Tuesday, July 8, 2014




பெண் பதிவர்களின் அலம்பல்கள் தாங்க முடியலை..



மதுரைத்தமிழன் இந்தியா வருவதை கேள்விபட்ட நான்கு பெண் பதிவர்கள் அவரைச் கணவருடன் சேர்ந்து சந்திக்க நினைத்தனர். அதனால் அவர்கள் நாலு பேரும் ஒரு நாள் கூடிப் பேசினார்கள் .அப்போது அதில் ஒருவர் ஏய் அவர் வரும் போது என்ன உடை உடுத்துவது என்று கேட்டாள். அதற்கு மற்றொருவர் ஏய் அவர் மேலை நாட்டில் இருந்து வருகிறார் அதனால் நாம் மாடர்ன் டிரெஸ் பண்ணி போவோம் என்றாள் அதை மறுத்த மற்ற பெண் சொன்னாள் இல்லைடி அவர் பதிவை நான் தொடர்ந்து படிச்சிருக்கேன் அவருக்கு சேலை கட்டி வரும் பெண் என்றால் கொள்ள ஆசையாம்டி சேலைகட்டிய பெண்ணை பார்த்தால் உசிரையே விட்டு விடுவேன் என்று ஒரு பதிவில் சொல்லி இருக்கார்டி என்றாள். அதை கேட்ட முதலாம் பெண் அப்ப ஏன் மதுரைத்தமிழன் மனைவி தினமும் பூரிக்கட்டையால் அவரை அடிக்கணும் பேசாமல் அவர் மனைவி ஒரு நாள் சேலை கட்டினால் அவர் உசிரைவிட்டுடுவாரே அதன் பின் அவர் தினமும் நிம்மதியாக இருக்கலாமே என்றாள். ஏய் பாவம்டி மதுரைத்தமிழன் அவர் இல்லாட்டி நமக்கு பொழுது போகதுடி அதனால் அவரை கிண்டல் பண்ணுவதை விட்டு விட்டு யாரு என்ன சேலை கட்டுவது என்று முடிவு செய்வோம் என்றாள்.

சரி என்று முதலாம் பெண் சொன்னாள் என் கணவர் தலை முடி கருப்பாக இருப்பதால் அதற்கு மேட்சாக கருப்பு புடவை கட்டப் போகிறேன் என்றாள் அடுத்த பெண் ஆகா இது நல்ல ஜடியாக இருக்கு என் கணவர் தலமுடி நன்றாக நரைத்து இருப்பதால் நான் வெள்ளை புடவை அணிந்து வருகிறேன் என்றால் அதை கேட்ட மற்றொரு பெண் என் கணவர் தலமுடி பாதி கருப்பும் வெள்ளையுமாக கலந்து இருப்பாதால் நான் கருப்பு வெள்ளை கலந்த புடவையை கட்டிவருகிரேன் என்றாள். நாலாவது பெண் சொன்னால் இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் நாம வேற ப்ளாந்தான் பண்ணனும் என்று அடம் பிடித்தாள் அவளின் அடத்திற்கு மற்றவர்கள் காரணம் கேட்ட போது அவ வெக்கப்பட்டு கொண்டே சொன்னாள் என் கணவரின் தலை முழுவதும் வழுக்கையடி அதனால் அதுக்கு மேட்சா நான் சேலையே கட்டாமல் வர முடியுமா என்ன என்றாள் அதன் பின் அங்கு என்ன நடந்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

இப்படிதாங்க

ஒரு பொழுது போக்குக்காக வேடிக்கையாக நான் படித்த ரசித்த பார்த்த அனுபவித்த விஷங்களை கிறுக்கி பதிவிட ஆரம்பித்த நான் இப்போது 1000 பதிவை தாண்டி வந்துட்டேன். குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த நான் நடக்க ஆரம்பித்து இப்போதுதான் கிழே விழாமல் நடக்க ஆரம்பித்து இருக்கிறேன் நான் கிழே விழும் போதெல்லாம் என்னை தூக்கி தட்டி கொடுத்து நன்றாக நடக்க கற்று கொடுத்தீர்கள் அதற்கு எனது மனம் மார்ந்த நன்றிகள்



இந்த தளம் வெற்றிகரமாக செயல்பட உதவிய மோடி, ஜெயலலிதா ,கலைஞர், ஸ்டாலின், விஜயகாந்த், போன்றவர்களும் மற்றும் ஆனந்த விகடன், விஜய்டிவி, இந்திய அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் இல்லையென்றால் நான் இந்த அளவு வளர்ச்சியை அடைந்து இருக்க முடியாது.


