காலம் மாறிப் போச்சு இந்த காதலும் மாறிப் போச்சு
என்னங்க படத்தில் உள்ளதை பார்தீங்கல...
இப்ப இதை படியுங்க....
வாழ்க்கையில் மறக்க கூடியாதது 2
விரும்பி எது வந்தாலும் டேக் கேர்
விலகி எது போனாலும் டோண்ட் கேர்
அவ்வள்வு தாங்க
அன்புடன்
மதுரைத்தமிழன்
மெயில் பேக் : கிழ்கண்ட இந்த ஜோக்கை படித்துவிட்டு அழுதால் நான் பொறுப்பில்லை
Friday, 27 June 2014 ல் நமது வலைப்பதிவர் தனது "ஏன் இந்த ஆண்களெல்லாம் இப்படி இருக்கிறார்கள்?" என்ற பதிவின் இறுதியில் ஒரு ஜோக் சொல்லி இருந்தார் அதை இங்கே சென்று படிங்க
http://arouna-selvame.blogspot.com/2014/06/blog-post_27.html
படிச்சிட்டிங்களா...என்னங்க என்னாச்சு ஏன் அழுகிரீங்க....ஜோக் படிச்சா சிரிப்பாங்க நீங்க என்ன அழுகுரீங்க...
ஓ ஒன்றும் புரியவைல்லையா அப்ப நீங்களும் என் கட்சிதான்...
எனக்கு புரியலைன்னு அப்படியே வுட்டு போக முடியல அதனால எனக்கு தெரிஞ்ச இன்னொரு பதிவரிடம் கேட்டதற்கு அவர் அனுப்பிய பதில் இதுதானங்க.. அதை படியுங்க.....
அந்த ஜோக்....
அதாவது எழுதுவதற்காக “பேனா” கேட்கிறார் இல்லையா...?
பொதுவாக யாரையாவது திட்டும் போது....
எப்பபாரு தின்னுறதும் பேலுறதும் தான் இவனுக்கு வேலை வேற எதாவது தெரியுமா என்று
திட்டுவார்கள். கேள்வி பட்டு இருக்கிறீர்களா....?
அந்த “கக்கா“ பேலுறதைத் தான் இங்கே “பேனா” என்ற வார்த்தையில் பொருந்தி வருகிறது.
ஒருவர் பாரத்தில் கையெழுத்திட மற்றவரிடம் “கொஞ்சம் பேனா தர்றீங்களா...?“
என்று கேட்கிறார்.
அதாவது இவர் பேனா கேட்டது எழுதும் பேனாவைத் தான்.
மற்றவர் கோபத்தில் பதில் அளித்தது..... கக்கா பேலுறதை....
“பேனா தர்றேன். ஆனால்... இப்போ ஸ்டாக் இல்லையே....
பேசாமல் நாளை காலையில் வா.
கொஞ்சம் என்ன... எல்லாத்தையும் நீயே எடுத்துக்கொள்.“ என்று சொன்னார்.
என்னங்க இப்பவாது உங்களுக்கு ஜோக் புரிந்ததா....?
அட எதுக்குங்க கல்லை எடுக்குரீங்க.. இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று நீங்கள் நினைத்து கோபப்படுவது சகஜம்தானுங்க... வுட்டுத்தள்ளுங்க...
அருணா செல்வம் அவர்களுக்கு இனிமே இந்த மாதிரி ஜோக்கு போடும் போது அடல்ஸ் ஒன்லி அல்ல 10 வயதிற்கும் கிழே உள்ளவர்களுக்கான ஜோக் என்று சொல்லி வெளியிடவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அப்பன் அண்ணனைப் பற்றி விசாரிச்சா அது காதல் ,புருஷன் ,பிள்ளையைப் பற்றி விசாரிச்சா அது கள்ளக் காதல் ,இந்த தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கலே போலிருக்கே !
ReplyDeleteத ம 1
கள்ள காதல் என்பதே கிடையாதுங்க அது பேரு களவுக் காதலுங்க
Deleteகாலம் மாறிப்போச்சு! காதலும் மாறிப்போச்சு என்பது உண்மைதான்! பாவங்க அந்த வலைப்பதிவர்! ஏதோ தெரியாம ஜோக்கு போட்டுட்டாங்க! விட்டுறுங்க! ஹாஹாஹா!
ReplyDeleteஅந்த வலைப்பதிவர் நம்ம தோழியாச்சே அதனாலதான் இப்படி...
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
காலத்துக்கு தகுந்த மாதிரி பதிவை வார்த்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இல்லேன்னா இந்த சமுகம் நம்மை ஒதுக்கி வைச்சுடுங்க
Deleteஎன்னங்க நீங்க ? மொட்டைதலையையும் முழங்காலையும் முடிச்சு போடுறீங்க...?
