Monday, July 14, 2014


விஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத்

வேர்வை சிந்தி உழைப்பவன் என்பவன் விவசாயி மற்றும் ரோட்டில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல எங்கள் அண்ணன் விஜய்டிவி கோபிநாத்தும்தான் . ஏம்பா விஜய் டிவிகாரங்களே உங்களுக்கு பேன் மற்றும் ஏசி உபயோகங்கள் பற்றி இன்னும் தெரியாதது மிக அதிசயமே



அரேபியா பாலைவனத்தில் கூட வெயில் காலத்தில் வேலை செய்துவிடலாம் ஆனால் விஜய் டிவியில் மட்டும் ஆங்கராக வேலை பார்பது மிக கடினம்

மெரினா பீச்சில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு அருகில் அண்ணன் கோபிநாத்துக்கும் ஒரு சிலை வைக்க வேண்டுகோள் வைக்கிறேன்


நீயா நானா - கிராமத்து பெண்கள் vs நகரத்து பெண்கள்

#neeya naana கிராமத்து பெண்கள் பக்கத்து வீடுகள் பற்றி புரணி பேசுகிறார்களாம்/
ஆமாங்கடா நகரத்து பெண்கள் பேசவே மாட்டார்கள். பேஸ்புக்கில் பாருங்க அவங்க புரணி பேசுவதை


#neeya naana கிராமத்து பொண்ணுங்க நிறைய நகை போடுவாங்க/
ஆனா நகரத்து பொண்ணுங்க நிறைய மொக்கை போடுவாங்க


#neeya naana நகரத்துகாரகள் பக்கத்துவிட்டில் நடக்கும் பிரச்சனகளை கண்டுக்க மாட்டாங்க/
னா தீர்க்க முடியாத உலகப் பிரச்சனைகளை மட்டும்அலசி ஆராய்வாங்க



#neeya naana நீயா நானாவில் வந்த நகரத்து பெண்கள் மற்றவர்களின் கஷ்டத்தை பற்றி வருத்தப்பட்டார்கள் /ஆனால் அதில் ஒருத்தி கூட புருஷன் கஷ்டத்தைப்பற்றி வருத்துபடுவதாக சொல்லவே இல்லை


#neeya naana லைப் பாட்னரை தேர்ந்தெடுப்பதில் நகரத்து பெண்களுக்கு வாய்ப்பு அதிகம் /
ஆமாங்க அதே போல கழிட்டிவிடுவதிலும் அதிகம்தானே


கணவர் வந்தா சாப்பிடுவது எத்தனை பேர்? /
எல்லாரும்தான், அவன் வந்தாதானே விட்டில் சமையலே ஆரம்பிக்கும்


நகரத்தில் பெண்ணாதிக்கம் அதிகம்/
அதனால்தான் நகரங்கள் இன்று நரகங்களாக மாறிவிட்டனவோ

---------------------------------

எனது இதர பேஸ்புக் ஸ்டேடஸுக்கள் :

அந்த காலத்தில் பெற்றோர்களை விட்டுத்தான் பெண்கள் ஒடிப் போவார்கள்
ஆனால் இந்த காலத்தில் புருஷனைவிட்டுதான் பெண்கள் ஒடிப் போகிறார்கள்


மேலை நாட்டுகாரன் பல பயங்கரமான ஆயுதங்களையும் தயாரித்தாலும் எங்க ஊரு பொண்ணு கண்டுபிடித்த பூரிக்கட்டைக்கு ஈடான ஆயுதங்களை இந்த உலகத்தில் யாரும் தயாரிக்கவில்லை என்பதுதான் யாராலும் மறுக்க முடியாத உண்மை

பெற்றோர்களை விட்டு ஒடிப்போனால்  நல்ல காதலாம்
புருஷனைவிட்டு  ஒடிப்போனால்  கெட்ட காதலாம்
அது என்னடா காதலில் நல்ல காதல் கெட்ட காதல் என்று

குடிகாரனின் பேச்சு விடிஞ்சா போச்சு.. ஆனால் மனைவியின் பேச்சு என்றும் ஒரு தொடர்கதைதாங்க...

அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. வீடுலதான் மதனிக்கூட நீயா? நானா!? நடத்திக்கிட்டிருக்கீங்களே! அதை எப்படித்தான் டீவிலையும் பார்க்க முடியுதோ!!??

    ReplyDelete
    Replies
    1. உங்க மதினி கோபிநாத் ரசிகை....அதனால அவங்க அதை என்ன பார்க்க சொல்லுவாங்க ஆனா அதை நான் பார்க்காம கேட்டுக் கொண்டு இருப்பேன்... அப்படி கேட்ட்டு கொண்டிருப்பாதால்தான் நாலு பதிவு தேர்த்த முடிய்து...

      Delete
  2. நீயா நானா பார்ப்பதை விட்டு ரொம்ப நாளாச்சு! எசப்பாட்டு அசத்தல்!

    ReplyDelete
    Replies
    1. நானும் எந்த டிவி நிகழ்ச்சிகளையும் சினிமாக்களையும் பார்ப்பது இல்லை ஆனால் அதைக் கேட்டுக் கொண்டே பதிவுகள் எழுதி கொண்டிருப்பேன்

      Delete
  3. நீயா நானா நான் பார்ப்பதே இல்லை மதுரைத் தமிழன். ஒரே ஒரு முறை சமீபத்தில் பார்த்தேன் - திருநங்கைகள் பற்றிய நிகழ்ச்சி அது.

    ReplyDelete
    Replies
    1. நானும் எந்த டிவி நிகழ்ச்சிகளையும் சினிமாக்களையும் பார்ப்பது இல்லை ஆனால் அதைக் கேட்டுக் கொண்டே பதிவுகள் எழுதி கொண்டிருப்பேன்

      Delete
  4. FACT ! FACT! நான்லாம் எப்பவும் கிராமம் தாங்க :))
    எனது http://makizhnirai.blogspot.com/2014/02/town-fox-and-country-dog.html இந்த பதிவை படிச்சிருக்கீங்க இல்ல.
    தம 2

    ReplyDelete
  5. நீயா நானா பார்ப்பதில்லை...
    ஆனா நீங்க சொல்லியிருக்கிற ஒவ்வொருன்றும் உண்மை....

    ReplyDelete
  6. குறித்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்
    தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

    ReplyDelete
  7. சூப்பர் கம்மென்ட்ஸ். மதுரைத் தமிழனுக்கு மட்டும் எப்படி எல்லாவற்றையும் நகைச்சு ஆக்க முடிகிறது?
    அந்த நகரத்துப் பெண்மணிகள் பலர் கிராமத்தையே பார்க்காதவர்கள்.கிராமத்தில் கம்ப்யூடர் இருக்காது இன்டர்நெட் இருக்காது என்றெல்லாம் நினைத்து விட்டார்கள். அவர்களுக்கு பல்பு கொடுத்தார்கள் கிராமப் பெண்மணிகள்.
    கிராமமோ நகரமோ பூரிக் கட்டை பொதுவாத்தானே இருக்கு.

    ReplyDelete
  8. பூரிக்கட்டைக்கு ஈடு இணையில்லை தான்.

    கடைசியில வச்சிங்களே ஒரு பஞ்ச். இதையும் குடிகாரன் பேச்சாக எடுத்துக்கொள்ளனுமா??

    ReplyDelete
  9. அண்ணன் கோபிநாத்தா ?அவர் இன்னும் பூரிக்கட்டை அடி வாங்கிய மாதிரி தெரியலே ,உங்களின் விழுப்புண்கள் சொல்லுமே உங்கள் வயதை !
    த ம 5

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.