Friday, July 17, 2020

இது எல்லாம் இயற்கையின் ஒரு விதமான விளையாட்டா என்ன? Is this all a kind of game of nature?
இது எல்லாம் இயற்கையின் ஒரு விதமான விளையாட்டா என்ன?

ஆறறிவு படைத்த மனிதனுக்குக் கிடைக்கும் உரிமை மற்ற இனங்களுக்குக் கிடையாதா?

இந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் படைத்தது இறைவன் என்றால் அனைத்து உயிரினங்களுக்கும் இவ்வுலகில் வாழச் சமத்துவ உரிமை உண்டுதானே.....அப்பை இருக்கும் போது மனித இனம் இயற்கையைப் பல வழிகளில் அழித்து வருகின்றனர்....அப்படி அவர்கள் அழிப்பதால்தான் இறைவன் கொடுக்கும் தண்டனையாக இந்தக் கொரோனா இருக்கலாமோ?

 

மனித இனம் வாழப் பல இடங்கள் தகுதியாக இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டுத் தங்கள் ஆசைகளுக்காக வசதிகளுக்காக மற்ற இனங்கள் வாழும் பகுதியான இயற்கையான காடுகள் மலைகள் நீர்நிலைகள் கடல்கள் போன்ற பகுதிகளையும் தொடர்ந்து அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களின் வசதிகளுக்காகப் புதிய புதிய ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் பல இயற்கையை நாசமாக்குவதாகவே இருக்கின்றன.

ஆறறிவு படைத்த நாமே நம் எல்லைகளைத் தாண்டி இயற்கைகளை அழிக்கும் போது காட்டு விலங்குகளும் அதன் எல்லைகளை மீறி நாட்டுக்குள் வருவதில் என்ன தவறு

அது போல வெட்டுக்கிளிகளும் லட்சக் கணக்கில் படையெடுத்து நம் பயிரினங்களை அழிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்...அதை நாம் பல வகைகளில் அழிக்க முயல்கிறோம்..

அது போலத்தான் பல வைரஸ்களும் நம்மைக் கொத்துக் கொத்தாக அழிக்கிறது.. அதில் ஒரு வகை வைரஸ் கொரோனாவாக ஏன் இருக்கக் கூடாது.


எல்லாம் இயற்கையின் ஒரு விதமான விளையாட்டாகவே இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

17 Jul 2020

10 comments:

  1. Matura...

    I always thought, what if we humans are the virus and Covid is the vaccine?

    ReplyDelete
    Replies
    1. மாற்று சிந்தனை அருமை விசு

      Delete
  2. உண்மைதான். இயற்கையின் விளையாட்டு. எதிர்கொண்டே ஆகவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி ஜம்புலிங்கம் சார்

      Delete
  3. அருமையாக சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  4. அதுவே கணிக்க முடியாத ஊழ்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தனபாலன்

      Delete
  5. இயற்கை தரும் பாடம் - இருக்கலாம்!

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி வெங்க்ட்ஜி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.