ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஊற்றும் கூழ் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுமா?
ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் காரணம் இதுதான்
தமிழ் மாதங்களில் ஆடி என்பது ஆன்மிகச் சிறப்பு மிகுந்த பக்தி மாதம். ஆடிமாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, செவ்வாய் விரதம், ஆடி ஞாயிற்றுக்கிழமை என ஆடி மாதமே கோலாகலமாக இருக்கும்.
அம்மை நோய் என்பது கோடைக் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று என்று சொல்லப்படுகிறது
கோடைக் காலம் முடிந்து பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களை நம்முடைய உடல் எதிர்கொள்ளும் விதமாக, நம்முடைய முன்னோர்கள் முன்னேற்பாடாக ஆடி மாதத்தில், கூழ் ஊற்றுதல், வேப்பிலை தோரணம் ,மஞ்சள் மணம் என ஏற்படுத்தியுள்ளார். இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு
வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற பாதிப்பைத் தடுக்கவும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்திமிக்க வேம்பு, எலுமிச்சை கேழ்வரகு / கம்பை பயன்படுத்தியுள்ளனர். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது.
சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். மேலும் அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்லுவதால் ஆடியில் விதை விதைத்தால் மழை நாட்களில் பயிர் தழைத்து தை மாத இறுதியில் அது நல்ல மகசூல் கொடுக்கும். அதனால் பல விவவாசியிகள் தங்கள் கையிருப்பில் உள்ள சேமிப்பைச் செலவழித்து உழுது விதை விதை விதைப்பதாலும் மேலும் சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள், ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். அதனால் விவசாயிகளிடம் பஞ்சமும் ஏற்படுவதால். அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.
அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில் கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது.
அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய்த் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவக் குணங்களைக் கொண்ட பொருட்கள்தான். இப்படிச் சத்தான, நோய்களைத் தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும் கஞ்சியும். பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படை கூடக் கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.
நம் முன்னோர்கள் நீட் எக்ஸாம் எழுதி பாஸாகி மருத்துவர்கள் ஆனதில்லை ஆனாலும் எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்
இன்றைய காலத்தில் ஆடி மாதத்தில் வறட்சி பஞ்சம் அம்மைக்குப் பதிலாகக் கொரோனா நம்மை மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்து அதனால் பல மக்களின் குடும்பத்தையும் மிகப் பாதிக்க ஆரம்பித்து இருக்கிறது .வருவாய் இல்லாததால் அல்லது குறைவால் உணவு பிரச்சனை...பட்டினியோடு போராட்டம் பல குடும்பங்களில் ஆரம்பித்து இருக்கிறது .
அதுமட்டுமல்ல பொது நடமாட்டம் இல்லாததால் மக்களின் மன உளைச்சல் அதிகமாகி இருக்கிறது இதனால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது அதன் தொடர்ச்சியாக உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.உடல் ஆரோக்கியமுடையவர்களை விட ஆரோக்கியம் குறைந்தவர்களைக் கொரோனா மிக எளிதில் தாக்கி கொல்லும்...
அதனால் அரசு சும்மா கைதட்டு விளக்கு ஏற்று முககவசம் அணிந்து கொள் வீட்டுக்குள்ளே இரு என்று ஊரடங்கு உத்தரவு மட்டும் போட்டு இருக்காமல்....
வழக்கம் போலக் கோயில்களில் ஆடி மாதவிஷேசங்களைத் தொடர்ந்து நடத்தி அரசோ பணம் படைத்தவர்களோ தங்கள் சொந்த செலவில் இப்படிக் கூழ் காய்ச்சி அல்லது நோன்புக் கஞ்சி காய்ச்சி வருமையில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற முயற்சிக்கலாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்

விசேஷங்கள் நடத்தினால் கூட்டம் கூடும். சமூக இடைவெளி இலலாததால் ஆபத்தாகும். ஆனால் கூட்டம் கூடாமல் இந்த மாதிரி பண்டிகைகளைக் கொண்டாடவும் முடியாது. எனவே வேண்டாம் என்பதே என் கருத்து.
ReplyDeleteஅட்லீஸ்ட் ஸ்வாமி பேர்ல இப்படி கூழ் காய்ச்சி பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்தானே
Deleteவெங்கட் கூடும்! ஹாஹா! நான் தில்லியில் அக்கடான்னு இருக்கேன்! என்னை எதற்கு இழுக்கிறீர்கள் :) இந்தத் தட்டச்சுப் பிழைகள் ரொம்பவே படுத்துகின்றன.
Deleteஸாரி வெங்கட்... என்ன நினைத்து தட்டச்சினேன் என்பதே எனக்கு மறந்து விட்டது.
Delete"செய்யலாம்தான். அங்கு கூடும் கட்டுப்பாடற்ற கூட்டத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அந்தக் கூட்டத்தை சரியாக நிர்வகிக்க பொறுமையான, திறமையான தைரியமான ஆட்கள் இருக்க மாட்டார்கள்" என்று சொல்ல வந்தேன்!
கருத்தை படித்ததும் எனக்கு சிறிது குழப்பமாக இருந்தது... இப்ப புரிஞ்சு போச்சு
Deleteஇப்பல்லாம் நான் டைப்பிங்ல ரொம்பத் தப்புப் பண்றேன் மதுரை... அவசரம்..
Deleteஎங்கள் ஊரில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்... ஆனால் எதிர்ப்பும் உண்டு...
ReplyDeleteநல்லது செய்வதற்கும் எதிர்ப்பா?
Delete