Saturday, July 12, 2014

'பள்ளி' அறையில் நடந்தது என்ன ( உண்மை சம்பவம் )


ஆசிரியருக்கே பாடம் கற்பித்தவன் இந்த தமிழன்




உருப்படாத பய புள்ளைங்க ப்ள்ஸ் டூவில் எடுத்து படிக்கும் குருப் எக்னாமிக்ஸ். அந்த குருப்பைதான் நானும் எடுத்து படித்தேன். அதை படித்ததோடு சரி நல்ல வேலை அரசியல் தலைவனாக வரவில்லை ஒரு வேளை வந்து இருந்தால் நானும் இந்தியப் பிரதமராகி பல பொருளாதார திட்டங்களை தீட்டி இந்தியாவை உருப்படாத நாடாக்கி விட்டு இருப்பேன், யாரு செஞ்ச புண்ணியமோ இந்திய மக்கள் என்னிடம் இருந்து தப்பிச்சுட்டாங்க.



சரி சொல்ல வந்த கதையை விட்டு விட்டு வேறு எதையோ சொல்லிட்டு இருக்கிறேன். ப்ள்ஸ் டூவில் நான் எடுத்து படித்த எக்னாமிக்ஸ் குருப்பில் ஜியாகரபியும் ஒரு பாடம். அந்த பாடத்தை எடுத்த ஆசிரியர் மாரியப்பன் என்பவர்.ஒரு நாள் அவர் பாடம் எடுக்கும் போது அந்த பாடத்தில் 20 பாயிண்ட்கள் இருந்தன. அதை மன்ப்பாடம் பண்ணி சொல்லியவர்கள் மட்டும் வீட்டிற்கு போகலாம் மற்றவர்கள் சொல்லி முடிக்கும் வரை பள்லியல் இருக்க வேண்டும் என்று சொன்னார். அது இறுதி ப்ரியடு வேற.. அவர் அப்படி சொன்னதும் மற்றவர்கள் எல்லோரும் படிக்க ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் நான் உடனே எழுந்திருந்து சார் எனக்கு இங்கே படிச்சு மனப்பாடம் எல்லாம் பண்ண முடியாது அதனால நான் வீட்டில் படித்து வேண்டுமானால் மறுநாள் சொல்லுகிறேன் என்றேன். ஆனா அவரோ அதெல்லாம் முடியாது நீ கண்டிப்பாக இங்குதான் மனப்பாடம் பண்ணிஸ் சொல்லனும் இல்லையென்றால் நீ வீட்டிற்கு போக முடியாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். நானும் கண்டிப்பாக என்னால் முடியாது உங்கள் என்ன செய்யமுடியுமோ அதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லி நோட்டில் கிறுக்க ஆரம்பித்தேன். என் கூட படித்தவர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக படித்து ஒப்பிக்க ஆரம்பித்தார்கள். அதன் பின் அவர்கள் வகுப்பை விட்டு வெளியே சென்று எனக்காக காத்து இருக்க ஆரம்பபித்தார்கள் அதே நேரத்தில் நான் எனது பிடிவாதத்தை நான் சிறிதும் தளரவிடவில்லை. எனக்கு தெரியும் ஜெயிக்க போவது நாந்தான் என்று காரணம் அந்த வாத்தியார் எவ்வள்வு நேரம்தான் என்னை பள்ளியிலே வைத்திருக்க முடியும் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் அது மட்டுமல்லாமல் அவர் வீட்டில் பலபேருக்கு ட்யூசன் வேறு எடுத்தார் அதனால் அவர் கண்டிப்பாக அவர் நிலையில் இருந்து அவர்தான் பின் வாங்க வேண்டும் நாம் அல்ல என்று நினைத்து நான் பேசாமல் இருந்தேன். நேரம் ஆகி கொண்டுதான் இருந்ததே ஒழிய என் பிடிவாதம் தளரவில்லை பொறுத்து பொறுத்து பார்த்த அவர் அவரின் பிடிவாதத்தை சற்று தளர்த்தி சரி போனா போகுது நீ 10 பாயிண்ட் மட்டும் சொன்னால் போதும் நீ வீட்டிற்கு செல்லலாம் என்றார். அப்போதும் நான் என் பிடிவாதத்தை தளரவிடவில்லை பள்ளியோ 5 மணிக்கு முடிந்துவிடும் ஆனால் எங்கள் வகுப்பு அவரின் பிடிவாதத்தாலும் எனது பிடிவாதத்தாலும் 5 45 வரை நடந்தது. நேரம் வீணாக போவதால் எனக்கு இழப்பு ஏதும் இல்லை ஆனால் அவருக்கோ நேரம் மிக முக்கியம். இறுதியில் எனது வாத்தியார் என்னிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டார் யாரையும் பிடிவாதத்தால் படிக்க வைக்க முடியாது என்று. இறுதியில் அவர் சொன்னது என் வாழ்க்கையில் உன்னை மறக்கவே முடியாது என்று சொல்லிச் சென்றார்.


நான் ப்ள்ஸ் டூ படிக்கும் போது நடந்த சம்பவம். இதை படிக்கும் உங்களுக்கு எனது குணத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவே இந்த பதிவு...