மேலும் இந்த தளத்தின் வளர்ச்சி என்பது என்னாலும் மேலே சொல்லப்பட்டவர்களால் மட்டும் ஏற்பட்டது அல்ல இங்கு வருகை தந்தவர்களால் ஏற்பட்டது. அதிலும் முக்கியமாக "சைலண்ட் ரீடர்களை" இங்கு குறிப்பிட்டு சொல்லாம். அதுமட்டுமல்லாமல் மேலும் "சிலர்" எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கே தொடர்ந்து வந்து படித்து தங்களது உள்ளத்து உணர்வுகளை பின்னூட்டம் மூலம் உணர்த்தி தொடர்ந்து ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரை தனித்தனியாக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை இருந்தாலும் நேரமின்மையால் எழுத இயலவில்லை..இருந்தாலும்..எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது இதயம்கனிந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

இவர்கள் தவிர தமிழ்மணத்திற்கும் இண்டலிக்கும் எனது தனிப்பட்ட நன்றிகள் .

வலையுலகில் எனக்கென்று எந்த குழுவையும் அமைத்துக் கொள்ளாமல், வலையுலக அரசியலில் சிக்கிக் கொள்ளாமல், மதத்தை விட மனித இதயங்களை நேசித்தும் பல விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலருக்கும் விருப்பமான தளமாக இன்று வரையிலும் இணையத்தில் வலம் வந்துகொண்டிருகிறது எனது தளம்

எனது பதிவின் தலைப்புக்கள் சில சமயங்களில் ஒரு மார்க்கமாகவே இருந்தாலும் என்றாலும் அதில் உள் இருக்கும் விஷயம் மிக நல்லவையாகதான் இருக்கும் என்பதற்கு எப்போதும் உத்திரவாதம் அளிக்கிறேன்



எனது கிறுக்கல்கள் நீங்கள் படித்து ரசிக்க மட்டும்தான் . நான் சமுதாயத்தை திருத்தவோ அல்லது புரட்சியை உண்டாக்கவோ அல்லது சங்கம் அமைத்து தமிழை வளர்க்கவோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனது 500 பதிவில் நான் சொல்லியதை மீண்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன் அது இதுதான்

பாரில் நிற்கும் என்னிடம்
ஒயின் கேட்கிறவர்களுக்கு
நான்
திராட்சை பழ ஜுஸைத்தான் பரிசளிக்கிறேன்
என்னிடம் ஒயின் கேட்பவர்களுக்கு
ஒயின் டேஸ்டும் தெரிந்திருக்கவில்லை
திராட்சை பழ ஜுஸின் டேஸ்டும் அறியந்திருக்கவில்லை
அதானல் குறைந்தபட்சம்
அவர்களுக்கு திராட்சை பழ ஜுஸை
அறிமுகம் செய்துவைக்கிறேன்.

அவ்வளவுதாங்க.......

இன்றைய நாள் வரை இந்தத்தளத்திற்கு தொடர்ந்து வருகைதந்து கொண்டிருக்கும் என் உயிருக்குயிரானவர்களுக்கும்....எப்போதும் என் அறுவை பதிவுகளையும்....நான் அவ்வப்போது போடும் மொக்கைகளையும் பூமித்தாய் என்னை தாங்கிக்கொள்வது போல.........பொறுமையுடன் பொருத்துக் கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும்......நன்றி...


எனது 1000மவது பதிவில் வந்து கருத்திட்ட அனைவருக்கும் மற்றும் வழக்கம் போல சைலன்டாக வந்து படித்து சென்ற சைலண்ட் ரீடர்களுக்கும் மனமார்ந்த் ஸ்பெஷல் நன்றிகள் கை எடுத்து வணங்கி நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் எத்தனை அன்பு , அரவணைப்பு எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள் எல்லாம் எதற்கு எனது தளம் வளம் பெறதானே .இன்று வரையிலும் , இனிமேலும் நான் காணும் வெற்றிகளுக்கு நான்அடையும் புகழ்களுக்கு உரியவர்கள் நீங்கள் தான் அதனால் தலை குனிந்து வாழ்த்தி வணங்கி எனது நன்றியை கூறி விடைபெறுகிறேன் -


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

45 comments:

  1. 1001 வது பதிவு தொடங்க, எமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தமிழா.....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சரி எங்க அந்த அட்வான்ஸ் அது இன்னும் எனக்கு வந்து சேரவில்லையே

