இந்திய
மக்கள் அமெரிக்காவிற்கு
மிகவும் கடமை பெற்றவர்கள்
இந்த
பேஸ்புக்,
டுவிட்டர்,
கூகுல்வலைதளம்
மட்டுமில்லை என்றால் காமராஜ்
போன்ற இந்திய தலைவர்கள்
யாரென்று இந்த கால சமுகத்திற்கு
தெரிந்திருக்காது,
அதனால்
இந்திய மக்களே இந்திய தலைவர்களைப்
பற்றி நீங்கள் அறிய உங்களுக்கு
உதவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு
நன்றி செலுத்துங்கள்.
மோடி
இந்த அளவு வெற்றி பெற அமெரிக்கன்
நடத்திய பேஸ்புக்கும்
டுவிட்டரும் மற்றும் இதன்
மூலம் எப்படி மோடி இமேஜை
உயர்த்தனும் என்று உதவிய
அமெரிக்க கம்பெனிதான்தான்
காரணம்..
அமெரிக்க
மோடிக்கு விசாதான் தரவில்லை
ஆனால் பிரதமர் பதவிக்கு
உதவியது அமெரிக்க நிறுவனங்களே
இறுதியாக
சொல்லப் போனால் இந்திய
மக்களுக்கு எழுத்துரிமை
கொடுத்தது இந்த அமெரிக்க
நிறுவனங்களே.
அதையும்
சில இந்திய தலைவர்கள் சிலரை
அரெஸ்ட் செய்து சிறையில்
அடைப்பதன் மூலம் பறிக்க
மூயல்கின்றனர்.
உங்கள்
கருத்துக்களை சிந்தனைகளை
உலகெங்கும் பரப்ப உதவி செய்யும்
அமெரிக்கர்களையும் அவர்களது
நிறுவனங்களையும் ஒரு முறையாவது
வாழ்த்துங்களேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி:
மறைந்த
தமிழக தலைவர் காமராஜர்
பிறந்தநாளாம் இன்று அதனால்
சமுக தளங்களில் பலரும் வரைபற்றி
பலவித செய்திகளை பகிர்ந்தனர்.
அதனை
படிக்கும் போதுதான் ஒன்று
புரிந்தது.
இந்த
கால இளைய சமுகத்திற்கு காமராஜரை
பற்றி அதிக அளவில் அறிய உதவியது
அமெரிக்கர்களால் நடத்தப்படும்
டூவிட்டரும்,
பேஸ்புக்க்கும்
கூகுல் தளமும்தான்.
இந்த
சமுகதளங்கள் மட்டுமில்லை
என்றால் நிச்சயம் காமராஜ்
போன்ற தலைவரைப் பற்றிய செய்திகள்
இன்னும் இருட்டடிப்பு செய்துதான்
வெளியிடப்பட்டு இருக்கும்
என்பது என் கருத்து....
எனது
அடுத்த பதிவு:
கேஸ்
சிலிண்டரின் விலையை குறைக்க
ஐடியா (மோடிக்கு
உதவ அமெரிக்க தமிழன் தயார்
)
மக்கள்
மட்டுமல்ல மோடியும் அரசங்கமும்
கண்டிப்பாக படிக்க வேண்டிய
பதிவு
அமெரிக்கா வாழ்க! மதுரை தமிழா போதுமா!?
ReplyDeleteநீங்க சொல்றதை நேற்று ரூம்போட்டு யோசிச்சேன்,,,, அட ஆமா நீங்க சொல்றதும் சரி.....தான்.
ReplyDeleteகண்டிப்பாக னீங்கள் சொல்லுவது மிகச் சரியே! நாங்கள் இதை பல முறை பேசிக் கொள்வோம்....நாம் அமெரிக்காவை சும்மா திட்டுகின்றோம்...ஆனா அவங்களால நமக்கு எவ்வளவு நல்லதும் நடக்குதுநு.....அமெரிக்கா வாழ்கதான்! இது மட்டுமா தமிழா? இங்கிருக்கும் அறிவாளிகள் எல்லாம் இங்கு அவர்களுக்கு வேண்டிய ரெக்கக்கிஷன் இங்கு இல்லை என்பதால் அங்கு வந்துதானே தங்களது ஆராய்ச்சியை மேற்கொள்கின்றார்கள்! நல்ல உயர் கல்வி கிடைக்கின்றது என்று தானே பலர் அங்கு வருகின்றனர்......(பணம் கொடுத்தாலும் நல்ல தரமான கல்வி கிடைக்கின்றதா இல்லையா? இங்கு? ) எனவே பல வழிகளில் உதவத்தான் செய்கின்றது! ஹாட்ஸ் ஆஃப் டு அமெரிக்கா!
ReplyDeleteநீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் அமெரிக்க நிறுவனங்களை புகழாமல் என்ன செய்வீர்கள்.
ReplyDeleteஆனால் உண்மையை ஒத்துக்கொள்ள தான் வேண்டும் . வாழ்க அமெரிக்கா
பேஸ்புக், டிவிட்டர், கூகுள் வலைதளங்களால் காமராஜர் பற்றி அதிகம் எழுதி பரப்பப் பட்டது உண்மை! ஆனால் இவையெல்லாம் இல்லாவிட்டாலும் காமராஜரின் புகழ் குறையாது என்பதும் உண்மை! கேஸ் விலை குறைய உருப்படியா சொல்லுவிங்களா? இல்ல வழக்கம் போல காமெடியா? காத்திருக்கிறேன்!
ReplyDeleteமோடியின் வெற்றிக்கு அமெரிக்காதான் முக்கியமான காரணம் என்று சொல்கிறீர்கள். பின்னர்,
ReplyDeleteஇந்திய மக்கள் அமெரிக்காவுக்குக் கடமைப் பட்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்.
நீங்கள் சொல்வதே உண்மையென்றாலும் மோடிதானே கடமைப்பட்டிருக்கிறார்?
மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பதை மோடிதான் செயல்படுத்திக் காட்டவேண்டும்.
ஆமாம்..ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.
ReplyDeleteசகா அமெரிக்கா இப்படிதான் வளர்த்துவிடுவது போல் வளர்க்கும், தோளுக்கு மேல் வளர்வதைக்கண்டால் உடனே வெட்டி சாய்க்கும். ஒசாமா, சதாம் என அதுவே வளர்த்து, பலிகொடுக்கபட்டவர்கள் பட்டியல் ரொம்ப நீளம். so அவன் வியாபாரமா பண்ற வரை சரி, பெர்சனலா ஹெல்ப் பண்ணவே ( ஆணியே) வேண்டாம். Confessions of an Economic Hit Man தமிழில்"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'ஆசிரியர் : முருகவேள். நேரம் கெடச்சா படிச்சுபாருங்க:))
ReplyDeleteநல்லா இருக்குது சார் உங்க அமெரிக்க நியாயம். என்னமோ இந்தியாவில் கருத்துரிமை வளருவதையே முக்கிய நோக்கமாக கொண்டு டிவிட்டரும் பேஸ்புக்கும் ஆரம்பிக்கபட்டது மாறி இருக்குது, நீங்க சொல்வது. ஒரு பைசா (சென்டு!) பெறாது என்றால் ஒரு துரும்பைகூட கிள்ளி போடாத நல்லவனுகளால் நிரம்பியதுதான் அமெரிக்கா. அப்படி இருக்க மோடி பற்றியோ கருத்து சுதந்திரம் பற்றியோ அவனுகளுக்கு என்ன கவலை? விளம்பர வருமானமே பிரதானம். இந்திய அரசியல்வாதிகள் கேட்டால் கருத்து சொதந்திரமாவது கத்தரிக்காயாவது என போஸ்ட் போட்டவனின் ஜாதகத்தையே உருவி கொடுத்துவிடும் கருகாலிகள்தான் அவர்கள். அப்படிபட்ட விடயத்தை கருத்து சுதந்திரத்திற்கு பயன்படுத்துவதில்தான் இந்தியர்களின் (மற்றும் பிற நாட்டவரின்) திறமையே அடங்கியிருக்கு! (விடுவமா நாங்க ;))) )
ReplyDeleteம்.... சொல்றது சரிதான்...
ReplyDeleteதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteஅமெரிக்காவினால் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு .அதற்கு அமெரிக்கா மட்டும் காரணமல்ல . நம்மவர் மனப் பாங்கும்தான். ஆங்கிலேயர்கள் மூன்று நூற்றாண்டுகளுக்கே மேல் இந்தியாவை அடிமையாக வைத்திருந்தார்கள் . ஆனாலும் அவர்கள் செய்த நன்மைகளும் ஏராளம் உண்டு. அரசியல் வாதிகள் புத்திசாலித் தனமாக நடந்தால் நன்மைகளை அதிகரித்துக் கொள்ள முடியும்
ReplyDelete:))))))
ReplyDelete