Tuesday, July 29, 2014

shreya


எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )



நான் எனது வலைத்தளத்தில் கிறுக்குவதை பார்த்த எனது 12 வயதுடைய பெண் ஷ்ரேயா . எனக்கு போட்டியாக களத்தில் குதித்துள்ளாள். அவளது படைப்புகளை படிக்க பார்க்க விரும்புவர்கள் இந்த லிங்கை http://lightitupgirls.blogspot.com/ க்ளிக் செய்து படித்து ஆதரவு தரம்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன், விருப்பம் உள்ளவர்கள் பலோவர் லிஸ்டில் சேர்ந்து அவளை மகிழ்விக்க வேண்டுகிறேன். சம்மர் வெகேஷனை அனுபவிக்கும் அவள் வருகிற செப்டம்பரில் 7th Grade செல்லுகிறாள்.

அவளது முதல் படைப்பு ஒரு அழகிய Poem அது எனக்கு மிகவும் பிடித்தது.. உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். அவளது அடுத்த பதிவு ஓட் மீல் குக்கி. அதை அவள் மிக அருமையாக யாருடைய உதவி இல்லாமல் செய்வாள். அவள் செய்யும் அந்த் குக்கி எனக்கு மிகவும் பிடித்தமானது.



http://lightitupgirls.blogspot.com/ இந்த தளத்தில் அவளது படைப்புகள் மட்டுமல்லாமல் அவள் பார்த்த படித்த ரசித்த செய்திகள் அனைத்தும் தொடர்ந்து வரும்

தமிழ் பேசும் அவளுக்கு தமிழ் எழுத தெரியாததால் பதிவுகள் ஆங்கிலத்தில் வரும். ஹிந்தி எழுத படிக்க கோஞ்சம் பேச வரும்... தமிழில் அவளுக்கு அ வில் இருந்து ஃ வரை மட்டும் எழுத தெரியும்.. வருகிற ஆண்டில் முடிந்தால் தமிழ் படிக்க அனுப்ப வேண்டும் என நினைத்து இருக்கிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்
எனது மகள் தளத்தில் பலோவராக சேருவதில் பிரச்சனைகள் இருந்தது அது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. சேர விரும்பியவர்கள் மற்றும் விரும்புபவர்கள் மீண்டும்சேரலாம். நன்றி

http://lightitupgirls.blogspot.com/

14 comments:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப் பக்கம் வருகிறேன். . ஸ்ரேயாவின் வலைப் பக்கத்தை பார்த்துவிட்டுத்தான் உங்கள் பதிவையே படிக்கிறேன்.போயம் அருமையாக இருக்கிறது.மிக்க மகிழ்ச்சி. சிறந்த படைப்பாளியாக மலர வாழ்த்துக்கள். வீட்டில் தமிழே பேசுவதில் மகிழ்ந்தேன். வலையுலகில் 16 அடி பாயத் தயாராக இருக்கும் குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஸ்ரேயாவின் வலைப் பதிவை தொடர முனையும்ப்போது பிழைச் செய்தி காண்பிக்கிறது.சரிபார்க்கவும்

    ReplyDelete
  3. நீங்கள் 8 அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாய்வார்! அவருக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

    அவரது தளத்தைப் பார்த்தோம், ரசித்தோம், பதிலும் கொடுத்தோம்.

    ReplyDelete
  4. மகளின் தளத்தில் இணைய முயற்சி செய்தோம். இணைய முடியவில்லை....

    ReplyDelete
  5. அருமை மகளுக்கு என் வாழ்த்துக்கள். அவரை உற்சாகப்படுத்தும் அவர் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ரொம்ப மகிழ்ச்சி, மதுரை தமிழா. வாழ்த்துகள். பிள்ளைகள் வளர்வது தான் எத்தனை மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. தங்களின் செல்ல மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
    தங்களைப் போலவே மகளும் எழுத ஆரம்பித்திருக்கிறாள் என்று நினைக்கும்போது, உண்மையிலே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அவருடைய முதல் பாட்டே அருமையாக இருக்கிறது.

    தமிழ் வகுப்புக்கு அனுப்புங்கள். குறைந்தபட்சம் அவர் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளலாம் அல்லவா.

    ReplyDelete
  8. ஸ்ரேயா-வின் பதிவை பார்த்தேன்... நன்றாக இருக்கிறது....
    'அடுத்த வாரிசு' ரெடி போல.... !!!!

    ReplyDelete
  9. ஸ்ரேயாவுக்கு வாழ்த்துக்கள் தமிழ் படிக்க வைக்க முயற்சிக்கவும்.

    ReplyDelete
  10. இப்பொழுது படிக்கமுடிகிறது

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஷ்ரேயா .


    ..கண்டிப்பாக என் மகளையும் follower ஆக சொல்கிறேன்

    ReplyDelete
  12. ஸ்ரேயாவின் கவிதை மிக அருமை! வாழ்த்துக்கள் பாலோவராக இணைந்துவிட்டேன்!

    ReplyDelete
  13. உங்க பொண்ணு உங்களை மாதிரி இல்லாமல், ரொம்ப திறமைசாலியாத் தெரியுது, தல. ஸ்ரேயா அவங்க அம்மா மாதிரி போல! :))))

    ReplyDelete
  14. மகளின் முயற்சிக்கும்
    பெற்றோரின் வழிகாட்டலுக்கும்
    எனது பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.