அசட்டு மைதிலியும்
அப்பாவி மதுரைத் தமிழனும்
நம்ம ஊர் அரசியல்
தலைங்க உடம்புக்கு
முடியலைன்னா வெளிநாட்டுக்கு
போய் சிகிச்சை
எடுத்துக்குவாங்க. அது
போலதான் நம்மை மைதிலி( இந்த
மைதிலி மகிழ்நிறை பதிவர்
மைதிலி அல்ல வேறு ஒரு பதிவர்
என்று நான் சொன்னா நீங்க
நம்பிதான் ஆகணும்) அவர்களும்
உடம்புக்கு முடியலை என்றால்
பட்டணத்திற்கு போய்தான்
சிகிச்சை எடுப்பார்கள்.
அப்படிதாங்க ஒரு தடவை
அவருக்கு கடுமையான வயிற்றுவலி.
அதனால் உடனே பட்டணத்தில் உள்ள
டாக்டரிடம் சென்றார்.
அவரை பரிசோதனை
பண்ணிவிட்டு, மருந்து எழுதிக்
கொடுத்தவர் 25 ரூபாய் ஃபீஸ்
கேட்டார்.
உடனே அவருக்கு
ஆச்சரியம். ஒருவேளை நாம் பிரபல
பதிவர் என்பதால்தான் டாக்டர்
இவ்வளவு குறைவாக பீஸ்
கேட்கிறார் என்று அவரின்
மைண்ட் வாய்ஸ் அவரிடம்
சொல்லியது இருந்த போதிலும்
அவருக்கு வந்த ஆச்சிரியத்தை
மறைத்து கொண்டு ‘என்ன சார்...
எல்லா டாக்டர்களும் 250 ரூபாய்
ஃபீஸ் கேட்கிறார்கள். நீங்கள்
மட்டும் 25 ரூபாய் ஃபீஸ்
வாங்குகிறீர்களே’ என்று
டாக்டரிடம் கேட்டார்
அதற்கு அந்த டாக்டர்
அம்மா ‘அவங்களெல்லாம் லட்சக்
கணக்கில் பணம் செலவழித்து எம்.பி.பி.எஸ்.
படித்துவிட்டு அப்படி ஃபீஸ்
வாங்கறாங்க! ஆனா நான் எஸ்.எஸ்.எல்.சி
படிச்சிட்டு நேரடியா டாக்டர்
ஆகிவிட்டேன் என்று அவர்
போட்டாரே ஒரு போடு. அதற்கு
அப்புறம் நம்ம அசட்டு மைதிலி
பட்டணம் பக்கமே போகவில்லையாம்
அவர் அப்படியென்றால்
அவரது தோழர் மதுரைத்தமிழ்ன்
இருக்கிறார் அல்லவா? அவர்கள்...உண்மைகள்
வலைத்தள பதிவர் அல்ல என்று
சொன்னால் நீங்கள் நம்பவா
போகிறீர்கள் எது எப்படியோ
அந்த அப்பாவி தமிழன் தலையில்
அடிப்பட்டது. அதனால் அவரும்
டாக்டரிடம் போனார்( அவர் மனைவி
பூரிக்கட்டையால் அடித்ததால்
ஏற்பட்ட பாதிப்பு அல்ல என்று
சொன்னாலும் நீங்க நம்ப
போவதில்லை
டாக்டர் அவர் தலையை
ஸ்கேன் பண்ணி பார்த்துவிட்டு
மதுரைத்தமிழன் மண்டையில்
ஒன்றுமில்லை என்று சொன்னார்.
இதை கேட்டதும்
மதுரைத்தமிழனின் மனைவி
டாக்டர்.......... அவர் தலையில்
ஒன்றுமில்லை என்று தான் நான்
அவரை கல்யாணம் பண்ணியதில்
இருந்து இன்று வரை சொல்லி
வருகிறேன் இப்ப பாருங்க
டாக்டர் நீங்கள் சொன்னா இந்த
உலகம் நம்பும் என்று
சொல்லியவாரு கையில் இருந்த
கட்டையை கொண்டும் மேலும் ஒரு
அடி அடித்தார். அடியே என்
மண்டையில் வேண்டுமானால்
ஒன்றிமில்லாமல் இருக்கலாம்
ஆனால் என் மண்டை மரமண்டை அல்ல
அதனால் அடிப்பதை நிறுத்துடி
என்று கதறினார்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்லத்தான் கலாய்க்கிறீங்க.. தமிழா
ReplyDeleteஒருவேண்டுகோள்.
சினிமாக்காரன் போட்டோவெல்லாம் நமக்கெதுக்கு ? அந்த இடத்துல உங்க போட்டோவை போடலாம் அல்லது உங்களுக்கு பிடித்த நண்பர்கள், அல்லது எதிரிகள் போட்டோவை கூட போடலாம் ஒருவிசயம் சொல்லட்டுமா ? நாம முயற்சி செய்தால் இவங்களை மாதிரி நடிச்சிரலாம் ஆனால் ? இவங்களாலே நம்மளைபோல் எழுதமுடியாது.
நன்றி தவறெனில் மன்னிக்க....
நண்பர் மதுரை தமிழனுக்கு தேவகோட்டை தமிழனின் வணக்கங்களும், நன்றிகளும் எனது கருத்துரைக்கு மதிப்பளித்து போட்டோவை மாற்றியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி நண்பா...
