295 பேரை பலி கொண்ட மலேசிய விமான விபத்து. மலேசியன் ஏர்லைன்ஸுக்கு மீண்டும் பலத்த அடி
295
பேருடன்
சென்ற மலேசிய விமானம் ஒன்று
உக்ரைன் -
ரஷ்யா
எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது
விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம்
சுட்டு வீழ்த்தப்பட்டதாகத்
செய்திகள் வெளிவந்துள்ளன.
நெதர்லாந்து
தலைநகர் ஆம்ஸ்டர்டாமில்
இருந்து மலேசிய தலைநகர்
கோலாலம்பூர் நோக்கி விமானம்
சென்று கொண்டிருந்த நிலையில்,
தற்போது
உள்நாட்டுப் போர் நடந்து
வரும் உக்ரைனின் கிழக்குப்
பகுதி அருகே விமானம் சென்று
கொண்டிருந்துபோது,அதன்
மீது ஏவுகணை ஒன்று தாக்கியதாக
செய்திகள் வெளிவந்து
கொண்டிருக்கின்றன
Source: Satellite image by DigitalGlobe via Google |
உக்ரைன்
வான்வெளியில் பறந்தபோது
விமானத்துடனான தொடர்பு
துண்டிக்கப்பட்டதாகவும்
விமானத்தில் 280
பயணிகளும்,
விமானிகள்
உள்ளிட்ட 15
ஊழியர்களும்
பயணம் செய்து கொண்டிருந்ததாகவும்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமான
நிறுவனம் கூறியுள்ளது.
உக்ரைனின்
எல்லையில் இருந்து,
ரஷ்ய
எல்லைக்கும் விமானம் நுழையவேண்டிய
தருணத்தில் இந்தச் சம்பவம்
நிகழ்ந்திருக்கிறது.
விமானம்
நொறுங்கி விழுந்த இடத்தில்
விமானத்தின் சிதறிய பாகங்களும்,
பயணிகளின்
சடலங்களும் சிதறி கிடப்பதாக
ராய்ட்டர் செய்தியாளர்
தெரிவித்துள்ளார்.
சம்பவ
இடத்திற்கு மீட்புக்குழுவினர்
விரைந்த நிலையில்,
கிராபோவோ
என்ற கிராமத்தின் அருகே
விமானம் நொறுங்கி கிடக்கும்
இடத்தில் குறைந்தது 100
சடலங்களாவது
சிதறிக்கிடப்பதை தான் பார்த்ததாக
மீட்புக் குழுவை சேர்ந்த
ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
விமானத்தின் நொறுங்கிய
பாகங்கள் சுமார் 15
கி.மீ.
தொலைவுக்கு
சிதறி கிடப்பதாகவும் அவர்
கூறியுள்ளார்.
விமானம்,
ஏவுகணை
மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்
என்று கூறப்படுவதால் சர்வதேச
அரசியலில் திடீர் நெருக்கடி
ஏற்பட்டிருக்கிறது.
தங்களுக்கும்
விமானம் விழுந்து நொறுங்கியதற்கும்
எந்தத் தொடர்பும் இல்லை
என்றும்,விமானத்தை
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்
சுட்டு வீழ்த்தியதாகவும்
உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
எனினும்
33
ஆயிரம்
உயரத்தில் பறக்கும் விமானத்தை
வீழ்த்துவது என்பது சாதாரண
ஏவுகணைகளால் இயலாது என்ற
கருத்தையும் நிபுணர்கள்
முன்வைத்திருக்கிறார்கள்.
ராடார்
மூலம் கட்டுப்படுத்தப்படும்
ஏவுகணைகளோ,
விமானத்தில்
இருந்து ஏவப்படும் ஏவுகணைகளோதான்
இத்தகைய தாக்குதலை நடத்த
முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும்
அதிக தகவலுக்கு இங்கே க்ளிக்
செய்யவும்
http://www.reuters.com/article/2014/07/17/ukraine-crisis-obama-idUSL2N0PS1JZ20140717
http://www.reuters.com/article/2014/07/17/ukraine-crisis-obama-idUSL2N0PS1JZ20140717
வணக்கம்
ReplyDeleteவிமானத்தில் பயணம் செய்த பணிகள் ஊழியர்கள் அனைவருக்கு ஆழ்ந்த இரங்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஐயோ பாவம்!
ReplyDeleteபரிதாபமான செய்தி!
ReplyDeleteப்ச்சி.....(((
ReplyDeleteமிகவும் பரிதாபமான செய்தி........இந்த விமானத்திற்கு பின் 2 மணி நேரம் பின்னில் மோடியின் விமானமும் பறந்ததாகச் செய்தித்தாளில் வந்தது.....சமீபத்தில்தான் மலேஷிய விமானம் ஒன்று கடலின் மேல் பறக்கும் போது காணாமல் போனது....ம்ம்ம்ம்ம் என்னத்தச் சொல்லனு தெரியலைங்க.....
ReplyDeleteபரிதாபம் - அதற்கடுத்து ஒரு அல்ஜீரிய விமானமும் விபத்துக்குள்ளாகி பலர் பலி.... என்ன தான் நடக்கிறது......
ReplyDelete