அன்புடன்
மதுரைத்தமிழன்

17 comments:

  1. அந்த பள்ளி அறையில் பிடிவாதம் பிடித்து சாதித்துக் கொண்டீர்கள் சரி ,மற்றொரு பள்ளி அறையில் உங்கள் பாச்சா பலித்ததா என்பதையும் சொன்னால்தானே ,உங்க குணத்தைப் பற்றி நாங்க முழுசா புரிஞ்சுக்குவோம்?
    த ம 1

    ReplyDelete
  2. இதை உங்கள் அனுபவப் பதிவு என்பதை விட மிக நல்ல பதிவு என்றுதான் நாங்கள் சொல்லுவோம்! personal ஆகப் பார்க்காமல் subject ஆகப் பார்த்தோம், எந்த ஒரு ஆசிரியரும் எந்த ஒரு மாணவரையும் வற்புறுத்திப் படிக்கவைக்கக் கூடாது, படிக்க வைக்கவும் முடியாது. அது பாடத்தின் மேலும்,ஆசிரியரின் மேலும்,ஏன் பள்ளியின் மேலும் வெறுப்பதைத்தான் வளர்க்கும். 2. மனப்பாடம் என்பதை விட அதைப் புரிந்து படித்து மனதில் நிறுத்தி வைத்தால் மட்டுமே சிறப்பு நாம் கற்பது மறக்காமல் இருக்கவும் செய்யும், புரிந்து படித்தால் சிந்திக்கும் ஆற்றலயும் வளர்க்கும். மனப்பாடம் ஜஸ்ட் மார்க் வாங்க மட்டுமே. நமது கல்வித் திட்டம் அதை மட்டுமே செய்கின்றது! சிந்திக்கத் தூண்டுவதில்லை! எனவே நல்ல, உண்மையான ஆசிரியர் மட்டுமே அதைச் செய்ய முடியும்!

    பரவால்ல உங்க வாத்தியார் உங்கள அடிச்சு, வெளில முட்டி போட வைக்கலயே! ஆசிரியரை உணர வைத்ததற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. இந்த பதிவின் மூலம் தாங்கள் சொல்ல வரும் நீதி!?

    ReplyDelete
  4. நீங்க அப்பவே அப்படியா!?

    ReplyDelete
  5. முருங்கையை ஒடிச்சு வளர்க்கனும். பிள்ளைகளை அடிச்சு வளர்க்கனும்ங்குறதை உங்கம்மாக்கு தெரியல போல! எனக்கு மட்டும் நீங்க மகனா இருந்திருந்தால் அடிச்சு வளர்த்திருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ, அந்த கவலை உங்களுக்கு எதுக்கு. அந்த வேலையை தான் அவருடைய மனைவி கையில் புரிக்கட்டையை வச்சு பின்னு,பின்னுன்னு பின்னூராங்களே. என்னா!! காலம் கடந்த செயல்.

      Delete
    2. அவ்ளவ் அடியையும் வாங்கியும்கூடத்தான் அடங்காம திரியுறாரே!

      Delete
  6. ஆஹா! வாத்தியாருக்கே இந்த நிலமையா!!!

    ஆனால் இப்போ நிலமை தலைகீழ் போலிருக்கே.....:)) பூரிக்கட்டை பறந்து வந்துகிட்டுருக்கு சகோ....

    ReplyDelete
  7. வாத்தியாருக்கே பாடம் கற்றுக் கொடுத்தீர்களா? ஹா...ஹா...ஹா..

    ReplyDelete
  8. பிடிவாதம் தளராத தங்கள் உளப்பலத்தைப் பாராட்டலாம்.

    ReplyDelete
  9. அவர் பிடிவாதம் பிடித்து சாதிக்க முடியவில்லை! ஆனால் நீங்க பிடிவாதம் பிடிச்சு சாதிச்சிட்டீங்களே!

    ReplyDelete
  10. நல்லாத்தான் பிடிச்சு இருக்கீங்க... வாதத்தை....

    எனது ''ஹிந்தமிழ்'' படிக்கலாம் வாங்க...

    ReplyDelete
  11. உங்களுடைய பிடிவாத குணத்தை பற்றி தான் எனக்கு முன்பே தெரியுமே. கடந்த தேர்தலில் மோடியும் அவரது கட்சியும் அபார வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்தே, நீங்கள் அவரை தாக்கி எழுதிக்கொண்டே அல்லவா இருந்தீர்கள்...

    ReplyDelete
  12. என்ன பொறுத்தவரை மற்றவர்கள் (பெற்றோர், ஆசிரியர்கள்) பிடிவாதத்தால் தான் நான் படித்தேன். அவர்கள் மட்டும் என்னிடம் கண்டிப்பான பிடிவாதம் இல்லாமல் இருந்து இருந்தால்.... நினைக்கவே பயமாக உள்ளது.

    ReplyDelete
  13. ஆசிரியராகப்பட்டவர் மாணவரை தட்டிக் கொடுத்து படிக்க வைக்க வேண்டுமே ஒழிய வற்புறுத்திப் படிக்க வைக்கக்கூடாது என்பதை எடுத்துக் காட்டிட்டீங்க தல...

    ReplyDelete
  14. ட்யூஷன்ல சேந்துடு பாஸ் மார்க் போடறேன்னு சொல்லாம அங்கேயே இருந்து படிக்க சொன்ன வாத்தியார் நல்ல வாத்தியாராத்தான் தெரியறார். கட்டாயப் படுத்தி படிக்க வைக்க முடியாதுங்கறது உண்மைதான். ஆனா மதுரைத் தமிழனைத் தவிர அத்தனை பேரையும் படிக்க வச்சுட்டாரே.

    ReplyDelete
  15. நான் புடிச்ச முயலுக்கு மூனே கால்ன்னு சொல்லுற முட்டங்களை
    அப்படியே தான் விட்டுடனும்.

    “அவர்கள் உண்மையாக“ தானே “எண்ணி“ப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.