      Delete
  2. அட பூரிக் கட்டையால நாலு சாத்து சாத்துவோம் என்று வந்தால் (மாடா
    உழைக்காம மனனுசனா உழைச்சுப் பாக்கச் சொன்னதற்கு )வாழ்த்துற
    மாதிரியாகிப் போச்சே ச்சா ! நல்லா இருந்திற்றுப் போய்யா ( :)))) )

    ReplyDelete
    Replies
    1. நாலு அடி இன்று மிச்சம் ...நன்றி வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  3. பெண் பதிவர்கள் என்று மொட்டையாய் சொன்னால் எப்படி ?அவர்களுக்கு பெயர் இல்லையா ?அல்லது அடி வாங்க உங்களுக்கு பலம் இல்லையா ?
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. வம்புல மாட்டி விடுவதற்கென்றே நாலு பேர் அலைகிறார்கள் நீங்களும் மதுர என்றால் நாங்களும் மதுர ஆளுங்கதான்...

      Delete
  4. ம்ம்ம... உங்கள் பாணியில் அழகான சேலைகட்டும் ஜோக்குடன். எவரையும் விட்டுவிடாமல் மனம் நெகிழ்ந்த நன்றி சொன்ன பாங்கு பாராட்டத்தக்கது. தொடரட்டும் உமது எழுத்துப்பணி இன்று போல் என்றென்றும். இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி... ஆமாம் அது என்ன எழுத்துப்பணி தொடரட்டும் என்று... சீனுவிற்கு சொல்ல வேண்டியதை எனக்கு சொல்லிட்டீங்களா என்ன? நான் எழுதுவது கிடையாது கிறுக்குவதுதான் என் வழக்கம்

      Delete
  5. பெண் பதிவர்களின் பேரை எல்லாம் சொல்லாமல், பொதுவாக பெண் பதிவர்கள்ன்னு சொன்னதுனால தப்பிச்சீங்க. இல்லை என்றால் பூரிக்கட்டைகள் ஃப்ளைட் புடிச்சு வராம, அப்படியே பறந்து வந்து உங்களை தாக்கியிருக்கும்.

    வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது வலையுலக பணி.

    ReplyDelete
    Replies
    1. அப்ப அப்ப என் புத்தி வேலை செய்யும். அதனால நான் தப்பிச்சேன்

      Delete
  6. ஹாஹாஹா நன்றி நவிலல் கூட ஆரம்பமே நகைச்சுவையுடன்.......

    எல்லாம் சரி.....என்னங்க நீங்க.....இப்படி பாரபட்சம் பாக்கலாமா..அதுவும் தங்கள் தளம் வளர முக்கியமாக பூரிக்கட்டையையும், அதைத் தூக்குபவரையும் நன்றி நவிலலில் விட்டுவிட்டீர்களே! கொஞ்சம் அங்க திரும்பி பாருங்க......பூரிக்கட்டைதானே!?

    ReplyDelete
    Replies
    1. திரும்பி பார்க்கிற நிலையில் இல்லைங்க.... பூரிக்கட்டையில் அடிவாங்குனதால கழுத்துல கட்டு போட்டு இருக்கு..

      Delete
  7. வாழ்த்துகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies

    1. வாழ்த்தியற்கு நன்றி

      Delete
  8. Replies

    1. வாழ்த்தியற்கு நன்றி

      Delete
  9. வாழ்த்துக்கள்(one of the silent readers.)

    ReplyDelete
    Replies
    1. சைலண்ட் ரீடர்கள் கடவுள் மாதிரி. இன்று அந்த கடவுளில் ஒருவர் இங்கு வந்து வாழ்த்தியது மிக சந்தோஷம்

      Delete
  10. வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போல படித்தவர்கள் & பெரியவர்கள் வாழ்த்தும் போது மனது சந்தோஷம் கொள்கிறது வாழ்த்தியற்கு நன்றி

      Delete
  11. சேலை கட்டினால் உசிரையே விட்டுடுவார்..... ஜோக் அருமை.

    ஆமாம் இவ்வளவு பேருக்கு நன்றி சொன்னீர்கள்... முக்கியமாக
    பூரிக்கட்டைக்கு நன்றி சொல்ல வில்லையே...((((

    ReplyDelete
    Replies
    1. உட்டா பூரிக்கட்டைக்கே ஒரு கோயில் கட்டி கும்பிடுன்னு சொல்லுவீங்க போலிருக்குதே

      Delete
  12. "சாத்விகம், பிரச்சோதகம், பயானகம்" நம் பதிவுலகத் தாய்க்குலங்களை வகைப்படுத்தி ஏதாவது சொல்லுவீங்கனு பார்த்தால்..