ReplyDeleteகில்லர் ஜீ என் பதிவை படித்தோமா ரசிச்சோமா என்று இருக்கனும் ரொம்ப ஆராய்ச்சி எல்லாம் பண்ணக் கூடாது ஆமாம் சொல்லிப் புட்டேன்
Deleteகள்ளக்காதல் எல்லாம் ஒரு காதல் என்று,நீங்கள் பதிவு எழுதுகிறீர்கள். எழுதுவது மட்டும் அல்லாமல், படமும் வேற... இது தான் காலி முத்திப்போச்சுன்னு சொல்றதோ!!!
ReplyDeleteஅந்த ரெண்டு வரி பன்ச் ரொம்ப சூப்பர்.
உங்கள் மனைவி பூரிக்கட்டையால அடிக்கிறதை நீங்கள் விரும்பி ஏத்துக்கிறதை ரொம்ப அழகா ரெண்டு வரில சொல்லிட்டீங்க...
இந்த காதல் கள்ளக்காதல் அல்ல அல்ல அல்ல அதைவிட புனிதமான களவுக் காதல் இதை கமல்ஹாசன் சொல்வது மாதிரி நினைத்து படிக்கவும்...
Deleteஇப்போத்த்த்த்......தானா.....
ReplyDeleteஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே
ஆம்பளைங்க புத்திய திருக்குறளில் “பிறனில் விழையாமை“ என்று
நம் முப் முப் முப்பாட்டன் சொல்லி விட்டார்.
அப்போதிலுருந்தே திருந்தாதவர்கள்.
இப்போதா திருந்த போகிறார்கள்...???
திருக்குறளில் அப்படியா எழுதி இருக்கு... பாவி மனுசன் திருவள்ளுவரை சொல்லலீங்க தமிழ் வாத்தியாரை தான் சொன்னேனுங்க எனக்கு ஸ்கூலில் இருந்து காலேஜ் வரை பாடம் எடுத்த ஒரு தமிழ் ஆசிரியர்கள் கூட ஒரு வார்த்தை இதைபற்றி சொல்லீங்க
Deleteஅட..... இன்றைக்கு நான் மாட்டிக்கொண்டேனா....?
ReplyDeleteதமிழரே..... உங்களுக்குப் புரியவில்லை என்று வேரெருவரிடம் கேட்டது சரி.
அதற்காக அவர் இப்படியா (இவ்வளவு வெளிப்படையாகவா) விளக்கம் தருவார்....
சரி. உங்களுக்கு இப்படி முழுமையாக விளக்கம் கொடுத்தால் தான் புரியும் என்று
அவர் எழுதி இருந்தாலும்... அதை அப்படியேவா வெளியிடுவீர்கள்.....?
படிக்கும் போதே..... உவ்வே.....
நட்பு வலையில் மாட்டிக் கொள்வது ஒன்றும் தவறு இல்லைங்க....
Deleteஅந்த நண்பர் வெளிப்படையாக சொல்லவில்லையென்றால் அவர் சொல்லவருவதும் புரியாமல் அவரையும் நான் கலாய்த்து விடுவேன் என்ற பயத்தில் அவர் அப்படி வெளிப்படையாக சொல்லிவிட்டாருங்க அவர் ரொம்ப ஸ்மார்டான ஆளுங்க அந்த ஸ்மார்டான ஆளு யாரென்று மட்டும் கேக்காதீங்க நான் சொல்ல்லமாட்டேண் ஒருவேளை நான் சொல்லிட்டால் எல்லோரும் அவர் பின்னால் போயிடுவாங்க
என்ன உவ்வேஏஏஏஏஏஏஏஏஏஏஏ விஷேசமா என்ன? சொல்லுங்க என் சகோக்களிடம் சொல்லி பேபி ஷவருக்கு ஏற்பாடு பண்ணிடலாம்
என்னாதுதுதுதுதுதுது....
ReplyDeleteபத்து வயதிற்கு கிழே உள்ளவர்களுக்கா.....
ஆயிரம் பதிவு எழுதியவருக்கே புரியவில்லை என்றால்.....
நான் என்னத்தைச் சொல்ல...
அருணா..... உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்....
பாவம் ஆண்கள் எல்லாம் கவலையாக இருக்கிறார்களே என்று ஒரு ஜோக் எழுதினால்
இப்படியா....
சரி சரி. இனிமேல் இப்படியெல்லாம் ஜோக் எழுதாதே அருணா (மனசாட்சி)
விடுங்க... குழந்தை அவர்...!
Deleteஒரு உண்மையை சொல்லாட்டுமா உங்க ஜோக்கை படித்து முடித்ததும் சிரிச்சேன் அது ஜோக்குக்காக அல்ல என்னமோ எழுதி அதையும் ஜோக்குன்னு சொல்லுறாங்க என்றுதான்....
Deleteஅட என்னங்க உண்மையை சொன்னதற்கூ எல்லாம கோவிச்சுகிட்டு பூரிக்கட்டையெல்லாம் எங்க வீட்டுக்கு வாங்கி அனுப்புறது நல்லா இல்லை
ReplyDeleteவிரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)
என்பது
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சு!
காலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு
ReplyDeletehttp://yppubs.blogspot.com/2014/07/blog-post_11.html
என்ற தலைப்பில் உங்கள் பதிவை ஆய்வு செய்திருக்கிறேன்.