Wednesday, July 16, 2014


 
@avargal unmaigal


அறியாத வயதில்.......

பேஸ்புக்கில் 'அறியாத வயசில்' என்று பலரும் ஸ்டேடஸ் போட்டு கொண்டிருந்தனர். ஒரு வேளை நாமும் அப்படிப் போடவில்லை என்றால் நம்மை விளக்கி வைத்து விடுவார்கள் என்று எண்ணி,அறியாத வயசில் என்று சில ஸ்டேடஸுக்களை போட்டுவிட்டு வந்தால், மனம் நிற்காமல் தறி கெட்டு ஓடியதால் மேலும் பல கருத்துக்கள் தோன்றியது அதை இங்கே பதிவாக இட்டு. அங்கு வராமல் தப்பித்துக் கொள்பவர்களை இங்காவது மாட்டிச் சாக அடிப்பது என்ற நோக்கத்தோடு இதை பதிவிடுகிறேன். இதை படித்து பிழைச்சுகிடப்பவர்கள் பின்னூட்டத்தை இட்டு செல்லவும். நல்ல ஞாபகம் வைச்சுகோங்க பின்னூட்டம் இடாதவர்கள் தலையில் நாளை காக்க எச்சமிடும்


கல்யாணம் பண்ணினா வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

காதலிச்சா கட்டாயம் கல்யாணம் பண்ணிக் கொள்ளனும் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

கல்யாணம் பண்ணினா பொண்டாட்டி சமைச்சு போடுவா என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

மனைவி என்றால் கணவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டுவார்கள் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

நாய் மட்டும்தான் குரைக்கும் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

சரக்கு அடிக்காம இருக்கிறவங்கதான் நல்லவங்க என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

பார்க்கிற பெண்ணை எல்லாம் சகோதரியா நினைச்சது #அறியாத வயசுலதான்.

காதலிக்கும் பெண் நம்மைக் கல்யாணம் பண்ணிக்குவா என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

நல்லவனா இருந்தால் கடவுள் வீட்டிற்குள் பணத்தை அள்ளிக் கொட்டுவார் என நினைத்தது #அறியாத வயசுலதான்.

அரசியல் தலைவர்கள் எல்லாம் ரொம்ப யோக்கியமானவர்கள் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

பிரச்சனை என்றால் எங்கிருந்ததாவது வந்து சூப்பர் ஸ்டார் குரல் கொடுப்பார் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

மோடி அரசு வந்தால் விலைவாசி குறைந்து நாடு முன்னேறிரும் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

படிச்சவன் மட்டும்தான் புத்திசாலி என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

நெத்தியில் விபூதி குங்குமம் வைத்தவர்கள் மட்டும் ரொம்ப நல்லவங்க என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.

நல்ல கருத்துமிக்க பதிவு போட்டாதான் ஹிட்ஸ் அதிகம் கிடைக்கும் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.


இறுதியாக பூரிக்கட்டை பூரி இடுவதற்கு மட்டும் என்று நினைத்தது #அறியாத வயசுலதான்.


அன்புடன்
மதுரைத்தமிழன்
16 Jul 2014

16 comments:

  1. இப்படி எல்லாம் நீங்கள் வலைப்பூவில் மொக்கை போடுவீர்கள் என்று நினைத்தது #அறியாத வயசுலதான் !
    த ம 1

    ReplyDelete
  2. மதுரை தமிழன் ரொம்ப அப்பாவின்னு நினைச்சது பதிவுலகுக்கு வந்த புதுசு.

    ReplyDelete
  3. மிகவும் ரசித்தேன்
    குறிப்பாக பூரிக்கட்டை பூரி போடத்தான் என நினைத்ததும்
    காதலித்தால் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும்
    என நினைத்தும்....

    ReplyDelete
  4. மதுரைத்தமிழன் ரொம்ப நல்லவர்னு (வடிவேல் பாணியில் படிக்கவும்) நினைச்சது - அறியாத வயசுல தான்....

    ReplyDelete
  5. அறியாத அகவையில (வயசுல) தான்
    அப்படி, இப்படி, உப்படி
    எப்படி எல்லாம் அலசி
    இட்ட பதிவு இதுவோ!

    ReplyDelete
  6. பூரிக்கட்டை மேட்டர் சூப்பர்.

    ReplyDelete
  7. இதில் பாதிக்கு மேல் அப்படி தான் என்று நான் இன்னும் நினைச்சுட்டு இருக்கேனே. அப்ப அறியாத வயசுதான் காரணமா???

    ReplyDelete
  8. அடக்கடவுளே.....

    நான் இன்னமும் இதெல்லாம் உண்மை என்று தான் நினைத்திருந்தேன்... அப்போ...
    இதெல்லாம் உண்மை இல்லையா....?

    நான் எப்போத்தான் எல்லாம் அறிந்த வயதுக்கு வருவேனோ....

    பூரிக்கட்டையால் யாரையும் பூறிவிட முடியாது இல்லையா....
    அதனால் தான் அதனால் அடிக்கிறார்கள்.

    ReplyDelete
  9. கடைசியில ஒண்ணு சொன்னீங்க பாருங்க பூரிக்கட்டை! பைனல் பஞ்ச்! இது இல்லாம உங்க பதிவு இல்லேன்னு நிரூபணம் ஆயிருச்சு! சூப்பர்!

    ReplyDelete
  10. அவர்கள் உண்மைகளை அடிக்கற வயசு... நல்ல புள்ளைகளை எல்லாம் இப்படி பதிவு போட்டு பயமுறுத்தக்கூடாது.

    ReplyDelete
  11. விஜய் டி.வி தமிழர் அடையாளங்களை மறைக்கிறதா ? அழிக்கிறதா? அப்படீங்கற தலைப்பை பார்த்துட்டு முதன்முதலா இந்த தளத்திற்கு வந்த நான் தமிழர் கலாசாரம் காக்கும் தமிழன் எல்லா பதிவும் ரொம்ப சீரியஸா இருக்கும்னு நினைத்தது# அறியாத வயசுல தான்:))

    ReplyDelete
  12. இப்பவும் உங்களுக்கு அறியாத வயசுதான்னு சொல்லறீங்க

    ReplyDelete
  13. வணக்கம்

    பதிவைப்பார்த்வுடன் தாங்களும் அறியாத வயது என்று நினைத் தேன் ... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. ஹாஹாஹா....மோடி ஆட்சிக்கு வந்தால் விலை வாசி குறைந்து.......// இது அறியாத வயசு?!!!!!!!இப்பவும் உங்களுக்கு அறியாத வயசுன்னு நம்பணும்றீங்க.?!!!!
    ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போட்டுட்டு இங்கயும் வந்து போட்டு...(காக்கா எச்சம் தெரியாம) நாங்க தாமதமா வந்து பின்னூட்டம் இட்டு காக்கா எச்சம் எங்க தலைல விழ......அறியாத வயசுங்க....

    ReplyDelete
  15. அனைத்துமே ரசிக்க முடிந்தது.... :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.