Wednesday, July 30, 2014


கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐடியா (மோடிக்கு உதவ அமெரிக்க தமிழன் தயார் )


மக்கள் மட்டுமல்ல மோடியும் அரசங்கமும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு



மோடி ஆட்சிக்கு வந்த பின் கேஸ் விலை உயர்வதோடு ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கும் சிலிண்டரின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.



ஆனால் கேஸ் சிலிண்டரின் விலைய குறைத்து வீட்டிற்கு மாதம் 20 சிலிண்டருக்கும் மேல் கொடுக்க முடியும் அது மிக சுலபம்.. இதற்காக மோடி செய்ய வேண்டியது இதுதான்


அமெரிக்க வாழ் தமிழனின் ஜடியா படி செய்தால் நல்லது.


அந்த ஐடியா இதுதான் படத்தை பார்க்க....


modi govt. price incresing
Indian Gas Cylinder

இந்த படத்தில் உள்ளது படி சிலிண்டரை தயாரித்தால் விலையை குறைக்கலாம் இப்படி செய்வதால் அதிக எண்ணிக்கையில் கொடுக்கலாம்...இதன் மூலம் இப்போதுள்ளதை விட அதிக அளவு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.


இப்படி செய்வதன் மூலம் மோடி அரசு கேஸ் விலையை குறைத்து விட்டது என்று பிரச்சாரம் செய்யலாம்.


இப்படி செய்தால் இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று யாரும் கேட்டால் அவர்களுக்கு சொல்லுங்க மோடியையே ஏற்றுக் கொண்ட இளிச்சவாய் இந்திய மக்கள் இதையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று.



எப்படி என் ஐடியா? என் ஐடியா நல்லா இருந்தா பிரதமரின் ஆலோசராக வர என்னை சிபாரிசு செய்யுங்கள் அதன் பின் இந்தியாவை வல்லரசாக்க நான் இன்னும் அதிக ஐடியா வைச்சிருக்கேன் அதுக்கு அப்புறம் அதை எடுத்து விடுகிறேன்..


ஹீ..ஹீ.ஹீ


அன்புடன்
மதுரைத்தமிழன்



11 comments:

  1. சிலிண்டர் விலையை குறைக்க ஐடியா பிரமாதம் போங்க...
    அப்படியே... அரிசி விலையை குறைக்க ஐடியா கொடுங்களேன் நல்லாயிருப்பீங்கோ.....
    (இதே மாதிரி கொடுத்துடாதீங்கோ)

    ReplyDelete
  2. இந்தியாவை வல்லரசு ஆக்குவேன்னு படிச்சவுடனே எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது. உண்மையை சொல்லுங்க. இது நம்ம கேப்டன் விஜயகாந்த் கூகிளில் தேடி கண்டுபிடித்து கொடுத்த ஐடியா தானே........?

    ReplyDelete
  3. ஹாஹாஹா...மோடிக்கு ஐடியா?!!! சிபாரிசு செய்யலாம்...ஆனா மக்கள்? நாங்க இங்க ஒரு சிலிண்டரை வைச்சே 2 மாசம் ஓட்டிட முடியுமானு தேதி குறிச்சு பாத்துக்கிட்டுருக்கோம்.....உங்க ஊரு அமெரிக்க "bottled gas" எத்தனை நாளைக்கு வரும்...ஹஹஹாஹ்.....20 எல்லாம் பத்ததே.....சமைக்கவே சமைக்காதீங்கனு சொல்றாங்க போல....அப்படியே மோடிய எல்லா வீட்டுகும் சாப்பாடும் சப்ளை பண்ணச் சொல்லுங்களேன்.....

    ReplyDelete
  4. நல்லா “விவரமா”த்தான் இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு, கீழே இறங்கி வந்தவுடன் சொன்னதெல்லாம் போச்சு...

    ReplyDelete
  6. உங்களைப் போன்ற ஆட்கள் இன்னும் இரண்டு பேர் இருந்தால் போதும்.....
    தமிழரே..... இவ்வளவு நாட்களாக அரசியல்வாதி, ஊடகங்கள் தான் உங்களைத் தேடியது....
    இப்படியே இன்னும் ரெண்டு பதிவு போட்டீர்கள் என்றால்...... இந்தியாவே உங்களைத் தேடும்...!!!

    ReplyDelete
  7. அரசியல்வாதிங்க தான் மக்களை இளிச்சவாயனாக ஆக்குகிறார்கள் என்று பார்த்தால், நீங்களுமா!!!!

    ReplyDelete
  8. Kindly add - Feed Burner Widget - in your blog enabling to enter Email id to get the blog.
    My email id: rathnavel.natarajan@gmail.com
    Thank You.

    ReplyDelete
  9. நக்கல் ஆலோசனை நன்று!

    ReplyDelete
  10. இந்த ஜூலை மாதம் மட்டும் 31 பதிவுகள் போட்டிருப்பதன் மர்மம் என்னவோ?

    ReplyDelete

  11. ஐடியாவா / மதியுரையா
    மோடி ஏற்பாரா
    எனக்கோ ஐயம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.