கும். என் பதிவை படித்து வரும் எனது அமெரிக்க தமிழ் நண்பரை இன்று சந்திக்க நேர்ந்தது. அவரும் அவர் குடும்பத்தாரும் மற்றும் சிலரும் இங்கு வெயில் காலமானதால் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நான் எனது செல்லகுட்டியோடு(மனைவி அல்ல என் வீட்டு நாய்குட்டி) வாக்கிங்க் செல்லும் போது அவர்களை சந்தித்து பேசினேன்.

எனது செல்லகுட்டி


அப்போது பேச்சிற்கிடையே எனது பதிவு பற்றி பேச்சு வந்த போது அவர் கேட்டார் மதுரைத்தமிழா உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சேலை கட்டும் பெண்களை பிடிக்கும் என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி கேட்டார் . சேலைகட்டி வரும் பெண்னை பார்த்தால் உசிரையே விட்டுவிடுவிர்கள் என்று பதிவில் சொல்லு இருக்கிறீர்களே அது சரிதான் ஆனால் சேலையே கட்டாமல் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்றார்

உடனே நான் சேலை கட்டி வருவதை பார்க்கும் போது போகும் உசிரு சேலை கட்டாமல் வந்தால் மீண்டும் வந்துடும்பா என்று சொன்னதுதான் தாமதம் அங்கிருந்தவர்கள் அடக்கமுடியாமல் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்

யாருகிட்ட கேள்வி கேட்குறாங்க இந்த வாயாடி மதுரைத்தமிழங்கிட்டயா?


வாய்விட்டு சிரிச்சா .....

அடியே அந்த மதுரைத்தமிழன் கிட்ட ஜாக்கிரதையா பேசனும்டி நேற்று அவன் என் செருப்பை பார்த்து அழகாயிருக்குன்னு சொன்னான் நானும் சந்தோஷத்தில் அவன்கிட்ட என் செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .

ஏன் ?

இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்

சேலை சேலை என்று பேசும் போது என் மனதில் இந்த பழைய பாடல் உதித்தது
படம் : தங்க மகன்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய
அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற

வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை
அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ


ராத்திரியில் பூத்திடும் தாமரைதான் பெண்ணோ பாடல்



அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. இப்படி செத்து செத்து விளையாடுகிற விளையாட்டில் என்னையும் சேர்த்துக்குங்க பாஸ் !
    சேலை நல்லா இருக்குன்னு சொல்றதிலே இவ்வளவு வில்லங்கம் இருக்கா ?
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. ஐ, அஸ்கு,புஸ்கு,
      அந்த விளையாட்டில உங்களை மாதிரி வயதானவர்களுக்கு எல்லாம் இடம் கிடையாது, என்னை மாதிரி இருக்கும் இளவட்டங்களுக்கு தான் இடமே...

      Delete
    2. ஹாஹாஹா ஐயோ தாங்கலைடா சாமி!......சேலை செய்யும் லீலைகள்!!!

      Delete
    3. ஹாஅஹாஅ சொக்கன் சார் வயசானவங்க யாரு ஜியும், தமிழனும்தானே!?

      Delete
    4. இது தான் சந்துல சிந்து பாடுறதுன்னு சொல்றதோ???
      அது எப்படிங்க, அந்த வயசானவங்க லிஸ்ட்ல உங்களை விட்டுட்டு, அவுங்க ரெண்டு பேரை மட்டும் சொல்லியிருக்கீங்க?

      Delete
  2. ஆமா, எப்பத்திலிருந்து நீங்க நம்ம பகவான்ஜீக்கு போட்டியா நகைச்சுவைத் துணுக்கை எழுத ஆரம்பிச்சீங்க??

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. பாடல் வரிகளை பதிவிட்டடற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அவர்கள் உண்மைகள் தளம் ஜோக்காளி தளத்திற்குப் போட்டியா?
    இல்லை,
    ஜோக்காளி தளம் தருவது எளிமையான நகைச்சுவை!
    அவர்கள் உண்மைகள் தளம் தருவது நகைச்சுவைப் பதிவு!
    இருபகுதியும்
    எங்க முளைக்கு வேலை தருவாங்க...
    நாம இளமையாக இருப்போமே!

    ReplyDelete
  4. கோமடி நல்லாத்தான் பண்ணுறீங்க...
    ஆபாச வார்த்தைகள் நிறைந்தது இந்தபாடல் ஆனால் இசையும் பாடியவிதமும் வெளியே தொரியாமல் மனதை மயக்கிவிட்டது உண்மையே....

    ReplyDelete
  5. ஹாஹாஅ....மதுரைத் தமிழா இன்னும் சேலையை விடல போல.....

    உங்கல் செல்லக் குட்டி சூப்பர்...அழகோ அழகு!!!!! கொள்ளை அழகு...வந்து அத கொஞ்சணும்போல இருக்குங்க......

    நோ சான்ஸ் இந்தப் பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க....என்ன ஒரு ம்யூசிக்......

    ReplyDelete
  6. எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும். நாய்க்குட்டியை செல்லக்குட்டின்னு கொஞ்சுறீங்க. ஆனா, பொண்டாட்டியை!!??

    ReplyDelete
  7. உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? பல தருணங்களில் இந்த பாட்டை கேட்டு ரசித்து இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. ஓஹோ....! இந்த மாதிரி பாடல்கள் தான் பிடிக்குமோ...?!!!

    ReplyDelete
  9. இதிலிருந்து என்ன தெரிஞ்சிக்கிட்டேன் என்றால்....

    “அமெரிக்க மதுரைத் தமிழன்“ கிட்ட மிக மிக ஜாக்கிரதையாகப் பேசனும்.
    ரொம்பவும் வாயாடுகிறார். பாவம் மாமி.

    ReplyDelete
  10. எல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கே என்ன விசேஷம்? பூரிக் கட்டைக ஸ்டாக் இல்லன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.