    ஆனா ஒண்ணு சொல்றேன் தல.. சரி விடுங்க.. நான் ஏதாவது சொல்ல, நீங்க ஏதாவது புரிஞ்சுக்க.. எதுக்கு வீண் வம்பு?

    ஆன் சக்கண்ட் தாட்..சரி, சொல்லிடுறேன் ..

    பெப்ஸி கோலா சி யி ஒ, நூயி என் பி ஆர் ல ஒரு இண்டெர்வியூ கொடுத்தாரு. அவர் பேசியதை அமெரிக்கத் தாய்க்குலங்கள் எல்லாம் சிலாகிச்சு பேசிக்கிறாங்க.. நம்ம ஊரில் படித்து வந்து அமெரிக்கப் பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்னாப் பார்த்துக்கோங்க..

    இதெஇலிருந்து என்ன தெரியுதுனா..காலம் மறிக்கொண்டு வருது, பெண்களை வணங்க முடியலைனாலும் வணங்குவதுபோல் நடிக்கவாவது கத்துக்கணும்னு ஆண்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய காலகட்டம், நிரிபந்தம்!

    பூரிக்கட்டைல அடிக்கடி அடி வாங்கிறதுக்கு பதிலா..அன்பால பெண்களை அடிமையாக்கி உங்க இஷ்டப்படி ஆட்டிப் படைக்கலாம்னு நான் சொல்றேன்..புரிஞ்சுக்கோங்க. :)))

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை எப்போதும் சொல்லலாம் வருண். நான் தப்பாக எடுத்துகமாட்டேன். வம்பும் பேசமாட்டேன் சொல்வது எனக்கு நியாமாக பட்டால் எடுத்து கொள்வேன் இல்லை அது தவறாக இருந்தால் அப்படியே ஸ்கிப் பண்ணி போய்கிட்டே இருப்பேன் வருண்..

      நான் மிக சாதாரணமான மனிதன்... அறிவு ஜிவி எல்லாம் கிடையாது. என் மனதில்பட்டதை எழுதுகிறேன் நான் எழுதுவது சொல்வது எல்லாம் மிக சரி என்று சொல்லவில்லை அதில் தவறுகள் இருக்கலாம்.அது போல நான் சொல்வதை எல்லாம் யாரும் அப்படியே ஒத்துக் கொள்ளனும் என்ற அவசியமும் இல்லை


      நானெல்லாம் பெண்களை வணங்குகிற மாதிரி நடிக்கிற ஆள் இல்லை உண்மையிலே வணங்கிவிடுவேன்

      இங்கு பூரிக்கட்டை & அடிவாங்குவது என்று எல்லாம் நான் சொல்லுவது நகைச்சுவைக்காவே மட்டுமே

      இறுதியாக ஒரு கேள்வி என்னாச்சு உங்கள் புதிய பதிவுகளை பார்க்கவே முடியலையே??

      Delete
    2. பதிவுலகில் எழுதி வந்தவங்க "போர்" அடிச்சுப் போயி அல்லது வேறு வேலைகளால் நிறுத்துவது ரொம்ப சாதாரணம்தானே? எனக்குத் தெரிய ப்லர் மறைஞ்சுட்டாங்க. மறைந்துகொண்டே இருக்காங்க. பதிவுலகம் அதேபோல் புதியவர்களால் இயங்கிக் கொண்டேதான் இருக்கு.

      எனக்கு எந்தவிதமான "அடிக்சனும்" பிடிக்காது. அதிலிருந்து வெளி வரப் பார்ப்பேன். இதுவும் ப்ளாகிங்கும் ஒரு மாதிரி அடிக்ஷந்தான்.

      அப்புறம் என்னுடைய "ப்ளாக்" க்கும் எனக்கும் ஒரு "ஈகோ க்ளாஷ்". அதென்னவோ, அது இல்லைனைனா நான் இல்லைனு நெனச்சுட்டு ரொம்ப "பந்தா" விட்டுச்சு. நான் சொன்னேன், (என் ப்ளாகிடம்) ஒரு நாளைக்கு 100 பதிவு தமிழ்மணத்தில் வருது.. நீ எல்லாம் எனக்குத் தேவையில்லை. நான் பின்னூட்டமிட்டே வாழ்ந்திடுவேன். அவன் அவன் வ்ருண் வந்து ஏதாவது பின்னூட்டமிடுவானா, வம்புக்கு வரமாட்டானா.. வந்து கெட்ட வார்த்தையில் திட்டமாட்டானா?.. இல்லைனா யாரோடையாவது சண்டை போடமாட்டானா..னு வேடிக்கை பார்க்க ஏங்கிக்கிட்டு இருக்கிறான்கள்னு சொன்னேன். என் "ப்ளாக்" நான் சொல்றதை நம்பலை.. அதான் இப்படி அதுக்கு ஒரு பாடம்.. :)))

      Delete
  13. உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அமுதா நீங்க நல்லா நாசுக்காக கிண்டல் பண்ணுறீங்க? பண்ணுங்க பண்ணுங்க....