Deleteஇந்த போட்டோவுல இருக்குற ரெண்டுபேருமே நமக்கு வேண்டியவங்கதான்...
சும்மாயிருந்தால் ? எமது ''விசித்திகன்'' படிங்களேன்...
ஹாஹாஹா டாக்டர்கிட்ட போனதுக்கு காரணம் பூரிக்கட்டையால அடி வாங்கின பாதிப்பு இல்லனு சொன்னா நம்பவா போறீங்கனு கேட்டுட்டு கடைசில அடி வாங்கி உண்மைய ஒத்துக்கிட்டீங்க பாருங்க.....அந்த டாக்டர் அமெரிக்கரா? ....அமெரிக்கா முழுவதும் தெரிஞ்சு போச்சுங்க........பாத்துங்க.....
ReplyDeleteபாவம் மைதிலி சகோதரிக்கு உண்மையாவே உடம்பு சரியில்லையா...அதான் காணலியா.....வலைச்சரத்துல ஆங்க எழுதி எல்லாரும் பாராட்ட.....னீங்க கலாய்க்க .....அதுனாலயா......
ரசிச்சோம்..பதிவை...
வணக்கம்
ReplyDeleteபதிவு சூப்பர்......கதை பின்னிய விதம் கண்டு மகிழ்ந்தேன் அதிலும் 25உரூபாய் பீஸ்யை இரசித்துப்படித்தேன்
பகிர்வுக்கு நன்றி மதுரைத்தமிழன்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் மண்டையில் ஒண்ணும் இல்லாமலா இவ்ளோ நல்லா எழுதறீங்க? அந்த டாக்டர் கண்டிப்பா போலி டாக்டராத்தான் இருக்கணும் மைதிலி அவர்கள் பார்த்த டாக்டரும் இவரும் ஒரே கிளாஸ்மேட்டா இருப்பாங்களோ?
ReplyDeleteஅதானே பார்த்தேன்.... நம்ம மைதிலி (மகிழ்நிறை) ரொம்ப புத்திசாலியாச்சே!!
ReplyDeleteஆமா.... ஒன்றுமில்லாததைத் தானே மரமண்டை என்பார்கள்....
அடிச்சா வலிக்கிறது போல நடிக்கிறதாக்கும்...
தல: நீங்க சீக்கிரம் உங்க "எம்ப்டி" மண்டை நெறையா "மூளை பெற்று" நலம் பெற வேண்டும்!
ReplyDeleteஅதென்ன மனைவியை, "அடியே" னு ஏகவசனம்?! :)))
தல: தலையில் மூளைய "ஃபில்" பண்ணியதும், "வாங்க பொண்டாட்டி" "போங்க பொண்டாட்டி" னு தக்க மரியாதையுடன் விளிக்கவும்! :)
பாஸ் உங்க மூளையை எனக்கு கடன் தரமுடியுமா?
Deleteதல: என் மூளையை உங்களிடம் ட்ரேட் செய்வதில் விருப்பமே. ஆனால், "கடன் அன்பை முறிக்கும்" என்கிற பலமுறை வாழ்க்கையில் என் அனுபவித்து, அந்தப் பழமொழி எவ்ளோ உண்மையானது என்பதை அறிந்தவன் நான்...எனக்கு உங்க அன்புதான் முக்கியம் தல, என் மூளையைவிட! ஆனால் உங்க அன்பை இழக்க விரும்பாத நான் என் மூளையைக் கடன் கொடுக்க மறுக்க வேண்டிய கட்டாயம். :(
Deleteநல்லாத் தான் கலாய்க்கறீங்க! :))))
ReplyDeleteரசித்தேன்.
பட்டணம் போகவில்லையா
ReplyDeleteபோலி மருத்துவரைக் காணவில்லையா
என்று
சிந்திக்க வைக்கிறியளே!
சாரி சகா! நேத்தே கமெண்ட் போட நேரம் இல்ல. இப்போ தான் டென்டிஸ்ட் விசிட் முடிஞ்சு ப்ரீ ஆனேன். அதுக்குள்ள சிரிச்சு சிரிச்சு நெஜமாவே வயிற்றுவலி வந்திடும் போல:))) உங்க மண்டையில் ஒன்னும் இல்லைகிறதுல மேடம் தெளிவா இருக்காங்க(நான் என்னை சொல்லலை, மிஸ்ஸஸ் தமிழனை தான் சொன்னென நீங்க நம்பனும்) ஆன நீங்க மரமண்டயில்ல அப்டின்னு இப்போ தெளிவாக புரிஞ்சுடுச்சு:)))
ReplyDeleteபட்டணத்துல இருக்கிற டென்டிஸ்டையா பார்க்க போனீங்க??
Deleteடாக்டர் முன்னாடியே உங்களுக்கு பூரிக்கட்டை அடியா.. அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க முடியாம போயிடுச்சே!!
Deleteஅடடா மண்டையில இருக்கிற முடியை பத்தி தானே பேசறீங்க இல்லையா? உள்ள இருகிறத பத்தியில்ல இல்லையா. இல்லாம இருந்தா இப்படி உங்களை எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைப்பாரா கொஞ்சம் யோசியுங்க. என் அம்முவும் ஒத்துக்கிறா பார்த்தீங்களா.
ReplyDeleteபஞ்சமில்லா நகைச்சுவை அள்ளித் தரும் மதுரைத் தமிழன் வாழ்க.
ReplyDelete