      Delete
  14. அந்த நான்கு பெண் பதிவர்களின் பேரை போடாம நாசூக்கா தப்பிச்சிட்டீங்க! உங்களின் பலம்- பலவீனத்தை புரிஞ்சு சிறப்பான பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நான் தப்பிசுட்டேன் என்று சந்தோஷப்டுறீங்களா வருத்தப்படுறீங்களா தெளிவா சொல்லையே நீங்க? வாழ்த்துக்கு நன்றி

      Delete
  15. (பூரிக்கட்டை) அடி ஆயிரம் வாங்கினாலும் பதிவாயிரம் கடந்த மதுரைத் தமிழனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு வாரித்தரும் வள்ளல்களாய் அரசியல் வாதிகள் இருக்கும்வரை பல்லாயிரம் பதிவுகள் எங்களுக்கு கிடைக்கும் சிரித்து ரசித்து மகிழ

    ReplyDelete
    Replies
    1. நான் தினமும் கடவுளிடம் வேண்டுவது கடவுளே இந்த இந்திய அரசியல் தலைவர்களை மட்டும் மாற்றிவிடாதே அவர்கள் இப்போது இருப்பதுபடி இருந்து சேவை செய்யட்டும் அப்பதான் நான் கலாய்ச்சு பதிவிட முடியும் என்றுதான் வேண்டுகிறேன்

      Delete
  16. முன்னூறுக்கே நாங்களெல்லாம் மூச்சுத் திணற, அனாயாசமாக ஆயிரம் தாண்டிய அபூர்வ தமிழனின் சாதனை தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஒவ்வோரு பதிவும் எனது 10 பதிவுகளுக்கு சமம்.... இப்ப எண்ணிப் பாருங்க யாரு அதிகம் பதிவிட்டது என்று

      Delete
  17. அண்ணன் ஜோதிஜி அவர்கள் சொன்னதையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டதும் சிறப்பு... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அவர் அண்ணண் அல்ல இன்னொரு தெய்வம் அப்ப முதல் தெய்வம் யாருன்னா கேட்கிறீங்க அது நீங்கதான்

      Delete
  18. ஆயிரம் பதிவுகளா? அபாரம்! அப்புறம், அந்த நாலாவது பெண்ணை மறக்காமல் பார்த்துவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களுடன் ஒரு கிளப்பிற்கு சென்ற போது அந்த நாலாவது பெண்ணை பார்த்துட்டேன்...ஹீ.ஹீ ஆனா அவர் கணவருக்கு வழுக்கை தலை உண்மையிலே உள்ளதா என்று தெரியவில்லை?

      Delete
  19. அட நன்றி சொல்லவாவது உங்க ஒரிஜினல் போட்டோவை போட்டுருக்கீங்களே!
    உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம்!

    ReplyDelete
    Replies
    1. ரிபீட்டேய்!!

      Delete
    2. எனது ஒரிஜனல் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொன்னது ராஜியும் மைதிலியும் அப்படீயே உங்களை உரிச்சு வைச்ச மாதிரி இருக்காங்களே என்று கேட்டார்கள் அதற்கு நான் சொன்னனேன் நாங்ள் எல்லாம் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று... என்ன நான் சொன்னது சரிதானே? ஹீ.ஹீ யாருகிட்ட???

      Delete
    3. வாய் இருக்கிற புள்ளை தான் வாழும்னு எங்க ஊர்ல பழமொழி சொல்லுவாங்க.
      நீங்க வாழ்றீங்க. வேறன்ன சொல்ல:((

      Delete
  20. 1000 அடிச்சும் ஸ்டெடியாய் நிக்கும் மதுரை தமிழனுக்கு ஜே!

    ReplyDelete
    Replies
    1. என்னம்மா எங்க போன பேஸ்புக் உன்னை எல்லோரும் தேடுவது உனக்கு தெரியுமா?

      Delete
    2. விரைவில் மீண்டு(ம்)வருவேன் சகோ! உங்கள் அன்புக்கு நன்றி!

      Delete
  21. வாழ்த்துகள் மீண்டும் ஒரு முறை மதுரைத் தமிழன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.